Saturday, February 15, 2014

கடைசி செலவு
---------------------
எழுதியவர்:சுந்தரேசன் ஸுரேஷ்
---------------------------------------------
விசாலம் சுவரில் சாய்ந்து, காலை நீட்டி கொண்டு உட்கார்ந்தாள். தன் பேரன் நவீனை கூப்பிட்டு “கண்ணா- இந்த தைலத்தை சற்று பாட்டியின் முழங்காலில் தேய்த்து விடேன்”-“வலி பிராணன் போகிறது” என்று சொல்லி கொண்டு இருந்தாள். அதை கேட்டுகொண்டே வந்த மருமகள் பிரியா “அவனை என்னத்துக்கு தொந்தரவு செய்கிறீர்கள்”-“அவன் என்ன நீங்கள் வைத்த வேலைக்கரனா”-“அவனுக்கு ‘ஹோம்-வொர்க்’நிறைய பாக்கி இருக்கிறது”-“நீ போய் உன் வேலையை கவனி” என்று மகனை விரட்டினாள்.அம்மா சென்றவுடன் பாட்டியை பார்ththuத்து மெல்லிய குரலில் சொன்னான் பேரன்”ராக்ஷஸிக்கு தெரியாமல் அப்புறம் வந்து தேய்த்து விடுகிறேன்”-“நீ கவலைப்படாதே” என்று. “என் தங்கமே உன் வார்த்தயே போறும்”-“நீ எனக்காக் எதாவது செய்ய போய் அம்மா கிட்ட மாட்டிகாதே”என்று அந்த கிழவி கூறினாள்.

இது ஒன்றும் புது நிகழ்ச்சி இல்லை அந்த வீட்டில். மகன் ஜெயராம்,மருமகள் பிரியா இருவருக்குமே வேண்டாதவள் விசாலம். இவ்வளவுக்கும்,சிறிய வயதிலேயே “அந்த பாழும் பிராமணன்” (அவள் கணவர் பஞ்சாபகேசன்) போன பின், மகன் ஜெயராமையும், மகள் மாலதியையும் வளர்த்து,ஆளாக்கி,கல்யாணம் செய்து கொடுத்தது எல்லாமே விசாலம் தான். வீடு வீடாக சமயல் வேலைக்கு செல்வது, பக்ஷணங்கள் பண்ணி கொடுப்பது என்று மாடாக உழைத்து, ஓடாக தேய்ந்து குழந்தைகளை ஆளாக்கினாள் இன்று அவளோ ஒருவருக்கும் வேண்டாதவள் ஆகி விட்டாள்.பேரன நவீன் ஒருவன்தான் அவளிடம் மிகுந்த பாசம் வைத்திருப்பவன்,அதுவும் பெற்றோர்களுக்கு தெரியாமல். தன்னுடய ‘பாக்கெட் மணி’யில் இருந்து கடலை மிட்டாய்,கோன் ஐஸ்கிரீம்’ என்று அப்பா-அம்மவுக்கு தெரியாமல் வாங்கி வந்து பட்டிக்கு குடுப்பான். “இதுக்கெல்லாம் ஏது காசு கண்ணு” என்று பாட்டி கேட்டால்”அதல்லாம் உனக்கு என்ன கவலை”-நான் வாங்கி தருகிறேன்”-“நீ சாப்பிடு” என்று பெரிய மனுஷன் மாதிரி பாட்டியை அடக்கி விடுவான்.

அருமை புதல்வன் அடிக்கடி நினைவுறுத்துவான்”ஏதொ இங்க ரெண்டு வேளை சோறு கிடைக்கிறது-“பேசாம தின்னுட்டு இருந்துக்க”-“ஒவ்வொரு வீட்டிலும் ‘கிழம்-கட்டைகள்’எல்லாம் முதியோர் இல்லத்தில் தான்-தெரியுமோல்லியோ? ” என்று.
மருமகளோ அதற்கு மேலே, உடைத்தே சொல்லுவாள் “ஓரு வயசுக்கு அப்புறம் இருக்க கூடாது”-இருந்து என்ன பிரோயோஜனம்”? “தானும் கழ்டப்பட்டுண்டு பிறத்தியாரையும் நிம்மதியா இருக்க விடாம”-மேல் நாட்டில் எல்லாம் “கருணை கொலை” என்று உண்டாமே? “ நம்ம நாட்டிலும் அது வரணும்” என்று ஜாடையாக விசாலத்தை பாரத்து கொண்டே சொல்லுவாள்.

“ஈஸ்வரா என்னை அழைச்சுக்க மாட்டயா””இத்தனைக்கு அப்புறமும் நான் இருக்கணுமா?” என்று குமைவாள் விசாலம்.அதற்கும் குற்றம் கண்டு பிடிபாள் பிரியா”இது வீடா, கருமாந்திர சாவடியா என்று தெரியவில்லை”-எப்ப பார்த்தாலும் ‘நா சாகணும்-நா சாகணும்” என்று கூப்பாடு””வெறுத்து போக்சு” என்பாள்.

