கடைசி அழைப்பு
---------------------------
எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
------------------------------ ---------------------
கடைக்கு சென்று இருந்த கமலா,வீட்டுக்குள் நுழைந்து, தான் வாங்கிய பொருட்களை, பையில் இருந்து எடுத்து வெளியே வைத்தாள். ஒரு ஜோடி 'ஹவாய்' செருப்பு,ஒரு காசி துண்டு, மளிகை சாமான்கள், 'பேட்டரி',தின்பண்டங்கள், என்று எல்லாம் அன்றாட தேவைகள். அறையிலிருந்து வெளிப்பட்ட தியாகு "காசி துண்டா- நானே வாங்கணும் என்று நினைச்சிண்டு இருந்தேன்"-"நல்ல வேளை- இதை நான் எடுத்துக்கறேன் என்றான்"-தனக்கு தலைக்கு துவட்டி கொள்ள என்று வாங்கினது பறி போனதே என்று கமலா கவலைப்படவில்லை. "அட! வீட்டு உபயோகத்திற்கான செருப்பு- என்னுடைய செருப்பு "வார்" அறுந்துவிட்டது"-இதுவும் எனக்கே இருக்கட்டும் என்று கூறினான்.'சலவைக்கல்' தரை சிலீரென்று இருக்கிறதே, வீட்டுக்குள் போட்டுகொண்டு நடக்கலாம் என்று தனக்காக வாங்கினதை கணவன் பறிமுதல் செய்து விட்டானே என்றும் நினைக்கவில்லை.
வாயை திறக்கவில்லை கமலா. கல்யாணமாகி இந்த 40 வருடங்களில் எவ்வளவு முறை இந்த மாதிரி நிகழ்சிகள் நடந்து இருக்கின்றன. "உனக்காக வாங்கி உள்ளாயே"-"இப்போது நான் எடுத்துகொண்டால் நீ என்ன பண்ணுவாய்"-"இதை நான் வைத்துகொண்டு உனக்கு வேறு வாங்கி வருகிறேன்"- "அல்லது அடுத்த முறை எனக்காகவும் ஒன்று வாங்கி வா"- என்றல்லாம் சொல்கிற மனிதனே இல்லை தியாகு. மனைவி கமலாவிடமிருந்து "பிடுங்கி" கொண்டே பழக்கப்பட்டவன். அதே மாதிரி அல்ப விஷயங்களுக்காக சண்டை போடும் ரகமும் இல்லை கமலா. விட்டு கொடுக்கும் சுபாவம் நிறைந்தவள்.
இத்தனைக்கும் வங்கியில் "ஆபீசராக" வேலை பார்த்து ஓய்வு பெற்றவன்தான் தியாகு. சொந்த வீடு- தேவையான வருமானம்-காசு பணத்துக்கு குறைச்சல் இல்லை- இருந்தும் மனிதனின் இயல்பு என்று ஒன்று இருக்கிறதே.மனைவிக்கு சேர வேண்டியதை 'அபகரிப்பது ' அவனது இயல்பாக போய் விட்டது.
எழுந்தவுடன் காபி குடித்து பழக்கப்பட்டவர்கள் இருவரும். இப்படிதான் ஒரு முறை -முந்தின இரவு வைத்து மூடியிருந்த பால் எல்லாம் திரிந்து போய்விட்டது. காலை எழுந்தவுடன் காபிக்கு 'தாளம்" போட வேண்டிய நிலை. எப்படியோ அரை 'தம்ளர்' தேறியது. ஒரு 'தம்ளர்' காபி கலந்து இருவருமாக குடிப்போமே என்று சொல்லவில்லை தியாகு."முதல்லே எனக்கு ஒரு 'கப்' கலந்து குடு"-"பால்காரன் வந்தவுடன் நீ கலந்து குடிச்சுக்கோ" என்று சொன்னவன்.
கார்த்திகை,சங்கராந்தி என்றல்லாம் கமலாவின் சகோதரர்களிடமிருந்து சீர் பணம் வரும்போது கழுகாக காத்திருந்து "உனக்கு என்று தனியா என்ன செலவு-" என்ன வேணுமோ கேளு"- வாங்கித்தர நான் இருக்கிறேன்" என்று பிடுங்கி கொண்டு விடுவான்.
