மெட்டிi
எழுதியவர்: சுந்தரேசன் சுரேஷ்
கஸ்தூரி ஒரு அரை-குறை. அதாவது படிப்பும் இல்லை, வேறு முற்பட்ட ஜாதியினரின் ஏகபோக உரிமை மற்றும் குல தொழில்களான புரோகிதமோ, சமயலோ கூட தெரியாது. வயது 55-60 இருக்கலாம். கட்டை குட்டையான உருவம். முழங்கால் வரை வேஷ்டி.தோளில் காசி துண்டு. கையில் நிரந்தரமாக ஒரு கித்தான் பை.ஏதோ கொஞ்சம் மந்திரங்களை தெரிந்து வைதிருந்தார்..தங்கள் ஜாதியில் பிறந்து விட்டானே என்று பரிதாபம் கொண்டு புரோகிதர்கள் மற்றும் வாத்தியார்கள் சிரார்தம்,பூணூல்,கல்யாணம்,கிரு ஹபிரவேசம், முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கு அவரையும் ஒரு வாத்தியாராக சொல்லி வந்தனர். வருமானதிற்க்கு வழி செயதனர்.அதே மாதிரி இழவு காரியங்களுக்கும் அவரை சொல்லி வந்தனர். கூட மாட இருந்து ஒத்தாசை செய்து ஏதோ குடுத்ததை வாங்கி போவார்.ஆனால் வாய் பொல்லாதது. கிருஹஸ்தர்களிடமும் நல்ல பெயர் கிடையாது. புரோகிதர்களிடமும் அனுகூலமாக நடக்க மட்டார்.”இவன் என்ன சாஸ்த்ர அத்யயனம் செய்திருக்கான்”? “இவன் யோக்கியதை எனக்கு தெரியாதா”? “ஹோட்டலில் காப்பி ஆத்திகொண்டு இருந்தவன் தானே” என்று சக வாத்தியார்களை ஏக-வசனத்தில் விமர்சனம் செய்வார். “ சாஸ்த்ரத்தில் அப்படி கிடையாது காணும்”. “யவை என்ற தானியத்தை உபயோகிக்கணும்- நீங்க நெல்லை போடரேள்”- ஒரு புண்ணியமும் இல்லை:”இப்படியான விமர்சனங்களை செய்து வீட்டுக்காரர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வார்.
இவரை கட்டி கொண்ட புண்ணியவதி மீனாட்சி. வாய் இல்லா பூச்சி.மடிசார் புடவை.கழுத்தில் வெறும் மஞ்சள் நூல். கையில் ‘ரப்பர்’வளையல்கள். இவர் கொண்டு வந்ததை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்துபவள். கல்யாணம் ஆன நாள் முதல் ஒரு சுகத்தை காணாதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டவள் இல்லை. கேட்டு இருந்தாலும் கிடைதிருக்காது என்பது வேறு விஷயம். திருமணம் ஆன புதிசில் மீனாட்சி “ஏன்னா- நீங்களும் ‘கிராப்’ வைத்து கொண்டு உத்தியோகத்திற்க்கு போய் பாருங்களேன்” என்று கஸ்தூரியிடம் சொல்லி இருக்கிறாள். பதிலுக்கு “போடி அசடு- நான் பள்ளிகூட நிழலில் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை- எனக்கு எவன் வேலை கொடுப்பான்?-நாங்க தீகஷிதர் பரம்பரை- கை கட்டி வேலை பார்க முடியுமா? என்று உண்மையும் வரட்டு-ஜம்பமும் கலந்த ஒரு பதிலை கூறி விடுவார். அதே மாதிரி ஒரு இரு முறை புடவை,நகைகளுக்ககாக கேட்ட போது “நீ இந்த நூல் புடவையில் எவவளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா”? பட்டு புடவை அணிவது சாஸ்திரத்திற்கு விரோதமானது” பட்டு பூச்சிகளை கொல்வது மஹா பாவம்” “பட்டெல்லாம் பணக்காரர்களுக்கு இருக்கட்டும்” என்று என்னமோ சாஸ்த்ரதை கரைத்து குடித்தவர் மாதிரி சவடாலாக கூறி விடுவார். “பெண்க்ளுக்கு பொன நகை எதற்கு?புன்னகை போறுமே ! என்று “இலக்கியதத்னமாக” கூறி விடுவார்.