உரு(வம்) மாற்றம்
-----------------------------
எழுதியது:சுந்தரேசன் சுரேஷ்
=============================
செய்தி கேட்டதில் இருந்து சங்கரன்-பார்வதி தம்பதியினரின் உலகமே இருண்டுவிட்டது.தலையில் இடி இறங்கினது போன்ற உணர்வு.அவர்களால் துக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை. saசங்கரன் ஆறடிக்கு குறையாத உயரம்.பரங்கிபழ நிறம். வெளேரென்ற வேட்டி. கை வைத்த பனியன்.எப்பொதும் சுத்தமாக,சுறுசுறுப்பாக இருப்பவர் நேற்று இரவு,அமரிக்காவில்,அயோவா மாகாணத்தில், இருந்த அவர்களின் மூன்றாவது மகன் ராஜேஷ்,இறந்து விட்டதாக செய்தி வந்தது. 12 நேர மணி நேரத்துகுள் நடை-பிணமாக மாறி விட்டார். செய்தியின் தாக்கத்தினால் இருவரும் புத்தி பேதலித்தவர்கள் போன்று அப்படியே உறைந்து போய் விட்டனர். பக்கத்து வீட்டு 8-வயது பிரியா தினம் பள்ளிகூடம் போவதற்கு முன் ‘போய்ட்டு வரேன் தாத்தா, வரேன் பாட்டி என்று சொல்லி விட்டு போகும். அன்று காலை உள்ளே நுழைந்த குழந்தை ஒன்றும் புரியாமல் தன் பாட்டுக்கு சொல்லிகொண்டு விட்டு ‘ஸ்கூலுக்கு’ போய் விட்டது.
முந்தா நாள் கடைசியாக ராஜேஷ் இவர்களோடு பேசினான்.”அப்பா-தவறாமல் ‘ப்ரஷர்’ ‘செக்’ செய்து கொள்ளுங்க”-“அம்மா உன் கையால் சமைத்த மிளகு குழம்பும் ஜீரா ரசமும் சாப்பிட்ணும் போல் இருக்கு”-என்று சொன்னவன் “அம்மா ஒங்கிட்ட் ஒரு விஷயம் சொல்லணும் எனறு இழுத்தவன் “சரி அடுத்த தடவை சொல்கிறேன்”என்று பேச்சை முடித்து கொண்டு விட்டான்.
"நமக்கு கொள்ளி போட ஒருவனாவது இருக்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தோம்"-"கடவுள் அந்த நினைப்பிலும் மண்ணை வாரி போட்டு விட்டார்"-என்றார் சங்கரன் கம்மிய குரலில்.. "அடி வயிற்றில் நெருப்பை கட்டினது மாதிரி இருக்கு"-"பெத்த வயிறு பத்தி எரிகிறது"-“தாங்கவே முடியவில்லை என்று கதறினாள் பார்வதி.
புத்திர சோகம் இவர்களுக்கு ஒன்று புதியது இல்லை. முதல் மகன் ரமேஷ் மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் உடையவன்.மருத்தவ படிப்பு படித்துகொண்டு இருந்த அவன், ஒரு தரம் நண்பர்களோடு "கஞ்சன்ஜங்கா" சிகரத்தை ஏறும் முயற்சியில், பனி-சரிவு ஏற்பட்டு ,உயிர் இழந்தவன்.
இரண்டாவது மகன் சுரேஷ் சென்னை,கிண்டி பொறியில் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தான். ஒரு புத்தாண்டு தினத்தன்று கடலில் நீச்சல் அடிக்க சென்றவன் திரும்பி வரவே இல்லை.
மூன்றாவது மகன் ராஜேஷ் 'சார்டர்ட் அக்கவுண்டன்சி' படித்து முடித்து விட்டு, அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டு இருந்தான். திருமணம் ஆகவில்லை. முன் தினம் இரவு 'மாலுக்கு' பொருட்கள் வாங்க சென்ற இடத்தில், ஒரு கருப்பு இன இளைஞன், போதை மருந்தின் தாக்கத்தில், சராமாரியாக துப்பாகியால் குண்டு மழை பொழிய, அதில் 6 பேர் பலி ஆகி இருந்தனர். ராஜேஷும் அதில் ஒருவன்.அக்கம் பக்கத்துக்கு மனிதர்களும்,அவனது அலுவலக நண்பர்களும் செய்தி கேள்விப்பட்டு,'மாலுக்கு' விரைந்து சென்று,ராஜேஷை மருத்தவ மனைக்கு எடுத்து சென்றும் பயனளிக்காமல் இறந்துவிட்டான்.அவனது “ஐஃபோன்’ கண்டெடுக்கபட்டு கடைசி ‘கால்’ சென்ற் ‘நம்பர்’ ‘ஜென்னி’ என்ற பெண்ணுடையது என்பது வரையிலும் தெரிந்திருந்தது.
விஷயம் வெளியாகி உறவினர்கள் எல்லோரும் சங்கரனின் வீட்டில் கூட ஆரம்பித்தனர். ராஜேஷின் நண்பர்களை தொடர்பு கொண்டு, இந்திய தூதகரத்துடனும், வெளி உறவு அமைச்சகத்துடனும் பேசி,உடலை இந்தியாவிற்கு வர வழைக்க ஏற்பாடு செய்தனர்.