கமலா அன்று காலை எழுந்ததில் இருந்தே 'டல்லாக' இருந்தாள். "ஏங்க- உடம்பு என்னமோ மாதிரி இருக்கு"- "நா கொஞ்சம் படுத்துண்டு இருக்கேன்"- "நீங்க ஒரு சாதமும் ரசமும் வெச்சுண்டு அப்பளத்தை சுட்டுகரேளா"? என்றாள். "அதுக்கென்ன-பண்ணிகறேன்":-"ஆமாம ்,உனக்கு என்ன பண்ணறது உடம்புக்கு"- "டாக்டரிடம் போகலாமா"-"போனாலும் உடனே சரியாக போவதில்லை"-"கை வைத்தியமாக எதாவது செஞ்சுக்கோயேன்" என்று யதார்த்தமாக பதில் அளித்தான் தியாகு. கூடவே "என்னை பாரு- ஒரு நோய் நொடி என்று படுத்திருக்கேனா"-50 வருஷமா காலையில் 30 நிமிடம் "பிரிஸ்ட்-வாக்"செய்கிறேன்"-நேர த்துக்கு,அளவான உணவை சாப்பிடறேன்"- "எல்லாத்துலேயும் ஒரு 'டிசிப்ளின்"வேணும் என்று அறிவுரை வேறு.இத்தனைக்கும் கமலாவும் பெரிய அளவில் நோய் நொடி என்று வந்து படுத்தவள் இல்லை- ஏதோ சாதாரண 'ஜுரம்',தலைவலி என்று அவ்வப்போது வந்ததோடு சரி.
அன்றைய பொழுது எப்படியோ ஓடி விட்டது. கை வசம் இருந்த 'பேராசிடமால்' மாத்திரைகளை விழுங்கினாள் கமலா.ஓரளவு தேவலையாகியது உடம்பு. இரவு உணவை முடித்து விட்டு இருவரும் படுக்க சென்றனர்.ஆனால் மனசை ஏதோ பிடுங்கி கொண்டே இருந்தது.சிறிது கண்ணை மூடி உறங்கலாம் என்றால் தன்னுடைய அம்மா,பாட்டி எல்லோரும் கனவில் வந்து "வாடி கமலா"- "வந்து எங்களோடு சேர்ந்துடு"- என்ற கூப்பிடுவதை போல ஒரு மன பிராந்தி.எருமை மாட்டு வாகனத்தில் யமன் வந்து தன கழுத்தை சுற்றி பாச-கையிற்றை வீசுவது போல சொப்பனம்.ஒருபுறம் சுமங்கலியாக தான் போய் சேர வேண்டும் என்று இருந்தாலும் ,தான் போன பின் தியாகுவின் கதி என்ன ஆகுமோ என்ற கவலை. உறக்கத்திற்கும்,விழிப்பிற்க்கு ம் இடையே அகப்பட்டுக்கொண்டு தவித்தாள் கமலா.அன்று இரவு தூக்கத்தில் தியாகுவின் உயிர் பிரியப்போவதை அவள் அறிந்திருக்கவும் இல்லை-பிரிந்ததை உணரவும் இல்லை .
மறு நாள் வெகு நேரம் ஆகியும் தியாகு எழாததை கண்டு,பயந்து போய், கமலா அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்.கூடவே குடும்ப டாக்டருக்கும் தகவல் தெரிவித்தாள். பக்கத்து வீட்டு மாமா வந்து மூக்கின் அருகில் விரல் வைத்து பார்த்தார். சுவாசம் இருப்பதாக தெரியவில்லை.நாடி துடிப்பதற்கான அறிகுறியும் இல்லை.டாக்டர் வந்து "massive cardiac arrest"(mio-cardiac infarction in medical terms) ஆனதே உயிர் பிரிந்ததற்கான காரணம்;இரவு 2.30 மணி அளவில் இறந்திருக்கலாம் என்றும் கூறினார்.
