Wednesday, March 12, 2014

கடன் பட்டார் நெஞ்சம் போல்..... ================================= படைத்தவர்-சுந்தரேசன் ஸுரேஷ் ================================== காலை மணி ஆறு இருக்கும். அழைப்பு மணி சத்தம். ராகவன் அப்போதுதான் எழுந்து பல் விளக்கி விட்டு காபி குடித்து கொண்டு இருந்தான். "சீதா,கொஞ்சம் பாரேன்"-" "பொழுது விடிவதற்குள் கடன்காரன் மாதிரி யாரு வந்திருக்கான்னு"? என்றான். அவனது மனைவி சீதா சென்று கதவை திறந்தாள். "வரலாமா"?"காலங்கார்த்தாலை வேளையிலே தொந்தரவுக்கு மன்னிக்கணும்" என்றவாறே அவளது சம்மதத்துக்கு காத்திருக்காமல் உள்ளே நுழைந்தார் அம்பி.அழுக்கு வேஷ்டி-அதை விட அழுக்கு சட்டை- முகத்தில் குச்சி-குச்சியாக மூன்று நாள் தாடி- குசேலரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார். ராகவன் ஒரு முன் கோபி மட்டும் அல்ல அவசர குடுக்கையும் கூட.அதனால் தான் பல நல்ல குணங்கள் இருந்தும் சோபிக்காமல் போனது. ஆறு மாதம் முன்பாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் கடனாக கொடுத்திருந்தான் அம்பிக்கு.அவரது மனைவிக்கு தண்டு வட்த்தில் ஒரு அறுவை-சிகிச்சை.அதற்கான மருத்துவ செலவுக்காக். அவரை பார்த்தவுடனே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "என்ன மனுஷன் நீங்கள்"?"கொடுத்த வாக்கை காப்பாற்ற வேணாமா"? ஒரு மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு போய் மாதம் ஆறாகிறது"-"இன்னும் திருப்பி தந்த பாடு இல்லை"-“உங்க மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாளா அல்லது பரலோகம் போய் விட்டாளா”?"இப்ப என்ன இன்னும் கொஞ்சம் கடன் கிடைக்குமா என்று பார்க்க வந்தீர்களா"? என்று நெருப்பு துண்டங்களாக வார்தைகளை தூக்கி போட்டான். அம்பிக்கு முகம் சுருங்கி விட்டது. "அது வந்து- குடுக்க கூடாது என்று எண்ணமெல்லாம் இல்லை"-"ஒன்று மாத்தி ஒன்று பிரச்சனையாக இருந்ததினால் குடுக்க முடியாமல் போய் விட்டது" என்று குற்ற உணர்வுடன் பதில் அளித்தார். "இந்த நொண்டி சமாதானம் எல்லாம் வேண்டாம்"-"வாங்கின கடனை திருப்பி கொடுக்கும் வரை தேவையானால் பட்டினி கிடக்க கூட தயாரா இருக்கணும்" என்று சொற்களால் மேலும் குத்தினான் ராகவன். "சொன்னால் நம்ப மாட்டீர்கள்"-"ஆனால் உண்மை அதுதான்"-"நான் கடந்த ஆறு மாதங்களாக-ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன்"-"இரவு உணவை தவிர்த்துவிட்டேன்" -"வாயை கட்டி வயிற்றை கட்டியாவது உங்கள் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் என்ற அம்பியை தொடர்ந்து பேச விடாமல் குறிக்கிட்ட ராகவன் "சரி-சரி, இப்ப எதற்கு வந்திருக்கிறீர்கள்"? என்று கேட்டுவிட்டு "சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள்"-"உங்கள் மாதிரி இருக்கிறவர்கள் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்ப் கூடாது”- உங்கள் மகள் படித்து என்ன கிழிக்க போகிறாள்"? "படிப்பை நிறுத்திவிட்டு பேசாமல் நாலு வீடுகளுக்கு பத்து-பாத்திரம் தேய்க்க அனுப்புங்கள்"-"குடும்பத்துக்கு உதவியாக நாலு காசாவது சம்பாதிப்பாள்" என்றான். அம்பிக்கு காபி எடுத்து வந்த சீதாவினால் இந்த பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை."இந்தாங்க மாமா"-"காபி குடிங்க"என்றவள் ராகவனை நோக்கி "என்னங்க இது"-அந்த பெண் மிக நன்றாக படிப்பாள்"-"படிப்பை தவிரவும் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி,வினாடி-வினா நிகழ்சிகள்,விளையாட்டு போட்டிகள் என்று எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குபவள்"-"வகுப்பிலே எப்போதும் முதல் மாணவி"-"விஷயம் தெரியாமல் எதற்காக இலவச அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்"என்றாள் கடுப்போடு. "இருக்கட்டும் அம்மா"-"பணம் திரும்ப வரவில்லையே என்ற ஆதங்கத்தில் 'சார்' அப்படி பேசுகிறார்"-"நான் வந்த காரியத்தை மறந்து விட்டு என்னமோ பேசிக்கொண்டு இருக்கிறேன்"என்றவரை திரும்பவும் இடைமறித்து "வேறு எதற்கு வந்திருக்க போகிறீர்கள்"-"இன்னொரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது"-"இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்க போகிறீர்கள்"-"அவ்வளவுதானே" என்றான் ராகவன். "அப்படி எல்லாம் இல்லை"-"உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தான் வந்துள்ளேன்"-"நீங்கள் செய்து உதவிக்கு என் உடம்பை செருப்பாக தைத்து போடணும் -"என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் அம்பி. தொடர்ந்து 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்ப ராமயணத்தில் வரும்.-"நானும் அந்த மாதிரி மன நிலையிலே தான் இந்த ஆறு மாதங்களாக இருந்தேன்"-"ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று இரவு நிம்மதியாக உறங்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார். ராகவனுக்கே மனிதரை பேசவே விடாமல் கொஞ்சம் அவசரப்பட்டு வார்த்தைகளை அதிகப்படியாக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது . சீதாதான் நிலைமையை சமாளித்தாள் "-போகட்டும்- எப்படியோ வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டீர்கள்"-“பணம் கிடைத்து விட்ட்து என்ற் சந்தோஷம் இவருக்கு”-“கடனை அடைத்து விட்டோமே என்று திருப்தி உங்களுக்கு”-அது சரி பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்தீர்கள்"? என்று கேட்டாள். அவள் கேட்டதுதான் தாமதம் அம்பி மாமா பாவம் கண்ணில் நீர் கசிந்துவிட்டது"அதை ஏன் கேட்கிறீர்கள்"? "பாவம் என் பெண்" என்று குரல் கம்ம சொல்ல தொடங்கினார். " அரிமா சங்கம் நடத்திய பள்ளி அளவிலான ஒரு கட்டுரை போட்டியில் என் பெண் முதல் பரிசாக ஒரு பவுனில் ஒரு தங்க சங்கிலி வென்று இருந்தாள்"-"நான் இந்த மாதிரி வாங்கின கடனை திருப்பி குடுக்க முடியாத நிலையில் இருப்பதை கண்ட குழந்தை "அப்பா இந்த சங்கிலையை விற்று விட்டு ராகவன் மாமாவின் கடனை அடைத்து விடுங்கள்" -"இன்னும் ஏதாவது போட்டி நடக்காமலா போய் விடும்?"நான் பரிசு வாங்காமலா போய் விடுவேன்"? என்றாள். "பாவி மனுஷன் நான்"-"பெற்ற பெண்ணுக்கு நகை வாங்கி போடாததோடு மட்டும் அல்லாமல் அவள் திறமைக்கு கிடைத்ததை கூட அவளிடமிருந்து பிடுங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்" என்றார். அப்போதுதான் ராகவனோ அம்பி மாமாவோ சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்தாள் சீதா.மளமளவென்று தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்கிலியை கழற்றி "மாமா- இதை உங்கள் பெண்ணின் கழுத்தில் போடுங்கள்"- "குழந்தை பாவம் மூளி கழுத்தாக இருக்க வேண்டாம்"- "இது நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்" என்றாள். கண்களில் நீர் மல்க,இரு கைகளையும் குவித்து "நீங்க தீர்க்க சுமங்கலியா நகை,நட்டோடு நீண்ட நாள் இருக்கணும்"- "அம்மா நீ என்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் உன் காலில் விழுந்து வணங்கணும் போல் இருக்கு" என்ற அம்பி மாமாவிடம் “பெரியவர் நீங்க் அப்படி எல்லாம் சொல்ல கூடாது”-“என்னையும் உங்கள் இன்னொரு பெண்ணாக் நினைத்து கொள்ளுங்கள்”-“அக்கா தங்கைக்கு செய்ய உரிமை இல்லையா”? என்று தடுத்து கொண்டிருந்தாள் சீதா. தன் மனைவியின் பெருந்தன்மைக்கு முன் தான் மிகவும் சிறுத்து போய் நின்றான் ராகவன்..
குங்கும சிமிழ் ------------------- கற்பனைக்கு உயிர் கொடுத்தவர்:சுந்தரேசன் சுரேஷ் ----------------------------------------------------------------------- சேதுராம தீக்ஷிதர் என்ற பெயர் அந்த கும்பகோணம்-தஞ்சாவூர் வட்டாரத்தில், மக்களிடையே மிகவும் பிரபலம். வேத அத்தியனம் முழுமையாக செய்தவர்.வேத-ஸாஸ்த்ர பாண்டித்தியத்திலும்,சம்ஸ்கிருத ஞானத்திலும் கறை கண்டவர்.வேதாந்த கேஸரி,ஸாஸ்த்ர சிரோன்மணி,அனுஷ்டான தர்மகர்த்தா என்று பலபல பட்டங்கள்.நித்திய அக்னிஹோத்திரி. ‘வாஜபேயம்’,‘ஸௌத்ராமணி’ உள்ளிட்ட பல யாகங்களும்,யக்கியங்களும் நடத்தியவர். ஆறடி உயரம்,ஆஜானபாகுவான தேகம்.பரங்கி பழ நிறம்.பட்டை பட்டையாக விபூதி. பார்த்தாலே காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று தோன்றும். “மங்களம் குடிக்க கொஞ்சம் தீர்த்தம் கொண்டு வருகிறாயா”? என்றார்.”இதோ வரேன்”என்றாள் அவரது தர்மபத்தினி.மடிசார் கட்டு,முழங்கால் வரை தொங்கும் தலைமயிர்.மஞ்சள் தேய்த்து குளித்த முகம்,வட்டமான குங்கும பொட்டு என்று லக்ஷ்மீகரமான தோற்றம் மங்களம் மாமிக்கு. “என்ன பண்ணுகிறாள் குழந்தை”? என்று கவலையோடு கேட்டார். “வேற என்ன் பண்ணுவாள்”?-“மோட்டு வளையை virவிரக்தியோடு பார்த்து கொண்டு இருக்கிறாள்”-“நம்ம கதி இப்படி ஆயிடுத்தே என்று மருகி கொண்டு இருக்கிறாள் என்றாள்.“பாவம்-இந்த வயசிலே இந்த கொடுமை நடந்திருக்க வேண்டாம்” என்றாள் மங்களம். “என்ன பண்ணுவது-நடக்கிறது எல்லாம் நம்மளை கேட்டுகொண்டா நடக்கிறது”?”அனைத்தும் ஈஸ்வர சித்தம்” என்றார் தீக்ஷிதர்.இருவரின் கவலைக்கும் காரணம்- அவர்களது ஒரே மகள் கல்யாணி- மணம் ஆகி ஆறே மாதங்களில் விதவை ஆனவள்.மொட்டு பூக்காமலே கருகியது போல், வாழ வேண்டிய வயதில் பூவையும் பொட்டையும் பறி கொடுத்துவிட்டு, தனி மரமாக நிற்பவள். தீக்ஷிதரின் மகன் வைத்தி என்கிற வைத்தியநாதன் அப்பா அளவு அத்தியனம் செய்தவன் இல்லை. ஓரளவு வேதம் கற்றவன், ஆங்காங்கே ஜபம், பாராயணம் என்று போவான், புரோகிதத்தை தொழிலாக செயபவன் இல்லை.கல்யாணிக்கு மூத்தவன். ஸாஸ்த்ர ஸம்பிராதயங்களை மறு-பரிசீலனை செய்ய வேண்டும்-தேவையானவை வைத்து கொண்டு தேவையற்றவற்றை கழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவன்.தங்கை மறுமணம் செய்தது கொள்ள வேண்டும் என்று தீவிரமாக நம்புபவன். சேதுராம தீக்ஷிதருக்கு இதிலெல்லாம் ஒப்புதல் கிடையாது.தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பவை எக்காலத்திற்கும் பொருத்தமானவை-அவைகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை-செய்கிற தகுதியும் ஒருவருக்கும் கிடையாது என்ற கொள்கை உடையவர். ஆனால் தங்கைக்காக அப்பாவையே எதிர்க்க துணிந்தவன் வைத்தி. “ஸாஸ்திர விதி முறைகளை மீறுவது குற்றம்” –“ஒரு முறை மணமான பெண் வைதவ்யம் அடைந்துவிட்டால் திரும்பவும் அவளை சுமங்கலியாக ஆக்க வழியில்லை” என்பது உனக்கு தெரிந்ததுதானே” என்று கேட்பார் பிள்ளையிடம். ‘ய ஸாஸ்த்ர விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம் கார்தா-‘ந ஸ் ஸித்திம் அவாப்னோதி ந் ஸுகம் ந பராம் கதிம்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னதை-ஸாஸ்திர விரோதமாக நடப்பவனுக்கு இவ்வுலகிலும் சுகம் கிடையாது பரலோகத்திலும் கதி கிடையாது- என்பதை உனக்கு விள்க்கி சொல்லி இருக்கிறேனே” என்பார். வைத்தியும் சளைக்காமல் “அப்பா உங்கள் மேதா-விலாசத்திற்கு முன் நான் வெறும் துரும்பு”-“இருந்தும் இதெல்லாம் எழுதபட்ட கால வாழ்க்கை முறைக்கும் தற்கால வாழ்கை முறைக்கும் இடையே நிறைய மாறுதல்கள்,மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன”-“தங்களை போன்றவர்கள் ஆன்மீக கோட்பாடுகளை மறு-பரிசீலனை செய்ய வேண்டாமா”? “கல்யாணியின் இறந்து போன் புருஷன் தன் காலம் ஆனாதால்-விதி முடிந்துவிட்டதால்- போய் விட்டான்”-“மணமாகமலே இருந்தாலும் அவன் போயிருக்க போகிறான்”-“அப்போது கல்யாணி விதவை ஆகியிருக்க மாட்டாளே”-“கிடைக்க வேண்டிய சுகங்கள் ஒருவன் மூலம் கிடைக்காமல் போய் விட்டது என்பதற்காக, வேறு ஒருவரும் அதை கொடுக்க கூடாது என்று தடுப்பது அநியாயம்” என்று வாதம் செய்வான்.”