stories
Wednesday, March 12, 2014
கடன் பட்டார் நெஞ்சம் போல்.....
=================================
படைத்தவர்-சுந்தரேசன் ஸுரேஷ்
==================================
காலை மணி ஆறு இருக்கும். அழைப்பு மணி சத்தம். ராகவன் அப்போதுதான் எழுந்து பல் விளக்கி விட்டு காபி குடித்து கொண்டு இருந்தான். "சீதா,கொஞ்சம் பாரேன்"-" "பொழுது விடிவதற்குள் கடன்காரன் மாதிரி யாரு வந்திருக்கான்னு"? என்றான். அவனது மனைவி சீதா சென்று கதவை திறந்தாள். "வரலாமா"?"காலங்கார்த்தாலை வேளையிலே தொந்தரவுக்கு மன்னிக்கணும்" என்றவாறே அவளது சம்மதத்துக்கு காத்திருக்காமல் உள்ளே நுழைந்தார் அம்பி.அழுக்கு வேஷ்டி-அதை விட அழுக்கு சட்டை- முகத்தில் குச்சி-குச்சியாக மூன்று நாள் தாடி- குசேலரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.
ராகவன் ஒரு முன் கோபி மட்டும் அல்ல அவசர குடுக்கையும் கூட.அதனால் தான் பல நல்ல குணங்கள் இருந்தும் சோபிக்காமல் போனது. ஆறு மாதம் முன்பாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் கடனாக கொடுத்திருந்தான் அம்பிக்கு.அவரது மனைவிக்கு தண்டு வட்த்தில் ஒரு அறுவை-சிகிச்சை.அதற்கான மருத்துவ செலவுக்காக். அவரை பார்த்தவுடனே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "என்ன மனுஷன் நீங்கள்"?"கொடுத்த வாக்கை காப்பாற்ற வேணாமா"? ஒரு மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு போய் மாதம் ஆறாகிறது"-"இன்னும் திருப்பி தந்த பாடு இல்லை"-“உங்க மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாளா அல்லது பரலோகம் போய் விட்டாளா”?"இப்ப என்ன இன்னும் கொஞ்சம் கடன் கிடைக்குமா என்று பார்க்க வந்தீர்களா"? என்று நெருப்பு துண்டங்களாக வார்தைகளை தூக்கி போட்டான்.
அம்பிக்கு முகம் சுருங்கி விட்டது. "அது வந்து- குடுக்க கூடாது என்று எண்ணமெல்லாம் இல்லை"-"ஒன்று மாத்தி ஒன்று பிரச்சனையாக இருந்ததினால் குடுக்க முடியாமல் போய் விட்டது" என்று குற்ற உணர்வுடன் பதில் அளித்தார்.
"இந்த நொண்டி சமாதானம் எல்லாம் வேண்டாம்"-"வாங்கின கடனை திருப்பி கொடுக்கும் வரை தேவையானால் பட்டினி கிடக்க கூட தயாரா இருக்கணும்" என்று சொற்களால் மேலும் குத்தினான் ராகவன்.
"சொன்னால் நம்ப மாட்டீர்கள்"-"ஆனால் உண்மை அதுதான்"-"நான் கடந்த ஆறு மாதங்களாக-ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன்"-"இரவு உணவை தவிர்த்துவிட்டேன்" -"வாயை கட்டி வயிற்றை கட்டியாவது உங்கள் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் என்ற அம்பியை தொடர்ந்து பேச விடாமல் குறிக்கிட்ட ராகவன் "சரி-சரி, இப்ப எதற்கு வந்திருக்கிறீர்கள்"? என்று கேட்டுவிட்டு "சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள்"-"உங்கள் மாதிரி இருக்கிறவர்கள் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்ப் கூடாது”- உங்கள் மகள் படித்து என்ன கிழிக்க போகிறாள்"? "படிப்பை நிறுத்திவிட்டு பேசாமல் நாலு வீடுகளுக்கு பத்து-பாத்திரம் தேய்க்க அனுப்புங்கள்"-"குடும்பத்துக்கு உதவியாக நாலு காசாவது சம்பாதிப்பாள்" என்றான்.
அம்பிக்கு காபி எடுத்து வந்த சீதாவினால் இந்த பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை."இந்தாங்க மாமா"-"காபி குடிங்க"என்றவள் ராகவனை நோக்கி "என்னங்க இது"-அந்த பெண் மிக நன்றாக படிப்பாள்"-"படிப்பை தவிரவும் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி,வினாடி-வினா நிகழ்சிகள்,விளையாட்டு போட்டிகள் என்று எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குபவள்"-"வகுப்பிலே எப்போதும் முதல் மாணவி"-"விஷயம் தெரியாமல் எதற்காக இலவச அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்"என்றாள் கடுப்போடு.
"இருக்கட்டும் அம்மா"-"பணம் திரும்ப வரவில்லையே என்ற ஆதங்கத்தில் 'சார்' அப்படி பேசுகிறார்"-"நான் வந்த காரியத்தை மறந்து விட்டு என்னமோ பேசிக்கொண்டு இருக்கிறேன்"என்றவரை திரும்பவும் இடைமறித்து "வேறு எதற்கு வந்திருக்க போகிறீர்கள்"-"இன்னொரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது"-"இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்க போகிறீர்கள்"-"அவ்வளவுதானே" என்றான் ராகவன்.