மீனாட்சிக்கு என்ன தெரியாதா இந்த “வக்கிலாத மனுஷனை” பற்றி. அப்படியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பியதால் “பேச்சில் உங்களை ஜெயிக்க முடியாது” என்று விட்டு கொடுடத்து விடுவாள்.கஸ்தூரி இப்படி சொன்னாலும்- தங்கம் விற்கும் விலையில் தன்னால் நெருங்க கூட முடியாது- ஆனால் எப்படியாவது ஒரு வெள்ளி கொலுசோ, மெட்டியோ வாங்கி மீனட்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளத்து அவா. ஒரு முறை சொல்லியும் இருக்கிறார் “மீனாட்சி- பார்ர்த்து கொண்டே இரு- நான் ஒரு நாள் மெட்டி வாங்கி வரத்தான் போகிறேன்- நீயும் அணியத்தான் போகிறாய்” என்று
.
குழந்தை பாகியமும் கடவுளால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதை நினைத்து மீனாட்சி கண் கலங்கி இருக்கிறாள். கஸ்தூரி அவளை தேற்றுவார்”குழந்தை இல்லேன்னா என்னா- உனக்கு நான் குழந்தை- எனக்கு நீ குழந்தை- சாகிற பரியந்தம் இந்த பந்தம் போரும்” என்பார். ஆதர்ச தம்பதிகளாக இல்லாவிடினும் அன்னியோன்ய தம்பதிகளாக காலத்தை கடத்தி கொண்டு இருந்தனர்.
வயது ஆனதால் சமீப காலமாக இருவருக்குமே மாற்றி மாற்றி உடம்பு படுத்தி கொண்டே இருந்தது. முட்டு வலி,முதுகு பிடிப்பு இதெல்லாம் மீனாட்சியின் பிரச்சனைகள். போறாது என்று சமீபத்தில் இருமல்,சளி,கபம் தொந்தரவு வேறே. கை வைத்தியமாக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டாள்- சுக்கு கஷாயம்,பனங்கல்கண்டு சாப்பிடுவது.கடுக்காயை வாயில் அடக்கி கொள்வது என்று- ஒன்றுக்கும் கட்டுப்படுவதாக இல்லை. போன வாரம் இருமல் அதிகமாகி,எச்சில் துப்பியபோது ரத்தம் வெளி வந்தது. மீனாட்சி அதை பற்றி கஸ்துரியிடம் மூச்சு விடவில்லை. “தாம்-தூம்” என்று குதிப்பார். உடனே “டாக்டரிடம்”போக்லாம்- மருத்துவமனையில் சேர்ரக்கலாம்” என்பார் என்ற பயத்தில்.
வாயு தொல்லை,ரத்த கொதிப்பு,கண் பார்வை குறைவு இதெல்லாம் கஸ்தூரிக்கு சொந்தம்.கூடவே பணக்கரர்களின் வியாதியான் “ப்ள்ட் சுகர்” தனக்கும் வந்திருப்பதில் கஸ்தூரிக்கு மகிழ்ச்சியே. பண பற்றாக்குறையினால் ஒரே சமயத்தில் இருவரும் மருத்தவரிடம் செல்ல முடியாத நிலை.”நீங்க முதலில் கண்ணை “டெஸ்ட்”செய்து கண்ணாடி போட்டு கொள்ளுங்கள்” என்று மீனாட்சி கூருவாள். அவளை அடக்கி விட்டு “ எனக்கு தெரியும் எதை எப்ப பண்ணனும் என்று” “மொதல்லே நீ “கம்ப்ளீட்” (தனக்கு இங்க்லிஷ் தெரியும் என்ற பெருமை) “செக்-அப்” செய்துக்கணும். அப்புறம் தான் மததது எல்லாம் என்று திட்ட-வட்டமாக கூறி விடுவார். கூறி விட்டாரே ஒழிய பணத்துக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.கூறியதற்க்கு காரணமும் உண்டு. போன் தடவை “டாக்டரிடம்” சென்று இருந்தபோது “மாமி “வெயிட்” கணிசமாக குறைந்துள்ளது”. “நெஞ்சில் கபம் கட்டியுள்ளது”- மூக்சு விட சிரமபடுகிறாள்”. ஒரு “ஃபுல்” பாடி-செக்-அப்” செய்வது நல்லது என்று சொல்லி இருந்தார்.