இது எப்படி இருக்கிறது என்றால் “நாம் ஒரு நல்ல வேட்டி அணிந்து கொண்டு ஒரு வேலைக்காக வெளியே புறப்படுகிறோம்- ஒரு பறவை வேட்டியை அசுத்தபடுத்தி விடுகிறது”-“அதுதான் சாக்கு என்று அந்த காரியத்தை தொடராமல் வீட்டில் உட்கார்ந்து கொள்வது நியாயமா” வேறு வேட்டி மாற்றி கொண்டு காரியத்தை தொடர்வது நியாயமா” என்று உதாரணத்தோடு புரிய வைக்க முயலுவான். ஒருமுறை வாக்குவாதம் ரொம்ப தடித்து தீக்ஷிதர் கோபத்தோடு “ஆமாம் நீ பெரிய ‘திரிகாலஞானி’ ஆகிவிட்டாய்”-“உனக்கு தெரியாது கிடையாது”-“உன்னோடு நான் வாக்குவாதம் செய்ய போவதில்லை”-“நான் சொல்வதை எல்லோரும் கேட்டுகொள்ளுங்கள்”-:நான் உயிரோடு இருக்கும் வரை இதற்கு சம்மதிக்க மாட்டேன்”-“என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்று மனைவியை பார்த்து கூறிவிட்டார்.மங்களத்துகு அழுகையே வந்து விட்ட்து “என்ன நீங்கள் இப்படி எல்லாம் அபசகுனமாக் பேசி கொண்டு “”வைத்தி கொஞ்சம் சும்மா இருக்கியா” என்றாள்.. பெண், வீட்டோடு வந்து விட்டாளே என்ற சோகம் தீக்ஷிதரை வாட்டி எடுத்து அவரை பாரிச-வாயு தாக்குதலுக்கு ஆளாக்கி விட்டது. வலது பக்கம் செயலிழந்து விட்டது. ஒரு சிங்கத்தை போல் வளைய வந்தும் கர்ஜித்தும் கொண்டிருந்தவர் படுத்த படுக்கை ஆகிவிட்டார். மல,மூதிரங்கள் எல்லாம் படுக்கையில்தான்.. கம்பீரமாக வேதம் ஓதிய அந்த குரல்- வாய் ஒரு பக்கம் கோணி- பேசுவதே புரியாமால் போய்விட்ட்து. வைத்தி தெரிந்த தரகர் மூலம் தீவிரமாக கல்யாணியின் மறுமணத்துக்கு முயன்று கொண்டிருந்தான்.கல்யாணியின் நிலையோ இரு-தலை-கொள்ளி-எறும்பை போல் இருந்தது. 21 வயதே நிரம்பிய அந்த இள்ம்பெண்ணால் காலமெல்லாம் ஒரு விதவையாக-அப்பாவின் எண்ணப்படி- வாழ்வதா அல்லது-ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது- அதை மறந்து விட்டு புதியதாக ஒரு வாழ்க்கை தொடங்குவதா-அண்ணாவின் கூற்றுப்படி-என்று தீர்மானிக்க் முடியாமல் தவித்தாள். தரகர் ஒரு இடம் கிட்டதட்ட தகைந்த மாதிரி-பிள்ளை பனாரஸ்-ஹிந்து-விஷ்வ-வித்யாலயாவில் பேராசிரியராக பணி புரிபவன்-ஸ்ம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவன்-குடும்பமே ரொம்ப முற்போக்கு சிந்தனை கொண்ட குடும்பம் என்று சொல்லி இருந்தார். கல்யாணியின் புகைபடம் பிடித்து போய் விட்டதாகவும், ஒரு நல்ல நாள் நேரில் வந்து பார்த்து,சம்மதம் சொல்லி அன்றே நிச்சயம் செய்து விடலாம் என்று சொல்லி இருந்தார். அப்பா படுத்த படுக்கை ஆனவுடன்,வைத்தி தான் அவருக்கு உடம்பு துடைத்து விடுவது, விபூதி இட்டு விடுவது,வேற்றி மாற்றி விடுவது என்று எல்லா சுஷ்ரூஷைகளும் செய்துவந்தான். உணவு கொடுப்பது மங்களத்தின் வேலை. மருந்து மாத்திரைகள் கொடுக்க வேண்டிய பொறுப்பு கல்யாணியுடையது..பல சமயங்களில் அவர் கண்களில் இருந்து கர கர வென்று நீர் வழிந்து கொண்டு இருக்கும். தனக்கு இப்படி ஆகிவிட்டதே எனறா அல்லது கல்யாணியின் நிலை குறித்தா- எதற்கு அந்த கண்ணீர் வெள்ளம் என்று தெரியாது. வைத்தி சொன்னான்”அம்மா-அவர் சம்மதம் இல்லாமல் கலயாணி விஷயத்திலே மேலே தொடர எனக்கு இஷ்டம் இல்லே-“நாளைக்கு அவர்கள் வருவதாக சொல்லி இருகிறார்கள்”-நீ பையனின் புகைபடத்தை அப்பாவிடம் காட்டி,அவருக்கு சைகை பாஷையிலே புரிய வைத்து சம்மதம் வாங்கேன்” என்றான். “எனக்கும் இந்த பாவி பெண்ணுக்கு ஏதாவது ஒரு வழி பிறந்தால் தான் நிம்மதியா இருக்கும்”-“இந்த மனுஷர் ரொம்ப பிடிவாதமா இருக்கிறரே” என்றாள் மங்களம். அன்று இரவு ஆகாரமான நொய்-கஞ்சியை மெள்ள-மெள்ள ‘மேஜை-கரண்டியால்’ தீக்ஷிதர் வாயில் விட்டாள் மங்களம் மாமி. ஏழெட்டு மேஜை-கரண்டிகள் வாங்கி கொண்டவர் சைகையினால் போதும் என்றார். வாயை துடைத்துவிட்டு, இரவு மாத்திரைகளை கொடுத்தாள் கல்யாணி, கட்டிலின் தலை மாட்டில் இரண்டு தலை-காணிகளாக சேர்த்து வைத்து சாய்ந்தால் போல அப்பாவை படுக்க வைத்து போர்த்தி விட்டாள். மங்களம் உள்ளே வந்து கையில் இருந்த புகைபடத்தை காட்டி, கல்யாணியை சுட்டி காட்டி,கழுத்தில் தாலி கட்டுவது போல் சைகை செய்தாள். புரிந்து கொண்ட தீகஷிதர், கண்ணை மூடி கொண்டார். பிராவகமாக நீர் வழியதொடங்கியது. நினவு தெரிந்த நாள் முதல் வேதமே மூச்சு,ஸாஸ்திரமே வழிகாட்டி என்றும் உண்மை மாறாமல், நேர்மை தவறாமல், சத்தியம் வழுவாமல் வாழ்க்கை நடத்துவதற்கு இதுதான் நீ செய்யும் கைமாறா என்று பகவானை கேட்பது போல் இருந்தது அது. பின் மெள்ள இடது கண்ணை திறந்தார். மங்களத்தை பார்த்து சைகை செய்தவாறே கழ்டபட்டு இடது கையை தூக்கி தன் நெற்றியில் வைத்து பொட்டு இட்டுகொள்வதை போல சமிஞ்யை செய்தார்.. மங்களத்துக்கு புரியவில்லை. தன் நெற்றியில் பொட்டு இல்லையோ என்று தொட்டு பார்த்து கொண்டாள். மிகவும் முயற்சி செய்து வாயின் இடது பக்கத்தினால் ‘குமும்.. குமும்.” என்றார். ஒருவாரு புரிந்த கொண்ட மங்களம் குங்குமசிமிழை எடுத்து வந்து கொடுத்தாள், சைகையினாலேயே கல்யாணியை குனியுமாறு சொன்னார். அவளது நெற்றியில் தன் இட கரத்தினால் குங்கமத்தை எடுத்து தீற்றினார். மறு நாள் காலை பொழுது விடிநது. ஏன் கல்யாணிக்கு தன் கழ்டங்கள் விடிந்தது என்று கூட வைத்து கொள்ளலாம். ஆனல் தீக்ஷிதருக்கு விடிய வில்லை.மங்களத்தை துக்கத்தில் ஆழ்ததிவிட்டு, தூக்கத்தில் அவர் உயிர் துறந்திருந்தார். “என் காதிலே கர்ண மந்திரம் சொல்லிட்டு அடுத்த் வினாடியே உன் புள்ளை அவளுக்கு பாணி மந்திரம் சொல்லட்டும்”-.”என் கால் கட்டை விரல்களை சேர்த்து கட்டிவிட்டு அப்புறம் தன் இஷ்டப்படி அவளுக்கு கால்-கட்டு போடட்டும்”-“எனக்கு ஆனந்த ஹோமம் நடக்கட்டும்”,அப்புறம் அவளுக்கு லாஜ ஹோமம் நடத்தட்டும்” என்ற தீக்ஷிதரின் வார்தைகள் வைத்தியின் காதில் ரீங்காரமிட்டன்
நன்றே செய்க -------------------- எழுத்தாக்கம்:சுந்தரேசன் சுரேஷ் ========================= நூறு கிலோமீட்டர் வேகத்தில் தன்னுடைய வண்டியை வீடு நோக்கி செலுத்திக்கொண்டு இருந்தான் குமார்.ஒரு மேற்பார்வை மற்றும் சரி-பார்க்கும் வேலைக்காக(இன்ஸ்பெக்க்ஷன்) அவனது அலுவலகத்தில் இருந்து சுமார் 150 கி.மி.தூரத்தில் இருந்தது அந்த அந்த தொழிற்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டு இருந்தான். காலை ஏழு மணிக்கே கிளம்பி, 3-மணி நேரம் பிரயாணம் செய்து, வேலை எல்லாம் முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மணி இரவு ஒன்பது ஆகி விட்டது. நெடுஞ்சாலையில் 'விஷ்' 'விஷ்' என்று வாகனங்கள் கடந்து செல்லும் சப்தத்தை தவிர ஆள் அரவமே இல்லை. ஒரு 100 மீட்டர் தொலைவில் இடது பக்கமாக 'சேவை-பாதை'பிரிந்திருப்பது தெரிந்தது.மிகவும் களைப்பாக இருந்ததால் தேநீர் அறிந்துவிட்டு பயணத்தை தொடரலாம் என்று நினைத்து வண்டியை இடது பக்கம் ஒடித்தான் குமார்..அப்போதுதான் அந்த காட்சியை கண்டான். ஒரு பக்கம் மோட்டார் பைக் உருண்டு கிடக்க ரத்த வெள்ளத்தில் ஒரு 20-22 வயது மதிக்கத்தக்க வாலிபன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தான்.அசுர வேகத்தில் சென்ற ஏதோ ஓர் வாகனம் பின்னாடியில் இருந்து மோதி தள்ளியிருக்க வேண்டும். ஒரு நிமிடம் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அடிபட்ட வாலிபனை அப்படியே விட்டு போகவும் மனமில்லை. மருத்துவமனை,காவல்,நீதிமன்றம்,வழக்கு என்று பிரச்சனைகளில் மாட்டி கொள்ள விருப்பமும் இல்லை.கடைசியில் மனிதாபிமானமே வென்றது. முதல் காரியமாக தன் கைபேசியை எடுத்து காவல் துறைக்கு செய்தி சொன்னான்."மிகுந்த ரத்த சேதம் ஆகியிருப்பதாக தெரிவதால் நான் அடிபட்ட நபரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறேன்"-"நீங்கள் நேராகவோ அல்லது விபத்து நடந்த இடத்துக்கு சென்று பின்னர் அங்கிருந்தோ மருத்துவமனைக்கு வரலாம்"-"நான் அங்கே உங்களுக்காக காத்திருக்கிறேன்" என்றான். பின்னர் அடிபட்ட நபரின் அருகில் சென்று பார்த்தான்.தன் மகன் அசோக்கை போல தோற்றமளிப்பதை போல் இருந்தது.ஈன ஸ்வரத்தில் 'அப்பா என்னை காப்பாற்றுங்கள்" என்று முனகுவது போல தோன்றியது.எங்கோ ஜம்ஷெட்பூரில் இருக்கும் தன் மகனின் நினைப்பு வந்தது வெறும் மன-பிராந்தியாக இருக்கும் என்று தன்னை-தானே சமாதான படுத்திகொண்டான். ஒரு பக்கமாக விழுந்து இருந்ததால் பின் மண்டையில் அடி படவில்லை.தாவாங்கட்டை பெயர்ந்து இருந்தது.வலது தொடையில் இருந்து ரத்தம் பெருகி கொண்டு இருந்தது. கைபேசி இருக்கிறதா என்று தேடினான். இருந்தது ஆனால் அது அணைந்து இருந்தது. கடைசியாக மனைவி கலாவை தொடர்பு கொண்டு "நான் வரும் வழியில் ஒரு விபத்தில் அடிபட்ட வாலிபனை பார்க்க நேர்ந்தது"-"அவனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டி இருக்கிறது"-"ஒன்றும் கவலைப்படாதே"-"வீடு வந்து சேருவதை பற்றி இப்போது சொல்ல முடியாது"-"அப்புறம் தொடர்பு கொள்கிறேன்"என்றான். "ஏங்க உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டி இருக்கிறதே" என்றவளிடம் . "எவ்வளுவு தலை-போகிற விஷயமாக இருந்தாலும் அதை கேட்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை"-" பையனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன்"என்று தொடர்பை துண்டித்துவிட்டான். அடிபட்ட வாலிபனை தூக்கி தன் வண்டியின் பின் இருக்கையில் கிடத்தினான். விளம்பர பலகை/வழிகாட்டி பலகையின் உதவியோடு அருகில் இருந்த மருத்தவமனையை கண்டுபிடித்தான். நல்ல காலம்,பணியில் இருந்த மருத்துவர் நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு செயல்பட்டார். "சீக்கிரம் காயங்களுக்கு தையல் போடுங்கள்"- ரத்தம் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று உத்தரவுகளாக பிறப்பித்தார். அதற்குள் காவல் துறையினரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் "நான் தான் குமார்"-உங்களுக்கு தகவல் தந்தவன்"- என்று நடந்ததை விவரமாக கூறினான். அதை எழுத்து மூலமாக அறிக்கையாக கொடுக்க சொன்னார்கள். வாலிபனது கைபேசியை எடுத்து அதற்கு சக்தி கொடுத்து அதில் இருந்த அவனது பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.