Sunday, February 9, 2014

ஒரு ‘காப்பியின்” விலை
-----------------------------------
எழுதியவர்- சுந்தரேசன் சுரேஷ்
========================
ராஜன் ஒரு 'நகல்' பேர்வழி. எதை எடுத்தாலும் 'காப்பி' அடிப்பதே அவன் முறை.ஒருவர் உழைப்பை அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ திருடுகிறோமே என்று குற்ற உணர்ச்சி 'லவலேசமும்' கிடையாது. தான் செய்வதில் ஒரு தப்பும் இல்லை என்று நம்புவபன்.

சிறு வயதிலே பள்ளிகூட படிப்பின் போது முதல் மாணவனின் விடை தாளை 'நகல்' எடுப்பதன் மூலம் மதிப்பெண்கள் பெற்றவன். கல்லூரியிலும் இதுவே தொடர்ந்தது.'ஹேர்-ஸ்டைலில்' மற்றும் உடைகளில் 'சினிமா' நடிகர்களை 'காப்பி' அடிப்பான். எங்கும் 'காப்பி' எதிலும் 'காப்பி'இதுவே அவனது தாரக மந்திரம்.

பல பெரிய எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் படைப்பை 'காப்பி' அடித்து தன் பெயரில் பத்திரிகைகளுக்கு அனுப்புவான். ஒன்றிண்டு வெளி வந்தும் இருக்கிறது. கேட்டால் "உலகத்தில் 'ஒரிஜினல்' என்று ஒன்றுமே கிடையாது தெரியுமா"- "எல்லோரும் 'காப்பி' அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்"- "அதன் மூலம் வெளிப்படும் வரை தான் ஒன்று 'ஒரிஜினல்'" என்று அடித்து கூறுவான்."நீர்க்குமிழி தான் Anand என்ற பெயரில் வெளி வந்தது- சர்வர் சுந்தரம் மொழி மாற்றம் செய்யப்பட்டு Main Sundar Hoon என்று ஆகவில்லையா? என்று அடுக்கி கொண்டே போவான. Internet வந்தவுடன் அவன் பாடு எளிதாக் போய் விட்டது.பல site யும் access செய்து, கதை,கவிதை, பொன்மொழிகள், வாழ்த்து மொழிகள் என்று வெளுத்து வாங்குவாவன். மறந்தும் தான் எஙகிரிந்து ‘சுட்டோம்’ என்ற விவரத்தையோ,’ஒரிஜினல்” படைப்பாளியை பற்றிய தகவலகளையோ வெளியிடமாட்டான்.

ராஜனின் மனைவி சித்ரா பலமுறை சொல்லிபார்த்து இருக்கிறாள் "உங்களுக்கு என்னத்துக்கு இந்த வேலை?" "உங்களுக்காவது ஏதாவது தோணினா எழுதுங்க"- இல்லேன்னா மற்றவர்கள் எழுதுவதை படித்து விட்டு போங்களேன்"என்று. "உனக்கு ஒண்ணும் தெரியாது- பைத்தியம் பேசாம போடி" என்று அவளை அடக்கி விடுவான். எல்லோரும் அவாளுடய ‘2-minute fame’காக் அலைகிறார்ர்கள்.”நானும் கொஞ்சம் ‘புகழ்’ பெற்று விட்டு போகிறேனே” என்பான். கல்லூரியில் படிக்கும் மகன் ராஜீவோ வேறு விதமாக சொல்லுவான் "அப்பா- இதுவே உங்களுக்கு வினை ஆக போகிறது"-இப்பெல்லாம் internet ல் பல 'பேத்து-மாத்து' கள் நடக்கின்றன"-"Copy right Act/ Intelectual Property Right activist எவனாவது உங்களுக்கு வேட்டு வைக்க போகிறான்"- எக்கச்சக்க Hackers வேறு உருவாகி இருக்கிறார்கள்-ஜாக்கிரதையாக இருங்கப்பா" என்பான். "அதெல்லாம் ஒன்றும் ஆகாது" என்று ராஜன் மழுப்பி விடுவான்.