அப்போது பார்த்து சமய-சந்தர்பம் தெரியாது,ஸ்கூலில் இருந்து திரும்பிய பக்கத்து வீட்டு பிரியா சங்கரனின் வீட்டிற்குள் நுழைந்தது.கிழவர்-கிழவிக்கு பிரியா தான் ஒரே தோழி. பள்ளிகூட நேரம் தவிர பெரும்பாலான நேரத்தை இவர்களுடன்தான் செலவழிப்பாள்.”தாத்தா என்ன ‘மூட் அவுட்டா”?- “காலையிலே என்னொடு சரியா பேசலை”- “இப்போ என்ன ஒரே கூட்டமா இருக்கு"? என்று முகம் சுளித்தாள்.பிறகு "தாத்தா-இன்னிக்கு 'ஸ்கூல்ல' ஒரு 'டிராமா' போட்டம்"-"அதிலே நா தான் ஷ்ரவன் குமார்"- "ஷ்ரவன் குமார் யாரு தெரியுமா?"-"கண் தெரியாத தன் அப்பா-அம்மாவை, கூடையில் வெச்சு தூக்கிண்டு போனவன்"-அப்படி போகும்போது அவனை 'தசரத்'மகாராஜா அம்பு போட்டு கொன்னுட்டார்"-"எங்க அப்பா அம்மாவை காப்பாத்துங்க என்று சொல்லி விட்டு அவன் இறந்துட்டான் தெரியுமா"-"அந்த 'பார்ட்' தான் நான் பண்ணினேன்"-“ஸூப்பரா நடிச்சேன்”-“நடிச்சு காமிகட்டுமா”? என்று குழந்தைகளின் இயல்புக்கு ஏற்றபடி மூச்சு விடாமல் பேசியது.
கூடி இருந்தவர்களுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது" குழந்தை தொடர்ந்து " ஏன் தாத்தா பேச மாட்டீங்கறீங்க"- "உங்களுக்கு இந்த கதை தெரியுமா தெரியாதா"-"பாட்டி நீங்க ஏன் அழறீங்க"? "தாத்தா திட்டினாரா"? என்று கேட்டு கொண்டு இருந்தது.
ஒருவாறாக பிரியாவின் தாய் அவளை தனியாக அழைத்து போய், "இப்ப தாத்தா-பாட்டிக்கு உடம்பு சரியா இல்லை"- "ரெஸ்ட்" எடுக்கட்டும் அவங்க"- "நாம வீட்டுக்கு போய்விட்டு அப்புறமா வரலாம்" என்று கூட்டி சென்றாள். கூடி இருந்தவர்களும் மெல்ல மெல்ல கலைந்து சென்றனர். இரண்டு நாட்களில் ராஜேஷின் உடல் வந்து இறங்கியது. ஈம சடங்குகளும் செய்து முடித்தாகி விட்டது.
சங்கரன்-பார்வதி இருவருமே நடை-பிணமாக மாறி இருந்தார்கள். ஏதோ பெயருக்கு குளிப்பது,சாப்பிடுவது என்று நடந்து கொண்டு இருந்தது.சம்பவம் நடந்து 20-25 நாட்கள் கழித்து, ஒரு மத்தியான பொழுதில், இருவரும் மோட்டு-வளையை பார்த்தபடி இருக்கையில், கதவு தட்டப்பட்டது. சங்கரன் சென்று திறந்தார். ஒரு 20-22 வயது மதிக்கத்தக்க அமெரிக்க பெண் நின்றுகொண்டு இருந்தாள்.வெள்ளை புடவை கட்டி பாழும் நெற்றியுடன் இருந்தாள் அவள். உள்ளே நுழைந்தவள் கிழவஐ-கிழவி காலில் சாஷ்டாங்கமாக் விழுந்து வணங்கினாள். பிறகு "என் பெயர் ஜென்னி"- “நான் அயோவா பல்கலைகழகத்தில் முதுகலை பொருளாதாரம் படித்து கொண்டு இருக்கிறேன்”-"எனக்கும் உங்கள் மகன் ராஜேஷுக்கும் ஒரு வருடமாக பழக்கம்"- "நாங்கள் இருவரும் உங்களை சந்தித்து, உங்களுடைய சம்மதத்துடன், திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம்" -"அதற்குள் இப்படி ஆகிவிட்டது" என்றவள் தன்னை கட்டுபடுத்திகொள்ள முடியாமல் விசும்ப தொடங்கினாள்.பிறகு தன்னை சுதாரித்துகொண்டு "நான் இனிமேல் திருமணம் செய்துகொள்வதாக இல்லை"-"காலமெல்லாம் உங்களுக்கு பணி-விடை புரிந்து கொண்டு உங்கள் காலடி நிழலிலேயே இருக்க பிரிய படுகிறேன்"- "நீங்களும் மனமுவந்து இதற்கு ஒப்பு கொள்ள வேண்டும்"- "அப்போதுதான் என் கணவரின் ஆத்மா சாந்தி அடையும்" என்றாள். சங்கரனுக்கும் சரி, பார்வதிக்கும் சரி,என்ன பதில் சொல்வது, எப்படி நடந்து கொள்வது என்றே புரியவில்லை. சிறிது இடைவெளிக்கு பின்பு ஜென்னியே தொடர்ந்தால் "இந்த என்னுடைய நோக்கத்தில் உங்கள் மகன் என்னை தனியாக விடவில்லை"- என்றவள் வெட்கத்தால் கன்னம் சிவக்க, தலை குனிந்த வண்ணம் "உங்கள் குல வாரிசு என் வயிற்றில் வளருகிறது"-என்றாள்.
மகன் இறந்ததற்காக வருந்துவதா,அவன் இறந்தும் குலம் தழைக்க வழி பிறந்ததை நினைத்து சந்தோஷப்படுவதா என்று புரியவில்லை சங்கரன்-பார்வதி தம்பதியருக்கு.

No comments:
Post a Comment