"அப்படி எல்லாம் இல்லை"-"உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தான் வந்துள்ளேன்"-"நீங்கள் செய்து உதவிக்கு என் உடம்பை செருப்பாக தைத்து போடணும் -"என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் அம்பி. தொடர்ந்து 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்ப ராமயணத்தில் வரும்.-"நானும் அந்த மாதிரி மன நிலையிலே தான் இந்த ஆறு மாதங்களாக இருந்தேன்"-"ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று இரவு நிம்மதியாக உறங்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.
ராகவனுக்கே மனிதரை பேசவே விடாமல் கொஞ்சம் அவசரப்பட்டு வார்த்தைகளை அதிகப்படியாக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது . சீதாதான் நிலைமையை சமாளித்தாள் "-போகட்டும்- எப்படியோ வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டீர்கள்"-“பணம் கிடைத்து விட்ட்து என்ற் சந்தோஷம் இவருக்கு”-“கடனை அடைத்து விட்டோமே என்று திருப்தி உங்களுக்கு”-அது சரி பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்தீர்கள்"? என்று கேட்டாள்.
அவள் கேட்டதுதான் தாமதம் அம்பி மாமா பாவம் கண்ணில் நீர் கசிந்துவிட்டது"அதை ஏன் கேட்கிறீர்கள்"? "பாவம் என் பெண்" என்று குரல் கம்ம சொல்ல தொடங்கினார். " அரிமா சங்கம் நடத்திய பள்ளி அளவிலான ஒரு கட்டுரை போட்டியில் என் பெண் முதல் பரிசாக ஒரு பவுனில் ஒரு தங்க சங்கிலி வென்று இருந்தாள்"-"நான் இந்த மாதிரி வாங்கின கடனை திருப்பி குடுக்க முடியாத நிலையில் இருப்பதை கண்ட குழந்தை "அப்பா இந்த சங்கிலையை விற்று விட்டு ராகவன் மாமாவின் கடனை அடைத்து விடுங்கள்" -"இன்னும் ஏதாவது போட்டி நடக்காமலா போய் விடும்?"நான் பரிசு வாங்காமலா போய் விடுவேன்"? என்றாள். "பாவி மனுஷன் நான்"-"பெற்ற பெண்ணுக்கு நகை வாங்கி போடாததோடு மட்டும் அல்லாமல் அவள் திறமைக்கு கிடைத்ததை கூட அவளிடமிருந்து பிடுங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்" என்றார்.
அப்போதுதான் ராகவனோ அம்பி மாமாவோ சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்தாள் சீதா.மளமளவென்று தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்கிலியை கழற்றி "மாமா- இதை உங்கள் பெண்ணின் கழுத்தில் போடுங்கள்"- "குழந்தை பாவம் மூளி கழுத்தாக இருக்க வேண்டாம்"- "இது நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்" என்றாள்.
கண்களில் நீர் மல்க,இரு கைகளையும் குவித்து "நீங்க தீர்க்க சுமங்கலியா நகை,நட்டோடு நீண்ட நாள் இருக்கணும்"- "அம்மா நீ என்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் உன் காலில் விழுந்து வணங்கணும் போல் இருக்கு" என்ற அம்பி மாமாவிடம் “பெரியவர் நீங்க் அப்படி எல்லாம் சொல்ல கூடாது”-“என்னையும் உங்கள் இன்னொரு பெண்ணாக் நினைத்து கொள்ளுங்கள்”-“அக்கா தங்கைக்கு செய்ய உரிமை இல்லையா”? என்று தடுத்து கொண்டிருந்தாள் சீதா. தன் மனைவியின் பெருந்தன்மைக்கு முன் தான் மிகவும் சிறுத்து போய் நின்றான் ராகவன்..
குங்கும சிமிழ்
-------------------
கற்பனைக்கு உயிர் கொடுத்தவர்:சுந்தரேசன் சுரேஷ்
-----------------------------------------------------------------------
சேதுராம தீக்ஷிதர் என்ற பெயர் அந்த கும்பகோணம்-தஞ்சாவூர் வட்டாரத்தில், மக்களிடையே மிகவும் பிரபலம். வேத அத்தியனம் முழுமையாக செய்தவர்.வேத-ஸாஸ்த்ர பாண்டித்தியத்திலும்,சம்ஸ்கிருத ஞானத்திலும் கறை கண்டவர்.வேதாந்த கேஸரி,ஸாஸ்த்ர சிரோன்மணி,அனுஷ்டான தர்மகர்த்தா என்று பலபல பட்டங்கள்.நித்திய அக்னிஹோத்திரி. ‘வாஜபேயம்’,‘ஸௌத்ராமணி’ உள்ளிட்ட பல யாகங்களும்,யக்கியங்களும் நடத்தியவர். ஆறடி உயரம்,ஆஜானபாகுவான தேகம்.பரங்கி பழ நிறம்.பட்டை பட்டையாக விபூதி. பார்த்தாலே காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று தோன்றும்.
