Sunday, February 9, 2014

பழிக்கு பழி
------------------
எழுதியவர்: சுந்தரேசன் சுரேஷ்
==============================
செய்திதாளில் 3வது பக்கத்தில் வந்திருந்த அந்த விளம்பரத்தை கூர்ந்து படித்தான் இளவரசு. "அன்னை தெரசா மறு வாழ்வு மையம்" என்ற அமைப்பு தாங்கள் சில 'எய்ட்ஸ்"நோயாளி பெண்கள்களுக்கு மறு வாழ்வு கொடுக்க முயலுவதாகவும் பரந்த மனப்பன்மை உள்ள வாலிபர்கள் தங்களை அணுகலாம் என்றும் விளம்பரம் கொடுத்திருந்தது.

இளவரசு "தொழிலாளர் கட்சியின்"ஒரு உண்மையான தொண்டன்.கட்சியின் வளர்ச்சிக்காக உயிரை குடுத்து உழைப்பவன்.கட்சி காரியாலயமே கோவில்,தலைவரே தெய்வம்,கொள்கையே வேத வாக்கு என்று இருப்பவன்.

இள வயதும்,அதிகம் படிப்பறிவு அதிகம் இல்லாத இளவரசு ஒரு பேரிளம் அழகியான செவந்தியை சந்திக்க நேர்ந்ததும்,காதல் மலர்ந்ததும்,திருமணத்தில் முடிந்ததும் எல்லாமே எதேச்சையாக நடந்தவை.

ஒரு கட்சி மாநாட்டிற்கு செவந்தியையும் அழைத்து சென்றதே இளவரசுவின் தப்பு. தலைவர் மணிமாறனுக்கு குளிர் பானம் உடைத்து கொடுத்த அவன் தடாலென்று அவர் காலில் தம்பதி சமேதராக விழுந்தான்."ஐயா- இதுதான் எம் பொஞ்சாதி"- "பேரு செவந்தி"-"நீங்க வாழ்த்தணும்-" என்று கெஞ்சினான். மானை பார்க்கும் புலியை போல் தலைவர், செவந்தியின் உடம்பில் இருந்து கண்ணை எடுக்காமல் "உனக்கு ஒரு குறையும் வராம நா பாத்துகறேன்"-"இது மாதிரி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்"- "சீக்கிரமே உன் பொஞ்சாதி தாயா ஆகணும்"என்று பொடி வைத்து பேசினார். கட்சி கரை போட்ட வேட்டி,புடவை, ஒரு தங்க 'செயின்',கொஞ்சம் பணம் எல்லாம் ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.

திரும்பும் போது "என்ன தலைவரோ?"- "அவரோட பார்வையே சரி இல்லை"- "எனக்கு பிடிக்கலை" என்றால் செவந்தி. "உனக்கெல்லாம் புரியாது"- "அவர் மனசு தங்கம்"-என்று வக்காலத்து வாங்கினான் இளவரசு. "எவ்வளுவு இளம் பெண்களுக்கு வாழ்கை அமைத்து கொடுத்து(கெடுத்து) இருக்கார் தெரியுமா? என்றான். "பாத்துகிட்டே இரு"- "நம்ம வாழ்வும் அவராலே திசை திரும்பப்போகுது" என்று மணிமாறன் புராணம் பாடினான் அவன்.

தலைவர் நய வஞ்சகமாக திட்டம் தீட்டி, இளவரசை வெளி ஊருக்கு அனுப்பி விட்டு,செவந்தியை கதற,கதற கற்பழித்ததும், அவமானம் தாளாமல் அவள் தற்கொலை செய்து கொண்டதும் உங்களுக்கு 'ஒரு கைதியின் டைரியை' நினைவு படுத்தினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

அன்று தொலைக்காட்சி, செய்தித்தாள் எல்லாவற்றிலும் ஒரே செய்திதான் முக்கியமாக இருந்தது. செய்தி குறிப்பு இதுதான்-"தொழிலார் கட்சி" தலைவர் மணிமாறன் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்க பட்டார். மர்மமான நோய் அவரை தாக்கி இருப்பதாகவும் தகுந்த சிகிச்சை அளித்து வருவதாகவும் முதலில் அறிவித்த தலைமை மருத்துவர் சில மணி நேரங்களிலேயே தன அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். பல மணி நேர தொடர் சிகிச்சையும் பலன் அளிக்காமல் மாலை 5.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.அவரது உடல் கட்சி அலுவலுகத்துக்கோ, அவரது வீட்டுக்கோ எடுத்து செல்ல படாது. பொது மக்கள் பார்வைக்காகவும் வைக்க படாது.உடனே மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன".

இளவரசு 'அன்னை தெரசா மறு வாழ்வு மையத்தை அணுகியதும், சுப்ரா என்ற எய்ட்ஸ் நோயாளியிடம் தன் கதையை கூறி, அவள் எப்படியாவது மணிமாறனுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, உடலுறுவு கொள்ள வேண்டும்- அவரது இறப்பே செவந்தியின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் என்று கூறியதும் ,சுப்ரா அதற்க்கு சம்மதித்ததும் இரகசியங்களாகவே இருந்து விட்டு போகட்டுமே.

No comments:

Post a Comment