. தன்னை ஒரு Computer savvy person என்று சொல்லிகொள்வதில் ராஜனுக்கு ஏக பெருமை. Mobile Banking,Net Banking, Surfing, Facebook Posting என்று பாதி நேரம் computer உடன் தான் செலவழிப்பான். வீடு ஒன்று வாங்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் ராஜன். அதற்கு கொடுக்க வேண்டிய unaccounted money காக investments மற்றும் நகைகளை சிலவற்றை விற்று ரொக்கமாக வங்கி கணக்கில் (கிட்டதட்ட ரூபாய் 5 லட்சம்)வைத்திருந்தான்.அதைத்தவிர வேற ரூபாய் 10 லட்சம் கடன்-உடன் என்று வாங்கி வங்கி கணக்கில் வைத்து இருந்தான்.

இரண்டு நாளாக ராஜனுக்கு ‘மொபைல்” ஃபோனை” உபயோகிக்க முடியாத நிலை. சிலர் ‘ரிப்பேர்’ செய்யமுடியும் என்றார்கள். சில பழசை தூக்கி எறிந்துவிட்டு புதுசாக வாங்க சொன்னார்கள். ஒரு நாள் சாயங்காலம் ‘கம்ப்யூட்டர்’ முன்னே உட்கார்ந்தவன் ‘நெருப்பை தொட்டவன் போல் துள்ளி குதித்தான். "எல்லாம் போச்சு- நான் மோசம் போயிட்டேன்" என்று கூக்குரல் இட்டான்.. மகனும்,மனைவியும் ராஜனை சிறுது ஆசுவாசப்படுத்தி விட்டு விசாரத்ததில் விஷயம் விளங்கியது. அவனது Debit Card Number, CVV,மற்றும் Pin number எல்லாம் அவன் கடைசியாக செய்த Internet transaction மூலம் duplicate செய்யபட்டு அவனது bank account இல் இருந்து கணிசமான் தொகை withdraw செய்யபட்டிருந்த்து.

ராஜிவ் “அப்பா- ஒருமுறைக்கு இரு முறையாக check பண்ணினீர்களா?-“ஏன் உங்கள் “மொபைலில்” ‘மெசேஜ்’ வந்திருக்கவேண்டுமே- ‘அக்கௌன்ட்” ‘டெபிட்” ஆனவுடனே என்றான்”? “நீங்க் ‘நோட்” பண்ணாலயா? என்று கேட்டான். “அந்த எழவெடுத்தது தான் இரண்டு நாளாக ‘ரிப்பேர்” ஆக இருக்கே” என்றான் ராஜன். “அப்படி என்றால் site ஐ hack செய்து தகவலகளை திரட்டி இருக்கறார்கள் “- “வங்கியில் ‘கம்ப்ளெயின்ட்’ கொடுக்கணும்” என்றான். சித்ராவுக்கும் சரி, ராஜீவுக்கும் சரி ராஜனுக்கு இப்படி ஆகி விட்டதே என்று இருந்தாலும், ‘தன் வினை தன்னை சுடும்- என்பதற்கு ஏற்ப-அவன் மற்றவகளை ‘காப்பி’ அடித்ததை போலவே அவனது Debit card details யும் ஒரு ஆள் ‘காப்பி’அடித்து அவனது பணத்தயே ‘சுருட்டி’விட்டானே என்று தோன்றாமல் இல்லை.

ராஜன் வங்கியை ‘புகாருக்காக’அணுகியதும், அவர்கள் தங்க்கள் Banking Transactions Fraud Detection Wing இன் கீழ் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதா அல்லது Internet crime cell மூலம் செய்வதா என்று குழம்பி கொண்டு இருப்பதும் இந்த கதைக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்கள்.

No comments:

Post a Comment