“மங்களம் குடிக்க கொஞ்சம் தீர்த்தம் கொண்டு வருகிறாயா”? என்றார்.”இதோ வரேன்”என்றாள் அவரது தர்மபத்தினி.மடிசார் கட்டு,முழங்கால் வரை தொங்கும் தலைமயிர்.மஞ்சள் தேய்த்து குளித்த முகம்,வட்டமான குங்கும பொட்டு என்று லக்ஷ்மீகரமான தோற்றம் மங்களம் மாமிக்கு. “என்ன பண்ணுகிறாள் குழந்தை”? என்று கவலையோடு கேட்டார். “வேற என்ன் பண்ணுவாள்”?-“மோட்டு வளையை virவிரக்தியோடு பார்த்து கொண்டு இருக்கிறாள்”-“நம்ம கதி இப்படி ஆயிடுத்தே என்று மருகி கொண்டு இருக்கிறாள் என்றாள்.“பாவம்-இந்த வயசிலே இந்த கொடுமை நடந்திருக்க வேண்டாம்” என்றாள் மங்களம். “என்ன பண்ணுவது-நடக்கிறது எல்லாம் நம்மளை கேட்டுகொண்டா நடக்கிறது”?”அனைத்தும் ஈஸ்வர சித்தம்” என்றார் தீக்ஷிதர்.இருவரின் கவலைக்கும் காரணம்- அவர்களது ஒரே மகள் கல்யாணி- மணம் ஆகி ஆறே மாதங்களில் விதவை ஆனவள்.மொட்டு பூக்காமலே கருகியது போல், வாழ வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் பறி கொடுத்துவிட்டு, தனி மரமாக நிற்பவள்.
தீக்ஷிதரின் மகன் வைத்தி என்கிற வைத்தியநாதன் அப்பா அளவு அத்தியனம் செய்தவன் இல்லை. ஓரளவு வேதம் கற்றவன், ஆங்காங்கே ஜபம், பாராயணம் என்று போவான், புரோகிதத்தை தொழிலாக செயபவன் இல்லை.கல்யாணிக்கு மூத்தவன். ஸாஸ்த்ர ஸம்பிராதயங்களை மறு-பரிசீலனை செய்ய வேண்டும்-தேவையானவை வைத்து கொண்டு தேவையற்றவற்றை கழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவன்.தங்கை மறுமணம் செய்தது கொள்ள வேண்டும் என்று தீவிரமாக நம்புபவன். சேதுராம தீக்ஷிதருக்கு இதிலெல்லாம் ஒப்புதல் கிடையாது.தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பவை எக்காலத்திற்கும் பொருத்தமானவை-அவைகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை-செய்கிற தகுதியும் ஒருவருக்கும் கிடையாது என்ற கொள்கை உடையவர். ஆனால் தங்கைக்காக அப்பாவையே எதிர்க்க துணிந்தவன் வைத்தி.
“ஸாஸ்திர விதி முறைகளை மீறுவது குற்றம்” –“ஒரு முறை மணமான பெண் வைதவ்யம் அடைந்துவிட்டால் திரும்பவும் அவளை சுமங்கலியாக ஆக்க வழியில்லை” என்பது உனக்கு தெரிந்ததுதானே” என்று கேட்பார் பிள்ளையிடம். ‘ய ஸாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம் கார்தா-‘ந ஸ் ஸித்திம் அவாப்னோதி ந் ஸுகம் ந பராம் கதிம்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை-ஸாஸ்திர விரோதமாக நடப்பவனுக்கு இவ்வுலகிலும் சுகம் கிடையாது பரலோகத்திலும் கதி கிடையாது- என்பதை உனக்கு விள்க்கி சொல்லி இருக்கிறேனே” என்பார்.
வைத்தியும் சளைக்காமல் “அப்பா உங்கள் மேதா-விலாசத்திற்கு முன் நான் வெறும் துரும்பு”-“இருந்தும் இதெல்லாம் எழுதபட்ட கால வாழ்க்கை முறைக்கும் தற்கால வாழ்கை முறைக்கும் இடையே நிறைய மாறுதல்கள்,மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன”-“தங்களை போன்றவர்கள் ஆன்மீக கோட்பாடுகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டாமா”? “கல்யாணியின் இறந்து போன் புருஷன் தன் காலம் ஆனாதால்-விதி முடிந்துவிட்டதால்- போய் விட்டான்”-“மணமாகமலே இருந்தாலும் அவன் போயிருக்க போகிறான்”-“அப்போது கல்யாணி விதவை ஆகியிருக்க மாட்டாளே”-“கிடைக்க வேண்டிய சுகங்கள் ஒருவன் மூலம் கிடைக்காமல் போய் விட்டது என்பதற்காக, வேறு ஒருவரும் அதை கொடுக்க கூடாது என்று தடுப்பது அநியாயம்” என்று வாதம் செய்வான்.”இது எப்படி இருக்கிறது என்றால் “நாம் ஒரு நல்ல வேட்டி அணிந்து கொண்டு ஒரு வேலைக்காக வெளியே புறப்படுகிறோம்- ஒரு பறவை வேட்டியை அசுத்தபடுத்தி விடுகிறது”-“அதுதான் சாக்கு என்று அந்த காரியத்தை தொடராமல் வீட்டில் உட்கார்ந்து கொள்வது நியாயமா” வேறு வேட்டி மாற்றி கொண்டு காரியத்தை தொடர்வது நியாயமா” என்று உதாரணத்தோடு புரிய வைக்க முயலுவான்.
ஒருமுறை வாக்குவாதம் ரொம்ப தடித்து தீக்ஷிதர் கோபத்தோடு “ஆமாம் நீ பெரிய ‘திரிகாலஞானி’ ஆகிவிட்டாய்”-“உனக்கு தெரியாது கிடையாது”-“உன்னோடு நான் வாக்குவாதம் செய்ய போவதில்லை”-“நான் சொல்வதை எல்லோரும் கேட்டுகொள்ளுங்கள்”-:நான் உயிரோடு இருக்கும் வரை இதற்கு சம்மதிக்க மாட்டேன்”-“என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்று மனைவியை பார்த்து கூறிவிட்டார்.மங்களத்துகு அழுகையே வந்து விட்ட்து “என்ன நீங்கள் இப்படி எல்லாம் அபசகுனமாக் பேசி கொண்டு “”வைத்தி கொஞ்சம் சும்மா இருக்கியா” என்றாள்..
