Saturday, February 22, 2014

நீ இல்லாமல் நான் இல்லை
----------------------------------------
எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ்
---------------------------------------------
கைலாசம்(வயது 75) புஷ்பா(வயது 68) தம்பதியர் மிகவும் அன்னியோன்னியமானவர்கள்.இவள் தண்ணி குடித்தால் அவருக்கு தாகம் தீர்ந்து விடும். அவர் சாபிட்டால் இவளுக்கு வயிறு நிரம்பி விடும். சமீபத்தில் தான் திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன. இருந்தும் என்னமோ நேற...்று தான் கல்யாணம் ஆன் மாதிரி ஒரு நெருக்கம்.”புஷ்பா சாபிட்டாயா-புஷ்பா உடம்பை பார்த்துகொள்ளு” என்று உருகுவார் கைலாசம். அதே மாதிரி “பனியா இருக்கு- வென்னீரிலே குளிங்க”-“கம்பளியை போத்திகுங்க” என்று கரிசனமாக இருப்பாள் புஷ்பா.

கடை-கண்ணிக்கோ,’வாக்கிங்கோ’கோவில்-குளங்களுக்கோ-எங்கே போனாலும் சேர்ந்தே தான் போவார்கள்.மகன்-மருமகள் கூட விளையாட்டாக சொல்லுவார்கள் “புதிசா கல்யாணம் ஆன ஜோடி என்று நினைப்பு”-“அப்படி என்ன ஒட்டுதலோ” என்று. பெரியவர்கள் இருவருமே அதை பற்றி கவலை பட மாட்டார்கள். கிழவர் குறும்பாக சொல்வார்”கல்யாணம் அன்னிக்கு ‘சப்தபதி’போது சேர்ந்து அடி எடுத்து வைக்க ஆரம்பித்த்தோம்”-“இன்று வரை தொடர்கிறோம்” என்று.

இரண்டு மகன்கள். இருவருமே நன்றாக படித்து நல்ல நிலமையில் இருப்பவர்கள். மூத்தவன் வெங்கட். ஐ.ஆர்.எஸ். தேறி,’இன்கம்டாக்ஸ்’ ஆஃபிஸில் ‘அஸிஸ்டெண்ட் கமிஷனராக சென்னையில் இருக்கிறான்.பத்மா பெரிய நாட்டுபெண். இருவருமே பெரியவர்களிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.முறையே 12வது, 8வது வகுப்பில் படிப்பவர்கள்.

சின்னவன் பிரகாஷ்- ‘ஸ்டேட் பாங்கில்’ ஆஃபிஸர். மனைவி கீதா ‘டீச்சராக’வேலை பார்பவள்.அவர்களுக்கு ஒரே மகன் ஹரீஷ்.9 வயது.இவர்கள் இருப்பது சிகந்தராபாத்தில்.

மற்ற வீடுகளை போல பெற்றவர்களை வைத்து கொள்ள ‘ஏலம்’ போடுபவர்கள் அல்ல வெங்கட்டோ பிரகாஷோ. முதலில் இவனிடம் ஆறு மாதம் அவனிடம் ஆறு மாதம் என்று இருந்து வந்தார்கள். பெரிய மருமகள் பத்மா தான் சொன்னாள்” அப்பா-அம்மா நம்மோடு தொடர்ந்து இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது”-“’பர்மனென்டாக’ நம் கூடவே இருக்கட்டுமே என்று”. வெங்கட் பிரகாஷிடம் கூற தம்பிக்காரன் சண்டைக்கே வந்து விட்டான் “நீ ஃபோனை மன்னி கிட்டே கொடு””நான் பேசிக்கறேன் என்றான்”-குடும்பத்து அங்கத்தினர் எல்லோரும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த பாசமும்/அன்பும் வைத்திருந்தனர். வெளிப்படையாக, நட்புடன் பேசிகொள்வார்கள்.உரிமையோடு ”என்ன மன்னி நாங்க அப்பா அம்மாவை வெச்சுக்க வாண்டாமா?”அண்ணா என்னவோ சொல்கிறான்” என்றான். “மைத்துனரை சொந்த தமபியை போல் பார்க்கும் பத்மா “அப்படி இல்லை பிரகாஷ்-இருவருக்கும் வயது ஆகிவிட்டது- ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரயில் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கிற்தே” என்றுதான் சொன்னேன்” என்றாள். அதற்க்கு பிரகாஷ் “சரி இப்படி வேணுமானால் செய்யலாம் மன்னி”- “ஆறு மாதத்துக்கு அப்பா உங்களோடு இருக்கட்டும்-அம்மா எங்களோடு இருக்கட்டும்”- பிறகு நாங்கள் அம்மாவை உங்களிடம் கொண்டு விட்டு விட்டு அப்பாவை அழைத்து கொள்கிறோம்-இதன் மூலம் பெரியவர்களின் அருகாமை இருவர்க்கும் கிடைக்கும் என்றான்.

இதை கைலாசம்-புஷ்பா தம்பதியரிடம் தெரிவித்த போது அவர்கள் ஒப்புகொள்ள வில்லை. “50 வருஷமா சுக-துக்கதில்,நன்மை-தீமைககளில் சேர்ந்தே இருக்கோம்”-“அதெப்படி எங்களை பிரிக்கலாம் என்று உங்களுக்கு தோண்றியது”?:”எஙகளை பார்துக்கறது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டு விடுங்கள்”- “எங்களை பிரிக்க முயலாதீர்கள்” என்று கூறிவிட்டனர். மகன்-மருமகள் யாருமே அப்புறம் அந்த பேச்சை எடுக்க வில்லை.

கைலாசம் கூறுவார் புஷ்பாவிடம்” ராம பிரான் பெரிய தெய்வம்”-“அவதாரம் என்கிறார்கள்”-.”எப்படித்தான் சீதையை விட்டு விட்டு அவ்வளவு நாள் உயிரோடு இருந்தாரோ”?-“ உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட நான் பிரிந்து இருக்கமாட்டேன்”-”நீ முன்னாடி போயிட்டயானா”-“அந்த காலத்திலே பெண்கள் ‘உடன்-கட்டை” ஏறுவார்களாமே”-“அதே மாதிரி நானும் உன்னோடு சிதைலியே விழுந்துவிடுவேன்” என்பார்- “போதும் இந்த பேச்சு”-“ அசடாட்டும் எதையாவது பேத்திண்டு”-“ இனிமே சாபிட மட்டும் வாயை திறங்கள் போரும்” என்று சொல்லுவாள் புஷ்பா.

கைலாசம் வெளிப்படையாக கூறுவார்-புஷ்பா மனசுக்குள் வைத்து கொண்டு இருப்பாள் அவ்வளுவு தான் வித்தியாசம் சத்தியவானுக்காக சாவித்திரி யமனிடம் போய் உயிர் பிச்சை கேட்டாளாமே- அதே மாதிரி “இந்த மனுஷருக்காக” நாமும் யம-தர்ம-ராஜனிடம் தாலி பிச்சை கேட்க வேண்டியதுதான். நம்மை முனாலே அழைத்து கொண்டால் இந்த மனுஷராலே ஒரு நிமிஷம் தனியா இருக்கு முடியாது என்று நினைத்து கொள்வாள்.

பெரிய மருமகள் பத்மாவிற்கு ‘கால் ப்ளாடர்’ஸ்டோன் ஆபரேஷன். குழந்தைகளை பார்த்து கொள்ளவும், பத்மாவிற்கு தைர்யம் சொல்லவும் அம்மா தன்னோடு வந்து இருக்க வேண்டும் என்று வெங்கட் கேட்டுகொண்டான்.அப்போது கைலாசம்-புஷபா சின்ன மகன்-மருமகளோடு சிகந்தராபாத்தில் இருந்தனர்.அந்த சமயம் பார்த்து பிரகாஷை ‘டெபுடேஷனில்”வதோதராவுக்கு 6 மாததுக்கு அனுப்பியது வங்கி. சின்ன மருமகள் கீதாவையும்,பேரனையும் ஆம்பிளை துணை இல்லாமல் விட முடியாதுஆதலால் கைலாசம் சிகந்தராபாத்தில் தொடர்ந்து இருக்கவும், புஷ்பாவை பிரகாஷ் சென்னயில் அண்ணா வீட்டில் கொண்டு விடுவதாகவும் தீர்மானம் ஆகியது.

இந்த புதிய ஏற்பாடு ஒருவருக்கும் திருப்தியாக இல்லை. இருந்தும் ‘ஆபரேஷன்’ முடிந்து,ஓய்வு எடுத்து பதமா திரும்பவும் ‘நார்மல்’ ஆகும் வரை இதுதான் வழி என்று உணர்ந்து கொண்டனர்.தினமும் கைலாசமும் புஷ்பாவும் டெலிஃபோனில் பேசிகொள்வார்கள். “நீ இல்லாம மனசு ரொம்ப கழ்டமா இருக்கு” என்பார் கைலாசம். “எனக்கு மட்டும் என்னங்க-நிம்மதியாவா இருக்கேன்-“உடம்பு இங்கேயும் மனசு அங்கேயுமா இருக்கேன்” என்பாள் புஷ்பா.

ஒரு மாதம் ஓடியது திடிரென்று மாரடைப்பினால் புஷ்பா உயிர் பிரிந்தது.கனத்த இதயத்துடனும்,நீர் நிறைந்த கண்களுடனும்,வெங்கட் தகவல் சொல்ல பிரகாஷ் வீட்டு டெலிஃபோன் எண்ணை அழுத்தினான். அதற்குள் அவனது ‘செல்ஃபோன்”கிணுகிணுத்தது” ‘பிரகாஷ் ‘காலிங்’ என்று தெரிந்ததால் :நீ பேசு என்று பத்மாவிடம் கொடுத்தான். கீதாவின் குரலை கேட்ட அவன் “கீதா எப்படி சொல்வதுன்னே தெரியலே”-“அம்மா நம்மை விட்டு போயிட்டாள்”-“அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை” எனறான். கீதா “என்ன அண்ணா சொல்றீங்க”-“நானே கையும ஓடாம காலும் ஒடாம இருக்கேன்”- “நேத்து ராத்திரி எப்பவும் போல படுக்க போன அப்பா இன்னும் எழுந்திருக்கலே”-“டாக்டருக்கு ஃபோன் பணணினேன்”- “கையோடு இவருக்கும் தகவல் தெரிவித்தேன்”-“இப்ப நீங்க இப்படி ஒரு இடியை தூக்கி தலையில் போடுகிறீர்கள்” என்றாள். “என்னம்மா சொல்ற நீ”- “எனக்கு தலை சுத்துது”-என்று நா குழற தடுமாறினான் வெங்கட். அதற்குள் பத்மா “சின்னவர் என்னமோ சொல்கிறார்”-“எனக்கு பயமா இருக்குது”-டாக்டர் வந்து பார்த்தவுடன் கீதா நமக்கு சொல்லுவாளாம்”-“அவர் உடனே ஃப்ளைட்” பிடித்து வருகிறாராம்” என்றாள்.

அப்பாவிடம் எப்படி தெரிவிப்பது என்று கவலைபட்ட வெங்கட்டுக்கு அந்த வேலையை வைக்கவில்லை கைலாசம்.நொடிக்கு நொடி ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழ மட்டோம் என்று கூறி கொண்டு இருந்த அந்த தம்பதிகள் சொன்னதை செய்து காட்டி விட்டனர்.இரண்டு பேரும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் இயற்கை எய்தியதை மருத்துவர்கள் கொடுத்த ‘இறப்பு சான்றிதழ்கள்’ உறுதி செய்தன,
See More


மன மாற்றம்
------------------------
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
=====================
ரமணனின் கையில் இருந்து செய்தித்தாள் 'வெடு'கென்று பிடுங்கப்பட்டது. பிடுங்கியது அவரது மகன் திரு கார்த்திக். பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை அதிகாரி."நீங்கள் ஆத்தில் தானே இருக்கிறீர்கள்"-" அப்புறம் நிதானமாக பார்த்தால் போதாதா"?"எனக்கு போட்டியாக இப்போதுதான் பார்க்க வேண்டுமா" ?என்று கடுமையான சொற்கள் வேறு. "எனக்கு ஒன்றும் ...அவசரம் இல்லை"- "ஒருவரும் பார்க்க வில்லையே என்றுதான் பிரட்டி கொண்டிருந்தேன்" என்று சமாதானாமாக கூறினார் ரமணன்.

"தங்கம்- இங்கே கொஞ்சம் வரயா"?-"இரண்டாவது தடவை 'காபி' குடுக்கிறாயா"? என்று தன மனைவியை விளித்தார். பதில் வந்ததோ மாட்டு-பெண் சுமித்ராவிடம் இருந்து "இப்ப என்ன அவசரம் காப்பிக்கு"? "முதல்லே அம்மா உங்க பிள்ளைக்கு சிற்றுண்டி தயார் செய்து முடிக்கட்டும்"-"அப்புறம் இருக்கவே இருக்கிறது உங்களுக்கு 'காபி' கொடுப்பது " என்று குண்டூசியால் குத்துவதை போல் வார்த்தைகளால் குத்தினாள். தங்கம் இடையில் புகுந்து "அதில்லை சுமித்ரா"-"அப்பா இப்போ 'ரத்த-கொதிப்பு மாத்திரை சாப்பிடணும்"_"காபியை குடித்து விட்டு போட்டுக்கலாம் என்று கேட்டு இருக்கிறார்" என்றாள்.

ரமணன் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிந்து மூன்று மாதம் முன்பு ஒய்வு பெற்றவர். அதிலிருந்து அவருக்கும் சரி அவர் மனைவி தங்கத்துக்கும் சரி வாழ்க்கை நரகமாகி விட்டது. மகன் கார்த்திக்கும் மருமகள் சுமித்ராவும் வார்த்தைகளால் குத்துவதையே வழக்கமாக்கி கொண்டுவிட்டார்கள். மிகுந்த ஆசையோடும்,பிரியத்தோடும் இருந்தவர்கள் தான். ஓய்வு பெற்றதினால் வருமானம் நின்று விட்டது என்ற எண்ணத்தினாலோ, குடும்பத்துக்கு பாரமாக ஆகிவிட்டார் என்று தோன்றியதாலோ-என்ன காரணமோ சதா சர்வ காலமும் ஊசி பட்டாசாக வார்த்தைகளை பிரயோகித்தனர் கார்த்திக்கும்,சுமித்ராவும். உட்கார்ந்தால்,குற்றம்,எழுந்தால் குற்றம். சீக்கிரம் குளித்தால் " உங்களுக்கு இப்போ என்ன அவசரம்"?-"அவர் அலுவலகத்திற்கும் ,குழந்தைகள் பள்ளிக்கும் கிளம்ப வேண்டாமா"? என்று கத்தல். தாமதமாக குளிக்கலாம் என்று காத்து கொண்டிருந்தால் "வயசு ஆகி இருக்கிறதே வழிய இங்கிதம் கிடையாது"-"காலையில் சீக்கிரம் குளித்து விட்டு பூஜை அறையில் நேரத்தை செலவழிப்போமே என்று தோணாதோ"? என்ற அங்கலாய்ப்பு.

ஏதோ குழந்தைகள் ஆர்த்தியும் (10 வயது - 5ம் வகுப்பு) ஆகாஷும் (6 வயது-2ம் வகுப்பு) ஒட்டுதலாக இருப்பதால் ஓடி கொண்டு இருந்தது. பேத்தி சொல்லுவாள் "அம்மா பாட்டுக்கு சொல்லி கொண்டு இருக்கட்டும் பாட்டி"- "நீங்க ஒண்ணும் மனசில எடுத்துக்காதீங்க" என்று. ஆகாஷ் இன்னும் சிறியவன் ஆனதால் "தாத்தா-நேற்று ராத்திரி என் சொப்பனத்தில் ஒரு தேவதை வந்தாள்"-"அவளிடம் அப்பா-அம்மா மனசில் புகுந்து உங்களை மரியாதையுடன் நடத்துமாறு மாற்ற சொல்லி இருக்கிறேன்" என்று குழந்தைத்தனமாக கூறுவான். தாத்தா-பாட்டி தங்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து,வாயெல்லாம் பல்லாக "என் ராஜா- என் செல்லம்" என்று பேரனை உச்சி முகருவார்கள்.