பத்து நாட்களாக கஸ்தூரிக்கு வருமானம் இல்லை. அன்று ஒரு சோதகும்ப சிரார்தம்.வாத்தியார் பெரிய மனது பண்ணி கஸ்தூரியை ஒரு பிராமிணனாக சொல்லி இருந்தார். வழக்கம் போல அதிலேயும் தகறாரு-நக்கல்- “நான் பிராமிணனாக கிடைக்க இவா குடுத்து வச்சிருக்கணும் ஓய்”. மொறயா எனக்கு தான் வெள்ளிலே தீர்த-பாத்திரம்,பவித்ரம்,தர்ஜி னி (சம்ஸ்க்ருத பாஷா ஞானத்தை வெளிப்படுதுகிற பெருமை) எலாம் கொடுக்கணும்”.”ஆத்து மாப்பிள்ளையை சொல்லி அவருக்கே குடுத்துடுவா” “இவாளை எல்லாம் ஜாதி பிரஷ்டம் பண்ணனும்” என்று ஒரே கூப்பாடு. பெரிய வாத்தியாருக்கு சலிப்பு. “இதோ பாரு கஸ்தூரி- உன் யோக்யதைக்கு இதுவே ஜாஸ்த்தி. குடுத்ததை வாங்கி கொண்டு போவதாக இருந்தால் வா” “இல்லாவிட்டால் ஆளை விடு” என்றார். வருகிற லஷ்மியை வாண்டாம் என்பது முறை ஆகாது என்று ஒப்புகொண்டார் கஸ்தூரி. உண்மையில் அவர் எண்ண்ம் வேறு. கஷ்டப்பட்டு,மீனாட்சிக்கு தெரியாமல் அவர் ரூபாய் ஆயிரம் சேர்த்து வைத்து இருந்தார் இன்று 500-600 ரூபாய் வந்தால் மீனாட்சிக்கு ஒரு வெள்ளி மெட்டி வாங்கி கொடுத்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்து இருந்தார்.
காலை எழுந்ததில் இருந்தே மீனாட்சி உற்சாகமாக் இல்லை. “ஏன்னா- இன்னிக்கு ஏதாவது கார்யம் இருக்கா” என்று கேட்டாள். “ஆமாம்- ஒரு சோதகும்பம் இருக்கே- பேட்டு வந்துடரேன்” என்றாள். “உடம்பே முடியலே”என்றாள். “சொன்னா கோவிச்சுக்க மட்டேளே-சுமங்கலி பெண்கள் காலில் மெட்டி போடாமல் இருக்க கூடாது. நா ஒரு சொப்பு வளயத்தை எடுத்து உருட்டா போட்டுண்டு இருககேன். அதை மாத்தணும் என்றாள்.”ஆண்டி பண்டாரத்துக்கு அழறது-லிங்கம் பஞ்சாமிருதத்துக்கு அழறது- அந்த கதையா இருக்கே என்று நையாண்டி செய்தார். “நா பார்லி கஞ்சி போட்டு கொடுக்கறேன்- குடிச்சுட்டு படுத்துண்டு“ரெஸ்ட்” எடுத்துக்கோ.”நான் போனேன் வந்தேன் என்று பேட்டு வந்துடரேன்” என்று கூறி புறப்பட்டு சென்றா.