மருத்துவரும்"குமார் ஐயா"- "வாலிபன் அபாய கட்டத்தை தாண்டி விட்டான்"-"இனி உயிருக்கு ஆபத்து இல்லை"-"நீங்கள் தகுந்த சமயத்தில் கொண்டு வந்து சேர்த்ததே இதற்கு முக்கிய காரணம்"என்றார். இதெல்லாம் முடிய மணி அதிகாலை 4 ஆகி விட்டது. காவல் துறை அதிகாரியிடம் "நான் கிளம்புகிறேன்"-"மேற்படி எந்த தகவல் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்" என்றான். அதிகாரியும் "மிக்க நன்றி"-"உங்கள் மாதிரி பொறுப்புடன் நடந்து கொள்பவர்கள் அரிது"-"பாக்கி ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்" என்று விடை கொடுத்தார். மிகுந்த அயற்சியுடனும் வண்டி ஓட்டி வந்த களைப்புடனும் வீட்டுக்குள் நுழைந்தான். "அப்பாடி நல்ல வேளையாக வந்து சேர்ந்தீர்கள்"-"தொலைபேசி அழைப்பே இல்லையே என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தேன்" என்ற கலா தொடர்ந்து "என்னங்க பையன் பிழைத்து விட்டான் தானே"?-"உயிருக்கு ஆபத்து இல்லை தானே"?என்று கேட்டாள்."அதல்லாம் ஒன்றும் கவலை இல்லை"-"அவன் பெற்றோர்களுக்கும் தகவல் சொல்லியாகி விட்டது" என்றான் குமார். பிறகு தன்னை சிறிது ஆசுவாச படுத்தி கொண்டு,காபி அருந்திய பின்,"ஆமாம் நேற்று இரவு நான் தொடர்பு கொண்டபோது ஏதோ முக்கியமான விஷயம் என்றாயே"-"இப்போது சொல் அது என்ன" என்றான். கண்களில் நீர் பனிக்க கலா தொடங்கினாள் "இதை என்ன அதிசயம் என்பதா அல்லது எதேச்சையான செயல் என்பதா என்றே புரியவில்லை"-"நேற்று உங்கள் அழைப்பு வருவதற்கு சற்று முன்னர் நம்ம அசோக் (அவர்களின் ஒரே பையன்-ஜம்ஷட்பூரில் எக்ஸ்.எல்.ஆர்.ஐயில்-முதலாண்டு எம்.பி.ஏ படிப்பவன்) ஒரு விபத்தில் மாட்டி கொண்டு விட்டதாக அவன் நண்பனிடம் இருந்து தகவல் வந்தது"-"எனக்கு கையும் ஓடவில்லை"-"காலும் ஓடவில்லை"-"உங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றால் நீங்களே ஒரு பிரச்னையில் இருந்தீர்கள்"-"ஈஸ்வரோ ரக்ஷது என்று நம் குலதெய்வம் சாமிநாத சாமிக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிட்டு ராத்திரி முழுக்க பூஜை அறையிலேயே பழி கிடந்தேன்" -"என் கண்மணிக்கு உயிர் பிச்சை கொடு என்று மனமுருகி பிரார்த்தித்ததற்கு பலன் கிடைத்து விட்டது"-"விடிகாலை ஐந்து மணிக்கு அதே நண்பன் தொடர்பு கொண்டு அசோக்கிற்கு அடி பலமில்லை- கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினான்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள். நேற்று இரவு தன் மன-பிராந்திக்கான காரணத்தை அறிந்து கொண்ட குமார் தன்னையும் அறியாமல் இரு கரம் கூப்பி அந்த சுவாமிநாத சுவாமிக்கு நன்றி செலுத்தினான்
யாகாவாராயினும் நாகாக்க...... ======================== எழுதியவர்:சுந்தரேசன் சுரேஷ் ------------------------------------------ மருத்துவர் ஷ்யாம்சுந்தர் சட்டர்ஜி ஒரு காது-மூக்கு-தொண்டை நிபுணர். ரங்கநாத பாகவதரின் தொண்டையை பல்வேறு விதமாக பரிசோதனை செய்த பின் உதட்டை பிதுக்கினார்- "என்ன பிரச்னை என்று குறிப்பிட்டு சொல்வது கடினம்"- குரல் பெட்டி (வாய்ஸ் பாக்ஸ்) மற்றும் குரல் நரம்புகள் (வோகல் கார்ட்ஸ்) பழுது அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன"- "திரும்ப பாட முடியுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்றார். "நம்பிக்கையுடன் இருங்கள்"-"என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்”-“இதை விட மோசமான நிலையில் இருந்தவர்கள் கூட தங்கள் குரலை திரும்ப பெற்று இருக்கிறார்கள்"-“மருத்துவர்கள் கடவுளாக முடியாது”-“ஆனால் கடவுள் மருத்துவர் ஆக்லாம்” என்று கூறி விடை பெற்றார். பாகவதரின் மனைவி சாந்தியும் மகள் ஸ்வேதாவும் இடிந்து போய் விட்டனர். சென்னை மருத்துவர்கள் எல்லாம் கை-விட்டு விட்ட நிலயில் கொல்கத்தாவில் இருந்து பிரத்யேகமாக வந்திருந்த நிபுணராவது ஏதாவது நல்ல பதிலாக சொல்வார் என்ற எதிர்பார்போடு இருந்தவர்களின் நம்பிக்கையும் பொய்த்துவிட்ட்து.. விஷயம் இதுதான். ரங்கநாத பாகவதர் ஒரு பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான். 'கலைமாமணி','சங்கீத கலாநிதி' என்று பட்டங்கள் பெற்றவர். மார்கழியில் மியூசிக் அகாடமியில் சாயங்கால கச்சேரி செய்பவர். இவர் கச்சேரி எங்கே நடந்தாலும் சென்னை போக்குவரத்து காவல்துறையினருக்கு பெரிய பிரச்னை. மோட்டார் வண்டியில் அத்தனை கனவான்களும்,சீமான்களும்,சீமாட்டிகளும் கச்சேரிக்கு படை எடுப்பார்கள்- விளைவு மாநகரத்தின் சாலைகளில் எல்லாம் வாகனங்களின் தேக்கம் ஆகிவிடும். பட்டு புடவைகளும்,வைர தோடுகளும்,இவரது காம்போஜியையும்,கல்யாணியையும் கேட்டு உருகும், மத்யமாவதியில் நகுமோமோ என்று ஆரம்பித்தால் ரசிகர்கள் மெய் மறந்து கேட்பார்கள்.ஆறு மாதத்துக்கு முன்பாகவே கச்சேரிக்கு தேதி வாங்க வேண்டும். அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜெர்மனி என்று வெளி நாடுகளிலும் இவருக்கு அமோக வரவேற்பு. ஆசாரம் அனுஷ்டானம் மிக்கவர். 'செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்' குருகுல வாசம் செய்தவர். பெரும்பாலும் எல்லாமே நல்ல குணங்கள் கொண்டவராக இருந்தாலும் சற்று அகந்தையும்,அகங்காரமும் கொண்டவர் பாகவதர். ஆறு மாதங்கள் முன் நடந்த நிகழ்ச்சி- தெருவில் குப்பை பொறுக்கும் ஒரு பத்து வயது சிறுமி திடீரென்று பாகவதரின் வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள். அடையாறு,கஸ்தூரிபா நகரில் பிரமாண்டமான பங்களா.நிதி சால சுகமா என்று கல்யாணியில் சாதகம் செய்துகொண்டிரிந்த பாகவதரை அணுகி "எனக்கும் பாடணும் என்று ரொம்ப ஆசை"-"எனக்கு பாட்டு கத்து குடுக்கிறீங்களா"? என்று வெகுளியாக கேட்டாள். கோபம் தலைக்கேறிய பாகவதர் "ஏ சாந்தி"-"எங்க ஒழிஞ்சு போயிட்ட"?"நான் சாதகம் பண்ணிக்கொண்டு இருக்கிறது தெரியலே"?"கண்ட கழிசடை எல்லாம் வீடு புகுந்து சாதகத்துக்கு குந்தகம் விளைவிக்கிறது" என்று கத்தினார். பின் அந்த சிறுமியின் மீது தன் கோபத்தை திருப்பி "மூதேவி- எச்சகலை பொறுக்கறது எல்லாம் சங்கீதம் கத்துக்க முடியாது"-"என்னை மாதிரி ஆசார அனுஷ்டானத்தோடு இருக்கணும் "-"அப்பதான் சரஸ்வதி கடாக்ஷம் இருக்கும்"-"இந்த ஜன்மத்திலே உனக்கு அந்த கொடுப்பினை இருப்பதாக தெரியலை"- "எடத்தை காலி பண்ணு" என்று கத்தி ஓய்ந்தார். “ஏனுங்க இந்த எகிறு எகிற்றீங்க”?”நீங்க் என்ன பிறக்கற்த்தேயே பாட்டு பாடிகினு பிறந்தீங்க”?”ஏதோ ஒரு மவராசன் கிட்டே கத்துகிட்டு அப்பாலே தான் பாடுறீங்க”?”எனக்கும் கத்து குடுத்தா நானும் பாடிட்டு போறேன்”? நாளக்கே உங்களுக்கு தொண்டயிலே எதுனா கோளாறு ஆனா பாட முடிமா” என்று மனம் போன போக்கில் அந்த பெண் பேசியது. தற்செயலாக நடந்ததோ இல்லை அந்த சிறுமியின் ஆதங்கமோ என்ன காரணமோ அடுத்த நாளே பாகவதருக்கு தொண்டையில் ஒரே எரிச்சல்,வலி. சாதாரண கைவைத்தியம்,அலோபதி,என்று காண்பித்தும் ஒன்றும் பயன் இல்லை. வாயை திறந்து பேசுவதே பெரும் பாடாக ஆகி விட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமாகி கடைசியில் வாயை திறந்தால் சத்தமே வராமல் வெறும் காற்று தான் வந்தது. சாந்தி பயந்தபடியே"என்னங்க-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"நீங்கள் அந்த பிச்சைகார பெண்ணை அப்படி திட்டி இருக்க வேண்டாம்"-"அன்றில் இருந்துதான் உங்களுக்கு படுத்துகிறது"என்றாள். "போடி பைத்தியம்"- "காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்களே"-"அந்த மாதிரி ஏதோ நடந்திருக்கு" -"சரியாக ஆகிவிடும்"-"கவலை படாதே"என்றார் பாகவதர். ஸ்வேதாவும் அம்மாவின் கருத்துடன் ஒத்து போனாள்.இரண்டு பேருமாக பல அனாதை இல்லங்களுக்கு போய் பெண் சிறுமிகளுக்கு துணி மணிகள் வாங்கி கொடுத்தனர்;சாப்பாடு போட்டனர்.கோவில் கோவிலாக ஏறி இறங்கி பெண் தெய்வங்களுக்கு பாலாகவும்,தேனாகவும் அபிஷேகம் செய்தனர்.ஸ்வேதாவும் ஓரளவு வாய்பாட்டில் தேர்ச்சி பெற்றவள்தான். பந்துவராளியில் ராம் தய ஜூடவே என்ற் பத்ராசல் ராம்தாஸரின் கீர்த்தனயை உளமுருகி பாடினாள். கேட்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைதாலும் தயவு செய்ய ராமனின் மனம் குளிரவில்லையோ என்னவோ பாகவதரின் நிலமையில் ஒரு மாறுதலும் இல்லை. விஷயம் மெல்ல வெளியே கசிந்து,பாகவதரின் பல ரசிகர்கள் தங்களுக்கு தெரிந்த வைத்தியங்களையும்,பரிகாரங்களையும் தொலைபேசி மூலமாகவும்,நேரில் வந்தும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். பல்லாயிரகணக்கான ரசிகர்களின் தன்னலமற்ற பிரார்த்தனை பலன் அளிக்காமலா போய் விடும்? ஒரு நாள் மருத்துவர் சட்டர்ஜியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பாகவதர் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தபின் ஸ்வேதாவிடம் "அம்மா-நீ என் மகளை போல் என்பதால் சொல்கிறேன்"-"இதை நான் ஒரு மருத்துவராக சொல்ல வில்லை"-"ஒரு மனிசாபினாம் உள்ள வங்காளியாக்- காளியின் உண்மையான பக்தனாக சொல்கிறேன்"-"கொல்கத்தா ,காளிகாட் காளி பிரசித்தமானவள்"-மிகவும் சக்தி வாய்ந்தவள்"-“நீங்கள் கேள்வி பட்டிருக்க கூடும்”-"இந்த காளிக்கு தங்கத்திலோ வெள்ளியிலோ நாக்கு வாங்கி சாற்றுவதாக வேண்டி கொண்டு பாருங்கள்"-"நிச்சயம் உன் அப்பா குணம் அடைவார் என்று என் உள்மனசுக்கு படுகிறது"-"உன் அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லு"-"நான் பிற்பாடு மறுபடி தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்" என்று கூறினார். ஸ்வேதா சாந்தியிடம் ஆலோசனை செய்து கொல்கத்தாவில் இருந்த உறவினர் ஒருவர் மூலம் 4-பவுனில் ஒரு தங்க நாக்கு வாங்கி காளிக்கு சாற்ற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிசயம் என்பதா பிரார்த்தனையின் பலன் என்பதா பாகவதருக்கு குரல் வளம் திரும்பியது. முதலில் பேச தொடங்கினார் பின்பு சாதகம் பண்ணவும் ஆரம்பித்தார். மருத்துவர் ஷ்யாம் சுந்தர் சட்டர்ஜிக்கு தொலைபேசியில் தகவலும் நன்றியும் தெரிவிக்கபட்டது.கிட்ட்தட்ட பழைய் நிலைக்கு திரும்பி விட்டார்.க்ச்சேரி செய்ய முடியும் என்ற் நம்பிக்கையும் பிறந்தது. மறுநாள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸில் கச்சேரி ஏற்பாடு ஆகி இருந்தது. குரல் வளம் திரும்பிய பின் பாகவதரின் முதல் கச்சேரி. கச்சேரிக்கு புறப்படுவதற்கு தயாராக, மோட்டார் வண்டியில் ஏற பாகவதர் பங்களாவின் வெளியே வந்தார். எதேச்சையாக ஒரு பிச்சைகார சிறுமி குறுக்கே கடந்தாள். இம்முறை பாகவதரின் கண்களுக்கு அவள் பிச்சைக்காரியாக தென்படாமல் சாக்ஷாத் கொல்கத்தா காளியாகவே தென்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. Like · · Share

