Wednesday, February 19, 2014

நீ இல்லாமல் நான் இல்லை
----------------------------------------
எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ்
---------------------------------------------
கைலாசம்(வயது 75) புஷ்பா(வயது 68) தம்பதியர் மிகவும் அன்னியோன்னியமானவர்கள்.இவள் தண்ணி குடித்தால் அவருக்கு தாகம் தீர்ந்து விடும். அவர் சாபிட்டால் இவளுக்கு வயிறு நிரம்பி விடும். சமீபத்தில் தான் திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தன. இருந்தும் என்னமோ நேற்று தான் கல்யாணம் ஆன் மாதிரி ஒரு நெருக்கம்.”புஷ்பா சாபிட்டாயா-புஷ்பா உடம்பை பார்த்துகொள்ளு” என்று உருகுவார் கைலாசம். அதே மாதிரி “பனியா இருக்கு- வென்னீரிலே குளிங்க”-“கம்பளியை போத்திகுங்க” என்று கரிசனமாக இருப்பாள் புஷ்பா.

கடை-கண்ணிக்கோ,’வாக்கிங்கோ’கோவில்-குளங்களுக்கோ-எங்கே போனாலும் சேர்ந்தே தான் போவார்கள்.மகன்-மருமகள் கூட விளையாட்டாக சொல்லுவார்கள் “புதிசா கல்யாணம் ஆன ஜோடி என்று நினைப்பு”-“அப்படி என்ன ஒட்டுதலோ” என்று. பெரியவர்கள் இருவருமே அதை பற்றி கவலை பட மாட்டார்கள். கிழவர் குறும்பாக சொல்வார்”கல்யாணம் அன்னிக்கு ‘சப்தபதி’போது சேர்ந்து அடி எடுத்து வைக்க ஆரம்பித்த்தோம்”-“இன்று வரை தொடர்கிறோம்” என்று.

இரண்டு மகன்கள். இருவருமே நன்றாக படித்து நல்ல நிலமையில் இருப்பவர்கள். மூத்தவன் வெங்கட். ஐ.ஆர்.எஸ். தேறி,’இன்கம்டாக்ஸ்’ ஆஃபிஸில் ‘அஸிஸ்டெண்ட் கமிஷனராக சென்னையில் இருக்கிறான்.பத்மா பெரிய நாட்டுபெண். இருவருமே பெரியவர்களிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள்.முறையே 12வது, 8வது வகுப்பில் படிப்பவர்கள்.

சின்னவன் பிரகாஷ்- ‘ஸ்டேட் பாங்கில்’ ஆஃபிஸர். மனைவி கீதா ‘டீச்சராக’வேலை பார்பவள்.அவர்களுக்கு ஒரே மகன் ஹரீஷ்.9 வயது.இவர்கள் இருப்பது சிகந்தராபாத்தில்.

மற்ற வீடுகளை போல பெற்றவர்களை வைத்து கொள்ள ‘ஏலம்’ போடுபவர்கள் அல்ல வெங்கட்டோ பிரகாஷோ. முதலில் இவனிடம் ஆறு மாதம் அவனிடம் ஆறு மாதம் என்று இருந்து வந்தார்கள். பெரிய மருமகள் பத்மா தான் சொன்னாள்” அப்பா-அம்மா நம்மோடு தொடர்ந்து இல்லாமல் இருப்பது பெரிய குறையாக உள்ளது”-“’பர்மனென்டாக’ நம் கூடவே இருக்கட்டுமே என்று”. வெங்கட் பிரகாஷிடம் கூற தம்பிக்காரன் சண்டைக்கே வந்து விட்டான் “நீ ஃபோனை மன்னி கிட்டே கொடு””நான் பேசிக்கறேன் என்றான்”-குடும்பத்து அங்கத்தினர் எல்லோரும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த பாசமும்/அன்பும் வைத்திருந்தனர். வெளிப்படையாக, நட்புடன் பேசிகொள்வார்கள்.உரிமையோடு ”என்ன மன்னி நாங்க அப்பா அம்மாவை வெச்சுக்க வாண்டாமா?”அண்ணா என்னவோ சொல்கிறான்” என்றான். “மைத்துனரை சொந்த தமபியை போல் பார்க்கும் பத்மா “அப்படி இல்லை பிரகாஷ்-இருவருக்கும் வயது ஆகிவிட்டது- ஆறு மாதத்துக்கு ஒரு முறை ரயில் பிரயாணம் செய்ய வேண்டி இருக்கிற்தே” என்றுதான் சொன்னேன்” என்றாள். அதற்க்கு பிரகாஷ் “சரி இப்படி வேணுமானால் செய்யலாம் மன்னி”- “ஆறு மாதத்துக்கு அப்பா உங்களோடு இருக்கட்டும்-அம்மா எங்களோடு இருக்கட்டும்”- பிறகு நாங்கள் அம்மாவை உங்களிடம் கொண்டு விட்டு விட்டு அப்பாவை அழைத்து கொள்கிறோம்-இதன் மூலம் பெரியவர்களின் அருகாமை இருவர்க்கும் கிடைக்கும் என்றான்.