வந்து விட்டாரே ஒழிய கஸ்தூரிக்கு மனசு வீட்டிலேயே இருந்தது.பெரிய வாத்தியாரிடம் “ஆம்படையாளுக்கு உடம்புக்கு முடியலே” “தனியா விட்டுட்டு வந்திருக்கேன்” “கொஞ்சம் சீக்கிரம் முடித்தால் தேவலை” என்றார்.வாத்தியரும் “ஜெட்” வேகத்தில் ஓடினார். காரியம் முடிந்த உடனே கஸ்தூரி கிளம்பி விட்டார். அவர் எதிர் பார்ததற்கு மேலாகவே வருமானம் வந்து இருந்தது. இன்று எப்படியும் மீனாட்சிக்கு மெட்டி வாங்கி கொண்டே போக் வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர் “பட்ஜெட்டிற்க்குள்” கிடைத்தும் விட்டது. சந்தோஷதோடு வீடு நோக்கி நடந்தார்.
அவர் வீட்டிர்க்கு இரண்டு தெருக்கள் தள்ளி வந்து கொண்டு இருக்கும்போது ஒரு “அசிஸ்டன்ட்” வாத்தியார் “மோட்டார்-பைக்கில்” அவர் அருகே வந்து திடீரென்று “ப்ரேக்”போட்டு நின்றார்.”பெரிய வாத்தியர்ர் அனுப்பினார்”.”மாமிக்கு உடம்பு சரி இல்லையாம். உங்களை உடனே ஆத்த்துக்கு வர சொன்னார்””பைக்கில் ஏறுங்கோ” என்றார்.கஸ்தூரிக்கு அடி-வயிரு கலங்கியது. ஒன்றும் ஆகாது என்று தனக்குதானே தேற்றி கொண்டார்.
வீட்டிர்குள் நுழையும் போதே காஸ்தூரிக்கு புரிந்து விட்டது. மீனாட்சியை “தெற்கு பார்த்து” கிடத்தி இருந்தார்கள். கால் மற்றும் கை கட்டை விரல்கள் கட்டப்பட்டிருந்தன. தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கபட்டு இருந்தது.பெரிய வாத்தியார், மற்றும் அண்டை அசலார் எல்லோரும் மௌனமாக் இருந்தனர். பெரிய வாத்தியார் கஸ்தூரியை நெருங்கி ஆதுரமாக தோளில் கை வைத்து “எல்லாம் தலைஎழுத்து- அவன் எழுதின படி நடக்கிற்து- மனசை திடப்படுத்திக்கோ- போறவா போயாச்சு- காரியத்தை பாக்கணும்” என்றார்.
ஒன்றும் பதில் கூறாத கஸ்தூரி தன் “கித்தான்” பையை திறந்து அன்றுதான் வாங்கி இருந்த மெட்டியை எடுத்து. மீனாட்சியின் சடலத்துக்கு அருகே அமர்ந்தார். காலில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு,. மெட்டியாக மாறி இருந்த செப்பு வளயத்தை உருவிவிட்டு –புதிய வெள்ளி மெட்டியை அணிவித்தார். பிரந்தது முதல் –வாழக்கையே ஒரு முள் படுக்கயாக இருந்த -தானும் சுகப்படாத தன் மனைவியயும் சுகமாக இருக்க விடாத கஸ்தூரி என்ற அந்த ஜீவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
எழுதியவர்: சுந்தரேசன் சுரேஷ்
கஸ்தூரி ஒரு அரை-குறை. அதாவது படிப்பும் இல்லை, வேறு முற்பட்ட ஜாதியினரின் ஏகபோக உரிமை மற்றும் குல தொழில்களான புரோகிதமோ, சமயலோ கூட தெரியாது. வயது 55-60 இருக்கலாம். கட்டை குட்டையான உருவம். முழங்கால் வரை வேஷ்டி.தோளில் காசி துண்டு. கையில் நிரந்தரமாக ஒரு கித்தான் பை.ஏதோ கொஞ்சம் மந்திரங்களை தெரிந்து வைதிருந்தார்..தங்கள் ஜாதியில் பிறந்து விட்டானே என்று பரிதாபம் கொண்டு புரோகிதர்கள் மற்றும் வாத்தியார்கள் சிரார்தம்,பூணூல்,கல்யாணம்,கிரு