Monday, March 10, 2014

காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :- இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது . நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME. இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது. காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!! காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள். அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான். அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி. இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார் அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் . அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள். கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது 'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான் " யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் " " சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான் " உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின் உயிரைத்திரும்பிக்கொடுத்தான் சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன , இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல் இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும் பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம். நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது. என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும். 'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " ( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு) என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய். " அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "? இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,, எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள் பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது. மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான். மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!

karadaiyan nombu

காரடையான் நோம்பு ஒரு யதார்த்த பதிவு :- இந்த வருடம் காரடையான் நோம்பு மார்ச் மாதம் 14தேதி வெள்ளிகிழமை அன்று வருகின்றது . நோம்பு சரடு கட்டிக்கொள்ள வேண்டிய சமயம் மாலை8.15 PM-9.15 PM (ISD) TIME. இந்த நோம்பு மாசியும் -பங்குனியும் சேரும் நேரத்தில் கொண்டாடபடுகின்றது. காரடையான் நோம்பு ஸ்லோகத்தை பார்க்கும் முன் எதற்கு கொண்டாடுகின்றோம் என்பதை அறிவோமா சகோதரிகளே !!!!!! காதல் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,ஆனால் அது மிகப்புனிதமான ஒன்றாகவும் சுயநலமில்லாததாகவும் இருந்தது அது இதயத்தினில் கலந்துவிட்ட ஒன்று சாவித்திரி ஒரு ராஜகுமாரி தந்தை அசுவபதி ,,, ஒருநாள் தன் தோழிகளுடன் வனத்திற்குச் சென்றாள். அழகான நீர்வீழ்ச்சியைக்கண்டு மனம் பரவசம் அடைந்தாள் கூடவே ஒரு சுந்தரமுகமும் தெரிய ஆவலுடன் அந்தத்திசையில் நோக்கினாள் ஒரு அழகான வாலிபன் அவள் மனதைக்கொள்ளைக்கொண்டான். அந்த நிமிடமே அவனே தன் புருஷன் என்று தீர்மானமும் கொண்டாள், மாளிகைக்குத்திரும்பி வந்து தன் தந்தையிடம் தன் விருப்பத்தைத்தெரிவித்தாள்,அந்தச்சம்யம் "நாராயணா நாராயணா " என்றபடியே நாரதர் நுழைந்து பின் விவரம் அறிந்து அந்த வாலிபன் "சத்தியவான்" எனவும் அவன் இன்னும் ஒருவருடத்தில் மரணம் அடைவான் என்றும் குறிப்பிட்டு பின் எச்சரிக்கிறார் சாவித்திரி. இதில் மிக உறுதியாக இருந்ததால் அரசர் தன் மகளைச் சத்த்ய்வானுக்குத் திருமணம் செய்துக்கொடுத்தார் அரண்மனை வாசம் போய் காட்டின் அருகில் ஒரு சின்ன வீடு ,, மாளிகைவிட்டு வந்த சாவித்திரி அதிலும் இன்பத்தைக்கண்டாள் தன் புருஷனின் உயிரைக்காக்க பார்வதி செய்த விரத்ததை மேற்கொண்டாள். அங்குக்கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி அதில் காராமணியும் சேர்த்து அடைப்போல் தட்டி வெண்ணெயுடன் நைவேத்தியம் செய்தாள் , பின் மஞ்சள் சரடை சுமங்கலியாக இருக்கப்பிரார்த்தித்து கட்டிக்கொண்டாள் . அந்த நாளும் வந்தது சத்தியவான் விற்கு வெட்டும் போது பாம்பின் ரூபமாக யமன் வந்தான் , அவனைக்கொட்டினான் தள்ளாடியபடியே அவன் கீழே சாய சாவித்திரி அவனைத்தாங்கிக்பிடித்தாள். கற்பின் சக்தியால் யமனும் அவள் கண்ணில் பட்டான் அவன் உயிரைக்கொடுக்கும்படி வாதித்தாள் கதறி அழுதாள் பின் தொடர்ந்தாள் அவள் கண்ணீர் அவன் மனதை நெகிழ வைத்தது 'சாவித்திரி நான் என் கடமையைத்தான் செய்கிறேன் அவன் உயிரைத்தவிர வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் " என்றான் " யமராஜனே என் வம்சம் வாழையடியாகத்தழைத்து வளர வேண்டும் " " சரி அப்படியே ஆகட்டும் தந்தோம் " என்று சற்றும் யோசிக்காமல் வரம் வழங்கினான் " உங்கள் வரம்படி சத்தியவான் இல்லாமல் குலம் எப்படித்தழைத்து ஒங்க முடியும் "என்று பதிலுக்கு சாவித்திரி கேட்க வேறு வழியில்லாமல் யமதர்மராஜன் சத்தியவானின் உயிரைத்திரும்பிக்கொடுத்தான் சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் யமனையும் வென்று தன் புருஷனை மீள வைத்தன , இந்தக்கதை சாதாரணமாக எல்லோருக்கும் தெரியும் இது போல ஒன்றை வடநாட்டில் கரவாசௌத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள் காலையிலிருந்து தண்ணீர் கூடக்குடிக்காமல் இரவில் சந்திரனைப்பார்த்தப்பின்னர் தான் சாப்பிட்டு விரதத்தை முடிக்கிறார்கள் ,என் மருமகள் வடநாட்டில் இருந்து பழக்கப்பட்டதால் அந்த நோம்பும் செய்ய என் மகனும் அன்று முழுவதும் பட்டினி கிடப்பான் , பெண்களுக்குத்தானா புருஷன் முக்கியம் ஆண்களுக்கும் இதே உணர்வு உண்டே "என்று சொல்லும்போது இது போல் ஆண்களுக்கும் எதாவது விரதம் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது ,ஆனால் அந்த நோன்பு தீபாவளிக்குப்பின் வரும் என்ற ஞாபகம். நம் நோன்பு மாசிமாதம் பங்குனி மாதம் கூடும் நேரத்தில் வரும் "மாசிக்கயிறு பாசிப்படியும்" என்று சொல்வார்கள் ஆகையால் மாசி முடியும் தருவாயிலேயே இதை அனுஷ்டித்துவிடுவது வழக்கம். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள் “மாசிக்கயிறு பாசி படியும்” என்று, பங்குனி முதல்நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேடமானதாகக் கருதப்படுகிறது. என் அம்மா இந்த நோம்பு செய்யும் போது கீழ் வரும் ஸ்லோகத்தை சொல்லவும். 'உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் .அதாவது " உருகாத வெண்ணையுக் ஓரடையும் நான் வைக்க என் கணவன் என்னைவிட்டு என்றும் பிரியாமல் இருக்கவேணும் " ( 'நூற்றேன்' என்பதற்கு 'தருவேன்' என்று சொல்வதும் உண்டு) என்று சொல்லியபடியே சரடை அணிந்துக்கொள்வார்கள் , அதே போல் என்னுடைய சகோதரிகளையும் அணியச்சொல்வார் எனது தாய். " அம்மா எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே " என்று சகோதரிகள் கேட்டால் " எங்கேயாவது பிறந்திருப்பானே" என்று முடிப்பார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது " அந்த வெண்ணெய் எப்படி உருகாமல் இருக்கும் "? இதை என் அம்மாவிடம் கேட்டபோது அந்தக்கால பதிவிரதையால் கற்புக்கரசியினால் இது சாத்தியமாகும் என்றார் ,,, எல்லாமே உலகத்தில் அன்பும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு உறவுகள் பின்னப்ப்டுகின்றன ,,,,,,, இந்தக்கால்த்தில் தாலிக்கு இத்தனை மதிப்பு கொடுக்கபடுகிறதா ? அல்லது இருமனம் ஒருமனம் ஆனாலே போதும் என்று நினைக்கப்ப்டுகிறதா ? விஜய் டிவியில் "நீயா நானா "வில் இதுவும் அலசப்பட்டுவிட்டது. மிகவும் அழகான விரதம் இது. கடைக்கண் பார்வையில் காதலும். உள்ளத்தில் பக்தியும், புத்தியில் சிரத்தையும் கூடி செய்யும் விரதம். அன்று மட்டுமல்லாது, வாழ்க்கை முழுவதும் இந்த சுலபமான ஸ்லோகத்தை சொல்லலாம் - ஆண்களும் தான். மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ப்ரதே மங்களார்த்தம் ம்ங்களேசி மாங்கல்யம் தேஹி மே ஸதா!!

Wednesday, March 5, 2014

மெட்டிi
எழுதியவர்: சுந்தரேசன் சுரேஷ்

கஸ்தூரி ஒரு அரை-குறை. அதாவது படிப்பும் இல்லை, வேறு முற்பட்ட ஜாதியினரின் ஏகபோக உரிமை மற்றும் குல தொழில்களான புரோகிதமோ, சமயலோ கூட தெரியாது. வயது 55-60 இருக்கலாம். கட்டை குட்டையான உருவம். முழங்கால் வரை வேஷ்டி.தோளில் காசி துண்டு. கையில் நிரந்தரமாக ஒரு கித்தான் பை.ஏதோ கொஞ்சம் மந்திரங்களை தெரிந்து வைதிருந்தார்..தங்கள் ஜாதியில் பிறந்து விட்டானே என்று பரிதாபம் கொண்டு ...புரோகிதர்கள் மற்றும் வாத்தியார்கள் சிரார்தம்,பூணூல்,கல்யாணம்,கிருஹபிரவேசம், முதலிய சுப நிகழ்ச்சிகளுக்கு அவரையும் ஒரு வாத்தியாராக சொல்லி வந்தனர். வருமானதிற்க்கு வழி செயதனர்.அதே மாதிரி இழவு காரியங்களுக்கும் அவரை சொல்லி வந்தனர். கூட மாட இருந்து ஒத்தாசை செய்து ஏதோ குடுத்ததை வாங்கி போவார்.ஆனால் வாய் பொல்லாதது. கிருஹஸ்தர்களிடமும் நல்ல பெயர் கிடையாது. புரோகிதர்களிடமும் அனுகூலமாக நடக்க மட்டார்.”இவன் என்ன சாஸ்த்ர அத்யயனம் செய்திருக்கான்”? “இவன் யோக்கியதை எனக்கு தெரியாதா”? “ஹோட்டலில் காப்பி ஆத்திகொண்டு இருந்தவன் தானே” என்று சக வாத்தியார்களை ஏக-வசனத்தில் விமர்சனம் செய்வார். “ சாஸ்த்ரத்தில் அப்படி கிடையாது காணும்”. “யவை என்ற தானியத்தை உபயோகிக்கணும்- நீங்க நெல்லை போடரேள்”- ஒரு புண்ணியமும் இல்லை:”இப்படியான விமர்சனங்களை செய்து வீட்டுக்காரர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வார்.

இவரை கட்டி கொண்ட புண்ணியவதி மீனாட்சி. வாய் இல்லா பூச்சி.மடிசார் புடவை.கழுத்தில் வெறும் மஞ்சள் நூல். கையில் ‘ரப்பர்’வளையல்கள். இவர் கொண்டு வந்ததை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்துபவள். கல்யாணம் ஆன நாள் முதல் ஒரு சுகத்தை காணாதவள். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டவள் இல்லை. கேட்டு இருந்தாலும் கிடைதிருக்காது என்பது வேறு விஷயம். திருமணம் ஆன புதிசில் மீனாட்சி “ஏன்னா- நீங்களும் ‘கிராப்’ வைத்து கொண்டு உத்தியோகத்திற்க்கு போய் பாருங்களேன்” என்று கஸ்தூரியிடம் சொல்லி இருக்கிறாள். பதிலுக்கு “போடி அசடு- நான் பள்ளிகூட நிழலில் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை- எனக்கு எவன் வேலை கொடுப்பான்?-நாங்க தீகஷிதர் பரம்பரை- கை கட்டி வேலை பார்க முடியுமா? என்று உண்மையும் வரட்டு-ஜம்பமும் கலந்த ஒரு பதிலை கூறி விடுவார். அதே மாதிரி ஒரு இரு முறை புடவை,நகைகளுக்ககாக கேட்ட போது “நீ இந்த நூல் புடவையில் எவவளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா”? பட்டு புடவை அணிவது சாஸ்திரத்திற்கு விரோதமானது” பட்டு பூச்சிகளை கொல்வது மஹா பாவம்” “பட்டெல்லாம் பணக்காரர்களுக்கு இருக்கட்டும்” என்று என்னமோ சாஸ்த்ரதை கரைத்து குடித்தவர் மாதிரி சவடாலாக கூறி விடுவார். “பெண்க்ளுக்கு பொன நகை எதற்கு?புன்னகை போறுமே ! என்று “இலக்கியதத்னமாக” கூறி விடுவார்.மீனாட்சிக்கு என்ன தெரியாதா இந்த “வக்கிலாத மனுஷனை” பற்றி. அப்படியும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பியதால் “பேச்சில் உங்களை ஜெயிக்க முடியாது” என்று விட்டு கொடுடத்து விடுவாள்.கஸ்தூரி இப்படி சொன்னாலும்- தங்கம் விற்கும் விலையில் தன்னால் நெருங்க கூட முடியாது- ஆனால் எப்படியாவது ஒரு வெள்ளி கொலுசோ, மெட்டியோ வாங்கி மீனட்சிக்கு கொடுக்க வேண்டும் என்பது உள்ளத்து அவா. ஒரு முறை சொல்லியும் இருக்கிறார் “மீனாட்சி- பார்ர்த்து கொண்டே இரு- நான் ஒரு நாள் மெட்டி வாங்கி வரத்தான் போகிறேன்- நீயும் அணியத்தான் போகிறாய்” என்று
.
குழந்தை பாகியமும் கடவுளால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அதை நினைத்து மீனாட்சி கண் கலங்கி இருக்கிறாள். கஸ்தூரி அவளை தேற்றுவார்”குழந்தை இல்லேன்னா என்னா- உனக்கு நான் குழந்தை- எனக்கு நீ குழந்தை- சாகிற பரியந்தம் இந்த பந்தம் போரும்” என்பார். ஆதர்ச தம்பதிகளாக இல்லாவிடினும் அன்னியோன்ய தம்பதிகளாக காலத்தை கடத்தி கொண்டு இருந்தனர்.

வயது ஆனதால் சமீப காலமாக இருவருக்குமே மாற்றி மாற்றி உடம்பு படுத்தி கொண்டே இருந்தது. முட்டு வலி,முதுகு பிடிப்பு இதெல்லாம் மீனாட்சியின் பிரச்சனைகள். போறாது என்று சமீபத்தில் இருமல்,சளி,கபம் தொந்தரவு வேறே. கை வைத்தியமாக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்து பார்த்து விட்டாள்- சுக்கு கஷாயம்,பனங்கல்கண்டு சாப்பிடுவது.கடுக்காயை வாயில் அடக்கி கொள்வது என்று- ஒன்றுக்கும் கட்டுப்படுவதாக இல்லை. போன வாரம் இருமல் அதிகமாகி,எச்சில் துப்பியபோது ரத்தம் வெளி வந்தது. மீனாட்சி அதை பற்றி கஸ்துரியிடம் மூச்சு விடவில்லை. “தாம்-தூம்” என்று குதிப்பார். உடனே “டாக்டரிடம்”போக்லாம்- மருத்துவமனையில் சேர்ரக்கலாம்” என்பார் என்ற பயத்தில்.

வாயு தொல்லை,ரத்த கொதிப்பு,கண் பார்வை குறைவு இதெல்லாம் கஸ்தூரிக்கு சொந்தம்.கூடவே பணக்கரர்களின் வியாதியான் “ப்ள்ட் சுகர்” தனக்கும் வந்திருப்பதில் கஸ்தூரிக்கு மகிழ்ச்சியே. பண பற்றாக்குறையினால் ஒரே சமயத்தில் இருவரும் மருத்தவரிடம் செல்ல முடியாத நிலை.”நீங்க முதலில் கண்ணை “டெஸ்ட்”செய்து கண்ணாடி போட்டு கொள்ளுங்கள்” என்று மீனாட்சி கூருவாள். அவளை அடக்கி விட்டு “ எனக்கு தெரியும் எதை எப்ப பண்ணனும் என்று” “மொதல்லே நீ “கம்ப்ளீட்” (தனக்கு இங்க்லிஷ் தெரியும் என்ற பெருமை) “செக்-அப்” செய்துக்கணும். அப்புறம் தான் மததது எல்லாம் என்று திட்ட-வட்டமாக கூறி விடுவார். கூறி விட்டாரே ஒழிய பணத்துக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.கூறியதற்க்கு காரணமும் உண்டு. போன் தடவை “டாக்டரிடம்” சென்று இருந்தபோது “மாமி “வெயிட்” கணிசமாக குறைந்துள்ளது”. “நெஞ்சில் கபம் கட்டியுள்ளது”- மூக்சு விட சிரமபடுகிறாள்”. ஒரு “ஃபுல்” பாடி-செக்-அப்” செய்வது நல்லது என்று சொல்லி இருந்தார்.

பத்து நாட்களாக கஸ்தூரிக்கு வருமானம் இல்லை. அன்று ஒரு சோதகும்ப சிரார்தம்.வாத்தியார் பெரிய மனது பண்ணி கஸ்தூரியை ஒரு பிராமிணனாக சொல்லி இருந்தார். வழக்கம் போல அதிலேயும் தகறாரு-நக்கல்- “நான் பிராமிணனாக கிடைக்க இவா குடுத்து வச்சிருக்கணும் ஓய்”. மொறயா எனக்கு தான் வெள்ளிலே தீர்த-பாத்திரம்,பவித்ரம்,தர்ஜினி (சம்ஸ்க்ருத பாஷா ஞானத்தை வெளிப்படுதுகிற பெருமை) எலாம் கொடுக்கணும்”.”ஆத்து மாப்பிள்ளையை சொல்லி அவருக்கே குடுத்துடுவா” “இவாளை எல்லாம் ஜாதி பிரஷ்டம் பண்ணனும்” என்று ஒரே கூப்பாடு. பெரிய வாத்தியாருக்கு சலிப்பு. “இதோ பாரு கஸ்தூரி- உன் யோக்யதைக்கு இதுவே ஜாஸ்த்தி. குடுத்ததை வாங்கி கொண்டு போவதாக இருந்தால் வா” “இல்லாவிட்டால் ஆளை விடு” என்றார். வருகிற லஷ்மியை வாண்டாம் என்பது முறை ஆகாது என்று ஒப்புகொண்டார் கஸ்தூரி. உண்மையில் அவர் எண்ண்ம் வேறு. கஷ்டப்பட்டு,மீனாட்சிக்கு தெரியாமல் அவர் ரூபாய் ஆயிரம் சேர்த்து வைத்து இருந்தார் இன்று 500-600 ரூபாய் வந்தால் மீனாட்சிக்கு ஒரு வெள்ளி மெட்டி வாங்கி கொடுத்து அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்து இருந்தார்.