கமலாவால் துக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை.கண்கள் நீரை பெருக்கிய வண்ணம் இருந்தன."காலமெல்லாம் என்னை வைத்து காப்பாற்றுவதாக சொன்னீர்களே"-"இப்படி என்னை தனியா, தவிக்க விட்டுட்டு போய் விட்டீர்களே"- "நான் இனிமே எப்படி வாழுவது"?- "எனக்குன்னு யாரு இருக்கா"?- "நானும் என்னை மாய்த்து கொள்கிறேன்" என்று கதறினாள். "எனக்குன்னு இருந்ததெல்லாம் தனக்கு,தனக்கு என்று பிடுங்கி கொண்டீர்களே"-"இப்போது எனக்குன்னு வந்த மரண அழைப்பை கூடவா நீங்க பிடுங்கி கொள்ளவேண்டும்" -"என்னை அழைக்க வந்த யமன் என்னை விட்டுட்டுட்டு உங்களை அழைச்சுண்டு போயிட்டானே" என்று அலறினாள்.
அவளது கடைசி வாக்கியங்கள் உண்மையாக இருந்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
---------------------------
எழுதியவர்-சுந்தரேசன் சுரேஷ்
------------------------------
கடைக்கு சென்று இருந்த கமலா,வீட்டுக்குள் நுழைந்து, தான் வாங்கிய பொருட்களை, பையில் இருந்து எடுத்து வெளியே வைத்தாள். ஒரு ஜோடி 'ஹவாய்' செருப்பு,ஒரு காசி துண்டு, மளிகை சாமான்கள், 'பேட்டரி',தின்பண்டங்கள், என்று எல்லாம் அன்றாட தேவைகள். அறையிலிருந்து வெளிப்பட்ட தியாகு "காசி துண்டா- நானே வாங்கணும் என்று நினைச்சிண்டு இருந்தேன்"-"நல்ல வேளை- இதை நான் எடுத்துக்கறேன் என்றான்"-தனக்கு தலைக்கு துவட்டி கொள்ள என்று வாங்கினது பறி போனதே என்று கமலா கவலைப்படவில்லை. "அட! வீட்டு உபயோகத்திற்கான செருப்பு- என்னுடைய செருப்பு "வார்" அறுந்துவிட்டது"-இதுவும் எனக்கே இருக்கட்டும் என்று கூறினான்.'சலவைக்கல்' தரை சிலீரென்று இருக்கிறதே, வீட்டுக்குள் போட்டுகொண்டு நடக்கலாம் என்று தனக்காக வாங்கினதை கணவன் பறிமுதல் செய்து விட்டானே என்றும் நினைக்கவில்லை.
வாயை திறக்கவில்லை கமலா. கல்யாணமாகி இந்த 40 வருடங்களில் எவ்வளவு முறை இந்த மாதிரி நிகழ்சிகள் நடந்து இருக்கின்றன. "உனக்காக வாங்கி உள்ளாயே"-"இப்போது நான் எடுத்துகொண்டால் நீ என்ன பண்ணுவாய்"-"இதை நான் வைத்துகொண்டு உனக்கு வேறு வாங்கி வருகிறேன்"- "அல்லது அடுத்த முறை எனக்காகவும் ஒன்று வாங்கி வா"- என்றல்லாம் சொல்கிற மனிதனே இல்லை தியாகு. மனைவி கமலாவிடமிருந்து "பிடுங்கி" கொண்டே பழக்கப்பட்டவன். அதே மாதிரி அல்ப விஷயங்களுக்காக சண்டை போடும் ரகமும் இல்லை கமலா. விட்டு கொடுக்கும் சுபாவம் நிறைந்தவள்.
இத்தனைக்கும் வங்கியில் "ஆபீசராக" வேலை பார்த்து ஓய்வு பெற்றவன்தான் தியாகு. சொந்த வீடு- தேவையான வருமானம்-காசு பணத்துக்கு குறைச்சல் இல்லை- இருந்தும் மனிதனின் இயல்பு என்று ஒன்று இருக்கிறதே.மனைவிக்கு சேர வேண்டியதை 'அபகரிப்பது ' அவனது இயல்பாக போய் விட்டது.
எழுந்தவுடன் காபி குடித்து பழக்கப்பட்டவர்கள் இருவரும். இப்படிதான் ஒரு முறை -முந்தின இரவு வைத்து மூடியிருந்த பால் எல்லாம் திரிந்து போய்விட்டது. காலை எழுந்தவுடன் காபிக்கு 'தாளம்" போட வேண்டிய நிலை. எப்படியோ அரை 'தம்ளர்' தேறியது. ஒரு 'தம்ளர்' காபி கலந்து இருவருமாக குடிப்போமே என்று சொல்லவில்லை தியாகு."முதல்லே எனக்கு ஒரு 'கப்' கலந்து குடு"-"பால்காரன் வந்தவுடன் நீ கலந்து குடிச்சுக்கோ" என்று சொன்னவன்.