இதை கைலாசம்-புஷ்பா தம்பதியரிடம் தெரிவித்த போது அவர்கள் ஒப்புகொள்ள வில்லை. “50 வருஷமா சுக-துக்கதில்,நன்மை-தீமைககளில் சேர்ந்தே இருக்கோம்”-“அதெப்படி எங்களை பிரிக்கலாம் என்று உங்களுக்கு தோண்றியது”?:”எஙகளை பார்துக்கறது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் முதியோர் இல்லத்தில் கொண்டு விட்டு விடுங்கள்”- “எங்களை பிரிக்க முயலாதீர்கள்” என்று கூறிவிட்டனர். மகன்-மருமகள் யாருமே அப்புறம் அந்த பேச்சை எடுக்க வில்லை.

கைலாசம் கூறுவார் புஷ்பாவிடம்” ராம பிரான் பெரிய தெய்வம்”-“அவதாரம் என்கிறார்கள்”-.”எப்படித்தான் சீதையை விட்டு விட்டு அவ்வளவு நாள் உயிரோடு இருந்தாரோ”?-“ உன்னை விட்டு ஒரு நிமிடம் கூட நான் பிரிந்து இருக்கமாட்டேன்”-”நீ முன்னாடி போயிட்டயானா”-“அந்த காலத்திலே பெண்கள் ‘உடன்-கட்டை” ஏறுவார்களாமே”-“அதே மாதிரி நானும் உன்னோடு சிதைலியே விழுந்துவிடுவேன்” என்பார்- “போதும் இந்த பேச்சு”-“ அசடாட்டும் எதையாவது பேத்திண்டு”-“ இனிமே சாபிட மட்டும் வாயை திறங்கள் போரும்” என்று சொல்லுவாள் புஷ்பா.

கைலாசம் வெளிப்படையாக கூறுவார்-புஷ்பா மனசுக்குள் வைத்து கொண்டு இருப்பாள் அவ்வளுவு தான் வித்தியாசம் சத்தியவானுக்காக சாவித்திரி யமனிடம் போய் உயிர் பிச்சை கேட்டாளாமே- அதே மாதிரி “இந்த மனுஷருக்காக” நாமும் யம-தர்ம-ராஜனிடம் தாலி பிச்சை கேட்க வேண்டியதுதான். நம்மை முனாலே அழைத்து கொண்டால் இந்த மனுஷராலே ஒரு நிமிஷம் தனியா இருக்கு முடியாது என்று நினைத்து கொள்வாள்.