உடம்பு சரி இல்லை,ஒரு தலை வலி, ஜுரம் என்றால் மகன் ஜெயராம் குதிப்பான் “ இந்த மாசம் ஏகபட்ட சிலவு”-இதில் மருத்தவருக்கு வேறு தண்டம் அழணுமா””பொசுக்குன்னு போகணுமே ஒழிய படுத்துண்டு கழுத்தை அறுக்க கூடாது” என்று நாக்கில் நரம்பில்லாம்ல் பேசுவான்.
மகள் மாலதியோ அதற்கு மேல. நல்ல நிலைமயில் இருந்ததும் ஒரு பேச்சுக்கு கூட அம்மாவை தன் கூட வைத்து கொள்வதை பற்றி எண்ணாதவள். “எல்லா நகை நட்டையும் அண்ணனுக்கே கொடுத்த-“அப்புறம் நீ எப்படி எதிர் பார்கலாம் நான் உன்னை வைத்து கொள்வேன் என்று”இந்த குசலம் விஜாரிப்பதே ஜாஸ்தி என்று நினைத்துகொள்” என்று சொல்லுவாள்.

ஜெயராம்-பிரியா பேசிக்கொண்டது விசால்ம் காதில் தெளிவாக விழுந்த்து “கிழவி மண்டையை போட்டா அது வேற இன்னும் செலவு இருக்கு”-“ பேசாம ‘கொள்ளி’ வைத்து விட்டு அத்தோடு விட்டுடணும். விலைவாசி இருக்கிற நிலமையிலே 13 நாள் காரியங்கள்,அது இது என்று இழுத்து விட்டு கழ்டப்படக்கூடாது” என்றான் ‘சீமந்த புத்திரன்”. அதற்கு மருகமகள் “இருக்கிற வரை தான் நாம் பார்த்துகொண்டு ஆகி விட்ட்து”-“செத்த அப்புறமாவது மாலதி கொடுக்கட்டுமே” என்றாள். என்ன நிலமைக்கு நாம் தள்ள ஆளாகியிருக்கிறோம் என்று நினைத்து அவள் மனம் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியது.

சாயங்கால வேளை- நவீன் விளையாடிவிட்டு, திரும்பும் வழியில் பாட்டிக்கு பிடித்த ‘காசி’ இலந்தை பழங்களை பார்த்தான் என்ன தோணியதோ பாட்டிக்கு என்று கொஞ்சம் வாங்கி கொண்டான். எப்படியோ அம்மாவுக்கு தெரியாமல் பாட்டி படுத்திருந்த இடத்துக்கு வந்த தாழ்ந்த குரலில் “பாட்டி இந்தா உனக்கு பிடிச்ச இலந்தை பழம்”- “தலை மட்டிலே மறைத்து வைத்துகொள்”-“அப்புறம் திங்கலாம்” என்று சொன்னான். பாட்டியிடமிருந்து பதில் வராததால் தூங்குகிறாளோ என்று நினைத்து தொட்டு எழுப்பினான். அதற்கும் பாட்டி அசங்காததை கண்டு நவீன் பயந்து விட்டான். “அம்மா,இங்கே வந்து பாட்டியை பாரேன்” என்று கத்தினான். “இப்ப என்ன புது நாடகம் போட்டாகிற்து” என்று கூறிகொண்டே பிரியா வந்தாள். ஜெயராமும் அவளை பின்தொடர்ந்தான்.விசாலத்தின் உயிர் விடை பெற்று கொண்டு இருந்தது.பிள்ளை,மருமகள்,மகள் ஆகியோரை அதிக நாள் ‘காக்க’ வைக்காமல் விசாலம் பரமபதம் அடைந்திருந்தாள்.

மாலதி வந்து தலை காட்டிவிட்டு “என்னால் காரியம் முடியரவரை இருக்க முடியாது” என்று இரண்டாம் நாள் சென்று விட்டாள். சொன்னபடியே உடலை தகனம் செய்து முதல் நாள் காரியம் மட்டும் செய்து விட்டு நிறுத்தி விட்டான் ஜெயராம்.பணத்துக்காக காரியம் செய்யவில்லை என்றால் கேவலம்-அதனால் “அம்மாவிற்கு கடைசி காலத்தில் நம் சடங்கு-சம்ப்ரதாயங்கள் எல்லவற்றிலும் நம்பிக்கை போய் விட்ட்து”-“நான் இறந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்” என்று சப்பை-கட்டு கட்டி விட்டான். விசாலத்தின் சோகமான சாயை (நிழல்) மட்டுமே அந்த வீட்டில் மிச்சம் இருந்த்து.
விசாலத்தின் ஒரே ஆஸ்தியான ஒரு ‘டிரங்க்” பெட்டியை குடைந்த போது அதற்குள் இரண்டு நார்மடி புடவைகள்,ஒரு கம்பளி,சில பழைய கடிதங்கள்,பகவத் கீதை, பஞ்ஜாபகேசனின் ஒரு புகைபடம் மற்றும் ஒரு ஓலை-பெட்டி கண்ணில் பட்டது ஓலை பெட்டியை திறந்து போது அதற்குள் ஒரு நான்கு வடம் தங்க சங்கிலி இருந்தது. கூடவே ஒரு துண்டு காகிதம்.அதில் குழந்தை எழுதியது போல் விசாலத்தின் கோணல்-மாணலான கையெழுத்தில் “இந்த பணம் என் சாவு சிலவுக்காக” என்று எழுதப்பட்டிருந்தது.

அவள் வாழ்ந்த வரையில், அவளை கரித்து கொட்டிய-அவள் மீது வெறுப்பையே உமிழ்ந்து கொண்டிருந் ஜெயராம் மற்றும் பிர்யாவால் கூட, தங்கள் கண்களிலிருந்து, அந்த ஜீவனுக்காக, இரண்டு

No comments:

Post a Comment