காலை எழுந்ததில் இருந்தே மீனாட்சி உற்சாகமாக் இல்லை. “ஏன்னா- இன்னிக்கு ஏதாவது கார்யம் இருக்கா” என்று கேட்டாள். “ஆமாம்- ஒரு சோதகும்பம் இருக்கே- பேட்டு வந்துடரேன்” என்றாள். “உடம்பே முடியலே”என்றாள். “சொன்னா கோவிச்சுக்க மட்டேளே-சுமங்கலி பெண்கள் காலில் மெட்டி போடாமல் இருக்க கூடாது. நா ஒரு சொப்பு வளயத்தை எடுத்து உருட்டா போட்டுண்டு இருககேன். அதை மாத்தணும் என்றாள்.”ஆண்டி பண்டாரத்துக்கு அழறது-லிங்கம் பஞ்சாமிருதத்துக்கு அழறது- அந்த கதையா இருக்கே என்று நையாண்டி செய்தார். “நா பார்லி கஞ்சி போட்டு கொடுக்கறேன்- குடிச்சுட்டு படுத்துண்டு“ரெஸ்ட்” எடுத்துக்கோ.”நான் போனேன் வந்தேன் என்று பேட்டு வந்துடரேன்” என்று கூறி புறப்பட்டு சென்றா.
வந்து விட்டாரே ஒழிய கஸ்தூரிக்கு மனசு வீட்டிலேயே இருந்தது.பெரிய வாத்தியாரிடம் “ஆம்படையாளுக்கு உடம்புக்கு முடியலே” “தனியா விட்டுட்டு வந்திருக்கேன்” “கொஞ்சம் சீக்கிரம் முடித்தால் தேவலை” என்றார்.வாத்தியரும் “ஜெட்” வேகத்தில் ஓடினார். காரியம் முடிந்த உடனே கஸ்தூரி கிளம்பி விட்டார். அவர் எதிர் பார்ததற்கு மேலாகவே வருமானம் வந்து இருந்தது. இன்று எப்படியும் மீனாட்சிக்கு மெட்டி வாங்கி கொண்டே போக் வேண்டும் என்று தீர்மானித்தார்.அவர் “பட்ஜெட்டிற்க்குள்” கிடைத்தும் விட்டது. சந்தோஷதோடு வீடு நோக்கி நடந்தார்.

அவர் வீட்டிர்க்கு இரண்டு தெருக்கள் தள்ளி வந்து கொண்டு இருக்கும்போது ஒரு “அசிஸ்டன்ட்” வாத்தியார் “மோட்டார்-பைக்கில்” அவர் அருகே வந்து திடீரென்று “ப்ரேக்”போட்டு நின்றார்.”பெரிய வாத்தியர்ர் அனுப்பினார்”.”மாமிக்கு உடம்பு சரி இல்லையாம். உங்களை உடனே ஆத்த்துக்கு வர சொன்னார்””பைக்கில் ஏறுங்கோ” என்றார்.கஸ்தூரிக்கு அடி-வயிரு கலங்கியது. ஒன்றும் ஆகாது என்று தனக்குதானே தேற்றி கொண்டார்.
வீட்டிர்குள் நுழையும் போதே காஸ்தூரிக்கு புரிந்து விட்டது. மீனாட்சியை “தெற்கு பார்த்து” கிடத்தி இருந்தார்கள். கால் மற்றும் கை கட்டை விரல்கள் கட்டப்பட்டிருந்தன. தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கபட்டு இருந்தது.பெரிய வாத்தியார், மற்றும் அண்டை அசலார் எல்லோரும் மௌனமாக் இருந்தனர். பெரிய வாத்தியார் கஸ்தூரியை நெருங்கி ஆதுரமாக தோளில் கை வைத்து “எல்லாம் தலைஎழுத்து- அவன் எழுதின படி நடக்கிற்து- மனசை திடப்படுத்திக்கோ- போறவா போயாச்சு- காரியத்தை பாக்கணும்” என்றார்.

ஒன்றும் பதில் கூறாத கஸ்தூரி தன் “கித்தான்” பையை திறந்து அன்றுதான் வாங்கி இருந்த மெட்டியை எடுத்து. மீனாட்சியின் சடலத்துக்கு அருகே அமர்ந்தார். காலில் இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு,. மெட்டியாக மாறி இருந்த செப்பு வளயத்தை உருவிவிட்டு –புதிய வெள்ளி மெட்டியை அணிவித்தார். பிரந்தது முதல் –வாழக்கையே ஒரு முள் படுக்கயாக இருந்த -தானும் சுகப்படாத தன் மனைவியயும் சுகமாக இருக்க விடாத கஸ்தூரி என்ற அந்த ஜீவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
முதியோர் இல்லம்

எழுதியது:சுந்தரேசன் சுரேஷ்

பிரகாஷ் (50) தன் "அமெரிக்கன் டூரிஸ்டர்" பெட்டிகளில் சாமான்களை வைப்பதில் மும்முரமாக இருந்தான். மனைவி சங்கீதாவும் (43),குழந்தைகள் ஆர்த்தியும்(22),ஆனந்தும்(18) தங்கள் தங்கள் tab,ipod எல்லாவற்றையும் தேடி எடுத்து வைத்து கொண்டிருந்தனர். எல்லோருக்குமே "மூடு"அவுட். தாத்தா பாட்டியை விட்டு பிரியப்போகும் துக்கம். பதினைந்து நாள்,பிரகாஷின் பெற்றோர்களுடன் கழித்து...விட்டு திரும்ப அமரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம்.

சங்கீதா தான் ஆரம்பித்தாள் "என்னங்க- தீர்மானம் பண்ணி விட்டீங்களா"? "அப்பாவையும் அம்மாவையும், "விருதாச்ரமத்தில்" சேர்ப்பதாக முடிவு செய்து விட்டீர்களா"? என்றாள். பிரகாஷ் "ஆமாம் சங்கி-வேறு வழி தெரியவில்லை"- "கிருஷ்ணன் அண்ணாவும் தன்னோடு வைத்துகொள்ள சௌகரியப்படாது என்று சொல்லி விட்டான்"-"மோகன் (தம்பி) சரி என்று சொன்னாலும் அவன் மனைவி சம்மதிக்கமாட்டாள்". என்ன பண்ணுவது? என்று கவலையுடன் பதில் அளித்தான். "எப்போ போகணும்" என்று அவள் கேட்டதற்கு "பணம் எல்லாம் கட்டி ஆகிவிட்டது"-"ஒரு மாதத்திற்குள்,அண்ணனோ,மோகனோ யாரவது வந்து இவர்களை அழைத்து கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றான்".

இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதியோர் இல்லம் என்றாலே தீண்ட தகாதது என்றும் நினைக்கும் ரகம் அல்ல- கோபால் மாமாவோ,லக்ஷ்மி மாமியோ. மூன்று பிள்ளைகளையும் நன்றாக,வளர்த்து, படிக்க வைத்து,ஆளாக்கி விட்டோம்-இன்று அவர் அவர் நல்ல வசதியோடு வீடு,கார் என்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்து கொண்டால் போதும்.கடைசி காலத்தில் நாம் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்க கூடாது- நம் பாட்டை நாம் பார்த்துகொண்டு போகவேண்டும் என்பது இருவரின் ஒருமிக்க எண்ணம்.மகன்கள்,மருமகள்கள் மீது குறையும் கூறமாட்டார்கள்; நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று சுய-பச்சாதாபம் படவும் மாட்டார்கள்.

பிரகாஷ் தன் குடும்பத்துடன் கிளம்பி விட்டான். "அப்பா,போய்ட்டு வரேன்"- "மனசே செரி இல்லை"- "பத்து பதினைந்து நாட்களுக்குள்ளே அவா யாரவது உங்களை 'விருத்தாச்ரமதில்" கொண்டு போய் விடுவா"- "மூணு புள்ளை இருந்தும் கூட அங்க போக வேண்டியிருக்கு" என்று வருத்ததோடு சொன்னான். அதற்கு கோபால் மாமா "Prakash-you are well-educated- I don't have to tell you-there is no point in getting sentimental about these- this is the only practical solution-dont' worry-everything shall fall in place"என்று அவனுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து "இதல்லாம் காலத்தின் கட்டாயம்- அனுசரித்து நடந்து கொள்வதே உசிதம்-நானும் அம்மாவும் கடைசி காலத்தில் நன்றாக இருப்பதை தானே நீ விரும்புகிறாய்-அதுதான் நடக்கிறது" என்று ஆறுதலாக சொன்னார். ஆர்த்தி ,ஆனந்த் இருவரும் தாத்தா,பாட்டிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

கிராமத்தில் இருந்து காரில் சென்னை வந்து,விமானம் பிடித்து அமெரிக்காவும் வந்து சேர்ந்தனர். பெனிசில்வேனியா,அலன் டவுனில் வாசம். அவர் அவர் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினர்.பிரகாஷ் மட்டும் தன் நிலைக்கு திரும்ப முடியவில்லை. நடு இரவில் திடீரென்று விழித்து கொள்வான். சங்கியை எழுப்பி "உனக்கு தெரியுமா"- "அம்மா என்றால் எனக்கு உயிர்"- "அம்மாவிற்கும் என் மீது தனி பிரியம்"- "அப்போது Haathi Mere Saathi வந்த புதிது". "நான் Rajesh Khanna சட்டை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன்"- "ஊரெல்லாம் சுற்றி திரிந்து அதை வாங்கி வந்தாள்"-" இப்போ அந்த அம்மாவை கொண்டு முதியோர் இல்லத்தில் விட போகிறோம்" என்று குரல் உடைந்து விசும்ப தொடங்கிவிடுவான். ஆறுதலாக அவனை அணைத்து "இவ்வளவு feel பண்ணாதீங்க"- "முதியோர் இல்லத்திலே அம்மாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாங்க" -"நன்னா பார்த்துப்பாங்க" என்று மெல்ல தூங்க வைப்பாள் சங்கி .

Office இல் இருந்து திடீரென்று தொலை பேசியில் அழைப்பான்-"சங்கி- அம்மா ஒரு நாள் எனக்கு வெறும் ரசம் சாதம் பிசைந்து கொடுத்து இருந்தாள்"- "அது எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமோ"- "இரண்டு முட்டை நெய் ஊற்றி கொஞ்சம் சர்க்கரையை தூவி இருந்தாள்"-"அமிர்தமாக இருந்தது"-என்பான். "புரிகிறது கண்ணா- எனக்கு உங்கள் sentiment புரிகிறது என்பாள் சங்கீதா.மகள் ஆர்த்தி கூட "பாட்டியை இங்கேயே அழைத்து வைத்து நம்ம கூடவே வைத்து கொள்ளலாம் அப்பா" என்றாள்.

வீட்டுக்கு வந்தவுடன் "சங்கி- சொல்ல மறந்து விட்டேனே-அப்பா தினமும் office இல் இருந்து திரும்பும் போது எனக்காக choclate, biscuit எல்லாம் வாங்கி வருவார்" தெரிமோ என்பான். "அவனுக்கு ஆதரவாக சங்கீதாவும் "உங்க அப்பா மாதிரி ஆகாது" என்பாள்.ஆனந்த் "அம்மா தாத்தாவும் இங்கே வரட்டுமே-நம்மோடு சேர்ந்து இருக்கட்டுமே"என்பான்.

வாரம் மூன்று முறையாவது Gym க்கு போவதை வழக்கமாக வைத்திருந்தான் பிரகாஷ். அன்று Gym சென்று உடல் பயிற்சி முடித்த பின் புல் வெளியில் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான்.அவனுக்கு பின்னே, ஒரு நடுத்தர வயது உடைய அமரிக்கன் தன் 10-வயது மகளுடன் நடத்தி கொண்டு இருந்த உரையாடலை கேட்க நேர்ந்தது. "Dad- where are your parents? Why are they not living with us?" என்று மகள் கேட்க அதற்கு அந்த தந்தை "Sweetie- they can't live with us- they are too old and manage by themselves" என்று பதில் அளித்தான். உடனே அந்த பெண் - my class mate Indira told me, that in India, they take care of their parents even when they are old- her grand parents are well looked after by their uncles and aunts- " is it true dad? குழந்தை தொடர்ந்து கேட்டது. அதற்கு அந்த அமரிக்கன் well yes- they have a different system dear- err I guess we cannot have that here என்றான். உடனே அந்த பெண் "Jesus ! i hate this system- living all for oneself- selfish we are - I gonna break this"- how forward indians are"என்று வியந்தது. "dad,when we plant a sappling, it grows into a tree and gives back more than what it has received- this is just ridiculous that you will not do something for your parents- tomorrow if don't do a thing for you would it be alright? என்று அப்பாவுடன் தொடர் விவாதத்தில் இறங்கியது. தன் கன்னத்தில்"பளாரென்று" ஒரு அரை விழுந்த உணர்வு ஏற்பட்டது பிரகாஷிற்கு.

கிருஷ்ணன் அண்ணா வழக்கப்படி கடைசி நிமிடத்தில் ஒதுங்கி கொண்டு விட்டார். தன்னால் இயலாது என்றும் மோகன் வந்து பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவான் என்று சொன்னார்.மோகனும் கிராமத்திற்கு வந்து சேர்ந்து விட்டான். கோபால் மாமாவும் லக்ஷ்மி மாமியும் புறப்பட தயாராக இருந்தனர். கதவு தட்ட படும் சத்தம் கேட்டது.

திறந்தால் பிரகாஷ் நின்று கொண்டு இருந்தான். "அப்பா-அம்மா நீங்கள் எங்கும் போக வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை-என் இறுதி மூச்சு இருக்கிறவரை நான் உங்களை- என் கண்ணின் இமையை போல் பார்த்து கொள்கிறேன்- என்னை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்கு இதை கூட நான் செய்யாவிட்டால்- ஒரு நாயிற்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட எனக்கு இல்லை என்று ஆகி விடும்" உணர்ச்சி பொங்க கூறினான். மோகன் அவன் அருகில் வந்து " அண்ணா- நானும் கிருஷ்ணன் அண்ணாவும் செய்ய தவறியதை நீ செய்து நீதான் உண்மையான பிள்ளை என்று நிரூபித்து விட்டாய்" - "என்னை நினைத்து வெட்க படும் நான் அதே நேரத்தில் உன்னை நினைத்து பெருமை படுகிறேன் என்றான், நான்கு ஜோடி கண்கள் அங்கே நீரால் பனித்தன.
சாந்தி’ கல்யாணம்
----------------------------
எழுதியவர்- சுந்தரேசன் சுரேஷ்
=========================

பிரம்மா கருப்பு "பெயிண்ட்"டப்பாவில் கை தோய்த்து விட்டு படைத்து விட்டானோ என்று எண்ண வைக்கும் நிறம் சாந்திக்கு (27).குள்ளம் என்றுதான் கூற வேண்டும்.இரட்டை நாடி சரீரம். தலையில் அதிக மயிரும் கிடையாது. தகர "டின்"இல் ஆணியால் இழுப்பதை ஒத்த குரல்.ஆக மொத்தம் "சாமுத்ரிகா"லக்ஷணம் ஒன்று கூட பொருந்தியவள...் இல்லை.இவளுக்கு எப்படி கல்யாணம் ஆக போகிறதோ என்ற கவலையே இவளது பெற்றோர்கள் நாகநாதன்-வசந்தா தம்பதியர்களுக்கு எப்போதும்.