தங்கம் அதுவும் ரமணனை உள்ளங்கையில் வைத்து தாங்குபவள். கணவரை யாராவது ஏதாவது சொன்னால் தாங்க மாட்டாள். ஒரு முறை சொல்லி கூட இருக்கிறாள்"ஏங்க- நமக்கு என்ன தலைஎழுத்து இவங்க பேச்சை கேட்டு கொண்டு இங்க இருக்கணும் என்று?"-"உங்க ஓய்வு தொகையில் ஒரு பகுதியை ஏதாவது 'முதியோர் இல்லத்தில்' வைப்பு நிதியாக செலுத்திவிட்டு அங்கே போய் நிம்மதியாக இருப்போமே" என்று. ரமணன் தான் அவளுக்கு புரிய வைப்பார் "அசடு- வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாதே"-"தலைமுறை இடைவெளி-மற்றும் தற்கால 'அவசர வாழ்க்கை' முறை ஆகியவற்றால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படுவது சகஜம்"-"அதற்காக மூட்டை முடிச்சை தூக்கி கொண்டு கிளம்புவது தீர்வு அல்ல"- "நாம் போய்விட்டால் பெரியவர்களின் ஆதரவும் அறிவுரைகளும் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்?- "குழந்தைகள் எவ்வளுவு ஒரு அன்பான,அக்கறையான சூழ்நிலையில் வளர்கிறார்கள்"-"இதையெல்லாம் யோசித்து பார்க்க வேண்டாமா" ?என்பார். அவர் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தங்கம் "நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான்" என்று ஒப்பு கொள்வாள்.

பக்கத்து வீட்டு பாரதி மாமி "சுமித்ரா- உன் மாமியார் இருக்கிறார்களா"? என்று கேட்டாள். "என்ன விஷயம் மாமி"என்றாள் சுமித்ரா. "ஒன்றும் இல்லை"- ஒரு வாரமாக வாயெல்லாம் புண்ணுடன் ரொம்ப கழ்டப்பட்டேன்"-"தங்கம் மாமி தான் தேங்காயை துருவி அதன் பாலை பிழிந்து வாயில் அடக்கி கொள்ளுமாறு வைத்தியம் சொன்னாள்"-"இப்போ நல்லா தேவலை"-அதான் நன்றி சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள்."பெரியவா ஆத்தோடு இருந்தா எவ்வளவு வசதியா இருக்கு"-"நமக்கு தான் அவா அருமை தெரியலே" என்றாள்.மாமி பொதுவாக சொன்னாலும் தன்னை தான் குறிப்பிட்டு சொல்கிறாளோ என்று சுருகென்றது சுமித்ராவுக்கு.

அலுவலகத்தில் மேலதிகாரி கார்த்திக்கை கூப்பிட்டு அனுப்பினார்."கார்த்திக்- இந்த மாசு-கட்டுப்பாடு சான்றிதழ் விஷயம் ரொம்ப நாளாக இழுக்க அடித்து கொண்டு இருக்கிறது"-" சான்றிதழ் நம் கைக்கு வரவில்லை என்றால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையில் மற்றும் ஏற்றுமதியில் பெரிய பிரச்சனை வர கூடும்" -"நீ மிகுந்த திறமைசாலி என்பதால் தான் இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" "நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். "என் மேல் இந்த அளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு ரொம்ப நன்றி" "முழு முயற்சியும் செய்கிறேன் ஐயா" என்று பணிவுடன் கூறினான் கார்த்திக்.

அறையை விட்டு வெளி ஏறிகொண்டு இருந்த கார்த்திக்கை மேலதிகாரி "ஒரு நிமிடம் கார்த்திக்"-"எனக்கு கிடைத்த தகவல்படி இப்போது பதவியில் இருக்கும் அதிகாரி, எல்லா முடிவுகளும், தனக்கு முன் இந்த பதவியில் இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, அதிகாரியை கலந்து ஆலோசித்த பின்னரே எடுப்பதாக கேள்வி"-"அவரை போய் பார்ப்பது பயனளிக்க கூடும் என்று தோன்றுகிறது" என்றார்- "எல்லா கோணங்களிலும் முயற்சி செய்து வெற்றி அடைய பார்கிறேன் ஐயா" என்றான் கார்த்திக்.

மாசு கட்டுப்பாடு அலுவலகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியின் தொலைபேசி எண்ணை பெற்று கொண்டு அவரை முதலில் பார்க்கலாம் என்று நினைத்தான் கார்த்திக். ராஜா அண்ணாமலை புறத்தில் இருந்த அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அறிமுக படுத்திக்கொண்ட பின்னர், இன்ன விஷயமாக அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினான் அவன். எப்போது வேணுமானாலும் வரலாம் என்றும் தன்னால் முடிந்த உதவியை கட்டாயம் செய்வதாகவும் அன்போடு கூறினார் அந்த அதிகாரி. அவரை சந்தித்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தாங்கள் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தணிக்கை அதிகாரி திரு ரமணனின் மகன்தானே"? என்று. கார்த்திக் ஆமாம் என்று தலை ஆட்டியவுடன் "உங்கள் அப்பாவிடம் நான் அலுவலக வேலை நிமித்தமாக பல முறை தொடர்பு கொண்டு இருக்கிறேன்"-"அந்த மாதிரி ஒரு நேர்மையான அதிகாரியை நான் சந்தித்ததே இல்லை"-"அவருடைய மகனாகிய தங்களுக்கும் அதே நேர்மை உணர்வு இருக்கும்"- "இப்போதே நான் எங்கள் அலுவலக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு தேவையான சான்றிதழை வெளியிட சொல்கிறேன்"என்றார். "ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை"-"இந்த நன்-மதிப்புக்காகவும் நற்பெயருக்காகவும் என் அப்பாவுக்கு எந்த அளவு கடமை பட்டுள்ளேனோ அதே அளவு உங்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன் " என்று கூறி விடை பெற்றான்.

அன்று இரவு வீடு திரும்பிய கார்த்திக், சுமித்ராவிடம் நடந்ததை எல்லாம் கூறினான். கேட்டு கொண்ட சுமித்ரா தன் பங்குக்கு பாரதி மாமி சொன்னதை தெரிவித்தாள். கூடவே "இதோ பாருங்க"-"ரெண்டு பேருக்கும், ஒரே நாளிலே,கிட்டத்தட்ட ஒரே மாதிரி --பெரியவாளோட அருமையை புரிய வைக்கிற மாதிரி நிகழ்ச்சி நடந்து இருக்கிறது என்றால் இது தற்செயல் அல்ல" என்றாள். அவள் கூற்றை ஆமோதித்த கார்த்திக் "நமக்கு எதையோ புரிய வைக்க-நம்ம கண்ணை திறக்கிறதுக்காகத்தான் இது நடந்து இருக்கிறது என்று தோன்றுகிறது" -"வா அப்பா அம்மாவை போய் நமஸ்காரம் பண்ணிட்டு"-"நம்ம தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டு"-"இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துப்போம்" என்றான்.

ரமணன்-தங்கம் இருவருக்கும் திடீரென்று தங்களை நிற்க வைத்து "இன்றுதான் எங்கள் இருவருக்கும் உங்கள் அருமை புரிந்தது"-"எங்களை மன்னியுங்கள்" என்று கூறி மகனும்-மருமகளும் ஏன் தங்கள் காலில் விழுகிறார்கள் என்று புரியவில்லை.
மரண மருத்துவம்
------------------------------
எழுதியவர் :சுந்தரேசன் சுரேஷ்
==================================

செய்திதாளின் 3-வது பக்கத்தில் வலது ஓரமாக அந்த பெட்டி செய்தி வெளியாகி இருந்தது.மருத்துவர் சிவசங்கரின் 25-வருட சேவையை பாராட்டி அவருக்கு இந்திய மருத்துவ கழகம் விருது வழங்கபோகிறது என்று. உண்மைகள் உறங்கி கொண்டு இருக்கும் வரை தகுதி இல்லாதவர்களுக்கு பாராட்டுகளும்,பத்திரங்களும் கிடைத்து கொண்டு...தான் இருக்கபோகின்றன.
===================================================
அது ஒரு ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. மிகவும் கடுமையான தர கட்டுபாடுகள் அங்கே அமலில் இருந்தன.தயாரிப்பில் முக்காலே மூணு வீசம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. திரு துர்கா பிரசாத் பானர்ஜி என்பவர் தலைமை பொறுப்பில் இருந்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை.

எல்லா நிறுவனங்களிலும் நடக்கிற 'பதவி சண்டை' அங்கேயும் நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் திரு. பட்வர்தனின் உதவியுடன் திரு.பானர்ஜி மற்றும் அவருக்கு வேண்டிய நாணயமான அதிகாரிகளை ஓரம் கட்டி விட்டு திரு.கேல்கர் குழு அதிகாரத்தை கை பற்றியது.

திரு பானர்ஜி முப்பது-முப்பத்திஐந்து வருடங்களாக இந்த துறையில் இருப்பவர். ஐ.ஐ.டியில் இருந்து எம்.டெக்.பட்டம் பெற்றவர். தரத்தில் சிறிது குறை இருந்தாலும் நிராகரித்துவிடுவார். ஏற்றுமதியில் 'தகிடு தத்தம்',தர-குறைவான பொருட்களையும் ஏற்றுமதி செய்வது,விலை ஏற்றம்-குறைப்பு, என்ற பல விதத்திலும் நேர்மை-அற்ற செயல்களை செய்து கொண்டு இருந்த கேல்கருக்கு இது பெரிய தொல்லையாக போய் விட்டது. நேரிடையாகவே பல முறை பானர்ஜியிடம் சொல்லி இருக்கிறான்"உங்களுக்கு ஏன் வம்பு"? " நீங்கள் தன்னிச்சை ஒய்வு பெற்று கொண்டு சென்று விடுங்களேன்" என்று.பதிலுக்கு பானர்ஜி "இந்த தொழிற்சாலையின் ஒவ்வொரு செங்கலும் நான் பார்த்து பார்த்து கட்டியது"-"உப்பிட்டவரை உள்ள வரைக்கும் மறக்கமாட்டேன்"- "என் கடைசி மூச்சு வரை இங்கு அநியாயம் நடக்க விடமாட்டேன்" என்று சூளுரைத்திருக்கிறார்.

இப்படியாக இவர்களுக்குள் பனி போர் நடந்து கொண்டு இருந்தது. பானர்ஜிக்கு குழந்தைகள் கிடையாது. அவர் மனைவிக்கு ஒரு சிறுநீரகம் பழுதாகி இருந்தது. தகுந்த 'டோனருக்காக' காத்திருந்தார்.நேர்மையான அதிகாரியாக இருந்ததால் அதிகம் பணம் சேர்க்க முடியவில்லை அவரால். அவரிடம் படித்து இன்று நல்ல நிலைமையில் உள்ள அவரது மாணவர்கள் நீ நான் என்று மருத்துவ செலவை ஏற்று கொள்ள தயாராக இருந்தனர்.

ஒருவாறாக 'டோனரும்' கிடைத்து அறுவை சிகிச்சைக்கும் தேதி நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் போய் பானர்ஜியின் மனைவி இறந்து விட்டாLள். அந்த துக்கமான செய்தியை அவருக்கு தெரிவிப்பதற்கு முன்பே, எதிர்பாராத விதமாக அவருக்கு 'ஸ்ட்ரோக்' ஏற்பட்டு 'கோமா'வில் விழுந்துவிட்டார்.

ஒரு மாதம் போல் கோமாவில் இருந்தார். சும்மா இருப்பானா கேல்கர்? அவர் உறவுக்காரர்களை வரவழைத்து "பானர்ஜி சார் தொழிர்சாலைக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்"-"நிறுவனமும் அவருக்காக எவ்வளுவு வேண்டுமானாலும் மருத்துவ செலவு செய்ய தயாராக இருக்கிறது"-"இருந்தாலும் எத்தனை நாளைக்கு இப்படி வைத்திருக்க முடியும்"?-"யோசனை பண்ணி சொல்லுங்கள்" என்று சொன்னான். துரதிருஷ்டவசமாக பானர்ஜியின் குடும்பத்திலும்,அவரது சகோதரர்களுக்கும் மைத்த்துனர்களுக்கு இடையேயும், சொத்து தகராறு.

கேல்கர் பானர்ஜிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர் சிவசங்கரை தன கையில் போட்டு கொண்டு பானர்ஜியின் 'லைப் சப்போர்ட் சிஸ்டத்தை' 'வித்ட்ரா'செய்து விட்டான். உறவுக்காரர்களை சிவசங்கர் சரிகட்டி விட்டார். "இதோ பாருங்கள்"-கோமாவில் இருப்பவர்கள் திரும்ப எழுந்து நடமாடும் வாய்ப்பு மிகவும் குறைவு"-"அதோடு அப்புறமும் அவர்களை கவனித்துக்கொள்ள எக்கச்சக்க பணம் செலவழியும்"-" சப்போர்ட் சிஸ்டத்தை 'வித்ட்ரா' செய்வதே உங்களுக்கும் நல்லது"-"அவருக்கும் நல்லது" என்று மூளை சலவை செய்து விட்டார்.

உலகம் பானர்ஜி 'ஸ்ட்ரோக்'மூலம் கோமாவில் விழுந்து உயிர் துறந்ததாக நம்பும். ஆனால் கேல்கரும்,சிவசங்கரும் கூடவா நம்புவார்கள்?
பெண்கள் இந்த உலகத்தை சந்திக்க பிக்ஷு Mami போன்ற பாத்திரம் அல்லது தைரியம் வேண்டும்

Wednesday, February 19, 2014

நீ இல்லாமல் நான் இல்லை
----------------------------------------
எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ்
---------------------------------------------
கைலாசம்(வயது 75) புஷ்பா(வயது 68) தம்பதியர் மிகவும் அன்னியோன்னியமானவர்கள்.இவள் தண்ணி குடித்தால் அவருக்கு தாகம் தீர்ந்து விடும். அவர் சாபிட்டால் இவளுக்கு வயிறு நிரம்பி விடும். சமீபத்தில் தான் திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன. இருந்தும் என்னமோ நேற்று தான் கல்யாணம் ஆன் மாதிரி ஒரு நெருக்கம்.”புஷ்பா சாபிட்டாயா-புஷ்பா உடம்பை பார்த்துகொள்ளு” என்று உருகுவார் கைலாசம். அதே மாதிரி “பனியா இருக்கு- வென்னீரிலே குளிங்க”-“கம்பளியை போத்திகுங்க” என்று கரிசனமாக இருப்பாள் புஷ்பா.

கடை-கண்ணிக்கோ,’வாக்கிங்கோ’கோவில்-குளங்களுக்கோ-எங்கே போனாலும் சேர்ந்தே தான் போவார்கள்.மகன்-மருமகள் கூட விளையாட்டாக சொல்லுவார்கள் “புதிசா கல்யாணம் ஆன ஜோடி என்று நினைப்பு”-“அப்படி என்ன ஒட்டுதலோ” என்று. பெரியவர்கள் இருவருமே அதை பற்றி கவலை பட மாட்டார்கள். கிழவர் குறும்பாக சொல்வார்”கல்யாணம் அன்னிக்கு ‘சப்தபதி’போது சேர்ந்து அடி எடுத்து வைக்க ஆரம்பித்த்தோம்”-“இன்று வரை தொடர்கிறோம்” என்று.

இரண்டு மகன்கள். இருவருமே நன்றாக படித்து நல்ல நிலமையில் இருப்பவர்கள். மூத்தவன் வெங்கட். ஐ.ஆர்.எஸ். தேறி,’இன்கம்டாக்ஸ்’ ஆஃபிஸில் ‘அஸிஸ்டெண்ட் கமிஷனராக சென்னையில் இருக்கிறான்.பத்மா பெரிய நாட்டுபெண். இருவருமே பெரியவர்களிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.முறையே 12வது, 8வது வகுப்பில் படிப்பவர்கள்.

சின்னவன் பிரகாஷ்- ‘ஸ்டேட் பாங்கில்’ ஆஃபிஸர். மனைவி கீதா ‘டீச்சராக’வேலை பார்பவள்.அவர்களுக்கு ஒரே மகன் ஹரீஷ்.9 வயது.இவர்கள் இருப்பது சிகந்தராபாத்தில்.