பெண், வீட்டோடு வந்து விட்டாளே என்ற சோகம் தீக்ஷிதரை வாட்டி எடுத்து அவரை பாரிச-வாயு தாக்குதலுக்கு ஆளாக்கி விட்டது. வலது பக்கம் செயலிழந்து விட்டது. ஒரு சிங்கத்தை போல் வளைய வந்தும் கர்ஜித்தும் கொண்டிருந்தவர் படுத்த படுக்கை ஆகிவிட்டார். மல,மூதிரங்கள் எல்லாம் படுக்கையில்தான்.. கம்பீரமாக வேதம் ஓதிய அந்த குரல்- வாய் ஒரு பக்கம் கோணி- பேசுவதே புரியாமால் போய்விட்ட்து.
வைத்தி தெரிந்த தரகர் மூலம் தீவிரமாக கல்யாணியின் மறுமணத்துக்கு முயன்று கொண்டிருந்தான்.கல்யாணியின் நிலையோ இரு-தலை-கொள்ளி-எறும்பை போல் இருந்தது. 21 வயதே நிரம்பிய அந்த இள்ம்பெண்ணால் காலமெல்லாம் ஒரு விதவையாக-அப்பாவின் எண்ணப்படி- வாழ்வதா அல்லது-ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது- அதை மறந்து விட்டு புதியதாக ஒரு வாழ்க்கை தொடங்குவதா-அண்ணாவின் கூற்றுப்படி-என்று தீர்மானிக்க் முடியாமல் தவித்தாள்.
தரகர் ஒரு இடம் கிட்டதட்ட தகைந்த மாதிரி-பிள்ளை பனாரஸ்-ஹிந்து-விஷ்வ-வித்யாலயாவில் பேராசிரியராக பணி புரிபவன்-ஸ்ம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவன்-குடும்பமே ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட குடும்பம் என்று சொல்லி இருந்தார். கல்யாணியின் புகைபடம் பிடித்து போய் விட்டதாகவும், ஒரு நல்ல நாள் நேரில் வந்து பார்த்து,சம்மதம் சொல்லி அன்றே நிச்சயம் செய்து விடலாம் என்று சொல்லி இருந்தார்.
அப்பா படுத்த படுக்கை ஆனவுடன்,வைத்தி தான் அவருக்கு உடம்பு துடைத்து விடுவது, விபூதி இட்டு விடுவது,வேற்றி மாற்றி விடுவது என்று எல்லா சுஷ்ரூஷைகளும் செய்துவந்தான். உணவு கொடுப்பது மங்களத்தின் வேலை. மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்யாணியுடையது..பல சமயங்களில் அவர் கண்களில் இருந்து கர கர வென்று நீர் வழிந்து கொண்டு இருக்கும். தனக்கு இப்படி ஆகிவிட்டதே எனறா அல்லது கல்யாணியின் நிலை குறித்தா- எதற்கு அந்த கண்ணீர் வெள்ளம் என்று தெரியாது.
வைத்தி சொன்னான்”அம்மா-அவர் சம்மதம் இல்லாமல் கலயாணி விஷயத்திலே மேலே தொடர எனக்கு இஷ்டம் இல்லே-“நாளைக்கு அவர்கள் வருவதாக சொல்லி இருகிறார்கள்”-நீ பையனின் புகைபடத்தை அப்பாவிடம் காட்டி,அவருக்கு சைகை பாஷையிலே புரிய வைத்து சம்மதம் வாங்கேன்” என்றான். “எனக்கும் இந்த பாவி பெண்ணுக்கு ஏதாவது ஒரு வழி பிறந்தால் தான் நிம்மதியா இருக்கும்”-“இந்த மனுஷர் ரொம்ப பிடிவாதமா இருக்கிறரே” என்றாள் மங்களம்.
அன்று இரவு ஆகாரமான நொய்-கஞ்சியை மெள்ள-மெள்ள ‘மேஜை-கரண்டியால்’ தீக்ஷிதர் வாயில் விட்டாள் மங்களம் மாமி. ஏழெட்டு மேஜை-கரண்டிகள் வாங்கி கொண்டவர் சைகையினால் போதும் என்றார். வாயை துடைத்துவிட்டு, இரவு மாத்திரைகளை கொடுத்தாள் கல்யாணி, கட்டிலின் தலை மாட்டில் இரண்டு தலை-காணிகளாக சேர்த்து வைத்து சாய்ந்தால் போல அப்பாவை படுக்க வைத்து போர்த்தி விட்டாள். மங்களம் உள்ளே வந்து கையில் இருந்த புகைபடத்தை காட்டி, கல்யாணியை சுட்டி காட்டி,கழுத்தில் தாலி கட்டுவது போல் சைகை செய்தாள். புரிந்து கொண்ட தீகஷிதர், கண்ணை மூடி கொண்டார். பிராவகமாக நீர் வழியதொடங்கியது. நினவு தெரிந்த நாள் முதல் வேதமே மூச்சு,ஸாஸ்திரமே வழிகாட்டி என்றும் உண்மை மாறாமல், நேர்மை தவறாமல், சத்தியம் வழுவாமல் வாழ்க்கை நடத்துவதற்கு இதுதான் நீ செய்யும் கைமாறா என்று பகவானை கேட்பது போல் இருந்தது அது. பின் மெள்ள இடது கண்ணை திறந்தார். மங்களத்தை பார்த்து சைகை செய்தவாறே கழ்டபட்டு இடது கையை தூக்கி தன் நெற்றியில் வைத்து பொட்டு இட்டுகொள்வதை போல சமிஞ்யை செய்தார்.. மங்களத்துக்கு புரியவில்லை. தன் நெற்றியில் பொட்டு இல்லையோ என்று தொட்டு பார்த்து கொண்டாள். மிகவும் முயற்சி செய்து வாயின் இடது பக்கத்தினால் ‘குமும்.. குமும்.” என்றார். ஒருவாரு புரிந்த கொண்ட மங்களம் குங்குமசிமிழை எடுத்து வந்து கொடுத்தாள், சைகையினாலேயே கல்யாணியை குனியுமாறு சொன்னார். அவளது நெற்றியில் தன் இட கரத்தினால் குங்கமத்தை எடுத்து தீற்றினார்.