பார்க்க நன்றாக இருக்க மாட்டாளே ஒழிய சாந்தி குணத்தில் தங்க கம்பி.வீட்டு வேலைகள் அத்தனையும் அத்துபடி.பெற்றோர்களை ஒரு வேலை செய்ய விடமாட்டாள்.வங்கிக்கு போவது,மின்சார கட்டணம்,தொலைபேசி கட்டணம் கட்டுவது,மளிகை-காய்கறி வாங்கிபோடுவது என்று வெளிவேலைகள் சகலமும் அவள்தான்.அதே மாதிரி உள் வேலைகள்- சமையல்,துணி துவைப்பது,பாத்திரம் தேய்ப்பது,பெருக்கி மெழுகுவது-என்று எல்லாவற்றையும் அவளே செய்து முடிப்பாள். அக்கம் பக்கத்தாரிடம் அப்படி ஒரு நல்ல பெயர். வலிய போய் உதவி செய்வாள். சாயங்கால வேளையில்,பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுப்பாள்.

அண்டை அசல் மாமிகள் எல்லாம் "நிறம் தான் கொஞ்சம் மட்டு"- "மத்தபடி இவளுக்கு என்ன குறை"?- "எல்லாருக்கும் என்ன குரல் எம்.எஸ் மாதிரி அமைஞ்சுடருதா"?- "ரெட்டை நாடியா இருந்த என்ன"?- "இப்ப குஷ்பூ குண்டா இல்லையா"?-"இவளுக்குன்னு ஒத்தன் பிறக்காமலா போயிருப்பான் "? - "வேளை வந்தா தானா நடக்கும்" என்று தங்களுக்குள் பேசிகொள்வார்கள். திருமணஞ்சேரிக்கு சாந்தியையும் அவள் பெற்றோர்களையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தவர்களும் அவர்களே.

நாகநாதன் "அம்மா சாந்தி-பிள்ளைக்கு பிள்ளையா,பெண்ணுக்கு பெண்ணா,இப்படி நீயே எல்லாம் பண்றத்துக்கு அந்த பகவான் உன்னை நன்னா வெக்கணும்"என்பார். வசந்தாவும் "இவளுக்கு நல்ல எடத்திலே கல்யாணம் ஆகணும்-குழந்த தீர்காயுசா இருக்கணும்"என்று சொல்வாள். சொல்லி விட்டு நாம் நினைத்தது ஆக மாட்டேன் என்கிறதே என்ற தாபத்தில் இருவரும் தவிப்பார்கள்,

ஒரு பிள்ளை வீட்டார், முகத்தில் அறைந்த மாதிரி இந்த மாதிரி பெண்களை வைத்து கொண்டு கல்யாணம் ஆக வேண்டும் என்று எதிர்பார்பதே தவறு என்று கூறினர். எங்காவது இரண்டாம் தாரமாக கட்டி கொடுங்கள் என்று இலவச ஆலோசனை வழங்கினவர்களும் உண்டு. மற்றும் சிலர் "ஏம்மா இப்போதுதான் பல "ப்யூட்டி-பார்லர்கள்"வந்துள்ளதே"- "அதற்க்கு போய் கொஞ்சம் நிறத்தையும் வெளுப்பாக மாற்றி கொண்டு,எடையையும் குறைத்து கொள்ள கூடாதோ" என்று ஹிதோபதேசம் செய்தனர். தான் இருக்கிறபடி ஏற்று கொள்பவர் நிச்சயம் ஒரு நாள் வருவார் என்பது சாந்தியின் திடமான நம்பிக்கை.

ஒரு வாரத்திற்கு முன் தெரிந்தவர்கள் மூலமாக ஒரு ஜாதகம் பொருந்தி இருந்தது.நாகநாதன் முன்னாடியே சொல்லி விட்டார். முதலில் பெண்ணின் "போட்டோவை" பாருங்கள். சம்மதம் என்றால் நேரில் வந்து பெண் பாருங்கள் என்று. பையன் பெயர் விவேக்- B.Tech., M.B.A.- Cognizant இல் வேலை-ஆறடி உயரம்- உயருத்துகேற்ற பருமன்- கோதுமை நிறம்- "ஜம்மென்று ஹிந்தி சினிமா ஹீரோ மாதிரி இருந்தான். நாகநாதனுக்கும்,வசந்தாவிற்க்கும் நம்பிக்கையே இல்லை. "திரும்ப ஒரு முறை சொஜ்ஜி-பஜ்ஜி- சாப்பிட்டுவிட்டு போக போகிறார்கள்"- "பாவி பெண்ணுக்கு எப்போதுதான் வாழ்கை அமைய போகிறதோ"? என்று நொந்து கொண்டனர்.

பெண் பார்க்க வர போகிறார்கள் என்று கேள்விபட்டதில் சாந்திக்கு விசேஷமாக ஒரு உணர்ச்சியும் ஏற்படவில்லை. அப்பா,அம்மா கவலை தீருவதற்க்காவது நமக்கு இந்தே இடம் அமையட்டுமே என்று நினைத்து கொண்டாள். தோழி ஒருத்தி "ஒவ்வொரு திங்க கிழமையும்,பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று,சிவனுக்கு தலையில் பால் விட்டு பாரு"-"நிச்சயமாக தகையும்" என்று சொன்னதை செய்யலாம் என்று நினைத்து கொண்டாள்."இந்த எடமும் முடியலே என்றால் கொஞ்சம் விஷத்தை வாங்கி அவளுக்கும் கொடுத்துவிட்டு நாமும் சாப்பிட வேண்டியதுதான்- வேறு வழியே தெரியல்லே" என்று நாகநாதன் வசந்தாவிடம் புலம்பியதை கேட்டதில் இருந்து வேற இவளுக்கு மனசே சரி இல்லை.

குறிப்பிட்ட நாளும் வந்தது. விவேக்கின் அப்பா,அம்மா,சகோதரி மூவரும் வந்தனர். பெண் பார்த்து விட்டு சென்றனர். "போய் அப்புறம் தகவல் தெரிவிக்கிறோம்" என்ற ஆரம்பித்த அப்பாவை இடைமறித்தான் விவேக். நாகநாதனை நோக்கி "கொஞ்ச நேரத்துக்கு எங்களுக்கு ஒரு தனி அறை ஒதுக்கமுடியுமா"? "எங்களுக்குள் பேசி கொள்ள" என்று கேட்டான். உள் அறையை காட்டினார் நாகநாதன். இங்கிதம் தெரிந்து அங்கிருந்து நகர்ந்து கொண்டார்.

விவேக்கின் அம்மாதான் ஆரம்பித்தாள்"பொண்ணு பாக்க நன்னாவே இல்லையே"- "கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட பரவாயில்லை"-"கை காரியம் எல்லாம் தெரியுமாம்"-"வீட்டையும் நறுவிசா வைத்து கொண்டு இருக்காள்" என்றாள். "அம்மா எதுத்து பேசறேன் என்று நினைக்காதே"- "இவ்வளுவு நல்ல குணங்கள் இருக்கும் போது பார்க்க நன்றாக இல்லை என்று ஒரே காரணுத்துக்கா வேண்டாம் என்று சொல்வது சரி இல்லை"-"நான் தான் அவள் கூட வாழ போறேன்"- "எனக்கே சரி என்று படுகிற போது- உங்களுக்கு என்னம்மா"? என்றான். விவேக்கின் அப்பா ஒரு பரமார்த்தி. பிள்ளை எது செய்தாலும் சரியாக இருக்கும் என்று நம்புபவர். அவர் வாயே திறக்கவில்லை. சகோதரி விவேக்கிடம் "விவேக்- கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்"- "எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க முடியாது- எடுக்கவும் கூடாது"-"உனக்கு நல்ல 'பெர்சனாலிட்டி"இருக்கிறது"- "இவளை அழைத்து கொண்டு வெளியில் வாசலில் சென்றால் பொருத்தமாக இருக்காது"-"பிரசன்னாவும் பிந்து கோஷும் போகிறார்கள் என்று கேலி பண்ணுவார்கள்" - "எல்லாவற்றையும் யோசிக்கணும்"- "குழந்தைகள் இவளை கொண்டு பிறந்தால்" என்றாள். விவேக் "அக்கா நீ சொல்வது சரி"- "இதில் இரண்டு மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது"-"முதலாவது, Beauty is only skin deep" -" உனக்கு தெரியாதது இல்லை"- "கல்யாணம் ஆனா புதிதில் மன உணர்சிகளை விட உடம்பு கவர்ச்சி முக்கியமாக படுமே ஒழிய, ஓரிரு குழந்தைகள் பெற்ற பின்னர் உடம்பை விட மனமே முக்கியமாக ஆகிவிடும்" - "சாந்தி எனக்கு ஒரு நல்ல மனைவியாக,எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாக, நம் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மருமகளாக இருப்பாள் என்று நம்புகிறேன்"-"இரண்டாவதாக marriages are made in heaven"- "இந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டு இதை விட அழகு குறைந்தவளை பண்ணிகொள்ளும் நிலைமையும் ஏற்படலாம்"- "அப்புறம் நீ சொன்னே குழந்தைகள் பற்றி- "நம் அப்பா அம்மா இருவரும் மாநிறம்"-"சராசரி உயரம்"- "உனக்கும் எனக்கும் இந்த 'கோதுமை கலர்' எங்கிருந்து வந்தது"?- "எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பெண் எவ்வளுவு முறை நிராகரிக்கப்பட்டு இருப்பாள்"-"எவ்வளுவு முறை மனதிற்குள்ளேயே ஊமை அழுகை அழுதிருப்பாள்"- "இப்போது நாமும் வேண்டாம் என்று சொல்லி விட்டால், அவள் மனசு என்ன பாடு படும்"- "அதை பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு நமக்கு இல்லையா"? "ஆண்டவன் கொடுத்த அங்க அமைப்புகளையும்,நிறத்தையும் வைத்து கொண்டு மனிதர்களை உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்று வகை படுத்துவதும்,ஏற்ற-தாழ்வு பார்ப்பது அநியாயம் மட்டும் அல்ல- அக்கிரமும் கூட"ஒரு நீண்ட பிரசங்கமே செய்து முடித்தான் . விவேக்கின் பேச்சில் இருந்த உண்மைகள்- அவன் வாதத்தில் இருந்த நியாயம்- அவன் பெற்றோரையும்,சகோதரியையும் யோசிக்க வைத்தது. கடைசியில் "உனக்கு இஷ்டம் என்றால் சரி" என்றனர்.

நாகநாதன்-வசந்தா தம்பதியரின் தவிப்பா,தன்னால் தன் பெற்றோர்களுக்கு எவ்வளவு கவலை என்ற சாந்தியின் வருத்தமா, மற்றும் அவளின் உருக்கமான பிரார்த்தனையா, சிவன் தலையில் ஊற்ற பட்ட பாலா அல்லது எல்லாம் சேர்ந்த கலவையா- எது விவேக் மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை அந்த குடும்பத்திற்கு கிடைக்க காரணமாக இருந்தது என்பது சொல்வது கடினம்.
இடுக்கண் களைவதாம் நட்பு
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
============================
கவிதாபிரியன் (இயற் பெயர் முருகேசன்) இளம் வயதில் இருந்தே தமிழில் ஆர்வம் மிகுந்தவன்.காரைக்குடி பக்கம்-அதனால் கவிதை காற்று அடித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை .பள்ளிக்கூடம்,கல்லூரியில் படிக்கும்போது கதைகளும்,கவிதைகளும் எழுதுவான். ஆனால் அவன் தமிழ் ஆர்வத்திற்கும் நடை-உடை-பாவனைக்கும் சம்மந்தமே இருக்காது.தற்கால நாகரீக இளைஞர்கள் ப...ோல 'ஜீன்ஸ்','டி-ஷர்ட்' தான் அணிவான். முன்தலை வழுக்கை தள்ளியிருக்கும்.ஒல்லியான தேக வாகு.கண்களில் ஒரு அறிவு கூர்மை-தீக்க்ஷண்யம் தெரியும்.

இளங்கலை படிப்பை அழகப்பா பல்கலைகழகத்தில் முடித்து விட்டு சென்னை வந்தான். அப்பாவுக்கு ஊரிலே எண்ணை வியாபாரம். "முருகு சொன்னா கேளு"-"நமக்கு இருக்கற சொத்துக்கு வெளில வேல செய்ய வேண்டிய அவசியமே இல்லை"-"நல்ல பெண்ணா பார்த்து கட்டிக்கிட்டு ஊரோட இருந்துடு" என்று அப்பா-அம்மா இருவரும் சொல்லி பார்த்து விட்டார்கள். "நா ஏதாவது முயன்று சாதிச்சு காட்டணும்"-"என் உணர்வுகளை புரிஞ்சுக்கங்க" என்று சொல்லி விட்டான்.”எப்படியோ முருகு நல்லா சம்பாதிச்சு,நல்ல பெயர் எடுத்தா சரி” என்று விட்டு விட்டனார்.

சென்னைக்கு வந்தவுடன் வேலைக்காக முயற்சிக்காமல் தன் உள்-மனசு சொன்னபடி சினிமா துறையை குறி வைத்தான். ஆனால் தெரிந்தவர்களோ, சிபாரிசு செய்யகூடியவர்களோ இல்லாததால் வாய்ப்புக்கள் கிட்டவில்லை. விளம்பர படங்களுக்கு துக்கடாக்கள், கட்சி கூட்டங்களுக்கு,கொள்கையை ஒட்டிய வாழ்த்து பாடல்கள் என்று ஏதோ எழுதி வயிற்றை கழுவி வந்தான். கவிதை அரங்குகளுக்கும்
அவ்வப்போது போவான். வானவில்லிலின் கோடியில் இருக்கும் தங்க குடத்துக்காக காத்திருந்தான்.
முருகுக்கு சினிமா துறையில் அறிமுகம் ஆனவன் ‘பாபி(இயற்பெயர்=ஏழுமலை)’. பாபியிடம் பேச தோன்றியதே அவனின் பெயரால் தான். “அண்ணே-அது என்ன ஒங்க பேரு பாபி என்று”-கேட்டவன் முருகு.அதற்கு ஏழுமலை “ஏன் அவசியம் தெரிய வேண்டுமா”? என்று இடக்காக கேட்டான்.பிறகு என்ன தோன்றியதோ”சொல்கிறேன் கேள்”-”’பா”என்பது பாட்டு என்பதின் சுருக்கம்;’பி” என்பது படைப்பு கடவுளான பிரம்மாவை குறிக்கும்”- “நான் பாட்டை படைப்பதால் நானும் பிரம்மாவே”- ‘பா’ + ‘பி’= ‘பாபி. “எப்படி என் பெயர் விளக்கம் என்றான்”.வாய் விட்டு சிரித்தனர் இருவரும். சம வயதினர். இருவருமே முன்னேற முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளம் பாடலாசிரியர்கள். ஆனால் அவ்வளவு தான் அவர்களுக்கு உள்ளே ஒற்றுமை.
பாபிக்கு படிப்பு என்று ஒன்றும் பெரியதாக கிடையாது. கன்னியாகுமரி பக்கம்- வீட்டை விட்டு ஓடி வந்தவன். பெற்றோர்,உற்றார்-உறவினர்களை பற்றி ஒரு நாளும் பேசியதில்லை. ஒரு வளரும் நடிகையுடன் காதல் மலர்ந்து,அது அவள் வயிற்றில்’வளரும்” வரை போய் பின்பு தோல்வியில் முடிந்த்தாக கேள்வி. எப்போதும் வேட்டி-பட்டு ‘ஜிப்பா’-‘பான்-பராக்’ மெல்லும் வாய்-‘பாகவதர்’கிராப் என்று ‘ஷோக்’ பேர்வழி. பல பிரபலமான பாடல் ஆசியர்களுக்கு தான் “கோஸ்ட”ரைட்டிங் செய்வதாக சொல்வான்.முருகுவுக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. பாபிக்கு ஒரு கெட்ட பழக்கம் ‘பாக்கி’ கிடையாது. இருந்தும் இருவருக்கும் இடையே ஒரு பாசமும் அன்பும் கலந்த நட்பு மலர்ந்த்து.

