லாட்டரி சீட்டு
--------------------------
எழுதியவர்- சுந்தரேசன் சுரேஷ்
========================
வடிவேல் ஒவ்வொரு பலகையாக எடுத்து நகர்த்தி வைத்து விட்டு கடையை திறந்தான்.வரிசை மாறாமல் இருக்க அவற்றில் 1,2,3... என்று 'நம்பர்' எழுதப்பட்டு இருந்தது.புறநகர் பகுதியில்,பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்து இருந்தது அந்த 'லாட்டரி' சீட்டு விற்பனை நிலையம்.வாசலில் சிறிது நீர் தெளித்து, கை வசம் இருந்த பூமாலையை சாமி படத்துக்கு அணிவித்து, ஊதுவத்தி காட்டி விட்டு "ஆண்டவா- இன்று நிறைய சீட்டுக்கள் விற்பனை ஆகி நல்ல வருமானம் வர வேண்டும்" என்று வேண்டி கொண்டான்.
ரக வாரியாக, வண்ண வாரியாக 'லாட்டரி' சீட்டுக்கள் ஒரு 'போர்டில்'பரத்தி வைக்கப்பட்டு இருந்தன. தலையில் ஒரு 'கிளிப்' குத்தப்பட்டு,அவை பறந்து போகாமல் இருக்க ஒரு 'நைலான்' கயிறினால் கட்ட பட்டு இருந்தன. பத்து ரூபாய் சீட்டுக்கு தங்கள் தலை-எழுத்தையே மாற்ற கூடிய வலிமை இருப்பதாக பாமரர்களும் சரி படித்தவர்களும் சரி நம்பி கொண்டு இருக்கும்வரை 'லாட்டரி' சீட்டு விற்பனைக்கு குறைவே இல்லை.
ஹமீத் அதே தெருவில் நடை-வண்டியில் பழம் விற்கும் வியாபாரி. மா, வாழை, ஆப்பிள்,ஆரஞ்சு என்று எல்லாம் விற்பான். கத்தை கத்தையாக 'லாட்டரி' சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் உள்ளவன். சீட்டுகளை வாங்கி விடுவானே ஒழிய பணத்தை உடனே குடுக்க மாட்டான். "வடிவேல்- உனக்கு தான் நம்ம நெலமை தெரியுமே"- "அடுத்தவாரம் பணத்தை கொடுத்திட்டு சீட்டை எடுத்து கொள்கிறேன்"-என்பான். வடிவேலோ "சீட்டை பிடிங்க அண்ணே"- நீங்க எங்க ஓடி போக போறீங்க"-"நா எங்க போக போறேன்"-முடிஞ்சபோது கொடுங்க"என்பான். ஹமீத் சொல்வான்"வடிவேல் - என்னிக்காவது நானும் லட்சாதிபதி ஆகத்தான் போகிறேன்"-நீயும் பார்க்கத்தான் போகிறாய்"என்று.பொறாமையோ,பிறர் வாழ கூடாது என்கிற எண்ணமோ சிறிதும் இல்லாத வடிவேல் சிரித்துக்கொண்டே " கடவுள் அருளால் அப்படியே நடக்கட்டும் ஹமீத் அண்ணே" என்பான்.
வடிவேலுக்கு வீட்டை நினைத்து கவலையாக இருந்தது. மனைவிக்கு உடல் நிலையே சரி இல்லை. மாத விலக்கு நாட்களில் ரத்த போக்கு அதிகமாக இருப்பதாக சொல்லி இருந்தால். மருத்தவரிடம் காண்பிக்க வேண்டும். மகளின் பள்ளி சீருடை கிழிந்து கந்தலாக போய் இருந்தது. உடனே புதிதாக வாங்க வேண்டிய நிலை.பையனின் பள்ளியில் ஏதோ கல்வி-சுற்றுலாவாம்-அவசியம் போக வேண்டுமாம்-கூடுதல் பணம் கட்டவேண்டுமாம். நாலா பக்கத்தில் இருந்தும் பணத்திற்கான தேவைகள் பெருகி கொண்டு இருந்தன. மண்டை காயும் நிலை.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கும் 'வாரந்திர' லாட்டரியின் கணிசமான சீட்டுக்களை வாங்குவது ஹமீதின் வழக்கம். 'வங்க லட்சுமி-10 லட்சம், ஆகாச கங்கை- 8 லட்சம்-குபேர சம்பத்-5 லட்சம் என்று சகட்டு மேனிக்கு வாங்குவான். போன சனிக்கிழமையும் அப்படித்தான் கிட்டத்தட்ட 300 ரூபாயிற்கு சீட்டுக்கள்,வழக்கம் போல் கடனில் தான் வாங்கி இருந்தான்.என்ன தோணியதோ "வடிவேல்- இந்த வாட்டி நீ என்ன சொன்னாலும் நா சீட்டை எடுத்துக்க போறதில்லை"- "திங்ககிழமை பணத்தோடு வரேன்"-பணத்தை கொடுத்திட்டு சீட்டை எடுத்துக்கறேன்" என்று சொல்லி விட்டான்.