மறு நாள் காலை பொழுது விடிநது. ஏன் கல்யாணிக்கு தன் கழ்டங்கள் விடிந்தது என்று கூட வைத்து கொள்ளலாம். ஆனல் தீக்ஷிதருக்கு விடிய வில்லை.மங்களத்தை துக்கத்தில் ஆழ்ததிவிட்டு, தூக்கத்தில் அவர் உயிர் துறந்திருந்தார்.
“என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்ற தீக்ஷிதரின் வார்தைகள் வைத்தியின் காதில் ரீங்காரமிட்டன்
நன்றே செய்க
--------------------
எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ்
=========================
நூறு கிலோமீட்டர் வேகத்தில் தன்னுடைய வண்டியை வீடு நோக்கி செலுத்திக்கொண்டு இருந்தான் குமார்.ஒரு மேற்பார்வை மற்றும் சரி-பார்க்கும் வேலைக்காக(இன்ஸ்பெக்க்ஷன்) அவனது அலுவலகத்தில் இருந்து சுமார் 150 கி.மி.தூரத்தில் இருந்தது அந்த அந்த தொழிற்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டு இருந்தான். காலை ஏழு மணிக்கே கிளம்பி, 3-மணி நேரம் பிரயாணம் செய்து, வேலை எல்லாம் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மணி இரவு ஒன்பது ஆகி விட்டது. நெடுஞ்சாலையில் 'விஷ்' 'விஷ்' என்று வாகனங்கள் கடந்து செல்லும் சப்தத்தை தவிர ஆள் அரவமே இல்லை.
ஒரு 100 மீட்டர் தொலைவில் இடது பக்கமாக 'சேவை-பாதை'பிரிந்திருப்பது தெரிந்தது.மிகவும் களைப்பாக இருந்ததால் தேநீர் அறிந்துவிட்டு பயணத்தை தொடரலாம் என்று நினைத்து வண்டியை இடது பக்கம் ஒடித்தான் குமார்..அப்போதுதான் அந்த காட்சியை கண்டான். ஒரு பக்கம் மோட்டார் பைக் உருண்டு கிடக்க ரத்த வெள்ளத்தில் ஒரு 20-22 வயது மதிக்கத்தக்க வாலிபன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தான்.அசுர வேகத்தில் சென்ற ஏதோ ஓர் வாகனம் பின்னாடியில் இருந்து மோதி தள்ளியிருக்க வேண்டும்.
ஒரு நிமிடம் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அடிபட்ட வாலிபனை அப்படியே விட்டு போகவும் மனமில்லை. மருத்துவமனை,காவல்,நீதிமன்றம்,வழக்கு என்று பிரச்சனைகளில் மாட்டி கொள்ள விருப்பமும் இல்லை.கடைசியில் மனிதாபிமானமே வென்றது. முதல் காரியமாக தன் கைபேசியை எடுத்து காவல் துறைக்கு செய்தி சொன்னான்."மிகுந்த ரத்த சேதம் ஆகியிருப்பதாக தெரிவதால் நான் அடிபட்ட நபரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறேன்"-"நீங்கள் நேராகவோ அல்லது விபத்து நடந்த இடத்துக்கு சென்று பின்னர் அங்கிருந்தோ மருத்துவமனைக்கு வரலாம்"-"நான் அங்கே உங்களுக்காக காத்திருக்கிறேன்" என்றான். பின்னர் அடிபட்ட நபரின் அருகில் சென்று பார்த்தான்.தன் மகன் அசோக்கை போல தோற்றமளிப்பதை போல் இருந்தது.ஈன ஸ்வரத்தில் 'அப்பா என்னை காப்பாற்றுங்கள்" என்று முனகுவது போல தோன்றியது.எங்கோ ஜம்ஷெட்பூரில் இருக்கும் தன் மகனின் நினைப்பு வந்தது வெறும் மன-பிராந்தியாக இருக்கும் என்று தன்னை-தானே சமாதான படுத்திகொண்டான். ஒரு பக்கமாக விழுந்து இருந்ததால் பின் மண்டையில் அடி படவில்லை.தாவாங்கட்டை பெயர்ந்து இருந்தது.வலது தொடையில் இருந்து ரத்தம் பெருகி கொண்டு இருந்தது. கைபேசி இருக்கிறதா என்று தேடினான். இருந்தது ஆனால் அது அணைந்து இருந்தது.
கடைசியாக மனைவி கலாவை தொடர்பு கொண்டு "நான் வரும் வழியில் ஒரு விபத்தில் அடிபட்ட வாலிபனை பார்க்க நேர்ந்தது"-"அவனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது"-"ஒன்றும் கவலைப்படாதே"-"வீடு வந்து சேருவதை பற்றி இப்போது சொல்ல முடியாது"-"அப்புறம் தொடர்பு கொள்கிறேன்"என்றான். "ஏங்க உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறதே" என்றவளிடம் . "எவ்வளுவு தலை-போகிற விஷயமாக இருந்தாலும் அதை கேட்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை"-" பையனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன்"என்று தொடர்பை துண்டித்துவிட்டான்.