மற்ற வீடுகளை போல பெற்றவர்களை வைத்து கொள்ள ‘ஏலம்’ போடுபவர்கள் அல்ல வெங்கட்டோ பிரகாஷோ. முதலில் இவனிடம் ஆறு மாதம் அவனிடம் ஆறு மாதம் என்று இருந்து வந்தார்கள். பெரிய மருமகள் பத்மா தான் சொன்னாள்” அப்பா-அம்மா நம்மோடு தொடர்ந்து இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது”-“’பர்மனென்டாக’ நம் கூடவே இருக்கட்டுமே என்று”. வெங்கட் பிரகாஷிடம் கூற தம்பிக்காரன் சண்டைக்கே வந்து விட்டான் “நீ ஃபோனை மன்னி கிட்டே கொடு””நான் பேசிக்கறேன் என்றான்”-குடும்பத்து அங்கத்தினர் எல்லோரும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த பாசமும்/அன்பும் வைத்திருந்தனர். வெளிப்படையாக, நட்புடன் பேசிகொள்வார்கள்.உரிமையோடு ”என்ன மன்னி நாங்க அப்பா அம்மாவை வெச்சுக்க வாண்டாமா?”அண்ணா என்னவோ சொல்கிறான்” என்றான். “மைத்துனரை சொந்த தமபியை போல் பார்க்கும் பத்மா “அப்படி இல்லை பிரகாஷ்-இருவருக்கும் வயது ஆகிவிட்டது- ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரயில் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கிற்தே” என்றுதான் சொன்னேன்” என்றாள். அதற்க்கு பிரகாஷ் “சரி இப்படி வேணுமானால் செய்யலாம் மன்னி”- “ஆறு மாதத்துக்கு அப்பா உங்களோடு இருக்கட்டும்-அம்மா எங்களோடு இருக்கட்டும்”- பிறகு நாங்கள் அம்மாவை உங்களிடம் கொண்டு விட்டு விட்டு அப்பாவை அழைத்து கொள்கிறோம்-இதன் மூலம் பெரியவர்களின் அருகாமை இருவர்க்கும் கிடைக்கும் என்றான்.

இதை கைலாசம்-புஷ்பா தம்பதியரிடம் தெரிவித்த போது அவர்கள் ஒப்புகொள்ள வில்லை. “50 வருஷமா சுக-துக்கதில்,நன்மை-தீமைககளில் சேர்ந்தே இருக்கோம்”-“அதெப்படி எங்களை பிரிக்கலாம் என்று உங்களுக்கு தோண்றியது”?:”எஙகளை பார்துக்கறது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டு விடுங்கள்”- “எங்களை பிரிக்க முயலாதீர்கள்” என்று கூறிவிட்டனர். மகன்-மருமகள் யாருமே அப்புறம் அந்த பேச்சை எடுக்க வில்லை.

கைலாசம் கூறுவார் புஷ்பாவிடம்” ராம பிரான் பெரிய தெய்வம்”-“அவதாரம் என்கிறார்கள்”-.”எப்படித்தான் சீதையை விட்டு விட்டு அவ்வளவு நாள் உயிரோடு இருந்தாரோ”?-“ உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட நான் பிரிந்து இருக்கமாட்டேன்”-”நீ முன்னாடி போயிட்டயானா”-“அந்த காலத்திலே பெண்கள் ‘உடன்-கட்டை” ஏறுவார்களாமே”-“அதே மாதிரி நானும் உன்னோடு சிதைலியே விழுந்துவிடுவேன்” என்பார்- “போதும் இந்த பேச்சு”-“ அசடாட்டும் எதையாவது பேத்திண்டு”-“ இனிமே சாபிட மட்டும் வாயை திறங்கள் போரும்” என்று சொல்லுவாள் புஷ்பா.

கைலாசம் வெளிப்படையாக கூறுவார்-புஷ்பா மனசுக்குள் வைத்து கொண்டு இருப்பாள் அவ்வளுவு தான் வித்தியாசம் சத்தியவானுக்காக சாவித்திரி யமனிடம் போய் உயிர் பிச்சை கேட்டாளாமே- அதே மாதிரி “இந்த மனுஷருக்காக” நாமும் யம-தர்ம-ராஜனிடம் தாலி பிச்சை கேட்க வேண்டியதுதான். நம்மை முனாலே அழைத்து கொண்டால் இந்த மனுஷராலே ஒரு நிமிஷம் தனியா இருக்கு முடியாது என்று நினைத்து கொள்வாள்.

பெரிய மருமகள் பத்மாவிற்கு ‘கால் ப்ளாடர்’ஸ்டோன் ஆபரேஷன். குழந்தைகளை பார்த்து கொள்ளவும், பத்மாவிற்கு தைர்யம் சொல்லவும் அம்மா தன்னோடு வந்து இருக்க வேண்டும் என்று வெங்கட் கேட்டுகொண்டான்.அப்போது கைலாசம்-புஷபா சின்ன மகன்-மருமகளோடு சிகந்தராபாத்தில் இருந்தனர்.அந்த சமயம் பார்த்து பிரகாஷை ‘டெபுடேஷனில்”வதோதராவுக்கு 6 மாததுக்கு அனுப்பியது வங்கி. சின்ன மருமகள் கீதாவையும்,பேரனையும் ஆம்பிளை துணை இல்லாமல் விட முடியாதுஆதலால் கைலாசம் சிகந்தராபாத்தில் தொடர்ந்து இருக்கவும், புஷ்பாவை பிரகாஷ் சென்னயில் அண்ணா வீட்டில் கொண்டு விடுவதாகவும் தீர்மானம் ஆகியது.

இந்த புதிய ஏற்பாடு ஒருவருக்கும் திருப்தியாக இல்லை. இருந்தும் ‘ஆபரேஷன்’ முடிந்து,ஓய்வு எடுத்து பதமா திரும்பவும் ‘நார்மல்’ ஆகும் வரை இதுதான் வழி என்று உணர்ந்து கொண்டனர்.தினமும் கைலாசமும் புஷ்பாவும் டெலிஃபோனில் பேசிகொள்வார்கள். “நீ இல்லாம மனசு ரொம்ப கழ்டமா இருக்கு” என்பார் கைலாசம். “எனக்கு மட்டும் என்னங்க-நிம்மதியாவா இருக்கேன்-“உடம்பு இங்கேயும் மனசு அங்கேயுமா இருக்கேன்” என்பாள் புஷ்பா.

ஒரு மாதம் ஓடியது திடிரென்று மாரடைப்பினால் புஷ்பா உயிர் பிரிந்தது.கனத்த இதயத்துடனும்,நீர் நிறைந்த கண்களுடனும்,வெங்கட் தகவல் சொல்ல பிரகாஷ் வீட்டு டெலிஃபோன் எண்ணை அழுத்தினான். அதற்குள் அவனது ‘செல்ஃபோன்”கிணுகிணுத்தது” ‘பிரகாஷ் ‘காலிங்’ என்று தெரிந்ததால் :நீ பேசு என்று பத்மாவிடம் கொடுத்தான். கீதாவின் குரலை கேட்ட அவன் “கீதா எப்படி சொல்வதுன்னே தெரியலே”-“அம்மா நம்மை விட்டு போயிட்டாள்”-“அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை” எனறான். கீதா “என்ன அண்ணா சொல்றீங்க”-“நானே கையும ஓடாம காலும் ஒடாம இருக்கேன்”- “நேத்து ராத்திரி எப்பவும் போல படுக்க போன அப்பா இன்னும் எழுந்திருக்கலே”-“டாக்டருக்கு ஃபோன் பணணினேன்”- “கையோடு இவருக்கும் தகவல் தெரிவித்தேன்”-“இப்ப நீங்க இப்படி ஒரு இடியை தூக்கி தலையில் போடுகிறீர்கள்” என்றாள். “என்னம்மா சொல்ற நீ”- “எனக்கு தலை சுத்துது”-என்று நா குழற தடுமாறினான் வெங்கட். அதற்குள் பத்மா “சின்னவர் என்னமோ சொல்கிறார்”-“எனக்கு பயமா இருக்குது”-டாக்டர் வந்து பார்த்தவுடன் கீதா நமக்கு சொல்லுவாளாம்”-“அவர் உடனே ஃப்ளைட்” பிடித்து வருகிறாராம்” என்றாள்.

அப்பாவிடம் எப்படி தெரிவிப்பது என்று கவலைபட்ட வெங்கட்டுக்கு அந்த வேலையை வைக்கவில்லை கைலாசம்.நொடிக்கு நொடி ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழ மட்டோம் என்று கூறி கொண்டு இருந்த அந்த தம்பதிகள் சொன்னதை செய்து காட்டி விட்டனர்.இரண்டு பேரும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் இயற்கை எய்தியதை மருத்துவர்கள் கொடுத்த ‘இறப்பு சான்றிதழ்கள்’ உறுதி செய்தன,

Saturday, February 15, 2014

கடைசி செலவு
---------------------
எழுதியவர்:சுந்தரேசன் ஸுரேஷ்
---------------------------------------------
விசாலம் சுவரில் சாய்ந்து, காலை நீட்டி கொண்டு உட்கார்ந்தாள். தன் பேரன் நவீனை கூப்பிட்டு “கண்ணா- இந்த தைலத்தை சற்று பாட்டியின் முழங்காலில் தேய்த்து விடேன்”-“வலி பிராணன் போகிறது” என்று சொல்லி கொண்டு இருந்தாள். அதை கேட்டுகொண்டே வந்த மருமகள் பிரியா “அவனை என்னத்துக்கு தொந்தரவு செய்கிறீர்கள்”-“அவன் என்ன நீங்கள் வைத்த வேலைக்கரனா”-“அவனுக்கு ‘ஹோம்-வொர்க்’நிறைய பாக்கி இருக்கிறது”-“நீ போய் உன் வேலையை கவனி” என்று மகனை விரட்டினாள்.அம்மா சென்றவுடன் பாட்டியை பார்ththuத்து மெல்லிய குரலில் சொன்னான் பேரன்”ராக்ஷஸிக்கு தெரியாமல் அப்புறம் வந்து தேய்த்து விடுகிறேன்”-“நீ கவலைப்படாதே” என்று. “என் தங்கமே உன் வார்த்தயே போறும்”-“நீ எனக்காக் எதாவது செய்ய போய் அம்மா கிட்ட மாட்டிகாதே”என்று அந்த கிழவி கூறினாள்.

இது ஒன்றும் புது நிகழ்ச்சி இல்லை அந்த வீட்டில். மகன் ஜெயராம்,மருமகள் பிரியா இருவருக்குமே வேண்டாதவள் விசாலம். இவ்வளவுக்கும்,சிறிய வயதிலேயே “அந்த பாழும் பிராமணன்” (அவள் கணவர் பஞ்சாபகேசன்) போன பின், மகன் ஜெயராமையும், மகள் மாலதியையும் வளர்த்து,ஆளாக்கி,கல்யாணம் செய்து கொடுத்தது எல்லாமே விசாலம் தான். வீடு வீடாக சமயல் வேலைக்கு செல்வது, பக்ஷணங்கள் பண்ணி கொடுப்பது என்று மாடாக உழைத்து, ஓடாக தேய்ந்து குழந்தைகளை ஆளாக்கினாள் இன்று அவளோ ஒருவருக்கும் வேண்டாதவள் ஆகி விட்டாள்.பேரன நவீன் ஒருவன்தான் அவளிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பவன்,அதுவும் பெற்றோர்களுக்கு தெரியாமல். தன்னுடய ‘பாக்கெட் மணி’யில் இருந்து கடலை மிட்டாய்,கோன் ஐஸ்கிரீம்’ என்று அப்பா-அம்மவுக்கு தெரியாமல் வாங்கி வந்து பட்டிக்கு குடுப்பான். “இதுக்கெல்லாம் ஏது காசு கண்ணு” என்று பாட்டி கேட்டால்”அதல்லாம் உனக்கு என்ன கவலை”-நான் வாங்கி தருகிறேன்”-“நீ சாப்பிடு” என்று பெரிய மனுஷன் மாதிரி பாட்டியை அடக்கி விடுவான்.

அருமை புதல்வன் அடிக்கடி நினைவுறுத்துவான்”ஏதொ இங்க ரெண்டு வேளை சோறு கிடைக்கிறது-“பேசாம தின்னுட்டு இருந்துக்க”-“ஒவ்வொரு வீட்டிலும் ‘கிழம்-கட்டைகள்’எல்லாம் முதியோர் இல்லத்தில் தான்-தெரியுமோல்லியோ? ” என்று.
மருமகளோ அதற்கு மேலே, உடைத்தே சொல்லுவாள் “ஓரு வயசுக்கு அப்புறம் இருக்க கூடாது”-இருந்து என்ன பிரோயோஜனம்”? “தானும் கழ்டப்பட்டுண்டு பிறத்தியாரையும் நிம்மதியா இருக்க விடாம”-மேல் நாட்டில் எல்லாம் “கருணை கொலை” என்று உண்டாமே? “ நம்ம நாட்டிலும் அது வரணும்” என்று ஜாடையாக விசாலத்தை பாரத்து கொண்டே சொல்லுவாள்.

“ஈஸ்வரா என்னை அழைச்சுக்க மாட்டயா””இத்தனைக்கு அப்புறமும் நான் இருக்கணுமா?” என்று குமைவாள் விசாலம்.அதற்கும் குற்றம் கண்டு பிடிபாள் பிரியா”இது வீடா, கருமாந்திர சாவடியா என்று தெரியவில்லை”-எப்ப பார்த்தாலும் ‘நா சாகணும்-நா சாகணும்” என்று கூப்பாடு””வெறுத்து போக்சு” என்பாள்.

உடம்பு சரி இல்லை,ஒரு தலை வலி, ஜுரம் என்றால் மகன் ஜெயராம் குதிப்பான் “ இந்த மாசம் ஏகபட்ட சிலவு”-இதில் மருத்தவருக்கு வேறு தண்டம் அழணுமா””பொசுக்குன்னு போகணுமே ஒழிய படுத்துண்டு கழுத்தை அறுக்க கூடாது” என்று நாக்கில் நரம்பில்லாம்ல் பேசுவான்.
மகள் மாலதியோ அதற்கு மேல. நல்ல நிலைமயில் இருந்ததும் ஒரு பேச்சுக்கு கூட அம்மாவை தன் கூட வைத்து கொள்வதை பற்றி எண்ணாதவள். “எல்லா நகை நட்டையும் அண்ணனுக்கே கொடுத்த-“அப்புறம் நீ எப்படி எதிர் பார்கலாம் நான் உன்னை வைத்து கொள்வேன் என்று”இந்த குசலம் விஜாரிப்பதே ஜாஸ்தி என்று நினைத்துகொள்” என்று சொல்லுவாள்.

ஜெயராம்-பிரியா பேசிக்கொண்டது விசால்ம் காதில் தெளிவாக விழுந்த்து “கிழவி மண்டையை போட்டா அது வேற இன்னும் செலவு இருக்கு”-“ பேசாம ‘கொள்ளி’ வைத்து விட்டு அத்தோடு விட்டுடணும். விலைவாசி இருக்கிற நிலமையிலே 13 நாள் காரியங்கள்,அது இது என்று இழுத்து விட்டு கழ்டப்படக்கூடாது” என்றான் ‘சீமந்த புத்திரன்”. அதற்கு மருகமகள் “இருக்கிற வரை தான் நாம் பார்த்துகொண்டு ஆகி விட்ட்து”-“செத்த அப்புறமாவது மாலதி கொடுக்கட்டுமே” என்றாள். என்ன நிலமைக்கு நாம் தள்ள ஆளாகியிருக்கிறோம் என்று நினைத்து அவள் மனம் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியது.

சாயங்கால வேளை- நவீன் விளையாடிவிட்டு, திரும்பும் வழியில் பாட்டிக்கு பிடித்த ‘காசி’ இலந்தை பழங்களை பார்த்தான் என்ன தோணியதோ பாட்டிக்கு என்று கொஞ்சம் வாங்கி கொண்டான். எப்படியோ அம்மாவுக்கு தெரியாமல் பாட்டி படுத்திருந்த இடத்துக்கு வந்த தாழ்ந்த குரலில் “பாட்டி இந்தா உனக்கு பிடிச்ச இலந்தை பழம்”- “தலை மட்டிலே மறைத்து வைத்துகொள்”-“அப்புறம் திங்கலாம்” என்று சொன்னான். பாட்டியிடமிருந்து பதில் வராததால் தூங்குகிறாளோ என்று நினைத்து தொட்டு எழுப்பினான். அதற்கும் பாட்டி அசங்காததை கண்டு நவீன் பயந்து விட்டான். “அம்மா,இங்கே வந்து பாட்டியை பாரேன்” என்று கத்தினான். “இப்ப என்ன புது நாடகம் போட்டாகிற்து” என்று கூறிகொண்டே பிரியா வந்தாள். ஜெயராமும் அவளை பின்தொடர்ந்தான்.விசாலத்தின் உயிர் விடை பெற்று கொண்டு இருந்தது.பிள்ளை,மருமகள்,மகள் ஆகியோரை அதிக நாள் ‘காக்க’ வைக்காமல் விசாலம் பரமபதம் அடைந்திருந்தாள்.