பெரிய மருமகள் பத்மாவிற்கு ‘கால் ப்ளாடர்’ஸ்டோன் ஆபரேஷன். குழந்தைகளை பார்த்து கொள்ளவும், பத்மாவிற்கு தைர்யம் சொல்லவும் அம்மா தன்னோடு வந்து இருக்க வேண்டும் என்று வெங்கட் கேட்டுகொண்டான்.அப்போது கைலாசம்-புஷபா சின்ன மகன்-மருமகளோடு சிகந்தராபாத்தில் இருந்தனர்.அந்த சமயம் பார்த்து பிரகாஷை ‘டெபுடேஷனில்”வதோதராவுக்கு 6 மாததுக்கு அனுப்பியது வங்கி. சின்ன மருமகள் கீதாவையும்,பேரனையும் ஆம்பிளை துணை இல்லாமல் விட முடியாதுஆதலால் கைலாசம் சிகந்தராபாத்தில் தொடர்ந்து இருக்கவும், புஷ்பாவை பிரகாஷ் சென்னயில் அண்ணா வீட்டில் கொண்டு விடுவதாகவும் தீர்மானம் ஆகியது.

இந்த புதிய ஏற்பாடு ஒருவருக்கும் திருப்தியாக இல்லை. இருந்தும் ‘ஆபரேஷன்’ முடிந்து,ஓய்வு எடுத்து பதமா திரும்பவும் ‘நார்மல்’ ஆகும் வரை இதுதான் வழி என்று உணர்ந்து கொண்டனர்.தினமும் கைலாசமும் புஷ்பாவும் டெலிஃபோனில் பேசிகொள்வார்கள். “நீ இல்லாம மனசு ரொம்ப கழ்டமா இருக்கு” என்பார் கைலாசம். “எனக்கு மட்டும் என்னங்க-நிம்மதியாவா இருக்கேன்-“உடம்பு இங்கேயும் மனசு அங்கேயுமா இருக்கேன்” என்பாள் புஷ்பா.

ஒரு மாதம் ஓடியது திடிரென்று மாரடைப்பினால் புஷ்பா உயிர் பிரிந்தது.கனத்த இதயத்துடனும்,நீர் நிறைந்த கண்களுடனும்,வெங்கட் தகவல் சொல்ல பிரகாஷ் வீட்டு டெலிஃபோன் எண்ணை அழுத்தினான். அதற்குள் அவனது ‘செல்ஃபோன்”கிணுகிணுத்தது” ‘பிரகாஷ் ‘காலிங்’ என்று தெரிந்ததால் :நீ பேசு என்று பத்மாவிடம் கொடுத்தான். கீதாவின் குரலை கேட்ட அவன் “கீதா எப்படி சொல்வதுன்னே தெரியலே”-“அம்மா நம்மை விட்டு போயிட்டாள்”-“அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை” எனறான். கீதா “என்ன அண்ணா சொல்றீங்க”-“நானே கையும ஓடாம காலும் ஒடாம இருக்கேன்”- “நேத்து ராத்திரி எப்பவும் போல படுக்க போன அப்பா இன்னும் எழுந்திருக்கலே”-“டாக்டருக்கு ஃபோன் பணணினேன்”- “கையோடு இவருக்கும் தகவல் தெரிவித்தேன்”-“இப்ப நீங்க இப்படி ஒரு இடியை தூக்கி தலையில் போடுகிறீர்கள்” என்றாள். “என்னம்மா சொல்ற நீ”- “எனக்கு தலை சுத்துது”-என்று நா குழற தடுமாறினான் வெங்கட். அதற்குள் பத்மா “சின்னவர் என்னமோ சொல்கிறார்”-“எனக்கு பயமா இருக்குது”-டாக்டர் வந்து பார்த்தவுடன் கீதா நமக்கு சொல்லுவாளாம்”-“அவர் உடனே ஃப்ளைட்” பிடித்து வருகிறாராம்” என்றாள்.

அப்பாவிடம் எப்படி தெரிவிப்பது என்று கவலைபட்ட வெங்கட்டுக்கு அந்த வேலையை வைக்கவில்லை கைலாசம்.நொடிக்கு நொடி ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழ மட்டோம் என்று கூறி கொண்டு இருந்த அந்த தம்பதிகள் சொன்னதை செய்து காட்டி விட்டனர்.இரண்டு பேரும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் இயற்கை எய்தியதை மருத்துவர்கள் கொடுத்த ‘இறப்பு சான்றிதழ்கள்’ உறுதி செய்தன,

No comments:

Post a Comment