அடிபட்ட வாலிபனை தூக்கி தன் வண்டியின் பின் இருக்கையில் கிடத்தினான். விளம்பர பலகை/வழிகாட்டி பலகையின் உதவியோடு அருகில் இருந்த மருத்தவமனையை கண்டுபிடித்தான். நல்ல காலம்,பணியில் இருந்த மருத்துவர் நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்பட்டார். "சீக்கிரம் காயங்களுக்கு தையல் போடுங்கள்"- ரத்தம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று உத்தரவுகளாக பிறப்பித்தார். அதற்குள் காவல் துறையினரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் "நான் தான் குமார்"-உங்களுக்கு தகவல் தந்தவன்"- என்று நடந்ததை விவரமாக கூறினான். அதை எழுத்து மூலமாக அறிக்கையாக கொடுக்க சொன்னார்கள். வாலிபனது கைபேசியை எடுத்து அதற்கு சக்தி கொடுத்து அதில் இருந்த அவனது பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.மருத்துவரும்"குமார் ஐயா"- "வாலிபன் அபாய கட்டத்தை தாண்டி விட்டான்"-"இனி உயிருக்கு ஆபத்து இல்லை"-"நீங்கள் தகுந்த சமயத்தில் கொண்டு வந்து சேர்த்ததே இதற்கு முக்கிய காரணம்"என்றார். இதெல்லாம் முடிய மணி அதிகாலை 4 ஆகி விட்டது. காவல் துறை அதிகாரியிடம் "நான் கிளம்புகிறேன்"-"மேற்படி எந்த தகவல் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றான். அதிகாரியும் "மிக்க நன்றி"-"உங்கள் மாதிரி பொறுப்புடன் நடந்து கொள்பவர்கள் அரிது"-"பாக்கி ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்" என்று விடை கொடுத்தார்.
மிகுந்த அயற்சியுடனும் வண்டி ஓட்டி வந்த களைப்புடனும் வீட்டுக்குள் நுழைந்தான். "அப்பாடி நல்ல வேளையாக வந்து சேர்ந்தீர்கள்"-"தொலைபேசி அழைப்பே இல்லையே என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தேன்" என்ற கலா தொடர்ந்து "என்னங்க பையன் பிழைத்து விட்டான் தானே"?-"உயிருக்கு ஆபத்து இல்லை தானே"?என்று கேட்டாள்."அதல்லாம் ஒன்றும் கவலை இல்லை"-"அவன் பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது" என்றான் குமார். பிறகு தன்னை சிறிது ஆசுவாச படுத்தி கொண்டு,காபி அருந்திய பின்,"ஆமாம் நேற்று இரவு நான் தொடர்பு கொண்டபோது ஏதோ முக்கியமான விஷயம் என்றாயே"-"இப்போது சொல் அது என்ன" என்றான்.
கண்களில் நீர் பனிக்க கலா தொடங்கினாள் "இதை என்ன அதிசயம் என்பதா அல்லது எதேச்சையான செயல் என்பதா என்றே புரியவில்லை"-"நேற்று உங்கள் அழைப்பு வருவதற்கு சற்று முன்னர் நம்ம அசோக் (அவர்களின் ஒரே பையன்-ஜம்ஷட்பூரில் எக்ஸ்.எல்.ஆர்.ஐயில்-முதலாண்டு எம்.பி.ஏ படிப்பவன்) ஒரு விபத்தில் மாட்டி கொண்டு விட்டதாக அவன் நண்பனிடம் இருந்து தகவல் வந்தது"-"எனக்கு கையும் ஓடவில்லை"-"காலும் ஓடவில்லை"-"உங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றால் நீங்களே ஒரு பிரச்னையில் இருந்தீர்கள்"-"ஈஸ்வரோ ரக்ஷது என்று நம் குலதெய்வம் சாமிநாத சாமிக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிட்டு ராத்திரி முழுக்க பூஜை அறையிலேயே பழி கிடந்தேன்" -"என் கண்மணிக்கு உயிர் பிச்சை கொடு என்று மனமுருகி பிரார்த்தித்ததற்கு பலன் கிடைத்து விட்டது"-"விடிகாலை ஐந்து மணிக்கு அதே நண்பன் தொடர்பு கொண்டு அசோக்கிற்கு அடி பலமில்லை- கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினான்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.
நேற்று இரவு தன் மன-பிராந்திக்கான காரணத்தை அறிந்து கொண்ட குமார் தன்னையும் அறியாமல் இரு கரம் கூப்பி அந்த சுவாமிநாத சுவாமிக்கு நன்றி செலுத்தினான்
யாகாவாராயினும் நாகாக்க......
========================
எழுதியவர்:சுந்தரேசன் சுரேஷ்
------------------------------------------
மருத்துவர் ஷ்யாம்சுந்தர் சட்டர்ஜி ஒரு காது-மூக்கு-தொண்டை நிபுணர். ரங்கநாத பாகவதரின் தொண்டையை பல்வேறு விதமாக பரிசோதனை செய்த பின் உதட்டை பிதுக்கினார்- "என்ன பிரச்னை என்று குறிப்பிட்டு சொல்வது கடினம்"- குரல் பெட்டி (வாய்ஸ் பாக்ஸ்) மற்றும் குரல் நரம்புகள் (வோகல் கார்ட்ஸ்) பழுது அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன"- "திரும்ப பாட முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார். "நம்பிக்கையுடன் இருங்கள்"-"என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்”-“இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் கூட தங்கள் குரலை திரும்ப பெற்று இருக்கிறார்கள்"-“மருத்துவர்கள் கடவுளாக முடியாது”-“ஆனால் கடவுள் மருத்துவர் ஆக்லாம்” என்று கூறி விடை பெற்றார்.