மாலதி வந்து தலை காட்டிவிட்டு “என்னால் காரியம் முடியரவரை இருக்க முடியாது” என்று இரண்டாம் நாள் சென்று விட்டாள். சொன்னபடியே உடலை தகனம் செய்து முதல் நாள் காரியம் மட்டும் செய்து விட்டு நிறுத்தி விட்டான் ஜெயராம்.பணத்துக்காக காரியம் செய்யவில்லை என்றால் கேவலம்-அதனால் “அம்மாவிற்கு கடைசி காலத்தில் நம் சடங்கு-சம்ப்ரதாயங்கள் எல்லவற்றிலும் நம்பிக்கை போய் விட்ட்து”-“நான் இறந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்” என்று சப்பை-கட்டு கட்டி விட்டான். விசாலத்தின் சோகமான சாயை (நிழல்) மட்டுமே அந்த வீட்டில் மிச்சம் இருந்த்து.
விசாலத்தின் ஒரே ஆஸ்தியான ஒரு ‘டிரங்க்” பெட்டியை குடைந்த போது அதற்குள் இரண்டு நார்மடி புடவைகள்,ஒரு கம்பளி,சில பழைய கடிதங்கள்,பகவத் கீதை, பஞ்ஜாபகேசனின் ஒரு புகைபடம் மற்றும் ஒரு ஓலை-பெட்டி கண்ணில் பட்டது ஓலை பெட்டியை திறந்து போது அதற்குள் ஒரு நான்கு வடம் தங்க சங்கிலி இருந்தது. கூடவே ஒரு துண்டு காகிதம்.அதில் குழந்தை எழுதியது போல் விசாலத்தின் கோணல்-மாணலான கையெழுத்தில் “இந்த பணம் என் சாவு சிலவுக்காக” என்று எழுதப்பட்டிருந்தது.

அவள் வாழ்ந்த வரையில், அவளை கரித்து கொட்டிய-அவள் மீது வெறுப்பையே உமிழ்ந்து கொண்டிருந் ஜெயராம் மற்றும் பிர்யாவால் கூட, தங்கள் கண்களிலிருந்து, அந்த ஜீவனுக்காக, இரண்டு

Tuesday, February 11, 2014



ஓடி போனவள்
------------------------
எழுதியது:-சுந்தரேசன் சுரேஷ்
============================

"மல்லிகா இங்கு சற்று வருகிறாயா"? என்று பெண்ணை கூப்பிட்டார் சாம்பு. "முகத்துக்கு பொட்டு வைத்து கொண்டு இருக்கிறேன்"- "இதோ வருகிறேன் அப்பா" என்று பதில் அளித்தால் மகள். "காலையில் எழுந்ததில் இருந்து அத்தனை வேலை பார்த்திருக்கா "-"இரண்டு வாய் அவசர-அவசரமாக அள்ளி போட்டுகொண்டு வேலைக்கு ஓட போகிறாள்-"பாவம் குழந்தை"என்று அங்கலாய்த்து கொண்டாள் தாய் சாரதா.

உள்ளிலிரிந்து வெளிவந்த மல்லிகாவிற்கு 25-வயது இருக்கலாம். உருண்டையான முகம், நல்ல நிறம், அளவெடுத்து செதுக்கியது போல உடல் வாகு. வெள்ளை "சூடிதார்" அணிந்து, தலையை இலேசாக வாரி பின்னி இருந்தாள். லேசான பவுடர் பூச்சு முகத்தில்,நெற்றியில் 'ஸ்டிக்கர்' பொட்டு. எளிமையான ஆனால் கண்ணியமான தோற்றம். அதேபோல் அழகான ஆனால் கவர்ச்சியை தூண்டாத உருவம். இளங்கலை வணிகம் படித்து விட்டு ஒரு சுமாரான 'ஆடிட்டர்'ஆபீசில் சுமாரான வேலை பார்த்து கொண்டு இருக்கிறாள்.

"நா 'ப்ரெஷருக்கு' சாபிடற மாத்திரை ஆயுடுத்து"-"ஆபிசில் இருந்து வரும்போது கொஞ்சம் வாங்கி வரியா?" என்றார் சாம்பு."இன்னிக்கு கட்டயாம உங்களுக்கு மாத்திரையும் அம்மா ரொம்ப நாளா கேட்டிண்டு இருக்கற 'நான்-ஸ்டிக்' தோசைகல்லும் வாங்கி வருகிறேன்"அப்பா என்று கூறி அலுவலகத்துக்கு கிளம்பினாள் மல்லிகா."என்ன நான்-ஸ்டிக்ல போட்டாலும் என் கை பக்குவத்துக்கு வராது" -"முறுகல் தோசைன்னா சாம்பு சார் போடணும் என்று சும்மாவா சொல்றா"என்று மனைவியை வம்புக்கு இழுத்தார் சாம்பு."ரொம்பத்தான் பீத்திகாதீங்கோ-"அன்னக்கி தோசை வார்கறேன் பேர்வழி அத்தனை மாவையும் வீணாக்கி கிண்டலும் கிழிசலுமாக பண்ணினேளே மறந்துட்டீங்களா"என்று பதிலுக்கு 'வாரினாள்' சாரதா.

சாம்பு ஒரு 'ஹோட்டலில்' தோசை மாஸ்டர்.நெடுநெடு என்ற உயரம். ஈர்குச்சியை போல் உடல் வாகு. நல்ல சிவந்த நிறம். எப்போதும் அடுப்படில் வேகுவதால் கன்னி போயிருந்தது. அவர் சம்பளமும் மல்லிகா கொண்டு வருவதையும் வைத்து கொண்டு குடும்பம் ஓடி கொண்டு இருந்தது. சாம்பு-சாரதா இருவரில் ஒருமித்த கவலை இந்த விலைவாசியில் எப்படி மகளின் திருமணத்தை நடத்துவது என்பதே. "கொழந்தே கிளியாட்டம் இருக்கா"-"குணமும் தங்க கம்பி"- "இந்த பாழா போன பணம் இல்லாததினால் கழுத்திலே தாலி ஏற வேளை வரலே"-"யாராவது நல்லவனா பார்த்து இழுத்துண்டு ஓடி போன கூட பரவாயில்லைன்னு தோணுது" "நம்ம வயத்திலே பொறந்து கஷ்டப்பட்டுது போரும்"-"எங்கேயாவது நன்னா இருந்தா சரி"-என்று வெறுப்பின் உச்சகட்டத்தில் இருவரும் பேசிக்கொண்டது உண்டது.

பாஸ்கரும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தனர்.இருவருமே ஒரு எல்லைக்குள் தான் பழகி வந்தனர். ஒரு வருடமாக பழக்கம்.பாஸ்கரின் குணங்கள்-அடக்கம், பெரியவர்களிடம் மரியாதை,நிதானம் இவை எல்லாம் தான் மல்லிகாவை அவன்பால் ஈர்த்தன .தனக்கு நல்ல படிப்பு, வசதியான குடும்பம்,முற்போக்கு சிந்தனை உள்ள பெற்றோர்கள் என்று இருந்தும் ஒரு சுமாரான வாழ்கை-நிலையில் உள்ள பெண்ணாய் திருமணம் செய்ய வேண்டும் என்பது அவன் கொள்கை.வரதட்சிணை கொடுமையை அவன் தீவிரமாக எதிர்த்ததும் அவனது இந்த முடிவிற்கு ஒரு காரணம்.

மல்லிகா பாஸ்கர் வீட்டுக்கு போவது-வருவது உண்டு. அவன் குடும்பத்தாரிடையே அறிமுகம் ஆனவள். அனால் மல்லிகா தன் பெற்றோர்களிடையே தன் காதல் பற்றி தெரிவிக்கவில்லை.பெற்றோர்கள் எப்படி எடுத்துகொள்வார்களோ என்ற தயக்கம்.

முன்தினம் இரவு பெற்றோர்களிடையே நடந்த சம்பாஷணை அவளை ஒரு முடிவிற்கு தள்ளியது."இந்த பாவி பொண்ணு எத்தனை நாள் தான் நம்மோடு சேர்ந்து கஷ்டப்பட போகுதோ"-"இவளை நாம் மாலையும் கழுத்துமா பார்க்கத்தான் போறோமோ "-இல்லை இந்த ஆதங்கத்துலேயே நம்ம மண்டையை போட போறோமோ"-"ஈஸ்வரா இந்த கொழந்தைக்கு ஒரு நல்ல வழியா காமிக்க மாட்டியா" என்று இருவரும் மனம் புழுங்கி கொண்டு இருந்தனர்.

அலுவலகத்துக்குள் நுழைந்த உடனே பாஸ்கரை தொடர்பு கொண்டு எல்லா விவரங்களையும் சொன்னாள்."பாஸ்கர்-இன்னிக்கு நான் ஆத்துக்கு திரும்பி போறதா இல்லை"எங்க அப்பா அம்மா படர மன-கஷ்டத்தை என்னாலே தாங்க முடியலே"-"நா உங்க கூட உங்க ஆத்துக்கு-உங்க ஆத்துகாரியா-வர போறேன்.""உங்க அப்பா அம்மா சம்மதத்தோட நீங்க என் கழுத்திலே ஒரு மஞ்ச கயிறை கட்டுங்க"-"முதலில் ஊர் உலகத்துக்கு பயந்து எங்க அப்பா-அம்மாவும் என்னை தூற்றத்தான் செய்வார்கள்"-கொஞ்ச நாள் கழித்த பின் அவர்கள் நிச்சயம் என்னை புரிந்து கொண்டு நம்மை ஏற்று கொள்வார்கள் "-"அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று சொன்னாள். பாஸ்கர் "எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை"-"மரியாதை நிமித்தம் என் பெற்றோர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விடுகிறேன்" என்றான்.

சாதரணமாக 6-மணி அளவில் வீடு திரும்பும் மல்லிகா அன்று மணி 8 ஆகியும் திரும்பவில்லை. 'மொபைல்'போனையும் 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டதால், தொடர்ப்பு கொள்ள முடியிவில்லை. சாம்பு-சாரதா தம்பதிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது அவள் அரை-நாள் விடுப்பு எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. கையை பிசைந்தபடி இருந்த இருவருக்கும் எதேச்சையாக சுவாமி அலமாரியில் படபடத்த ஒரு கடிதம் கண்ணிலும் பட்டது.

கடிதம் மல்லிகாவினால் எழுதபட்டிருந்தது. "அன்புள்ள அப்பா-அம்மாவிற்கு-முதலில் என்னை மன்னித்து விடுங்கள்"-"நான் 'ஓடிப்போன' செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்"-"எனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை உங்களை அரித்து கொண்டிருப்பதை நான் அறிவேன்"-"உலகம் என்னை 'ஓடுகாலி','கழிசடை'என்றெல்லாம் திட்டி தீர்க்கும்"-"உங்கள் மகளாகிய நான் எந்த தப்பு வழிக்கும் போக மாட்டேன் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவீர்கள் என்பது எனக்கு தெரியும்"-"நீங்கள் விரும்பியபடியே நான் நல்ல இடத்தில் மணம் முடித்து,தக்க சமயத்தில், உங்களை வந்து சந்தித்து உங்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன் என்பது எவ்வளவு சத்தியமோ, நான் உங்களை கடைசி மூச்சு வரை வைத்து காப்பற்றுவேன் என்பதும் அவ்வளவு சத்தியம்"-உங்கள் பிரியமான மல்லிகா என்று முடிவடைந்திருந்தது.

உணர்ச்சி பெருக்கை கட்டுபடுத்த முடியாது குலுங்கி-குலுங்கி அழுத அந்த கிழ தம்பதிகளின் உதடுகள் "கொழந்தே எங்கே இருந்தாலும் நன்னா இருக்கட்டும்" என்று முணுமுணுத்தது நிச்சயம் மல்லிகாவின் காதில் விழுந்திருக்கும். என்ன ஒன்று சாம்பு 'ப்ரெஷர்-மாத்திரைக்காகவும்,சாரதா 'நான்-ஸ்டிக்'தோசை கல்லுக்காகவும் கொஞ்சம் அதிக நாள் காத்திருக்கவேண்டும்.
AMAZING -AMAZING-AMAZING



Your Phone number will reveal your actual Age.
I do not know who discovered this?
but it is...Really accurate.

It will take about 15 seconds,
read and do it at the same time so that you will not lose the fun.

1- Take a look at your last digit of your cell phone number

2- Use this figure and multiply by 2

3- Then add 5

4- And then multiply by 50

5-And then add the number 1763

6- The last step; with this number, subtract your birth year.

Now you see a three-digits number.

The first digit is the last digit of your phone number, the next two digits are your actual age!
IS'NT THIS SURPRISING?
D0'NT JUST BELIEVE
Try it...
Really amazing.

Sunday, February 9, 2014

BALANCING ACT (An attempted Short Story)
By: Sundaresan Suresh

Lakhipur was a sleepy, small hamlet in West Bengal. It was one of those industrial townships which had sprung up in the mid 60’s and 70’s. Kamla, a Bihari woman, had come to this township, some 3 decades back, from her home state, in search of livelihood, along with a handful of other villagers. She must be have been 20 years then. Her husband did all sorts of odd jobs- from selling vegetables, to being a daily labour in the factory, to being the owner of khaini/pan shop. In between, Kamla and her husband managed to buy a couple of cows and were supplying milk to households also. The families, about 6 in number, had set up thatched- houses constructed in an unauthorized manner, in Government/Private owned land,adjacent to a large factory.

Kamla was short in height, round and plump. Her face was not particularly attractive but was not repulsive also. She was voluptuous, had enormous bosoms and her backs were gigantic. She had well structured thighs and legs and she exuded a lustful air around her. She had no inhibition in talking to males and would freely use double meaning words, diatribe and sexually provocative gestures. She would often been seen in the company of various males, leaving little to imagination. One could not make out whether Kamla realized that she had been bestowed with great physical assets which she was using to her advantage or she was just plain naïve, a distinct rustic character. Kamla and her husband were getting along like any other illiterate, lower-middle class couple of meager income would. Even after 10-15 years of marriage, they did not have a child. As is the custom, tongues started wagging. Some labeled Kamla’s husband as impotent. Others said that there was marital discord because of Kamla’s character.

Finally Kamala did give birth to a male child. Two saddening incidents coincided with her attaining motherhood. One-Her husband suddenly abandoned her and went missing. Rumour-mongers attributed this to the fact that while the child was Kamla’s it was not ‘theirs’. Secondly the child was a semi-spastic child. There was no apparent physical disability but there was distinct speech impairment and under-development of brain.

The boy was named ‘Chotu’ and all the neighborhood families showered their love and affection on the child. The spirit of cooperation and the determination to the fight the odds are very high amongst economically weaker sections and Kamla with the support of her neighbours and co-habitants managed to bring up the child. The boy, who had no formal education, grew up through the teens and entered his twenties. Kamla was worried about Chotu’s future. There was a Shiva-Kali mandir by the side of their habitat and Chotu used to visit it, both in the morning and evening, religiously. His mother had taught him to close the eyes and pray before the lord. She used to say “if you ask with pure mind- God shall grant all your wishes”.

The boy had enquired about his father only on two occasions. On the first instance, Kamla had simply replied that he was no longer with them. The boy’s persistent queries evoked no response from her. The second occasion had an element of drama in it. It was “HOLI” day. After the customary sprinkling of colours, few community youths had forced Chotu to have a couple of glasses of Bhang and he became inebriated. The youths further teased him by called him “son of unknown father”. Chotu rushed home and pulled Kamla by her neck and yelled “tell me- with whom did you have intercourse, who is responsible for my birth”. He had never seen such calmness in his mother’s eyes despite his wrath. Kamla lifted his chin ,held his face and staring straight in his eyes replied-“you were born when my husband and me consummated our marriage”- there has been only one male in my life and it shall always be so". She walked away as if there has been no altercation at all.

Apart from teaching Chotu with basic manners and personal hygiene, Kamla had also taught him elementary social courtesy like respecting elders and greeting them with “namaskar”etc. There was one South-Indian gentleman, Mr.Thorai, attached to the factory, who would always throw a customary glance at Kamla, Chotu and their hut, on his way to and from the factory. The man was in his fifties and Kamla could make out that his stares were luscious. His mere stare would strip her from head to toe and just as a tiger would look at its prey, he would look at her with hungry eyes. It was as if he was caressing her body part by part, biting her lips, cuddling her breasts and indulging in the act of copulation, in full public view. Kamla could intuitively feel his strong desire for her physical body, but somehow she felt that this gentleman could help Chotu to get some job. Among the hundreds of people who worked in the factory God knows what inspired Kamla to have faith on the lecherous Mr.Thorai. She decided against approaching him directly, by herself. She painstakingly explained her son that if they could please Mr.Thorai then he could fix up some job for him. Thereafter he would have a steady income and could even get married and rear a family. Chotu understood partially what his mother was saying but how to “please” Mr.Thorai was still a mystery to him.