இவரை கட்டி கொண்ட புண்ணியவதி மீனாட்சி. வாய் இல்லா பூச்சி.மடிசார் புடவை.கழுத்தில் வெறும் மஞ்சள் நூல். கையில் ‘ரப்பர்’வளையல்கள். இவர் கொண்டு வந்ததை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்துபவள். கல்யாணம் ஆன நாள் முதல் ஒரு சுகத்தை காணாதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டவள் இல்லை. கேட்டு இருந்தாலும் கிடைதிருக்காது என்பது வேறு விஷயம். திருமணம் ஆன புதிசில் மீனாட்சி “ஏன்னா- நீங்களும் ‘கிராப்’ வைத்து கொண்டு உத்தியோகத்திற்க்கு போய் பாருங்களேன்” என்று கஸ்தூரியிடம் சொல்லி இருக்கிறாள். பதிலுக்கு “போடி அசடு- நான் பள்ளிகூட நிழலில் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை- எனக்கு எவன் வேலை கொடுப்பான்?-நாங்க தீகஷிதர் பரம்பரை- கை கட்டி வேலை பார்க முடியுமா? என்று உண்மையும் வரட்டு-ஜம்பமும் கலந்த ஒரு பதிலை கூறி விடுவார். அதே மாதிரி ஒரு இரு முறை புடவை,நகைகளுக்ககாக கேட்ட போது “நீ இந்த நூல் புடவையில் எவவளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா”? பட்டு புடவை அணிவது சாஸ்திரத்திற்கு விரோதமானது” பட்டு பூச்சிகளை கொல்வது மஹா பாவம்” “பட்டெல்லாம் பணக்காரர்களுக்கு இருக்கட்டும்” என்று என்னமோ சாஸ்த்ரதை கரைத்து குடித்தவர் மாதிரி சவடாலாக கூறி விடுவார். “பெண்க்ளுக்கு பொன நகை எதற்கு?புன்னகை போறுமே ! என்று “இலக்கியதத்னமாக” கூறி விடுவார்.மீனாட்சிக்கு என்ன தெரியாதா இந்த “வக்கிலாத மனுஷனை” பற்றி. அப்படியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பியதால் “பேச்சில் உங்களை ஜெயிக்க முடியாது” என்று விட்டு கொடுடத்து விடுவாள்.கஸ்தூரி இப்படி சொன்னாலும்- தங்கம் விற்கும் விலையில் தன்னால் நெருங்க கூட முடியாது- ஆனால் எப்படியாவது ஒரு வெள்ளி கொலுசோ, மெட்டியோ வாங்கி மீனட்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளத்து அவா. ஒரு முறை சொல்லியும் இருக்கிறார் “மீனாட்சி- பார்ர்த்து கொண்டே இரு- நான் ஒரு நாள் மெட்டி வாங்கி வரத்தான் போகிறேன்- நீயும் அணியத்தான் போகிறாய்” என்று
.
குழந்தை பாகியமும் கடவுளால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதை நினைத்து மீனாட்சி கண் கலங்கி இருக்கிறாள். கஸ்தூரி அவளை தேற்றுவார்”குழந்தை இல்லேன்னா என்னா- உனக்கு நான் குழந்தை- எனக்கு நீ குழந்தை- சாகிற பரியந்தம் இந்த பந்தம் போரும்” என்பார். ஆதர்ச தம்பதிகளாக இல்லாவிடினும் அன்னியோன்ய தம்பதிகளாக காலத்தை கடத்தி கொண்டு இருந்தனர்.