பாகவதரின் மனைவி சாந்தியும் மகள் ஸ்வேதாவும் இடிந்து போய் விட்டனர். சென்னை மருத்துவர்கள் எல்லாம் கை-விட்டு விட்ட நிலயில் கொல்கத்தாவில் இருந்து பிரத்யேகமாக வந்திருந்த நிபுணராவது ஏதாவது நல்ல பதிலாக சொல்வார் என்ற எதிர்பார்போடு இருந்தவர்களின் நம்பிக்கையும் பொய்த்துவிட்ட்து..
விஷயம் இதுதான். ரங்கநாத பாகவதர் ஒரு பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான். 'கலைமாமணி','சங்கீத கலாநிதி' என்று பட்டங்கள் பெற்றவர். மார்கழியில் மியூசிக் அகாடமியில் சாயங்கால கச்சேரி செய்பவர். இவர் கச்சேரி எங்கே நடந்தாலும் சென்னை போக்குவரத்து காவல்துறையினருக்கு பெரிய பிரச்னை. மோட்டார் வண்டியில் அத்தனை கனவான்களும்,சீமான்களும்,சீமாட்டிகளும் கச்சேரிக்கு படை எடுப்பார்கள்- விளைவு மாநகரத்தின் சாலைகளில் எல்லாம் வாகனங்களின் தேக்கம் ஆகிவிடும். பட்டு புடவைகளும்,வைர தோடுகளும்,இவரது காம்போஜியையும்,கல்யாணியையும் கேட்டு உருகும், மத்யமாவதியில் நகுமோமோ என்று ஆரம்பித்தால் ரசிகர்கள் மெய் மறந்து கேட்பார்கள்.ஆறு மாதத்துக்கு முன்பாகவே கச்சேரிக்கு தேதி வாங்க வேண்டும். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி என்று வெளி நாடுகளிலும் இவருக்கு அமோக வரவேற்பு. ஆசாரம் அனுஷ்டானம் மிக்கவர். 'செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்' குருகுல வாசம் செய்தவர்.
பெரும்பாலும் எல்லாமே நல்ல குணங்கள் கொண்டவராக இருந்தாலும் சற்று அகந்தையும்,அகங்காரமும் கொண்டவர் பாகவதர். ஆறு மாதங்கள் முன் நடந்த நிகழ்ச்சி- தெருவில் குப்பை பொறுக்கும் ஒரு பத்து வயது சிறுமி திடீரென்று பாகவதரின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள். அடையாறு,கஸ்தூரிபா நகரில் பிரமாண்டமான பங்களா.நிதி சால சுகமா என்று கல்யாணியில் சாதகம் செய்துகொண்டிரிந்த பாகவதரை அணுகி "எனக்கும் பாடணும் என்று ரொம்ப ஆசை"-"எனக்கு பாட்டு கத்து குடுக்கிறீங்களா"? என்று வெகுளியாக கேட்டாள்.
கோபம் தலைக்கேறிய பாகவதர் "ஏ சாந்தி"-"எங்க ஒழிஞ்சு போயிட்ட"?"நான் சாதகம் பண்ணிக்கொண்டு இருக்கிறது தெரியலே"?"கண்ட கழிசடை எல்லாம் வீடு புகுந்து சாதகத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது" என்று கத்தினார். பின் அந்த சிறுமியின் மீது தன் கோபத்தை திருப்பி "மூதேவி- எச்சகலை பொறுக்கறது எல்லாம் சங்கீதம் கத்துக்க முடியாது"-"என்னை மாதிரி ஆசார அனுஷ்டானத்தோடு இருக்கணும் "-"அப்பதான் சரஸ்வதி கடாக்ஷம் இருக்கும்"-"இந்த ஜன்மத்திலே உனக்கு அந்த கொடுப்பினை இருப்பதாக தெரியலை"- "எடத்தை காலி பண்ணு" என்று கத்தி ஓய்ந்தார்.
“ஏனுங்க இந்த எகிறு எகிற்றீங்க”?”நீங்க் என்ன பிறக்கற்த்தேயே பாட்டு பாடிகினு பிறந்தீங்க”?”ஏதோ ஒரு மவராசன் கிட்டே கத்துகிட்டு அப்பாலே தான் பாடுறீங்க”?”எனக்கும் கத்து குடுத்தா நானும் பாடிட்டு போறேன்”? நாளக்கே உங்களுக்கு தொண்டயிலே எதுனா கோளாறு ஆனா பாட முடிமா” என்று மனம் போன போக்கில் அந்த பெண் பேசியது.
தற்செயலாக நடந்ததோ இல்லை அந்த சிறுமியின் ஆதங்கமோ என்ன காரணமோ அடுத்த நாளே பாகவதருக்கு தொண்டையில் ஒரே எரிச்சல்,வலி. சாதாரண கைவைத்தியம்,அலோபதி,என்று காண்பித்தும் ஒன்றும் பயன் இல்லை. வாயை திறந்து பேசுவதே பெரும் பாடாக ஆகி விட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமாகி கடைசியில் வாயை திறந்தால் சத்தமே வராமல் வெறும் காற்று தான் வந்தது. சாந்தி பயந்தபடியே"என்னங்க-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"நீங்கள் அந்த பிச்சைகார பெண்ணை அப்படி திட்டி இருக்க வேண்டாம்"-"அன்றில் இருந்துதான் உங்களுக்கு படுத்துகிறது"என்றாள். "போடி பைத்தியம்"- "காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்களே"-"அந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு" -"சரியாக ஆகிவிடும்"-"கவலை படாதே"என்றார் பாகவதர்.