என்ன் “முருக ‘சத்யஜோதி’ பிலிம்ஸ் புது படம் பண்ராங்களாம்”-“டைரக்டர் நம்ம ஆளு தான்- உனக்கு நிச்சயம் ‘சான்ஸ்’ வாங்கி தரேன்” என்பான். தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். “மணி ஸார் கூப்பிட்டு”பாபி- என் அடுத்த படம் ‘பொலிடிகல் திரில்லர்’-நீங்க தான் 3 பாட்டு எழுதணும்””இந்தாங்க ‘அட்வான்ஸ் செக்” அப்படினார்-“அரசியல் கதை நமக்கு தோது படாது”-மன்னிச்சுகங்க” அப்படின்னு சொல்லிட்டு வந்தேன் என்று ‘புருடா’ விடுவான்.எந்தெந்த ‘டைரக்டர்கள்’ யார் யாருடன் படுத்து எழுந்திருக்கிறாக்ள் என்பது முதல் எந்தெந்த நடிகை யாருடைய ‘செட்-அப்” அல்லது ‘சின்ன-வீடு’ என்பது வரை எல்லா விவரங்களையும் நுனி விரலில் வைத்து இருப்பவன்.

மிகுந்த இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பீன்னர், முருகுவுக்கு ‘டைரக்டர்’ ஷங்கரின் “சத்திய பிரமாணம்” என்ற படத்தில் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. பாடல் காட்சிகள் எல்லாம் அருமையாக வடிவமைக்கபட்டு,வெளிநாட்டு ‘லொகேஷன்களில்’ படம் பிடிக்கபட்டு இருந்தன..படம் வெளியாகி பாட்டெல்லாம் பெரிய அளவில் ‘ஹிட்’ஆயின. ரசிகர்களும்,விமர்சகர்களும் ஒருமித்தே முருகுவின் திறமை பற்றி புகழ்ந்து தள்ளினர். தொலைகாட்சி,பத்திரிகைகள் எல்லவற்றிலும் முருகுவின் புகைபடங்கள்,பேட்டிகள். ஊரில் முருகுவின் பெற்றோர்களுக்கு ஒரே பெருமை. பாபி சந்தோஷம் தாங்காமல் “முருகு-ஜெயிச்சுட்டே- பெரிய ஆளுப்பா நீ- சொந்த முயர்சியாலே முன்னுக்கு வந்துட்டே-‘இனிமே ஒரு பய உன்னை கட்டி பிடிக்க முடியாது” என்று புகழாரம் சூட்டினான்.

அந்த ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் ‘ஃபிலிம்ஃபேர்’விருது முருகுக்கு வழங்க பட்டது. எல்லோரும் ‘தமிழ் நாடு”அரசு விருதும் அவனுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அது கிடைக்கவில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு வேண்டிய பாடலாசிரியரான ‘குடந்தை குமரேசனுக்கு’ ‘ஆளுமை’ என்ற ஒரு இரண்டாம் தரமான படத்துக்காக வழங்கப்பட்டது.அவர் சுமாராகத்தான் எழுதுவார். அத்தொடு, இதற்கு முன்னரும் ஒரு முறை இந்த விருது வாங்கியவரே. கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் தன் திறமைக்கு ஒரு நாள் தனக்கு இது நிச்சயம் கிடைக்கும் என்று நம்பினான் முருகு.பெரிசாக் எடுத்துகொள்ளவில்லை. ஆனால் கொதித்து எழுந்தான் பாபி “ஜால்ரா பய”-“பேனா பிடிக்க தெரியாது”-“இவனுக்கெல்லாம் விருது ஒரு கேடா”-“பாக்க வேண்டியவனை பார்த்து குடுக்க வேண்டியதை குடுத்து இருப்பான்”-என்று குடந்தை குமரேசனை ஏக் வசனத்தில் திட்டி தீர்த்தான்.

விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பு முருகுவுக்கும் வந்த்து. அவனும் சென்றான். விழா முதலமைச்சரின் தலைமையில் நடந்து கொண்டு இருந்த்து. ஒவ்வொரு ‘விருதாக வழங்கபட்டு கொண்டு இருந்த்து. இந்த ஆண்டிற்கான் சிறந்த பாடலாசிர்யர் விருதை பெறுபவர் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான குடந்தை குமரேசன்- அவரை இப்பொது பரிசை பெற்றுகொள்ள மேடைக்கு அழைக்கிறோம் என்றார் நிகழ்சி தொகுப்பாளர்.மேடை ஏறி ‘மைக்” அருகே சென்ற குமரேசன் “எல்லோருக்கும் வணக்கம்- நான் இந்த பரிசை ஒருமுறை வென்றுள்ளேன்.மேலும் நாம் வளரும் கலைஞ்ர்களை ஊக்குவிக்கவேண்டும்-ஆதலால் நம் முதலமைச்சரின் அனுமதியுடன் இந்த பரிசை திரு.கவிதாபிரியன் எனகிற் குமரேசனுக்கு அளிக்கிறேன்”- அவரை மேடைக்கு வர சொல்லி கெட்டு கொள்கிறேன்” என்றார். கூட்டம் முதலில் ஸ்தம்பித்துவிட்டது.விஷயம் விளங்கிய பின்,மக்கள் கூட்டத்தின் கூக்குரலும், கரவொலியும் வானை தொட்டது.முருகுவுக்கும் ஒன்றும் புரியவில்லை. மெல்ல எழுந்து மேடையை அடைந்து பரிசினை பெற்று கொண்டான். ஒரு ஜோடி கரங்கள் கொஞ்சம் அதிக நேரம் தட்டிகொண்டு இருந்தன. அவை பாபிக்கு உரியவை.

பாபி குமரேசன் வீட்டிற்கு சென்று,அவர் தான் பரிசை ஏற்றுகொள்ளாமல் அதை முருகுவுக்கு விட்டுகொடுக்க வேண்டும்,இல்லாவிட்டால் அவர் ‘சின்ன-வீட்டு’விவகாரத்தை வெளியில் இழுத்துவிட்டு நாற அடித்துவிடுவதாக மிரட்டி விட்டு வந்ததை நான் இப்போது சொல்லவிட்டல் உங்களுக்கு எப்படி தெரிய.போகிறது?
மன மாற்றம்
------------------------
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
=====================
ரமணனின் கையில் இருந்து செய்தித்தாள் 'வெடு'கென்று பிடுங்கப்பட்டது. பிடுங்கியது அவரது மகன் திரு கார்த்திக். பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை அதிகாரி."நீங்கள் ஆத்தில் தானே இருக்கிறீர்கள்"-" அப்புறம் நிதானமாக பார்த்தால் போதாதா"?"எனக்கு போட்டியாக இப்போதுதான் பார்க்க வேண்டுமா" ?என்று கடுமையான சொற்கள் வேறு. "எனக்கு ஒன்றும் ...அவசரம் இல்லை"- "ஒருவரும் பார்க்க வில்லையே என்றுதான் பிரட்டி கொண்டிருந்தேன்" என்று சமாதானாமாக கூறினார் ரமணன்.

"தங்கம்- இங்கே கொஞ்சம் வரயா"?-"இரண்டாவது தடவை 'காபி' குடுக்கிறாயா"? என்று தன மனைவியை விளித்தார். பதில் வந்ததோ மாட்டு-பெண் சுமித்ராவிடம் இருந்து "இப்ப என்ன அவசரம் காப்பிக்கு"? "முதல்லே அம்மா உங்க பிள்ளைக்கு சிற்றுண்டி தயார் செய்து முடிக்கட்டும்"-"அப்புறம் இருக்கவே இருக்கிறது உங்களுக்கு 'காபி' கொடுப்பது " என்று குண்டூசியால் குத்துவதை போல் வார்த்தைகளால் குத்தினாள். தங்கம் இடையில் புகுந்து "அதில்லை சுமித்ரா"-"அப்பா இப்போ 'ரத்த-கொதிப்பு மாத்திரை சாப்பிடணும்"_"காபியை குடித்து விட்டு போட்டுக்கலாம் என்று கேட்டு இருக்கிறார்" என்றாள்.

ரமணன் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் தணிக்கை அதிகாரியாக பணி புரிந்து மூன்று மாதம் முன்பு ஒய்வு பெற்றவர். அதிலிருந்து அவருக்கும் சரி அவர் மனைவி தங்கத்துக்கும் சரி வாழ்க்கை நரகமாகி விட்டது. மகன் கார்த்திக்கும் மருமகள் சுமித்ராவும் வார்த்தைகளால் குத்துவதையே வழக்கமாக்கி கொண்டுவிட்டார்கள். மிகுந்த ஆசையோடும்,பிரியத்தோடும் இருந்தவர்கள் தான். ஓய்வு பெற்றதினால் வருமானம் நின்று விட்டது என்ற எண்ணத்தினாலோ, குடும்பத்துக்கு பாரமாக ஆகிவிட்டார் என்று தோன்றியதாலோ-என்ன காரணமோ சதா சர்வ காலமும் ஊசி பட்டாசாக வார்த்தைகளை பிரயோகித்தனர் கார்த்திக்கும்,சுமித்ராவும். உட்கார்ந்தால்,குற்றம்,எழுந்தால் குற்றம். சீக்கிரம் குளித்தால் " உங்களுக்கு இப்போ என்ன அவசரம்"?-"அவர் அலுவலகத்திற்கும் ,குழந்தைகள் பள்ளிக்கும் கிளம்ப வேண்டாமா"? என்று கத்தல். தாமதமாக குளிக்கலாம் என்று காத்து கொண்டிருந்தால் "வயசு ஆகி இருக்கிறதே வழிய இங்கிதம் கிடையாது"-"காலையில் சீக்கிரம் குளித்து விட்டு பூஜை அறையில் நேரத்தை செலவழிப்போமே என்று தோணாதோ"? என்ற அங்கலாய்ப்பு.

ஏதோ குழந்தைகள் ஆர்த்தியும் (10 வயது - 5ம் வகுப்பு) ஆகாஷும் (6 வயது-2ம் வகுப்பு) ஒட்டுதலாக இருப்பதால் ஓடி கொண்டு இருந்தது. பேத்தி சொல்லுவாள் "அம்மா பாட்டுக்கு சொல்லி கொண்டு இருக்கட்டும் பாட்டி"- "நீங்க ஒண்ணும் மனசில எடுத்துக்காதீங்க" என்று. ஆகாஷ் இன்னும் சிறியவன் ஆனதால் "தாத்தா-நேற்று ராத்திரி என் சொப்பனத்தில் ஒரு தேவதை வந்தாள்"-"அவளிடம் அப்பா-அம்மா மனசில் புகுந்து உங்களை மரியாதையுடன் நடத்துமாறு மாற்ற சொல்லி இருக்கிறேன்" என்று குழந்தைத்தனமாக கூறுவான். தாத்தா-பாட்டி தங்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து,வாயெல்லாம் பல்லாக "என் ராஜா- என் செல்லம்" என்று பேரனை உச்சி முகருவார்கள்.

தங்கம் அதுவும் ரமணனை உள்ளங்கையில் வைத்து தாங்குபவள். கணவரை யாராவது ஏதாவது சொன்னால் தாங்க மாட்டாள். ஒரு முறை சொல்லி கூட இருக்கிறாள்"ஏங்க- நமக்கு என்ன தலைஎழுத்து இவங்க பேச்சை கேட்டு கொண்டு இங்க இருக்கணும் என்று?"-"உங்க ஓய்வு தொகையில் ஒரு பகுதியை ஏதாவது 'முதியோர் இல்லத்தில்' வைப்பு நிதியாக செலுத்திவிட்டு அங்கே போய் நிம்மதியாக இருப்போமே" என்று. ரமணன் தான் அவளுக்கு புரிய வைப்பார் "அசடு- வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசாதே"-"தலைமுறை இடைவெளி-மற்றும் தற்கால 'அவசர வாழ்க்கை' முறை ஆகியவற்றால் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படுவது சகஜம்"-"அதற்காக மூட்டை முடிச்சை தூக்கி கொண்டு கிளம்புவது தீர்வு அல்ல"- "நாம் போய்விட்டால் பெரியவர்களின் ஆதரவும் அறிவுரைகளும் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்?- "குழந்தைகள் எவ்வளுவு ஒரு அன்பான,அக்கறையான சூழ்நிலையில் வளர்கிறார்கள்"-"இதையெல்லாம் யோசித்து பார்க்க வேண்டாமா" ?என்பார். அவர் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த தங்கம் "நீங்கள் சொல்வதும் வாஸ்தவம் தான்" என்று ஒப்பு கொள்வாள்.

பக்கத்து வீட்டு பாரதி மாமி "சுமித்ரா- உன் மாமியார் இருக்கிறார்களா"? என்று கேட்டாள். "என்ன விஷயம் மாமி"என்றாள் சுமித்ரா. "ஒன்றும் இல்லை"- ஒரு வாரமாக வாயெல்லாம் புண்ணுடன் ரொம்ப கழ்டப்பட்டேன்"-"தங்கம் மாமி தான் தேங்காயை துருவி அதன் பாலை பிழிந்து வாயில் அடக்கி கொள்ளுமாறு வைத்தியம் சொன்னாள்"-"இப்போ நல்லா தேவலை"-அதான் நன்றி சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன்" என்றாள்."பெரியவா ஆத்தோடு இருந்தா எவ்வளவு வசதியா இருக்கு"-"நமக்கு தான் அவா அருமை தெரியலே" என்றாள்.மாமி பொதுவாக சொன்னாலும் தன்னை தான் குறிப்பிட்டு சொல்கிறாளோ என்று சுருகென்றது சுமித்ராவுக்கு.