வயது ஆனதால் சமீப காலமாக இருவருக்குமே மாற்றி மாற்றி உடம்பு படுத்தி கொண்டே இருந்தது. முட்டு வலி,முதுகு பிடிப்பு இதெல்லாம் மீனாட்சியின் பிரச்சனைகள். போறாது என்று சமீபத்தில் இருமல்,சளி,கபம் தொந்தரவு வேறே. கை வைத்தியமாக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டாள்- சுக்கு கஷாயம்,பனங்கல்கண்டு சாப்பிடுவது.கடுக்காயை வாயில் அடக்கி கொள்வது என்று- ஒன்றுக்கும் கட்டுப்படுவதாக இல்லை. போன வாரம் இருமல் அதிகமாகி,எச்சில் துப்பியபோது ரத்தம் வெளி வந்தது. மீனாட்சி அதை பற்றி கஸ்துரியிடம் மூச்சு விடவில்லை. “தாம்-தூம்” என்று குதிப்பார். உடனே “டாக்டரிடம்”போக்லாம்- மருத்துவமனையில் சேர்ரக்கலாம்” என்பார் என்ற பயத்தில்.
வாயு தொல்லை,ரத்த கொதிப்பு,கண் பார்வை குறைவு இதெல்லாம் கஸ்தூரிக்கு சொந்தம்.கூடவே பணக்கரர்களின் வியாதியான் “ப்ள்ட் சுகர்” தனக்கும் வந்திருப்பதில் கஸ்தூரிக்கு மகிழ்ச்சியே. பண பற்றாக்குறையினால் ஒரே சமயத்தில் இருவரும் மருத்தவரிடம் செல்ல முடியாத நிலை.”நீங்க முதலில் கண்ணை “டெஸ்ட்”செய்து கண்ணாடி போட்டு கொள்ளுங்கள்” என்று மீனாட்சி கூருவாள். அவளை அடக்கி விட்டு “ எனக்கு தெரியும் எதை எப்ப பண்ணனும் என்று” “மொதல்லே நீ “கம்ப்ளீட்” (தனக்கு இங்க்லிஷ் தெரியும் என்ற பெருமை) “செக்-அப்” செய்துக்கணும். அப்புறம் தான் மததது எல்லாம் என்று திட்ட-வட்டமாக கூறி விடுவார். கூறி விட்டாரே ஒழிய பணத்துக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.கூறியதற்க்கு காரணமும் உண்டு. போன் தடவை “டாக்டரிடம்” சென்று இருந்தபோது “மாமி “வெயிட்” கணிசமாக குறைந்துள்ளது”. “நெஞ்சில் கபம் கட்டியுள்ளது”- மூக்சு விட சிரமபடுகிறாள்”. ஒரு “ஃபுல்” பாடி-செக்-அப்” செய்வது நல்லது என்று சொல்லி இருந்தார்.
பத்து நாட்களாக கஸ்தூரிக்கு வருமானம் இல்லை. அன்று ஒரு சோதகும்ப சிரார்தம்.வாத்தியார் பெரிய மனது பண்ணி கஸ்தூரியை ஒரு பிராமிணனாக சொல்லி இருந்தார். வழக்கம் போல அதிலேயும் தகறாரு-நக்கல்- “நான் பிராமிணனாக கிடைக்க இவா குடுத்து வச்சிருக்கணும் ஓய்”. மொறயா எனக்கு தான் வெள்ளிலே தீர்த-பாத்திரம்,பவித்ரம்,தர்ஜி
காலை எழுந்ததில் இருந்தே மீனாட்சி உற்சாகமாக் இல்லை. “ஏன்னா- இன்னிக்கு ஏதாவது கார்யம் இருக்கா” என்று கேட்டாள். “ஆமாம்- ஒரு சோதகும்பம் இருக்கே- பேட்டு வந்துடரேன்” என்றாள். “உடம்பே முடியலே”என்றாள். “சொன்னா கோவிச்சுக்க மட்டேளே-சுமங்கலி பெண்கள் காலில் மெட்டி போடாமல் இருக்க கூடாது. நா ஒரு சொப்பு வளயத்தை எடுத்து உருட்டா போட்டுண்டு இருககேன். அதை மாத்தணும் என்றாள்.”ஆண்டி பண்டாரத்துக்கு அழறது-லிங்கம் பஞ்சாமிருதத்துக்கு அழறது- அந்த கதையா இருக்கே என்று நையாண்டி செய்தார். “நா பார்லி கஞ்சி போட்டு கொடுக்கறேன்- குடிச்சுட்டு படுத்துண்டு“ரெஸ்ட்” எடுத்துக்கோ.”நான் போனேன் வந்தேன் என்று பேட்டு வந்துடரேன்” என்று கூறி புறப்பட்டு சென்றா.