ஸ்வேதாவும் அம்மாவின் கருத்துடன் ஒத்து போனாள்.இரண்டு பேருமாக பல அனாதை இல்லங்களுக்கு போய் பெண் சிறுமிகளுக்கு துணி மணிகள் வாங்கி கொடுத்தனர்;சாப்பாடு போட்டனர்.கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெண் தெய்வங்களுக்கு பாலாகவும்,தேனாகவும் அபிஷேகம் செய்தனர்.ஸ்வேதாவும் ஓரளவு வாய்பாட்டில் தேர்ச்சி பெற்றவள்தான். பந்துவராளியில் ராம் தய ஜூடவே என்ற் பத்ராசல் ராம்தாஸரின் கீர்த்தனயை உளமுருகி பாடினாள். கேட்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைதாலும் தயவு செய்ய ராமனின் மனம் குளிரவில்லையோ என்னவோ பாகவதரின் நிலமையில் ஒரு மாறுதலும் இல்லை.
விஷயம் மெல்ல வெளியே கசிந்து,பாகவதரின் பல ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களையும்,பரிகாரங்களையும் தொலைபேசி மூலமாகவும்,நேரில் வந்தும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். பல்லாயிரகணக்கான ரசிகர்களின் தன்னலமற்ற பிரார்த்தனை பலன் அளிக்காமலா போய் விடும்?
ஒரு நாள் மருத்துவர் சட்டர்ஜியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பாகவதர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தபின் ஸ்வேதாவிடம் "அம்மா-நீ என் மகளை போல் என்பதால் சொல்கிறேன்"-"இதை நான் ஒரு மருத்துவராக சொல்ல வில்லை"-"ஒரு மனிசாபினாம் உள்ள வங்காளியாக்- காளியின் உண்மையான பக்தனாக சொல்கிறேன்"-"கொல்கத்தா ,காளிகாட் காளி பிரசித்தமானவள்"-மிகவும் சக்தி வாய்ந்தவள்"-“நீங்கள் கேள்வி பட்டிருக்க கூடும்”-"இந்த காளிக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ நாக்கு வாங்கி சாற்றுவதாக வேண்டி கொண்டு பாருங்கள்"-"நிச்சயம் உன் அப்பா குணம் அடைவார் என்று என் உள்மனசுக்கு படுகிறது"-"உன் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லு"-"நான் பிற்பாடு மறுபடி தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்" என்று கூறினார்.
ஸ்வேதா சாந்தியிடம் ஆலோசனை செய்து கொல்கத்தாவில் இருந்த உறவினர் ஒருவர் மூலம் 4-பவுனில் ஒரு தங்க நாக்கு வாங்கி காளிக்கு சாற்ற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிசயம் என்பதா பிரார்த்தனையின் பலன் என்பதா பாகவதருக்கு குரல் வளம் திரும்பியது. முதலில் பேச தொடங்கினார் பின்பு சாதகம் பண்ணவும் ஆரம்பித்தார். மருத்துவர் ஷ்யாம் சுந்தர் சட்டர்ஜிக்கு தொலைபேசியில் தகவலும் நன்றியும் தெரிவிக்கபட்டது.கிட்ட்தட்ட பழைய் நிலைக்கு திரும்பி விட்டார்.க்ச்சேரி செய்ய முடியும் என்ற் நம்பிக்கையும் பிறந்தது. மறுநாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் கச்சேரி ஏற்பாடு ஆகி இருந்தது. குரல் வளம் திரும்பிய பின் பாகவதரின் முதல் கச்சேரி.
கச்சேரிக்கு புறப்படுவதற்கு தயாராக, மோட்டார் வண்டியில் ஏற பாகவதர் பங்களாவின் வெளியே வந்தார். எதேச்சையாக ஒரு பிச்சைகார சிறுமி குறுக்கே கடந்தாள். இம்முறை பாகவதரின் கண்களுக்கு அவள் பிச்சைக்காரியாக தென்படாமல் சாக்ஷாத் கொல்கத்தா காளியாகவே தென்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
Like · · Share
Monday, March 10, 2014
காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :-
இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது .
நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME.
இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.
காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!!
காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா
நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .
அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்.
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்
" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "
" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்
" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன ,
இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்.
நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.
என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.
'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் "
( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)
என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய்.
" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?
இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,,
எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது.
மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான்.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே
மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!
karadaiyan nombu
காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :-
இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது .
நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME.
இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது.
காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!!
காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள்.
அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான்.
அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா
நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி.
இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார்
அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் .
அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள்.
கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது
'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான்
" யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் "
" சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான்
" உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின்
உயிரைத்திரும்பிக்கொடுத்தான்
சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன ,
இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல்
இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும்
பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று
தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம்.
நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம்.
அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது.
என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும்.
'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் "
( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு)
என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய்.
" அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது
பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "?
இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,,
எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள்
பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு
கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது.
மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான்.
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே
மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!
Saturday, March 8, 2014
Subscribe to:
Posts (Atom)