கார்த்திகை,சங்கராந்தி என்றல்லாம் கமலாவின் சகோதரர்களிடமிருந்து சீர் பணம் வரும்போது கழுகாக காத்திருந்து "உனக்கு என்று தனியா என்ன செலவு-" என்ன வேணுமோ கேளு"- வாங்கித்தர நான் இருக்கிறேன்" என்று பிடுங்கி கொண்டு விடுவான்.
கமலா அன்று காலை எழுந்ததில் இருந்தே 'டல்லாக' இருந்தாள். "ஏங்க- உடம்பு என்னமோ மாதிரி இருக்கு"- "நா கொஞ்சம் படுத்துண்டு இருக்கேன்"- "நீங்க ஒரு சாதமும் ரசமும் வெச்சுண்டு அப்பளத்தை சுட்டுகரேளா"? என்றாள். "அதுக்கென்ன-பண்ணிகறேன்":-"ஆமாம
அன்றைய பொழுது எப்படியோ ஓடி விட்டது. கை வசம் இருந்த 'பேராசிடமால்' மாத்திரைகளை விழுங்கினாள் கமலா.ஓரளவு தேவலையாகியது உடம்பு. இரவு உணவை முடித்து விட்டு இருவரும் படுக்க சென்றனர்.ஆனால் மனசை ஏதோ பிடுங்கி கொண்டே இருந்தது.சிறிது கண்ணை மூடி உறங்கலாம் என்றால் தன்னுடைய அம்மா,பாட்டி எல்லோரும் கனவில் வந்து "வாடி கமலா"- "வந்து எங்களோடு சேர்ந்துடு"- என்ற கூப்பிடுவதை போல ஒரு மன பிராந்தி.எருமை மாட்டு வாகனத்தில் யமன் வந்து தன கழுத்தை சுற்றி பாச-கையிற்றை வீசுவது போல சொப்பனம்.ஒருபுறம் சுமங்கலியாக தான் போய் சேர வேண்டும் என்று இருந்தாலும் ,தான் போன பின் தியாகுவின் கதி என்ன ஆகுமோ என்ற கவலை. உறக்கத்திற்கும்,விழிப்பிற்க்கு
மறு நாள் வெகு நேரம் ஆகியும் தியாகு எழாததை கண்டு,பயந்து போய், கமலா அக்கம் பக்கத்தாரிடம் சொன்னாள்.கூடவே குடும்ப டாக்டருக்கும் தகவல் தெரிவித்தாள். பக்கத்து வீட்டு மாமா வந்து மூக்கின் அருகில் விரல் வைத்து பார்த்தார். சுவாசம் இருப்பதாக தெரியவில்லை.நாடி துடிப்பதற்கான அறிகுறியும் இல்லை.டாக்டர் வந்து "massive cardiac arrest"(mio-cardiac infarction in medical terms) ஆனதே உயிர் பிரிந்ததற்கான காரணம்;இரவு 2.30 மணி அளவில் இறந்திருக்கலாம் என்றும் கூறினார்.
கமலாவால் துக்கத்தை கட்டுபடுத்த முடியவில்லை.கண்கள் நீரை பெருக்கிய வண்ணம் இருந்தன."காலமெல்லாம் என்னை வைத்து காப்பாற்றுவதாக சொன்னீர்களே"-"இப்படி என்னை தனியா, தவிக்க விட்டுட்டு போய் விட்டீர்களே"- "நான் இனிமே எப்படி வாழுவது"?- "எனக்குன்னு யாரு இருக்கா"?- "நானும் என்னை மாய்த்து கொள்கிறேன்" என்று கதறினாள். "எனக்குன்னு இருந்ததெல்லாம் தனக்கு,தனக்கு என்று பிடுங்கி கொண்டீர்களே"-"இப்போது எனக்குன்னு வந்த மரண அழைப்பை கூடவா நீங்க பிடுங்கி கொள்ளவேண்டும்" -"என்னை அழைக்க வந்த யமன் என்னை விட்டுட்டுட்டு உங்களை அழைச்சுண்டு போயிட்டானே" என்று அலறினாள்.
அவளது கடைசி வாக்கியங்கள் உண்மையாக இருந்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
No comments:
Post a Comment