சொல்லி விட்ட சென்ற ஹமீத் திங்கட் கிழமை வரவில்லை. அதை தொடர்ந்து ஒரு வாரமாகியும் வந்து கடை விரிக்கவில்லை. ஏதோ சுககேடு என்று வடிவேலும் சும்மா இருந்துவிட்டான்.வடிவேலின் மேலே இருக்கும் பெரிய 'ஏஜென்ட்' திடிரென்று அவனுக்கு 'போன்' செய்தார். "என்ன வடிவேல்"-"எப்படி இருக்கே'- "பொஞ்சாதி,குழந்தைங்க எல்லோரும் சொகமா?" என்ற சம்பிராதய விசாரிப்புகளுக்கு பின் "வங்க லட்சமி முதல் பரிசு உன் கடைலேர்ந்து விற்பனை ஆகி இருக்கு"-"யாரு 'பார்ட்டி"? என்று கேட்டார். "நம்பர் சொல்ல முடியுமா ஐயா"?-என்று கேட்டான் வடிவேல். ஒவ்வொரு சீட்டின் கிழிக்கப்படாத பகுதியிலும் (counter-foil) வாங்கினவரின் பெயரை எழுதி வைப்பது வடிவேலின் வழக்கம். அதை தவிர ஒரு 'டயரி'யில் ரக வாரியாக சீட்டு எண்- வாங்கினவரின் பெயர், விலாசம், தொலைபேசி எண் எல்லாவற்றையும் குறித்து வைப்பான். 'ஏஜென்ட்' நம்பரை சொன்னதும் டயரியை பிரட்டி பார்த்த வடிவேல் "நம்ம ஹமீத் வாங்கியிருக்காரு அண்ணே" என்றான். "யாரு பழம் விற்பாரே அவரா"- "உடனே தகவல் சொல்லி 'ஒரிஜினல்' சீட்டுடனும், ஒரு புகைப்பட-அத்தாட்சியுடனும் என்னை வந்து பார்க்க சொல்லு" என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்தார்.
உடனே கடையை மூடி விட்டு ஹமீதை பார்க்க விரைந்தான் வடிவேல். "வா-வா வடிவேல் எப்படி இருக்கே"? என்று வரவேற்றார் ஹமீத். "நா நல்லா இருக்கேன் அண்ணே"- "நீங்க ஒரு வாரமா கடை விரிக்கலையே"-அதான் பாத்துட்டு போலான்னு வந்தேன்" என்றான். "இந்த பாளா போன இருமல்-சளி தொல்லை ஒரு வாரமா பாடா படுத்துது"-"எழுந்திருக்கவும் முடியலை"-"ஒக்காரவும் முடயலை"-"இன்னிக்கி கொஞ்சம் தேவலை"-"நாளக்கி வந்துடலாம் என்று நினச்சிண்டு இருந்தீன்"-"அதுக்குள்ளே நீயே வந்திட்ட"-"இந்தா சாயா எடுத்துக்க" என்று உபசரித்தான் ஹமீத். "அண்ணே- உங்களுக்கு ஒரு நல்ல தகவல் சொல்லிட்டு போலாம் என்றுதான் வந்தேன்"- "நீங்க போன வாரம் வாங்கின 'வங்க-லட்சிமியிலே' 10 லட்சம் விழுந்திருக்கு"-"உடனே போய் 'ஏஜண்டை' பாருங்க என்றான் வடிவேல்.
தகவலை முழுவதுமாக உள்வாங்கி ஜீரணிக்க ஹமீத்துக்கு சிறிது நேரம் பிடித்தது. பிறகு நிதானமாக பேச ஆரம்பித்தான்."எல்லாம் சரி வடிவேலு"-"சீட்டு இப்ப எங்க இருக்கு"? என்று கேட்டான். அதற்கு வடிவேல் "என்ன அண்ணே மறந்துட்டீங்களா"? "சீட்டு என்கிட்டேதான் இருக்கு"- "திங்ககிழம பணத்தை குடுத்திட்டு எடுத்துகறேன்னு சொன்னீங்களே" என்று நினைவு மூட்டினான். ஹமீத் "பணம் குடுக்கலேன்னா அப்பாலே அது எப்படி என்னோடுது ஆக முடியும்"? "அது ஒன்னோடதுதான்"-"நீயே ஏஜென்ட் ஐயா கிட்ட போய் பரிசு-தொகையை வாங்கிக்க" என்றான். "எதுவாது பினாத்தீங்க அண்ணே"-"மொதோ வாட்டியா இந்த மாதிரி நடக்குது"-"எம்மாம் வாட்டி சீட்டை வாங்கிட்டு, என்கிட்டே விட்டுட்டு, அப்பாலே வந்து பணத்தை குடுத்திட்டு எடுத்துட்டு போயிருக்கீங்க" என்றவனை அடக்கினான் ஹமீத்."வடிவேல் அப்பெல்லாம் பரிசு விழலே-அதனாலே ரெண்டு பேருக்குமே ஒண்ணும் பெரிசா நஷ்டம் இல்லே"-"இந்த வாட்டி அப்படி இல்லே-"பரிசு விழுந்த போது சீட்டு உங்கிட்டேதான் இருந்திருக்கு"-"அதுனாலே நீ தான் அத்தோட உரிமையாளன்"-"உனக்குதான் பரிசு பணம் கிடைக்கணும்" என்ற உறுதியாக கூறினான்.
இரண்டு நல்ல உள்ளங்களுக்கு இடையே நடந்த அந்த 'தார்மீக' போரில் கடைசியாக வடிவேல்தான் வென்றான். ஹமீத் என்ன சொல்லியும் கேளாமல் அவனுக்கே பரிசு-பணம் கிடைக்க ஏற்பாடு செய்தான் வடிவேல்.வடிவேல் போன்ற மனிதர்கள் இருக்கும் வரை நேர்மை உறங்கி கொண்டு வேணால் இருக்கலாம், இறக்கவில்லை , இறக்காது என்பது உறுதி.

No comments:
Post a Comment