Whenever Chotu would see Mr.Thorai he would shout “namaskar-sir”. Kamla would look at the man’s face expectantly for some positive response. But the man would reveal no emotion and he would just curl his lips in a smile. The hunger in his eyes, which would make Kamla squirm, would be evident.

The ‘gentlemen’ turned out to be a ‘wolf-in-a-sheep-clothing’. One evening when Kamla was standing by the hut, the gentlemen, without shame, approached Kamla and said that “I was thinking about the boy- can fix up a “haajiri”(daily-wage) job for him in my factory”. But you see, everything has a price; some want money, others alchohol and few others err... women. Then he mumled Hmmm.. yer…. You see, you are very attractive even at this age. You must be what 50 ? My weakness is that I am drawn only by older women- Now-a-days- these things have become very common.If you can be accomodative... he broke off not being sure of Kamla's reaction.After a pause he said "I hope you understand". Kamla instantaneously realized what was being hinted at and at that very moment she decided that it had to be done for the sake of her “Chotu”.


After about two days, as promised Mr.Thorai arranged for a job for Chotu. Chotu could not understand how Mr.Thorai was “pleased”. Nor could he summon up enough courage to ask his mother. Kamla asked Chotu to wear his best dress. “First go to the mandir- and then proceed to the factory- do your job sincerely- do not say no to anybody”- she was rattling of advices to her dear son. Chotu was nodding his head. Just at that time, the lady of the neighborhood barged into Kamla’s hut. She was wailing loudly and saying “everything has gone- we have been ruined”. Suddenly Kamla felt ominous. She enquired what the matter was. The lady replied that news had just been received from their native village that Kamla’s husband had expired. The import of the news failed to evoke any reaction in the mind of under-developed Chotu. Kamla could feel her world crashing. Her head was swivelling and she was fainting Yet shercould hear the echoe of her own voice, in her ears,clearly and distinctly “there was only one man in my life and it would always be so".
இரண்டாவது தாலி -(எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
-----------------------------------------------------------------------
ராம்நாத் ஒரு காஸ்ட் அக்கௌன்டன்ட்.அறுபது வயதை தொட போகிறவர். கொல்கத்தா வாசி.ஆறடி உயரம், அதற்கு ஏற்ற பருமன்.கோதுமை நிறம், பார்த்தாலே மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்துகின்ற உருவ அமைப்பு.பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறார். சகல வசதிகளும் நிறைந்த ஆடம்பரமான பங்களா, கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள், வாகனங்கள் என்று உயர்-மட்ட வாழ்கை. அவரது மனைவி ஜனனி (வயது 53).பட்டதாரி, லக்ஷ்மிகரமான முகம்,மேல்-தட்டு மகளிற்கே உண்டான ஒரு கம்பீரம்.கலை,இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவள். பூஜை புனஸ்காரத்தில் நம்பிக்கை உடையவள்.

மகன் சூரஜ்(வயது 26) அமெரிக்காவில் ,ஹார்வர்ட் கலாசாலையில்,பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறான். மகள் ஸ்வேதா (வயது 21) அகமதாபாத்தில் நிர்வாக-முதுகலை படித்து கொண்டிருகிறாள்.

அழகான, அளவான, குடும்பம். பணமோ ஒரு பிரச்சினையே கிடையாது. இங்கு ராம்நாத் பற்றி ஒரு வார்த்தை. மிகவும் கீழ்மட்ட நிலையில் இருந்து படித்து தன் சொந்த முயற்ச்சியால் முன்னேறியவர். அவருடன் கூட பிறந்தவர்கள் ஆறு பேர். அப்பா ப்ரோகிதம் செய்து வந்தவர். இன்று அவரும் சரி, மற்ற சகோதரர்களும் ஒரு நல்ல வாழ்கை தரத்தில் உள்ளவர்கள்.ராம்நாத்துக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக கிடையாது. அவரவர் வாழ்கையை நிர்ணயிப்பது அவரவர் எண்ணங்களே என்பது அவரது கொள்கை. குடும்ப அங்கத்தினர்களின் நச்சரிப்புக்காக கோவிலுக்கு செல்வார் மற்றும் சடங்குகளில் பங்கேற்பார். மனைவி,குழந்தைகளின் நம்பிக்கையை குறை கூற மாட்டார். அவர்களது செயல்பாடுகளிலும் குறிக்கிட மாட்டார்.

ஜனனிக்கு ஆன்மிக விஷயங்களில் அதீத பற்று. அதுவும் ஜோசியம்,க்ரஹ பரிகாரம், தோஷ நிவர்த்தி-இதில் எல்லாம் அசாத்ய நம்பிக்கை.ராம்நாத்துக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதே ஒழிய தான தருமங்கள் நிறைய செல்வார். ஏழை-பாழைகளுக்கு கல்யாண சிலவு, வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி,முதியோர்/அனாதை இல்லங்களுக்கு தானம் என்று வாரி வாரி வழங்குவார்.

நிறைவாக போய் கொண்டிருந்த இவர்கள் வாழ்கை பயணத்தில் திடீரென்று ஒரு குழப்பம் விளைந்தது. மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரமானந்த கிரி சுவாமிகள் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்தார். ஜனனி சுவாமிகளை தங்கள் இல்லத்திற்கு அழைத்தாள். அவரும் வர சம்மதித்தார். கணவரிடம் கெஞ்சி கூத்தாடி, அவரும் ஒத்துழைக்க சுவாமிகளை பூர்ண கும்பத்துடன் வரவேற்றனர் தமபதியினர். பாத பூஜை,பிக்ஷை, எல்லாம் ஆன பின், சுவாமிகள் சிறுது நேரம் அளவளாவிவிட்டு,ஆசிர்வாதம் வழங்கி பின் புறப்பட ஆயத்தமானார். சிறுது நேரம் கண்ணை மூடி த்யானத்தில் மூழ்கினவர் ராம்நாத்தை பார்த்து 'இரண்டாவது தாலி' கட்ட போறயாக்கும்-நல்லது நடக்கட்டும்" என்று ஒரு மெல்லிய புன்முறுவலுடன் சொன்னார்.பின் ஜனனியை பார்த்து "சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது" என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.

கணவன் மனைவி இருவர்க்கும் ஒரே குழப்பம். சுவாமிகள் என்ன சொன்னார் என்று புரியவில்லை. ராம்நாத் குணத்தில் அப்பழுக்கற்றவர்,ஏக-பத்னி-விரதனாக வாழ்பவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சுவாமிகளின் கூற்றுக்கு ஏற்ப மாறின. ஷில்பா என்ற ஒரு இளம் பெண் ராம்நாத்தின் காரியதரிசியாக வேலைக்கு சேர்ந்தாள். அலுவலக வேலை நிமித்தமாக வீட்டுக்கும் வர தொடங்கினனாள்.கவர்சிகரமான உடை, நுனி நாக்கு ஆங்கிலம், ராம்நாதிடம், குழைந்து குழைந்து பேசுவது என்று தேவையில்லாத நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டாள். இதை எல்லாம் நினைத்தே ஜனனி நோய்வாய்பட்டு விட்டாள். பார்காத வைத்தியம் இல்லை. காண்பிக்காத மருத்துவர்கள் இல்லை. என்ன நோய் என்று பிடி படவே இல்லை. தான் இன்னும் அதிக நாள் உயிர் வாழ மாட்டோம் என்று காரணமில்லாமல் நம்ப தோன்றினாள்.

சூரஜ், ஸ்வேதா இருவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆய்வு கட்டுரை முடிக்க வேண்டி இருப்பதால் தன்னால் இப்போது இந்தியா வர இயலாது என்று வருத்ததோடு தெரிவித்தான் மகன். தினம் இரண்டு வேளையும் 'ஸ்கைப்' மூலமாகவும் ,கைபேசியிலும் தாயோடு பேசி உற்சாகம் ஊட்ட முயன்றான். மகள் ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து தாயை கவனித்து கொண்டாள். மகளிடம் 'ஷில்பா' விஷயத்தை சொல்லவும் முடியவில்லை ஜனனியால். ராம்நாத் மிகுந்த மன அழுத்தத்தில் தவித்தார்.

ஒரு நாள் இரவு திடீரென்று ராம்நாத்தை அருகில் அழைத்தாள் ஜனனி. "என்னங்க - நான் ஒன்ணு சொல்வேன் - நீங்க தப்பா எடுத்துக்க கூடாது" என்றாள். "அசடு- நமக்குள்ளே இந்த பீடிகை எல்லாம் எதற்கு- தைரியமா சொல்லு" என்றார். "வந்து, வந்து நான் இன்னும் ரொம்ப நாள் இருப்பேன் என்று தோணலை. நான் போன அப்புறம் நீங்க தனி-மரமா ஆயிடுவேள். அந்த குட்டி ஷில்பா உங்களுக்கு பொருத்தமா இருப்பா. அவளுக்கு ஆட்சேபணை இல்லேன்னா அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்.உங்களுக்கு என்ன? வயது அறுபதை நெருங்கினாலும் உடம்பை கட்டு கோப்பா வெச்சு இருக்கேள். முப்பதஞ்சுக்கு மேல சொல்ல முடியாது இத என்னோட கடைசி ஆசையா நினைச்சுக்குங்கோ" என்றாள்."யோசிச்சு பாருங்கோ- சுவாமிகள் என்னத்துக்கு "இரண்டாவது தாலியை" பற்றி பேசணும் என்று தொடர்ந்தாள். ராம்நாத் தன் கையால் அவளது வாயை பொத்தினார். அவருக்கு தொண்டை அடைத்தது. உணர்ச்சி பெருக்கால் வார்த்தைகள் வெளி வரவில்லை. ஆதுரமாக ஜனனியின் தலையை கோதியபடி "அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து விடுவாய். சூரஜ், ஸ்வேதா எல்லார் கல்யாணமும் நடக்கும். பேரன்,பேத்திகளோடு ஜாம் ஜாம் என்று சந்தோஷமாக வளைய வருவாய்" என்று கூறி "மனதை போட்டு அலட்டிக்காதே- நிம்மதியாக தூங்கு" என்று கூறி வெளியேறினார்.

மறு நாள் காலை ராம்நாத்தின் இல்லத்திற்கு திடிரென்று திருவானைக்காவல் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள் வருகை தந்தார். கனபாடிகள் எண்பது வயதை கடந்தவர். ஆஜானபாகுவான தேகம். தும்பை பூ கச்சம்- உத்தரியம்- உடம்பெல்லாம் விபூதி பட்டைகள், கழுத்தில் ருத்ராக்ஷம்- மகரகண்டி- கையில் பரமாச்சார்யாள் சுயமாக அணிவித்த தங்க தோடா. வேதத்தை கரைத்து குடித்தவர். வேதமே அவர் மூச்சு- சாஸ்திர சம்பிரதாயமே அவரது வாழ்கை முறை . ராம்நாத்தின் ஆஸ்தான புரோகிதர், "என்ன ஆச்சு ஜனனிக்கு- கேள்விபட்டேன்- ஒரே வியாகூலமக இருந்தது- அதான் ஒரு தடவை பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன் " என்றார்.

ஆதியோந்தடமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தனர் தம்பதியினர். ஒரு தடவைக்கு இரு தடவையாக கேட்டார்"சுவாமிகள் என்ன சொன்னார்"? இரண்டாவது தாலி என்றா?.சிறுது நேரம் ஒன்றும் சொல்லாமல் கண்ணை மூடி கொண்டு மௌனமாக இருந்தார். பிறகு என்னவோ பொறி தட்டியது போல "ராமநாதா நீ எந்த வருஷம் பிறந்தாய் என்று கேட்டார்".கேள்வியின் உள்நோக்கத்தை உணராத ராம்நாத் "1954 மாமா" என்றார். கனபாடிகள் உடனே "அதில்லடா- தமிழ் வருஷத்தை கேட்டேன்" என்றார். "தெரியலையே" என்று கையை பிசைந்தார் ராம்நாத். ஜனனி உடனே "ஏன்னா- அந்த ஜாதக நோட்டை எடுத்து கொடுங்களேன்" என்றாள், அலமாரியில் இருந்து நோட்டை எடுத்து கனபாடிகளிடம் கொடுக்க, எண்பது வயதுக்கும் கண்ணாடி தேவை படாத அவர் அதை பிரித்து ராம்னத்தின் ஜாதகத்தை பார்த்தார். சுப ஜனனம்-இரவு-11.40 . விஜய வருடம்- தை மாதம் 5ம் நாள்- புனர்வசு நக்ஷத்ரம் என்பதை உரக்கவே படித்தார்,

ஜனனியை பார்த்து "அசடே-சுவாமிகள் ராமநாதனின் ஷஷ்டி-அப்த-பூர்த்தியை தான் சூசகமாக குறிபிட்டுள்ளார்". நீ என்னவோ ஏதோ என்று பயந்து போயிருக்கிறாய்" என்றார். 60ம் கல்யாணம் அமோகமாக நடக்கும்-நானே நடத்தி வைக்கிறேன்- "இரண்டாவது தாலியை" தொங்க தொங்க கட்டி கொண்டு-நீ பழுத்த சுமங்கலியாக இருப்பாய்" என்று ஆசிர்வதித்தார். அந்த வேத விற்பன்னரின் வார்த்தைகளை கேட்ட ஜனனிக்கு அப்போதே உடம்பு சரியாக ஆகிவிட்டது போல ஒரு உணர்வு.
THE STORY OF FAITH

By: Sundaresan Suresh

Sambasiva Mudhaliar was the owner of an Eatery, in that nondescript place, which was neither a town nor a village.He, was a man of humble origin with no high aspiration. He was married to Nallamai, a devout and God-fearing woman. They had one son, Kumaran who was in his XII th standard. He was a brilliant student and a responsible boy, who understood the difficulties of his parents. His only aim was to become an engineer, and settle in life so that he could make the twilight years of his parents comfortable and peaceful. Mudhaliar was getting, just about adequate income, from the hotel and the wheel of life was rolling forward for the small family.

Mudhaliar’s eatery was well-known in the nearby area, for both its quality and the prices. He was not a ravenous man and would never over-charge his customers. There was a Murugan temple some 2 kms away where there used to be a regular stream of visitors. Devotees, after offering prayer at the temple, would flock to Mudhaliar’s eatery for lunch. Thus there used to be a steady clientele for his eatery.Mudhaliar and Nallamai treated each and every customer like a family member and served them with love and affection.

Mudhaliar was a staunch devotee of Ambal and used to worship Goddess Kamakshi. An unlettered man, he used to utter the name “Kamakshi” constantly. While sitting he would say “Kamakshi”, while walking he would keep on saying “Kamakshi”, his every sentence would be punctuated with “Kamakshi” and it was as if he was inhaling and exhaling the word “Kamakshi”. The Goddess’s name had merged with his existence, as it were. In fact Nallammai was so exasperated, that she had once remarked, half jocularly and half seriously, “you are shouting at the top of your voice; But even this does not seem to be enough to be heard by the Goddess. God knows when you shall be heard and when our situation shall improve”. Incidentally, he was also a follower of Kanchi Paramacharyal and till such time the “Periyavar” was alive, he used to visit Kancheepuram, at least once a year. He never shared any private moments with the saint. During his last visit, which was the year before the Mahaswamigal attained Samadhi, he had a chance, private audience with the saint. Periyavar looked at his eyes and gestured with this right thumb “From where are you”?Mudhaliar replied that he was from such and such place. Periavar further gesticulated by closing all the fingers of his right hand and raising them near his mouth “what are you doing for living?” Mudhaliar answered that he was running a hotel. Periavar broke his silence and said “Annadhanama- Besh Besh- Pannu- Dhinam thavarama oru ezhaikkavadhu ilasavama sadham podu. Un thalamorai nanna irukkum,[ You are in the food business-good,good- feed at least one poor man daily, your future generations shall be secure].Mudhaliar was overwhelmed and with tears in his eyes prostrated before the saint and took a mental vow to adhere to the advice.

Things were flowing along smoothly, when one day, a problem befell Mudhaliar. Kumaran, who seldom troubled his father for his educational expenses, had mumbled in the morning that he was in need of Rs.10000/- towards payment of Engineering Entrance Exam fees and purchase of study material. He had apologetically mentioned that he would be requiring the money by the same evening, as the following day was the last day for form-filling.Mudhaliar was in quandary. He had some amount of savings, but at that point of time it was nil. From the morning, Mudhaliar was busy contacting all his sources to procure the amount. But as luck would have help was not forthcoming. Some said that Mudhaliar was already having a steep outstanding and they could not give further loan, others said that they did not have ready cash and few others said they could arrange it in a weeks’ time but not earlier. As was his habbit, Mudhaliar kept on telling “Kamakshi” and resigned to his fate. His face wore a worrisome look.