வந்து விட்டாரே ஒழிய கஸ்தூரிக்கு மனசு வீட்டிலேயே இருந்தது.பெரிய வாத்தியாரிடம் “ஆம்படையாளுக்கு உடம்புக்கு முடியலே” “தனியா விட்டுட்டு வந்திருக்கேன்” “கொஞ்சம் சீக்கிரம் முடித்தால் தேவலை” என்றார்.வாத்தியரும் “ஜெட்” வேகத்தில் ஓடினார். காரியம் முடிந்த உடனே கஸ்தூரி கிளம்பி விட்டார். அவர் எதிர் பார்ததற்கு மேலாகவே வருமானம் வந்து இருந்தது. இன்று எப்படியும் மீனாட்சிக்கு மெட்டி வாங்கி கொண்டே போக் வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர் “பட்ஜெட்டிற்க்குள்” கிடைத்தும் விட்டது. சந்தோஷதோடு வீடு நோக்கி நடந்தார்.
அவர் வீட்டிர்க்கு இரண்டு தெருக்கள் தள்ளி வந்து கொண்டு இருக்கும்போது ஒரு “அசிஸ்டன்ட்” வாத்தியார் “மோட்டார்-பைக்கில்” அவர் அருகே வந்து திடீரென்று “ப்ரேக்”போட்டு நின்றார்.”பெரிய வாத்தியர்ர் அனுப்பினார்”.”மாமிக்கு உடம்பு சரி இல்லையாம். உங்களை உடனே ஆத்த்துக்கு வர சொன்னார்””பைக்கில் ஏறுங்கோ” என்றார்.கஸ்தூரிக்கு அடி-வயிரு கலங்கியது. ஒன்றும் ஆகாது என்று தனக்குதானே தேற்றி கொண்டார்.
வீட்டிர்குள் நுழையும் போதே காஸ்தூரிக்கு புரிந்து விட்டது. மீனாட்சியை “தெற்கு பார்த்து” கிடத்தி இருந்தார்கள். கால் மற்றும் கை கட்டை விரல்கள் கட்டப்பட்டிருந்தன. தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கபட்டு இருந்தது.பெரிய வாத்தியார், மற்றும் அண்டை அசலார் எல்லோரும் மௌனமாக் இருந்தனர். பெரிய வாத்தியார் கஸ்தூரியை நெருங்கி ஆதுரமாக தோளில் கை வைத்து “எல்லாம் தலைஎழுத்து- அவன் எழுதின படி நடக்கிற்து- மனசை திடப்படுத்திக்கோ- போறவா போயாச்சு- காரியத்தை பாக்கணும்” என்றார்.
ஒன்றும் பதில் கூறாத கஸ்தூரி தன் “கித்தான்” பையை திறந்து அன்றுதான் வாங்கி இருந்த மெட்டியை எடுத்து. மீனாட்சியின் சடலத்துக்கு அருகே அமர்ந்தார். காலில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு,. மெட்டியாக மாறி இருந்த செப்பு வளயத்தை உருவிவிட்டு –புதிய வெள்ளி மெட்டியை அணிவித்தார். பிரந்தது முதல் –வாழக்கையே ஒரு முள் படுக்கயாக இருந்த -தானும் சுகப்படாத தன் மனைவியயும் சுகமாக இருக்க விடாத கஸ்தூரி என்ற அந்த ஜீவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
No comments:
Post a Comment