There were the odd customers dropping in. Business was steady but not brisk. It was nearing 4.00 p.m. The last of the customers had left. Vessels were being emptied and kept aside for washing and cleaning. At that moment, a beggar-woman suddenly barged inside the hotel. She was wearing a tattered saree which, once upon a time, might have been red in colour. She had worn her unkempt hair as a bun on the top of her head. She was carrying an ugly cloth-bundle in her hips and holding a cane in her hand. Her hands and feet were dirty and sun burnt. She had a big vermillion mark, about the size of 1-rupee coin, on her forehead. She neared the cash-counter behind which Mudhaliar was seated and demanded “What do you have to serve me”? Mudhaliar replied that everything was there and what would she like to have. The woman said indicating to her bowl “Put rice here- mix sambhar and vegetables and pour the mixture also”. Then with a roaring laughter she said “If my stomach is full- know that all organisms have been fed”. By this time, Nallamai, who was overhearing the conversation, standing at the entrance of the kitchen, had already followed the instructions and was ready with the offering. She put the mixture, obediently, in the bowl. The woman stared at her and said “You will live long”. She disappeared in a jiffy. Mudhaliar and Nallammai did not pay any special attention to the incident. They just felt they had fulfilled their day’s quota of the poor-feeding.

The vessels were washed and kept back in their original place. As was the routine, Mudhaliar checked whether the provisions, vegetable and plantain leaves were adequate for the following day. With a sigh of relief, that he would not be required to spend money, as the stocks were satisfactory, he locked the eatery. Then with a bag in one hand and umbrella on the other, began to trudge his way, Nallammai by his side, back home. He was deeply absorbed in his thoughts although involuntarily was constantly uttering “Kamakshi”. Once when Nallammai enquired whether money could be arranged he just nodded his head sideways, in a negative manner.

As they entered the house, Kumaran had already returned from the college. Mudhaliar finished his evening ablutions, applied vibuthi on his forehead and lied down on his favourite easy chair. Then he beckoned Kumaran by his side and began in a low tone “Kumara- I tried my best- but could not succeed in arranging the money- can you wait for one more-day?-I am sure by tomorrow something will click”. There was a look of bafflement on Kumaran’s face. He said “Father- I do not understand- what you are saying? I have already got the money”. Now it was the turn of Mudhaliar and Nallammai to feel befuddled. Mudhaliar asked “From where- how did you get it- who gave it”? Kumaran began explaining- “ just as I returned from the college, a car screeched to a halt in front of our house- A lady clad in a red saree, worn in the traditional south-indian custom, entered the house. She had a big vermillion mark on her forehead and the first thing that struck me was that she was wearing numerous gold ornaments in her waist, neck and face. As I had never seen her earlier, I enquired “Who are you aunty? Whom do you want to meet?” She replied “you may not know me- But your father knows me very well- Don’t’ you need Rs.10000/-? Here take this envelope”. So saying she passed on an envelope and before I could reply, stepped out of the house and boarded the car. The vehicle disappeared as quickly as it had appeared. “I was so dumb-struck by the sequence of events, that I did not even have the presence of mind to offer a seat and a coffe to the lady. I even failed to ask her name” he trailed off.

Mudhaliar was attentively hearing the whole narration. He closed his eyes and remained silent for a minute. Then he enquired with Kumaran “You have absolutely no clue as to who the lady was?” Just then something flashed in his mind. He said “Father one thing- when the lady was handing over the envelope to me, she received a call in her mobile. I heard her saying her name ‘err- I am not able to remember, let me recall Vijaya-no, Jayalakshmi- no, Meenakshi no .

Just as he was wrestling with his memory, Kumaran yelled at the top of his voice, as if possessed by a divine spirit, “Father- I remember, she said KAMAKSHI”. Everything fell in place for Mudhaliar and all his puzzles were solved.
மெட்டிi
எழுதியவர்: சுந்தரேசன் சுரேஷ்

கஸ்தூரி ஒரு அரை-குறை. அதாவது படிப்பும் இல்லை, வேறு முற்பட்ட ஜாதியினரின் ஏகபோக உரிமை மற்றும் குல தொழில்களான புரோகிதமோ, சமயலோ கூட தெரியாது. வயது 55-60 இருக்கலாம். கட்டை குட்டையான உருவம். முழங்கால் வரை வேஷ்டி.தோளில் காசி துண்டு. கையில் நிரந்தரமாக ஒரு கித்தான் பை.ஏதோ கொஞ்சம் மந்திரங்களை தெரிந்து வைதிருந்தார்..தங்கள் ஜாதியில் பிறந்து விட்டானே என்று பரிதாபம் கொண்டு புரோகிதர்கள் மற்றும் வாத்தியார்கள் சிரார்தம்,பூணூல்,கல்யாணம்,கிருஹபிரவேசம், முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கு அவரையும் ஒரு வாத்தியாராக சொல்லி வந்தனர். வருமானதிற்க்கு வழி செயதனர்.அதே மாதிரி இழவு காரியங்களுக்கும் அவரை சொல்லி வந்தனர். கூட மாட இருந்து ஒத்தாசை செய்து ஏதோ குடுத்ததை வாங்கி போவார்.ஆனால் வாய் பொல்லாதது. கிருஹஸ்தர்களிடமும் நல்ல பெயர் கிடையாது. புரோகிதர்களிடமும் அனுகூலமாக நடக்க மட்டார்.”இவன் என்ன சாஸ்த்ர அத்யயனம் செய்திருக்கான்”? “இவன் யோக்கியதை எனக்கு தெரியாதா”? “ஹோட்டலில் காப்பி ஆத்திகொண்டு இருந்தவன் தானே” என்று சக வாத்தியார்களை ஏக-வசனத்தில் விமர்சனம் செய்வார். “ சாஸ்த்ரத்தில் அப்படி கிடையாது காணும்”. “யவை என்ற தானியத்தை உபயோகிக்கணும்- நீங்க நெல்லை போடரேள்”- ஒரு புண்ணியமும் இல்லை:”இப்படியான விமர்சனங்களை செய்து வீட்டுக்காரர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வார்.

இவரை கட்டி கொண்ட புண்ணியவதி மீனாட்சி. வாய் இல்லா பூச்சி.மடிசார் புடவை.கழுத்தில் வெறும் மஞ்சள் நூல். கையில் ‘ரப்பர்’வளையல்கள். இவர் கொண்டு வந்ததை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்துபவள். கல்யாணம் ஆன நாள் முதல் ஒரு சுகத்தை காணாதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டவள் இல்லை. கேட்டு இருந்தாலும் கிடைதிருக்காது என்பது வேறு விஷயம். திருமணம் ஆன புதிசில் மீனாட்சி “ஏன்னா- நீங்களும் ‘கிராப்’ வைத்து கொண்டு உத்தியோகத்திற்க்கு போய் பாருங்களேன்” என்று கஸ்தூரியிடம் சொல்லி இருக்கிறாள். பதிலுக்கு “போடி அசடு- நான் பள்ளிகூட நிழலில் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை- எனக்கு எவன் வேலை கொடுப்பான்?-நாங்க தீகஷிதர் பரம்பரை- கை கட்டி வேலை பார்க முடியுமா? என்று உண்மையும் வரட்டு-ஜம்பமும் கலந்த ஒரு பதிலை கூறி விடுவார். அதே மாதிரி ஒரு இரு முறை புடவை,நகைகளுக்ககாக கேட்ட போது “நீ இந்த நூல் புடவையில் எவவளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா”? பட்டு புடவை அணிவது சாஸ்திரத்திற்கு விரோதமானது” பட்டு பூச்சிகளை கொல்வது மஹா பாவம்” “பட்டெல்லாம் பணக்காரர்களுக்கு இருக்கட்டும்” என்று என்னமோ சாஸ்த்ரதை கரைத்து குடித்தவர் மாதிரி சவடாலாக கூறி விடுவார். “பெண்க்ளுக்கு பொன நகை எதற்கு?புன்னகை போறுமே ! என்று “இலக்கியதத்னமாக” கூறி விடுவார்.மீனாட்சிக்கு என்ன தெரியாதா இந்த “வக்கிலாத மனுஷனை” பற்றி. அப்படியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பியதால் “பேச்சில் உங்களை ஜெயிக்க முடியாது” என்று விட்டு கொடுடத்து விடுவாள்.கஸ்தூரி இப்படி சொன்னாலும்- தங்கம் விற்கும் விலையில் தன்னால் நெருங்க கூட முடியாது- ஆனால் எப்படியாவது ஒரு வெள்ளி கொலுசோ, மெட்டியோ வாங்கி மீனட்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளத்து அவா. ஒரு முறை சொல்லியும் இருக்கிறார் “மீனாட்சி- பார்ர்த்து கொண்டே இரு- நான் ஒரு நாள் மெட்டி வாங்கி வரத்தான் போகிறேன்- நீயும் அணியத்தான் போகிறாய்” என்று
.
குழந்தை பாகியமும் கடவுளால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதை நினைத்து மீனாட்சி கண் கலங்கி இருக்கிறாள். கஸ்தூரி அவளை தேற்றுவார்”குழந்தை இல்லேன்னா என்னா- உனக்கு நான் குழந்தை- எனக்கு நீ குழந்தை- சாகிற பரியந்தம் இந்த பந்தம் போரும்” என்பார். ஆதர்ச தம்பதிகளாக இல்லாவிடினும் அன்னியோன்ய தம்பதிகளாக காலத்தை கடத்தி கொண்டு இருந்தனர்.

வயது ஆனதால் சமீப காலமாக இருவருக்குமே மாற்றி மாற்றி உடம்பு படுத்தி கொண்டே இருந்தது. முட்டு வலி,முதுகு பிடிப்பு இதெல்லாம் மீனாட்சியின் பிரச்சனைகள். போறாது என்று சமீபத்தில் இருமல்,சளி,கபம் தொந்தரவு வேறே. கை வைத்தியமாக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டாள்- சுக்கு கஷாயம்,பனங்கல்கண்டு சாப்பிடுவது.கடுக்காயை வாயில் அடக்கி கொள்வது என்று- ஒன்றுக்கும் கட்டுப்படுவதாக இல்லை. போன வாரம் இருமல் அதிகமாகி,எச்சில் துப்பியபோது ரத்தம் வெளி வந்தது. மீனாட்சி அதை பற்றி கஸ்துரியிடம் மூச்சு விடவில்லை. “தாம்-தூம்” என்று குதிப்பார். உடனே “டாக்டரிடம்”போக்லாம்- மருத்துவமனையில் சேர்ரக்கலாம்” என்பார் என்ற பயத்தில்.

வாயு தொல்லை,ரத்த கொதிப்பு,கண் பார்வை குறைவு இதெல்லாம் கஸ்தூரிக்கு சொந்தம்.கூடவே பணக்கரர்களின் வியாதியான் “ப்ள்ட் சுகர்” தனக்கும் வந்திருப்பதில் கஸ்தூரிக்கு மகிழ்ச்சியே. பண பற்றாக்குறையினால் ஒரே சமயத்தில் இருவரும் மருத்தவரிடம் செல்ல முடியாத நிலை.”நீங்க முதலில் கண்ணை “டெஸ்ட்”செய்து கண்ணாடி போட்டு கொள்ளுங்கள்” என்று மீனாட்சி கூருவாள். அவளை அடக்கி விட்டு “ எனக்கு தெரியும் எதை எப்ப பண்ணனும் என்று” “மொதல்லே நீ “கம்ப்ளீட்” (தனக்கு இங்க்லிஷ் தெரியும் என்ற பெருமை) “செக்-அப்” செய்துக்கணும். அப்புறம் தான் மததது எல்லாம் என்று திட்ட-வட்டமாக கூறி விடுவார். கூறி விட்டாரே ஒழிய பணத்துக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.கூறியதற்க்கு காரணமும் உண்டு. போன் தடவை “டாக்டரிடம்” சென்று இருந்தபோது “மாமி “வெயிட்” கணிசமாக குறைந்துள்ளது”. “நெஞ்சில் கபம் கட்டியுள்ளது”- மூக்சு விட சிரமபடுகிறாள்”. ஒரு “ஃபுல்” பாடி-செக்-அப்” செய்வது நல்லது என்று சொல்லி இருந்தார்.

பத்து நாட்களாக கஸ்தூரிக்கு வருமானம் இல்லை. அன்று ஒரு சோதகும்ப சிரார்தம்.வாத்தியார் பெரிய மனது பண்ணி கஸ்தூரியை ஒரு பிராமிணனாக சொல்லி இருந்தார். வழக்கம் போல அதிலேயும் தகறாரு-நக்கல்- “நான் பிராமிணனாக கிடைக்க இவா குடுத்து வச்சிருக்கணும் ஓய்”. மொறயா எனக்கு தான் வெள்ளிலே தீர்த-பாத்திரம்,பவித்ரம்,தர்ஜினி (சம்ஸ்க்ருத பாஷா ஞானத்தை வெளிப்படுதுகிற பெருமை) எலாம் கொடுக்கணும்”.”ஆத்து மாப்பிள்ளையை சொல்லி அவருக்கே குடுத்துடுவா” “இவாளை எல்லாம் ஜாதி பிரஷ்டம் பண்ணனும்” என்று ஒரே கூப்பாடு. பெரிய வாத்தியாருக்கு சலிப்பு. “இதோ பாரு கஸ்தூரி- உன் யோக்யதைக்கு இதுவே ஜாஸ்த்தி. குடுத்ததை வாங்கி கொண்டு போவதாக இருந்தால் வா” “இல்லாவிட்டால் ஆளை விடு” என்றார். வருகிற லஷ்மியை வாண்டாம் என்பது முறை ஆகாது என்று ஒப்புகொண்டார் கஸ்தூரி. உண்மையில் அவர் எண்ண்ம் வேறு. கஷ்டப்பட்டு,மீனாட்சிக்கு தெரியாமல் அவர் ரூபாய் ஆயிரம் சேர்த்து வைத்து இருந்தார் இன்று 500-600 ரூபாய் வந்தால் மீனாட்சிக்கு ஒரு வெள்ளி மெட்டி வாங்கி கொடுத்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்து இருந்தார்.

காலை எழுந்ததில் இருந்தே மீனாட்சி உற்சாகமாக் இல்லை. “ஏன்னா- இன்னிக்கு ஏதாவது கார்யம் இருக்கா” என்று கேட்டாள். “ஆமாம்- ஒரு சோதகும்பம் இருக்கே- பேட்டு வந்துடரேன்” என்றாள். “உடம்பே முடியலே”என்றாள். “சொன்னா கோவிச்சுக்க மட்டேளே-சுமங்கலி பெண்கள் காலில் மெட்டி போடாமல் இருக்க கூடாது. நா ஒரு சொப்பு வளயத்தை எடுத்து உருட்டா போட்டுண்டு இருககேன். அதை மாத்தணும் என்றாள்.”ஆண்டி பண்டாரத்துக்கு அழறது-லிங்கம் பஞ்சாமிருதத்துக்கு அழறது- அந்த கதையா இருக்கே என்று நையாண்டி செய்தார். “நா பார்லி கஞ்சி போட்டு கொடுக்கறேன்- குடிச்சுட்டு படுத்துண்டு“ரெஸ்ட்” எடுத்துக்கோ.”நான் போனேன் வந்தேன் என்று பேட்டு வந்துடரேன்” என்று கூறி புறப்பட்டு சென்றா.
வந்து விட்டாரே ஒழிய கஸ்தூரிக்கு மனசு வீட்டிலேயே இருந்தது.பெரிய வாத்தியாரிடம் “ஆம்படையாளுக்கு உடம்புக்கு முடியலே” “தனியா விட்டுட்டு வந்திருக்கேன்” “கொஞ்சம் சீக்கிரம் முடித்தால் தேவலை” என்றார்.வாத்தியரும் “ஜெட்” வேகத்தில் ஓடினார். காரியம் முடிந்த உடனே கஸ்தூரி கிளம்பி விட்டார். அவர் எதிர் பார்ததற்கு மேலாகவே வருமானம் வந்து இருந்தது. இன்று எப்படியும் மீனாட்சிக்கு மெட்டி வாங்கி கொண்டே போக் வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர் “பட்ஜெட்டிற்க்குள்” கிடைத்தும் விட்டது. சந்தோஷதோடு வீடு நோக்கி நடந்தார்.

அவர் வீட்டிர்க்கு இரண்டு தெருக்கள் தள்ளி வந்து கொண்டு இருக்கும்போது ஒரு “அசிஸ்டன்ட்” வாத்தியார் “மோட்டார்-பைக்கில்” அவர் அருகே வந்து திடீரென்று “ப்ரேக்”போட்டு நின்றார்.”பெரிய வாத்தியர்ர் அனுப்பினார்”.”மாமிக்கு உடம்பு சரி இல்லையாம். உங்களை உடனே ஆத்த்துக்கு வர சொன்னார்””பைக்கில் ஏறுங்கோ” என்றார்.கஸ்தூரிக்கு அடி-வயிரு கலங்கியது. ஒன்றும் ஆகாது என்று தனக்குதானே தேற்றி கொண்டார்.
வீட்டிர்குள் நுழையும் போதே காஸ்தூரிக்கு புரிந்து விட்டது. மீனாட்சியை “தெற்கு பார்த்து” கிடத்தி இருந்தார்கள். கால் மற்றும் கை கட்டை விரல்கள் கட்டப்பட்டிருந்தன. தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கபட்டு இருந்தது.பெரிய வாத்தியார், மற்றும் அண்டை அசலார் எல்லோரும் மௌனமாக் இருந்தனர். பெரிய வாத்தியார் கஸ்தூரியை நெருங்கி ஆதுரமாக தோளில் கை வைத்து “எல்லாம் தலைஎழுத்து- அவன் எழுதின படி நடக்கிற்து- மனசை திடப்படுத்திக்கோ- போறவா போயாச்சு- காரியத்தை பாக்கணும்” என்றார்.

ஒன்றும் பதில் கூறாத கஸ்தூரி தன் “கித்தான்” பையை திறந்து அன்றுதான் வாங்கி இருந்த மெட்டியை எடுத்து. மீனாட்சியின் சடலத்துக்கு அருகே அமர்ந்தார். காலில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு,. மெட்டியாக மாறி இருந்த செப்பு வளயத்தை உருவிவிட்டு –புதிய வெள்ளி மெட்டியை அணிவித்தார். பிரந்தது முதல் –வாழக்கையே ஒரு முள் படுக்கயாக இருந்த -தானும் சுகப்படாத தன் மனைவியயும் சுகமாக இருக்க விடாத கஸ்தூரி என்ற அந்த ஜீவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
முதியோர் இல்லம்

எழுதியது:சுந்தரேசன் சுரேஷ்

பிரகாஷ் (50) தன் "அமெரிக்கன் டூரிஸ்டர்" பெட்டிகளில் சாமான்களை வைப்பதில் மும்முரமாக இருந்தான். மனைவி சங்கீதாவும் (43),குழந்தைகள் ஆர்த்தியும்(22),ஆனந்தும்(18) தங்கள் தங்கள் tab,ipod எல்லாவற்றையும் தேடி எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே "மூடு"அவுட். தாத்தா பாட்டியை விட்டு பிரியப்போகும் துக்கம். பதினைந்து நாள்,பிரகாஷின் பெற்றோர்களுடன் கழித்துவிட்டு திரும்ப அமரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம்.

சங்கீதா தான் ஆரம்பித்தாள் "என்னங்க- தீர்மானம் பண்ணி விட்டீங்களா"? "அப்பாவையும் அம்மாவையும், "விருதாச்ரமத்தில்" சேர்ப்பதாக முடிவு செய்து விட்டீர்களா"? என்றாள். பிரகாஷ் "ஆமாம் சங்கி-வேறு வழி தெரியவில்லை"- "கிருஷ்ணன் அண்ணாவும் தன்னோடு வைத்துகொள்ள சௌகரியப்படாது என்று சொல்லி விட்டான்"-"மோகன் (தம்பி) சரி என்று சொன்னாலும் அவன் மனைவி சம்மதிக்கமாட்டாள்". என்ன பண்ணுவது? என்று கவலையுடன் பதில் அளித்தான். "எப்போ போகணும்" என்று அவள் கேட்டதற்கு "பணம் எல்லாம் கட்டி ஆகிவிட்டது"-"ஒரு மாதத்திற்குள்,அண்ணனோ,மோகனோ யாரவது வந்து இவர்களை அழைத்து கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றான்".

இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதியோர் இல்லம் என்றாலே தீண்ட தகாதது என்றும் நினைக்கும் ரகம் அல்ல- கோபால் மாமாவோ,லக்ஷ்மி மாமியோ. மூன்று பிள்ளைகளையும் நன்றாக,வளர்த்து, படிக்க வைத்து,ஆளாக்கி விட்டோம்-இன்று அவர் அவர் நல்ல வசதியோடு வீடு,கார் என்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டால் போதும்.கடைசி காலத்தில் நாம் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்க கூடாது- நம் பாட்டை நாம் பார்த்துகொண்டு போகவேண்டும் என்பது இருவரின் ஒருமிக்க எண்ணம்.மகன்கள்,மருமகள்கள் மீது குறையும் கூறமாட்டார்கள்; நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று சுய-பச்சாதாபம் படவும் மாட்டார்கள்.

பிரகாஷ் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டான். "அப்பா,போய்ட்டு வரேன்"- "மனசே செரி இல்லை"- "பத்து பதினைந்து நாட்களுக்குள்ளே அவா யாரவது உங்களை 'விருத்தாச்ரமதில்" கொண்டு போய் விடுவா"- "மூணு புள்ளை இருந்தும் கூட அங்க போக வேண்டியிருக்கு" என்று வருத்ததோடு சொன்னான். அதற்கு கோபால் மாமா "Prakash-you are well-educated- I don't have to tell you-there is no point in getting sentimental about these- this is the only practical solution-dont' worry-everything shall fall in place"என்று அவனுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து "இதல்லாம் காலத்தின் கட்டாயம்- அனுசரித்து நடந்து கொள்வதே உசிதம்-நானும் அம்மாவும் கடைசி காலத்தில் நன்றாக இருப்பதை தானே நீ விரும்புகிறாய்-அதுதான் நடக்கிறது" என்று ஆறுதலாக சொன்னார். ஆர்த்தி ,ஆனந்த் இருவரும் தாத்தா,பாட்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

கிராமத்தில் இருந்து காரில் சென்னை வந்து,விமானம் பிடித்து அமெரிக்காவும் வந்து சேர்ந்தனர். பெனிசில்வேனியா,அலன் டவுனில் வாசம். அவர் அவர் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினர்.பிரகாஷ் மட்டும் தன் நிலைக்கு திரும்ப முடியவில்லை. நடு இரவில் திடீரென்று விழித்து கொள்வான். சங்கியை எழுப்பி "உனக்கு தெரியுமா"- "அம்மா என்றால் எனக்கு உயிர்"- "அம்மாவிற்கும் என் மீது தனி பிரியம்"- "அப்போது Haathi Mere Saathi வந்த புதிது". "நான் Rajesh Khanna சட்டை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன்"- "ஊரெல்லாம் சுற்றி திரிந்து அதை வாங்கி வந்தாள்"-" இப்போ அந்த அம்மாவை கொண்டு முதியோர் இல்லத்தில் விட போகிறோம்" என்று குரல் உடைந்து விசும்ப தொடங்கிவிடுவான். ஆறுதலாக அவனை அணைத்து "இவ்வளவு feel பண்ணாதீங்க"- "முதியோர் இல்லத்திலே அம்மாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாங்க" -"நன்னா பார்த்துப்பாங்க" என்று மெல்ல தூங்க வைப்பாள் சங்கி .

Office இல் இருந்து திடீரென்று தொலை பேசியில் அழைப்பான்-"சங்கி- அம்மா ஒரு நாள் எனக்கு வெறும் ரசம் சாதம் பிசைந்து கொடுத்து இருந்தாள்"- "அது எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமோ"- "இரண்டு முட்டை நெய் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையை தூவி இருந்தாள்"-"அமிர்தமாக இருந்தது"-என்பான். "புரிகிறது கண்ணா- எனக்கு உங்கள் sentiment புரிகிறது என்பாள் சங்கீதா.மகள் ஆர்த்தி கூட "பாட்டியை இங்கேயே அழைத்து வைத்து நம்ம கூடவே வைத்து கொள்ளலாம் அப்பா" என்றாள்.

வீட்டுக்கு வந்தவுடன் "சங்கி- சொல்ல மறந்து விட்டேனே-அப்பா தினமும் office இல் இருந்து திரும்பும் போது எனக்காக choclate, biscuit எல்லாம் வாங்கி வருவார்" தெரிமோ என்பான். "அவனுக்கு ஆதரவாக சங்கீதாவும் "உங்க அப்பா மாதிரி ஆகாது" என்பாள்.ஆனந்த் "அம்மா தாத்தாவும் இங்கே வரட்டுமே-நம்மோடு சேர்ந்து இருக்கட்டுமே"என்பான்.

வாரம் மூன்று முறையாவது Gym க்கு போவதை வழக்கமாக வைத்திருந்தான் பிரகாஷ். அன்று Gym சென்று உடல் பயிற்சி முடித்த பின் புல் வெளியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான்.அவனுக்கு பின்னே, ஒரு நடுத்தர வயது உடைய அமரிக்கன் தன் 10-வயது மகளுடன் நடத்தி கொண்டு இருந்த உரையாடலை கேட்க நேர்ந்தது. "Dad- where are your parents? Why are they not living with us?" என்று மகள் கேட்க அதற்கு அந்த தந்தை "Sweetie- they can't live with us- they are too old and manage by themselves" என்று பதில் அளித்தான். உடனே அந்த பெண் - my class mate Indira told me, that in India, they take care of their parents even when they are old- her grand parents are well looked after by their uncles and aunts- " is it true dad? குழந்தை தொடர்ந்து கேட்டது. அதற்கு அந்த அமரிக்கன் well yes- they have a different system dear- err I guess we cannot have that here என்றான். உடனே அந்த பெண் "Jesus ! i hate this system- living all for oneself- selfish we are - I gonna break this"- how forward indians are"என்று வியந்தது. "dad,when we plant a sappling, it grows into a tree and gives back more than what it has received- this is just ridiculous that you will not do something for your parents- tomorrow if don't do a thing for you would it be alright? என்று அப்பாவுடன் தொடர் விவாதத்தில் இறங்கியது. தன் கன்னத்தில்"பளாரென்று" ஒரு அரை விழுந்த உணர்வு ஏற்பட்டது பிரகாஷிற்கு.

கிருஷ்ணன் அண்ணா வழக்கப்படி கடைசி நிமிடத்தில் ஒதுங்கி கொண்டு விட்டார். தன்னால் இயலாது என்றும் மோகன் வந்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவான் என்று சொன்னார்.மோகனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டான். கோபால் மாமாவும் லக்ஷ்மி மாமியும் புறப்பட தயாராக இருந்தனர். கதவு தட்ட படும் சத்தம் கேட்டது.

திறந்தால் பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான். "அப்பா-அம்மா நீங்கள் எங்கும் போக வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை-என் இறுதி மூச்சு இருக்கிறவரை நான் உங்களை- என் கண்ணின் இமையை போல் பார்த்து கொள்கிறேன்- என்னை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்கு இதை கூட நான் செய்யாவிட்டால்- ஒரு நாயிற்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட எனக்கு இல்லை என்று ஆகி விடும்" உணர்ச்சி பொங்க கூறினான். மோகன் அவன் அருகில் வந்து " அண்ணா- நானும் கிருஷ்ணன் அண்ணாவும் செய்ய தவறியதை நீ செய்து நீதான் உண்மையான பிள்ளை என்று நிரூபித்து விட்டாய்" - "என்னை நினைத்து வெட்க படும் நான் அதே நேரத்தில் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்றான், நான்கு ஜோடி கண்கள் அங்கே நீரால் பனித்தன.
பாவாடை மருமகன் ஆனான்!
-----------------------------------------
எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
========================
பச்சை பசேல் என்று வாழை தோட்டங்கள்-தோப்பு,துரவுகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான கிராமம் அது. அக்கிரஹாரம்,வெள்ளாளர் தெரு,பத்தர் தெரு ,இடயர் தெரு, சேரி என்று அவரவர் வர்ணத்துக்கு ஏற்ற குடியிருப்பு பகுதிகள். ஒற்றுமையும்,அமைதியும் நிறைந்ததாக திகழ்ந்தது.

அகலமான நெற்றி, உருண்ட தோள்கள்,பரந்த மார்பு, ஓரளவு படிப்பு அறிவு,முற்போக்கான எண்ணங்கள்-இதுதான் பச்சை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு ஹரி-ஜன இளைஞன்.தாய்,தந்தை அற்றவன்.முற்பட்ட ஜாதியினருக்கு எதிராக குரல் உயர்த்துபவன். நில வேலை செய்பவர்ளின் உரிமைக்காக போராடுபவன். அவனுக்கு அந்த கிராமத்தில் பல எதிரிகள்.வஞ்சி-அன்றாட கூலியான- கலியனின் மகள்.கருப்பு என்றாலும் அப்படி ஒரு லக்க்ஷணம். செதுக்கி எடுத்ததை போல் நாசியும் கண்களும்.. மூக்கும் முழியுமாக இருப்பாள்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் கேட்க வேண்டுமா? இலை,மறைவு காய் மறைவாக பழகிய இருவரும், நெருங்கி பழகலானர்ர்கள். காடு மேடு எல்லாம் சுற்றி திரிந்தனர்.கை கோத்துகொள்வது,இடுப்புடன் இடுப்பு உராசுவது,முத்தங்கள் பறிமாரிகொள்வது என்று சினன சின்ன சல்லாபங்களிலும் இருவரும் ஈடுபட்டனர். பச்சை “வஞ்சி-நீ இல்லாம என்னால இருக்க முடியாது-உன் அப்பா கிட்ட சொல்லி நம்ம பரிசத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்பான். வஞ்சி “ஆசய பாரு- என்ன் கட்டிகறது அவ்வளோ சகாயமா? 10 வேலி நஞ்சை,5 வேலி புஞ்சை,100 தென்ன மரம்,ஆடு,மாடு எல்லாம் இருக்கணும்” என்பாள்.”மவராசியே- அப்ப நீ உன் வழிய பாத்துக்க- நா என் வழிய பாத்துக்கரேன்” என்பான் பச்சை விளயாட்டாக.. அவர்களது ஜாதி பெரியவர்கள்-“கலியா, சீக்கிரமே,பரிசம் போட்டுடு”-காலம் கெட்டு கடக்கு-ஒண்ணு கடக்க ஒண்ணு ஆறத்துக்கு முன்னே” என்று அறிவுரை கூறுவார்கள். பதிலுக்கு கலியன்”செய்யலாம் தான்-அந்த புள்ள-சதா சண்ட புடிச்ச்சிட்டு இல்லே இருக்கு- அதான் கொஞ்சம் “ரோசனயா” இருக்கு என்பான்.

அதே கிராமத்தை சேர்ந்தவன் தான் பாவாடை.ஏறக்குறைய பச்சையின் வயதேதான். ஒரு கால் சற்று விளங்காதவன்.இழுத்து இழுத்து நடப்பான்.பேச்சும் சரியாக் வராது. ஒரு கிழிந்த-முழங்கால் வரையிலான “நிக்கர்”.மேலே ஒரு அழுக்கு:”கை-வைத்த”பனியன்.கடை கண்ணிக்கு போவது,கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்பது,தண்ணி இறைத்து கொடுப்பது என்று குற்ற ஏவல்களை செய்பவன். எல்லோரும் பரிதாபப்பட்டு அவ்வப்போது சோறு போடுவார்கள.வஞ்சி கூட சில சமயங்களில் “ஏய் பாவாடை-என்னோடு பாண்டி விளாயாடுடா- ஆளே இல்லை” என்று கூப்பிடுவாள். பழஞ்சோறும்-ஊறுகாயும் கொடுப்பாள். கோவில்,சத்திரம்,கல்யாண வீடு என்று நுழைந்து விடுவான். அவகளும் இரக்கபட்டு இரண்டு வேளை சோறு போடுவார்கள். அப்படித்தான், ஒரு திருமண வீட்டில் எல்லா சடங்குகளையும் உற்று உற்று பார்து கொண்டெ இருந்தான். பெண்ணின் அப்பா மருமகனுக்கு “கால் அலம்புவது” அவன் மனத்தில் பதிந்த ஒரு நிகழ்ச்சி
.
வழக்கம் போல ஒரு சாயங்கால வேளையில் பச்சையும்,வஞ்சியும் சந்தித்து கொண்டனர்.இளமையின் வேகம்-தனிமை கொடுத்த தைரியம-பச்சை வஞ்சியை நெருங்கி அணைத்து “இன்னிக்கு உம்மேலே ஆசை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு-என்று உதட்டை கவ்வினான்.”வேண்டாம்-சொன்னா கேளுங்க- நமக்கு இன்னும் பரிசம் போடலே” என்று வஞ்சி விலகினாள்.”உனக்கு நான்-எனக்கு நீ- இது தீர்மானம ஆயிடுச்சு-அப்பாலே என்ன்- என்று அவளை விலக விடாமல் தன் இச்சைக்கு இணங்க வைத்து விட்டான். உணர்ச்சி வெறியில் புணர்ர்ச்சி நடந்து முடிந்தது. இருவருக்குமே தாங்கள் வறைமுரையை மீறி விட்டோம் என்று தெரிந்தது.தான் செய்தது தவறு என்ற குற்ற உணர்வுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் வஞ்சி. வாசலிலேயே உட்கார்ந்து இருந்த கலியன் கவலை தோய்ந்த குரலில்”எங்கேம்மா போயிருந்தே- இம்மாம் நேரம் ஆயுடிச்சே-வெளக்கு வெக்கற நேரத்திலே-வீட்லே இருக்க வாணாமா தாயி-தாயில்லா பொண்ணு-நானே வவுத்திலெ நெருப்ப் கட்டிகினு இருக்ககேன் “ என்று புலம்பினான்.. “தவறுதான் அப்பா –மத்த பொண்ணுங்க கூப்பிடிக்சி-அதான் போனேன்-நாளி ஆயிடுச்சு” என்று சமாளித்தாள்.

பச்சை மீது அவனது எதிரிகளுக்கு அரசல் புரசலாக இருந்த வெறுப்பும்,காழ்ப்பு உணர்ச்சியும் ஒரு நில-தகறாரில் விஸ்வரூபம் எடுத்தது. ஒரு நாள் இரவு கண்மாய் கரை ஓரமாக அவனை வெட்டி சாய்ப்பது வரை போய் விட்டது.அடுத்த நாள் அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது.கலியனுக்கும்,வஞ்சிக்கும் தலையில் இடியே இறங்கியது போல ஆனது. அதற்குள் வஞ்சி “முழுகாமல்”இருக்கும் விஷயம் வெளியே கசிந்து விட்டது.

இவ்வளுவு விஷயங்கள் கிராமத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது பாவாடை அங்கு இல்லாததை ஒருவரும் கவனிக்கவில்லை. பாவாடை அவ்வப்போது கால் போன போக்கில் போய் விடுவான்.அப்படித்தான் இம்முறை பக்கத்து கிராமத்திற்கு போயிருந்தான். அங்கே இருந்த கோயிலில் திருவிழா. ஒரு பெரியவர் “உபன்யாசம்” செய்து கொண்டு இருந்தார். ரெண்டு மூணு நாள் தொடர்ந்து அங்கேயே பழியாக கிடந்தான்.கடைசி நாள் அவரிடம் சென்று அவரை வணங்கினான். “துண்ணூறு கொடுங்க” என்று கேட்டு வாங்கி நெற்ற்யில் பூசி கொண்டான். அருகில் இருந்தவரகள் அவனை பற்றி கூறினர். பெரியவர் அவனை கனிவோடு பார்த்துவிட்டு “ஒரு உண்மையான வைஷ்ணவனா இரு” என்றார்- “அப்படின்னா என்ன செய்யணும்,சாமி” என்றால் பாவாடை. “உன்னால் முடிந்த உபகாரத்தை பிறருக்கு செய்” என்று ஆசிர்வதித்தார். “உபகாரம்னா என்ன சாமி?” என்று கேட்டான்.நாம் துன்பப்பட்டாலும் பிறர் துன்பத்தை விலக்க முயல வேண்டும் என்று கூறினார். என்ன புரிந்ததோ தலை ஆட்டினான் பாவடை.

கிராமத்திற்கு திரும்பிய பாவாடைக்கு மெல்ல மெல்ல நடந்த விஷயங்கள் எல்லாம் புரிந்தன. கலியனின் குடிசை நோக்கி ஒரு தீர்மானத்தோடு நடந்தான். குடிசைக்குள் நுழைந்து நேரே கலியனிடம் சென்று தன் காலை நீட்டி “நான் தான் ஒம் மருமகன்- என் காலை கழுவு- இனிமே வஞ்சி என் பொண்ஜாதி” என்றான். அடுத்து வஞ்சியிடம் சென்று “வவுத்தில வளர்ரத அளிக்காத- அதுக்கு நான் தான் அப்பன்” என்றான். கலியன் அவனை நெருங்கி “என்ன பெனாத்தரே- எல்லாம் தெரிமா உனக்கு” எனறான். “எது தெரியணமோ அது தெரியும்- நா ஒரு வைஷ்ணவன்- உன்னோட,வஞ்சியோட கஷ்டத்தை தீக்கணும்-பெரியவ்ரு சொல்லி இருக்காரு” என்றான்.

யாரு பெரியவர்-அவர் என்ன சொன்னார்- உண்மையான வைஷ்ணவன் என்றால் யார்- என்ற எதையும் அறியாத கலியனும்-வஞ்சியும் விக்கித்து போய் நின்றனர்.
‘சாந்தி’ கல்யாணம்
----------------------------
எழுதியவர்- சுந்தரேசன் சுரேஷ்
=========================

பிரம்மா கருப்பு "பெயிண்ட்"டப்பாவில் கை தோய்த்து விட்டு படைத்து விட்டானோ என்று எண்ண வைக்கும் நிறம் சாந்திக்கு (27).குள்ளம் என்றுதான் கூற வேண்டும்.இரட்டை நாடி சரீரம். தலையில் அதிக மயிரும் கிடையாது. தகர "டின்"இல் ஆணியால் இழுப்பதை ஒத்த குரல்.ஆக மொத்தம் "சாமுத்ரிகா"லக்ஷணம் ஒன்று கூட பொருந்தியவள் இல்லை.இவளுக்கு எப்படி கல்யாணம் ஆக போகிறதோ என்ற கவலையே இவளது பெற்றோர்கள் நாகநாதன்-வசந்தா தம்பதியர்களுக்கு எப்போதும்.

பார்க்க நன்றாக இருக்க மாட்டாளே ஒழிய சாந்தி குணத்தில் தங்க கம்பி.வீட்டு வேலைகள் அத்தனையும் அத்துபடி.பெற்றோர்களை ஒரு வேலை செய்ய விடமாட்டாள்.வங்கிக்கு போவது,மின்சார கட்டணம்,தொலைபேசி கட்டணம் கட்டுவது,மளிகை-காய்கறி வாங்கிபோடுவது என்று வெளிவேலைகள் சகலமும் அவள்தான்.அதே மாதிரி உள் வேலைகள்- சமையல்,துணி துவைப்பது,பாத்திரம் தேய்ப்பது,பெருக்கி மெழுகுவது-என்று எல்லாவற்றையும் அவளே செய்து முடிப்பாள். அக்கம் பக்கத்தாரிடம் அப்படி ஒரு நல்ல பெயர். வலிய போய் உதவி செய்வாள். சாயங்கால வேளையில்,பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுப்பாள்.

அண்டை அசல் மாமிகள் எல்லாம் "நிறம் தான் கொஞ்சம் மட்டு"- "மத்தபடி இவளுக்கு என்ன குறை"?- "எல்லாருக்கும் என்ன குரல் எம்.எஸ் மாதிரி அமைஞ்சுடருதா"?- "ரெட்டை நாடியா இருந்த என்ன"?- "இப்ப குஷ்பூ குண்டா இல்லையா"?-"இவளுக்குன்னு ஒத்தன் பிறக்காமலா போயிருப்பான் "? - "வேளை வந்தா தானா நடக்கும்" என்று தங்களுக்குள் பேசிகொள்வார்கள். திருமணஞ்சேரிக்கு சாந்தியையும் அவள் பெற்றோர்களையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தவர்களும் அவர்களே.

நாகநாதன் "அம்மா சாந்தி-பிள்ளைக்கு பிள்ளையா,பெண்ணுக்கு பெண்ணா,இப்படி நீயே எல்லாம் பண்றத்துக்கு அந்த பகவான் உன்னை நன்னா வெக்கணும்"என்பார். வசந்தாவும் "இவளுக்கு நல்ல எடத்திலே கல்யாணம் ஆகணும்-குழந்த தீர்காயுசா இருக்கணும்"என்று சொல்வாள். சொல்லி விட்டு நாம் நினைத்தது ஆக மாட்டேன் என்கிறதே என்ற தாபத்தில் இருவரும் தவிப்பார்கள்,

ஒரு பிள்ளை வீட்டார், முகத்தில் அறைந்த மாதிரி இந்த மாதிரி பெண்களை வைத்து கொண்டு கல்யாணம் ஆக வேண்டும் என்று எதிர்பார்பதே தவறு என்று கூறினர். எங்காவது இரண்டாம் தாரமாக கட்டி கொடுங்கள் என்று இலவச ஆலோசனை வழங்கினவர்களும் உண்டு. மற்றும் சிலர் "ஏம்மா இப்போதுதான் பல "ப்யூட்டி-பார்லர்கள்"வந்துள்ளதே"- "அதற்க்கு போய் கொஞ்சம் நிறத்தையும் வெளுப்பாக மாற்றி கொண்டு,எடையையும் குறைத்து கொள்ள கூடாதோ" என்று ஹிதோபதேசம் செய்தனர். தான் இருக்கிறபடி ஏற்று கொள்பவர் நிச்சயம் ஒரு நாள் வருவார் என்பது சாந்தியின் திடமான நம்பிக்கை.

ஒரு வாரத்திற்கு முன் தெரிந்தவர்கள் மூலமாக ஒரு ஜாதகம் பொருந்தி இருந்தது.நாகநாதன் முன்னாடியே சொல்லி விட்டார். முதலில் பெண்ணின் "போட்டோவை" பாருங்கள். சம்மதம் என்றால் நேரில் வந்து பெண் பாருங்கள் என்று. பையன் பெயர் விவேக்- B.Tech., M.B.A.- Cognizant இல் வேலை-ஆறடி உயரம்- உயருத்துகேற்ற பருமன்- கோதுமை நிறம்- "ஜம்மென்று ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி இருந்தான். நாகநாதனுக்கும்,வசந்தாவிற்க்கும் நம்பிக்கையே இல்லை. "திரும்ப ஒரு முறை சொஜ்ஜி-பஜ்ஜி- சாப்பிட்டுவிட்டு போக போகிறார்கள்"- "பாவி பெண்ணுக்கு எப்போதுதான் வாழ்கை அமைய போகிறதோ"? என்று நொந்து கொண்டனர்.

பெண் பார்க்க வர போகிறார்கள் என்று கேள்விபட்டதில் சாந்திக்கு விசேஷமாக ஒரு உணர்ச்சியும் ஏற்படவில்லை. அப்பா,அம்மா கவலை தீருவதற்க்காவது நமக்கு இந்தே இடம் அமையட்டுமே என்று நினைத்து கொண்டாள். தோழி ஒருத்தி "ஒவ்வொரு திங்க கிழமையும்,பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று,சிவனுக்கு தலையில் பால் விட்டு பாரு"-"நிச்சயமாக தகையும்" என்று சொன்னதை செய்யலாம் என்று நினைத்து கொண்டாள்."இந்த எடமும் முடியலே என்றால் கொஞ்சம் விஷத்தை வாங்கி அவளுக்கும் கொடுத்துவிட்டு நாமும் சாப்பிட வேண்டியதுதான்- வேறு வழியே தெரியல்லே" என்று நாகநாதன் வசந்தாவிடம் புலம்பியதை கேட்டதில் இருந்து வேற இவளுக்கு மனசே சரி இல்லை.

குறிப்பிட்ட நாளும் வந்தது. விவேக்கின் அப்பா,அம்மா,சகோதரி மூவரும் வந்தனர். பெண் பார்த்து விட்டு சென்றனர். "போய் அப்புறம் தகவல் தெரிவிக்கிறோம்" என்ற ஆரம்பித்த அப்பாவை இடைமறித்தான் விவேக். நாகநாதனை நோக்கி "கொஞ்ச நேரத்துக்கு எங்களுக்கு ஒரு தனி அறை ஒதுக்கமுடியுமா"? "எங்களுக்குள் பேசி கொள்ள" என்று கேட்டான். உள் அறையை காட்டினார் நாகநாதன். இங்கிதம் தெரிந்து அங்கிருந்து நகர்ந்து கொண்டார்.

விவேக்கின் அம்மாதான் ஆரம்பித்தாள்"பொண்ணு பாக்க நன்னாவே இல்லையே"- "கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை"-"கை காரியம் எல்லாம் தெரியுமாம்"-"வீட்டையும் நறுவிசா வைத்து கொண்டு இருக்காள்" என்றாள். "அம்மா எதுத்து பேசறேன் என்று நினைக்காதே"- "இவ்வளுவு நல்ல குணங்கள் இருக்கும் போது பார்க்க நன்றாக இல்லை என்று ஒரே காரணுத்துக்கா வேண்டாம் என்று சொல்வது சரி இல்லை"-"நான் தான் அவள் கூட வாழ போறேன்"- "எனக்கே சரி என்று படுகிற போது- உங்களுக்கு என்னம்மா"? என்றான். விவேக்கின் அப்பா ஒரு பரமார்த்தி. பிள்ளை எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நம்புபவர். அவர் வாயே திறக்கவில்லை. சகோதரி விவேக்கிடம் "விவேக்- கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்"- "எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது- எடுக்கவும் கூடாது"-"உனக்கு நல்ல 'பெர்சனாலிட்டி"இருக்கிறது"- "இவளை அழைத்து கொண்டு வெளியில் வாசலில் சென்றால் பொருத்தமாக இருக்காது"-"பிரசன்னாவும் பிந்து கோஷும் போகிறார்கள் என்று கேலி பண்ணுவார்கள்" - "எல்லாவற்றையும் யோசிக்கணும்"- "குழந்தைகள் இவளை கொண்டு பிறந்தால்" என்றாள். விவேக் "அக்கா நீ சொல்வது சரி"- "இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது"-"முதலாவது, Beauty is only skin deep" -" உனக்கு தெரியாதது இல்லை"- "கல்யாணம் ஆனா புதிதில் மன உணர்சிகளை விட உடம்பு கவர்ச்சி முக்கியமாக படுமே ஒழிய, ஓரிரு குழந்தைகள் பெற்ற பின்னர் உடம்பை விட மனமே முக்கியமாக ஆகிவிடும்" - "சாந்தி எனக்கு ஒரு நல்ல மனைவியாக,எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக, நம் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகளாக இருப்பாள் என்று நம்புகிறேன்"-"இரண்டாவதாக marriages are made in heaven"- "இந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டு இதை விட அழகு குறைந்தவளை பண்ணிகொள்ளும் நிலைமையும் ஏற்படலாம்"- "அப்புறம் நீ சொன்னே குழந்தைகள் பற்றி- "நம் அப்பா அம்மா இருவரும் மாநிறம்"-"சராசரி உயரம்"- "உனக்கும் எனக்கும் இந்த 'கோதுமை கலர்' எங்கிருந்து வந்தது"?- "எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பெண் எவ்வளுவு முறை நிராகரிக்கப்பட்டு இருப்பாள்"-"எவ்வளுவு முறை மனதிற்குள்ளேயே ஊமை அழுகை அழுதிருப்பாள்"- "இப்போது நாமும் வேண்டாம் என்று சொல்லி விட்டால், அவள் மனசு என்ன பாடு படும்"- "அதை பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு நமக்கு இல்லையா"? "ஆண்டவன் கொடுத்த அங்க அமைப்புகளையும்,நிறத்தையும் வைத்து கொண்டு மனிதர்களை உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று வகை படுத்துவதும்,ஏற்ற-தாழ்வு பார்ப்பது அநியாயம் மட்டும் அல்ல- அக்கிரமும் கூட"ஒரு நீண்ட பிரசங்கமே செய்து முடித்தான் . விவேக்கின் பேச்சில் இருந்த உண்மைகள்- அவன் வாதத்தில் இருந்த நியாயம்- அவன் பெற்றோரையும்,சகோதரியையும் யோசிக்க வைத்தது. கடைசியில் "உனக்கு இஷ்டம் என்றால் சரி" என்றனர்.

நாகநாதன்-வசந்தா தம்பதியரின் தவிப்பா,தன்னால் தன் பெற்றோர்களுக்கு எவ்வளவு கவலை என்ற சாந்தியின் வருத்தமா, மற்றும் அவளின் உருக்கமான பிரார்த்தனையா, சிவன் தலையில் ஊற்ற பட்ட பாலா அல்லது எல்லாம் சேர்ந்த கலவையா- எது விவேக் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை அந்த குடும்பத்திற்கு கிடைக்க காரணமாக இருந்தது என்பது சொல்வது கடினம்.