அலுவலகத்தில் மேலதிகாரி கார்த்திக்கை கூப்பிட்டு அனுப்பினார்."கார்த்திக்- இந்த மாசு-கட்டுப்பாடு சான்றிதழ் விஷயம் ரொம்ப நாளாக இழுக்க அடித்து கொண்டு இருக்கிறது"-" சான்றிதழ் நம் கைக்கு வரவில்லை என்றால் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனையில் மற்றும் ஏற்றுமதியில் பெரிய பிரச்சனை வர கூடும்" -"நீ மிகுந்த திறமைசாலி என்பதால் தான் இந்த பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்" "நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார். "என் மேல் இந்த அளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு ரொம்ப நன்றி" "முழு முயற்சியும் செய்கிறேன் ஐயா" என்று பணிவுடன் கூறினான் கார்த்திக்.

அறையை விட்டு வெளி ஏறிகொண்டு இருந்த கார்த்திக்கை மேலதிகாரி "ஒரு நிமிடம் கார்த்திக்"-"எனக்கு கிடைத்த தகவல்படி இப்போது பதவியில் இருக்கும் அதிகாரி, எல்லா முடிவுகளும், தனக்கு முன் இந்த பதவியில் இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்ற, அதிகாரியை கலந்து ஆலோசித்த பின்னரே எடுப்பதாக கேள்வி"-"அவரை போய் பார்ப்பது பயனளிக்க கூடும் என்று தோன்றுகிறது" என்றார்- "எல்லா கோணங்களிலும் முயற்சி செய்து வெற்றி அடைய பார்கிறேன் ஐயா" என்றான் கார்த்திக்.

மாசு கட்டுப்பாடு அலுவலகத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியின் தொலைபேசி எண்ணை பெற்று கொண்டு அவரை முதலில் பார்க்கலாம் என்று நினைத்தான் கார்த்திக். ராஜா அண்ணாமலை புறத்தில் இருந்த அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை அறிமுக படுத்திக்கொண்ட பின்னர், இன்ன விஷயமாக அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினான் அவன். எப்போது வேணுமானாலும் வரலாம் என்றும் தன்னால் முடிந்த உதவியை கட்டாயம் செய்வதாகவும் அன்போடு கூறினார் அந்த அதிகாரி. அவரை சந்தித்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி "தாங்கள் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தணிக்கை அதிகாரி திரு ரமணனின் மகன்தானே"? என்று. கார்த்திக் ஆமாம் என்று தலை ஆட்டியவுடன் "உங்கள் அப்பாவிடம் நான் அலுவலக வேலை நிமித்தமாக பல முறை தொடர்பு கொண்டு இருக்கிறேன்"-"அந்த மாதிரி ஒரு நேர்மையான அதிகாரியை நான் சந்தித்ததே இல்லை"-"அவருடைய மகனாகிய தங்களுக்கும் அதே நேர்மை உணர்வு இருக்கும்"- "இப்போதே நான் எங்கள் அலுவலக அதிகாரியை தொலைபேசியில் அழைத்து உங்களுக்கு தேவையான சான்றிதழை வெளியிட சொல்கிறேன்"என்றார். "ஐயா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை"-"இந்த நன்-மதிப்புக்காகவும் நற்பெயருக்காகவும் என் அப்பாவுக்கு எந்த அளவு கடமை பட்டுள்ளேனோ அதே அளவு உங்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன் " என்று கூறி விடை பெற்றான்.

அன்று இரவு வீடு திரும்பிய கார்த்திக், சுமித்ராவிடம் நடந்ததை எல்லாம் கூறினான். கேட்டு கொண்ட சுமித்ரா தன் பங்குக்கு பாரதி மாமி சொன்னதை தெரிவித்தாள். கூடவே "இதோ பாருங்க"-"ரெண்டு பேருக்கும், ஒரே நாளிலே,கிட்டத்தட்ட ஒரே மாதிரி --பெரியவாளோட அருமையை புரிய வைக்கிற மாதிரி நிகழ்ச்சி நடந்து இருக்கிறது என்றால் இது தற்செயல் அல்ல" என்றாள். அவள் கூற்றை ஆமோதித்த கார்த்திக் "நமக்கு எதையோ புரிய வைக்க-நம்ம கண்ணை திறக்கிறதுக்காகத்தான் இது நடந்து இருக்கிறது என்று தோன்றுகிறது" -"வா அப்பா அம்மாவை போய் நமஸ்காரம் பண்ணிட்டு"-"நம்ம தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டு"-"இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துப்போம்" என்றான்.

ரமணன்-தங்கம் இருவருக்கும் திடீரென்று தங்களை நிற்க வைத்து "இன்றுதான் எங்கள் இருவருக்கும் உங்கள் அருமை புரிந்தது"-"எங்களை மன்னியுங்கள்" என்று கூறி மகனும்-மருமகளும் ஏன் தங்கள் காலில் விழுகிறார்கள் என்று புரியவில்லை
தீர்க்க சுமங்கலி
============
எழுத்து:சுந்தரேசன் சுரேஷ்
-------------------------------------

சற்றே ஒடிசலான தேக வாகு. எப்போதும் ஒன்பது கெஜம் மடிசார் புடவை. சீட்டி துணியில் இரவிக்கை. மஞ்சள் தேய்த்து குளித்த முகம். நெற்றியில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம் அளவிலான குங்கும பொட்டு. இதுதான் பர்வதம் மாமி.

கும்பகோணத்தை அடுத்த அந்த குக்கிராமத்தில் தனியாக வாசம். மாமியின் அகத்துகாரரை பற்றிய செய்திகள் ஒரு மர்...மம். சொற்ப நிலத்தில் வரும் விளைச்சலை வைத்து கொண்டு காலம் தள்ளுபவள். யாராவது வம்புக்காக "மாமி நீங்க பாட்டுக்கு சுமங்கலியா வளைய வந்து கொண்டு இருக்கிறேள்"-"உங்க ஆத்துகாரர் இருக்கார் என்று என்ன நிச்சயம்"? என்று கேட்டால் போறும் அவ்வளுவுதான் மாமிக்கும் கோபம் பொத்துக்கொண்டு வரும் "கட்டலே போறவனே"-"உனக்கு என்ன வந்துடுத்து இப்போ"? "நா என்னிக்கும் தொங்க தொங்க தாலிய கட்டிண்டு இருக்கற நித்ய-சுமங்கலி தான்"-"தெரிஞ்சுக்கோ"- என்று சூடாக பதில் அளிப்பாள்.

குளத்தங்கரையில், கோவிலில் என்று எல்லா இடங்களிலும் அந்த ஊர் பெண்களின் நாக்கு வம்பு பேசி கொண்டுதான் இருக்கும். "இவ குணம் சரியாக இல்லாததை கண்டு தான் மாமா ஓடி போயிட்டாராம்"என்றும் "வேற ஆம்பிளையோடு இவ தொடர்பு வைத்து இருந்ததை தாங்க முடியாம தான் அந்த பிராமணன் எங்கோயோ 'அந்தர்-தியானம்' ஆயிட்டாராம் என்றும் பலவாறாக விமர்சிப்பார்கள்.

"நாக்குல நரம்பில்லாம பேசற பெண்கள் எல்லாம் அடுத்த ஜன்மத்திலே அரணையா பிறக்க போறா"-"பாத்துண்டே இரு"-"இந்த பர்வதத்தை தாறு-மாறா பேசினா அந்த பாவம் சும்மா விடாது" என்று கறுவுவாள். இவள் வாயில் புகுந்து புறப்படவேண்டாம் என்றே கிராமத்து பெண்கள் இவள் வம்புக்கே வரமாட்டார்கள்.

"என்னிக்காவது ஒரு நாள் அந்த மனுஷன் வரத்தான் போகிறார்"-"இவளுக வாயை அடைக்கத்தான் போகிறார்" என்று சொல்லுவாள்.

"காஞ்சி பரமாசார்யாளே சொல்லி விட்டார் நீ சுமங்கலின்னு"-”அப்புறம் இவாளூக்கு பேசறதுக்கு என்ன வாய் இருக்கு”-"ஒரு தடவை நமஸ்காரம் பண்ணி என்னோட குறையை சொன்ன போது பெரிய்வா மஞ்சளையும் குங்குமத்தையும் எடுத்து கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினார்"-“இதை விட நா சுமங்கலி என்கிறதுக்கு என்ன அத்தாட்சி வேணும்”?- "இவளுக பெரிய பதிவிரதைகள்,என்னை பற்றி குறை சொல்ல வந்துட்டாளுகள்" என்று கூறுவாள்.

மாமிக்கு கிட்டதட்ட 70 வயது இருக்கும். "இனிமேலும் இவ புருஷன் வரப்போகிறார் என்று நம்புவதெல்லாம் சுத்த பேத்தல்"-"மனுஷன் உயிரோட இருக்காரோ இல்லையோ அதுவே தெரியாது"-அப்புறம் இவ இருக்கறதை தெரிஞ்சிண்டு இந்த ஊரை தேடி கண்டு பிடித்து வருவது என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி " என்று தங்களுக்குள் பேசி கொள்வார்கள் அந்த ஊர் மக்கள்.

"எந்த எழவெடுத்தவன் என்ன வேணுமாலும் பேசட்டும்"- "அவா நாக்கு அழுகி போகும்"-"எங்க ஆத்துக்காரர் வரபோவதும் நிச்சயம்"-"நான் சுமங்கலி என்பது நிரூபணம் ஆகப்போவதும் உண்மை" என்று தீர்கமாக கூறுவாள்.

"எனக்கு கல்யாணத்தின் போது 15 வயது"-"மனுஷன் என்னை தன்னந்தனியா விட்டுட்டு போறத்தே 18"-"இப்போ 70வதை தொடபோறேன்"- ஒருவர் காணாம போய் 15 வருடங்கள் வரை அவரை பற்றி எந்த தகவலும் இல்லேன்னா, மனித நடமாட்டமே இல்லாத காட்டு பிரதேசதத்தில் அவர் பெயரை உரக்க சொல்லி கூபிடணுமாம்"-"எதிரொலி கேட்டால் அவர் உயிரோடு இருப்பதாக அர்த்மாம்"- “கேட்காவிட்டால் மரணம் அடைந்து விட்டதாக எடுத்துக்கணுமாம்" என்று ஒரு பெரியவர் சொன்னதை கேட்டு இருக்கிறேன்”-“நானும் அந்த மாதிரி செய்து இருக்கேன்"-"எதிரொலியும் கேட்டு இருக்கு"-"அதுனாலே நிச்சயமா அவர் இருக்கார்"-'இதெல்லாம் இந்த அசமஞ்சங்களுக்கு எங்கே புரிய போகிறது" என்று சொல்லுவாள் மாமி.

மாமியின் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்து எறிகிற மாதிரி அந்த கடிதம் வந்தது. "பஞ்சாமி இறந்துவிட்டார்"(அதுதான் பர்வதம் மாமியின் கணவரின் பெயர்)- "உடல் அடக்கம் செய்யப்பட்டது"-"ஈம சடங்குகளை எங்கள் (கிருஸ்துவ)மதத்தின் முறைப்படி வரும் ஞாயிற்று கிழமை செய்ய உள்ளோம்"-"தங்கள் விலாசம் அவர் பெட்டியில் இருந்ததால் இந்த விவரம் தங்களுக்கு தெரிவிக்கபடுகிறது"-"அவரது மிச்சமுள்ள உரிமைகளை இந்த கடிதத்தை காட்டி வந்து பெற்று செல்லவும்" - என்ற அந்த கடிதத்தின் வாசகங்கள் பர்வதம் மாமியின் தலையில் கல்லை தூக்கி போட்டது, மேலாளர், புனித அந்தோணியர் அனாதை இல்லம்-கிழக்கு தாம்பரம்-சென்னை என்ற விலாசத்தில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது.

கிராமத்தில் மெல்ல செய்தி பரவியது. எல்லோரும் எதிர்பார்த்தபடி பர்வதம் மாமி கூக்குரல் இட்டு அழவும் இல்லை,விழுந்து பிரண்டு தன் துக்கத்தை வெளிபடுத்தவும் இல்லை. ஒரு தேர்ந்த வேதாந்தியை போல, முற்றும் துறந்த முனிவரை போல் நடந்து கொண்டாள்.

முதலில் நாவிதரை வரவழைத்து" நாளைக்கு என் தலை மயிரை மழிக்கணும்"-"விடிகாலையில் குளத்தங்கரைக்கு வந்துடுங்க" என்றாள்- அடுத்ததாக எதிர் வீட்டு சுப்பா மாமாவை கூப்பிட்டு "டவுனுக்கு போய் எனக்கு ஒரு ஜோடி நார்மடி புடவைகள் வாங்கி வர வேண்டும்" என்று கேட்டு கொண்டாள். தொடர்ந்து அவரிடமே "எனக்கு கூட பொறந்தவா என்று யாரும் கிடையாது"- "இருந்தா அவா தான் கழுத்திலே புடவை போடுவா"- "எனக்காக கொஞ்சம் நீங்கதான் அந்த உதவியை செய்யணும்"-"உங்களை என் தம்பியா நினைச்சுக்கறேன்" என்றாள். சுப்பா மாமா "மாமி உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நினைத்தே பார்கவில்லை"-"அதுவும் இந்த காரியத்தை என்னை விட்டு செய்ய சொல்கிறீர்களே"- என்று வாய் விட்டு கதறி விட்டார்.

மறுநாள் குளத்தங்கரையில், ஒரு வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், பர்வதம் மாமி சுப்பா மாமாவை கூப்பிட்டு தன் கழுத்தில் நார்மடி புடைவைகளை போட சொன்னாள். பின் தன் தலை மயிரை மழித்துகொண்டாள். கழுத்தில் இதுகாறும் தொங்கிக்கொண்டு இருந்த- பல விமர்சன்ங்களை சந்தித்த- தாலியை கழற்றி எறிந்தாள். கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை ஒவொன்றாக உடைத்து போட்டாள். கடைசியாக காலில் அணிந்திருந்த உருட்டையும் தூக்கி போட்டாள்.வண்ண் கைத்தறி புடவையை களைந்து விட்டு,நார்மடி புடவைக்கு மாறி கொண்டாள். இத்தனை காலமாக நெற்றில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு வைத்து கொண்டிருந்த குங்கும பொட்டிற்கு பதிலாக பட்டையாக் விபூதியை இட்டு கொண்டாள்.இவ்வளுவு செயல்களும் நடந்து கொண்டு இருந்தாலும் மாமியின் கண்ணில் இருந்து ஒரு பொட்டு கண்ணீரோ வாயில் இருந்து ஒரு வார்த்தையோ வெளிப்படவில்லை.

மாமியின் விதவை கோலத்தை காண் சகிக்காத அந்த கிராம் மக்கள்- மாமி சுமங்கலிதானா என்று இத்தனை கேள்வி எழுப்பி கொண்டிருந்த அதே மக்கள்- அவ்ளை மீண்டும் சுமங்கலியாக்வே பார்க்க விரும்பியதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
சு(வெ)ற்று பயணம்
===============
எழுதியது : சுந்தரேசன் சுரேஷ்
------------------------------------------
வீடே அமளி-துமளி பட்டது.குடும்பத்து அங்கத்தினர் எல்லோரும் ஒரு வார சுற்று-பயணமாக சென்னை-ராமேஸ்வரம் சென்று வருவதாக ஏற்பாடு. நடராஜ் தான் குடும்பத்து தலைவர். மத்திய சர்க்காரில் வேலை. விஷயம் தெரிந்தவர். ஆனால் சந்தேக பேர்வழி. எல்லாவற்றையும் தானே சரி பார்த்தால்தான் திருப்தி.வேண்டாததை துருவி துருவி பார...்பார். முக்கியமானதை கோட்டை விட்டு விடுவார். மனவி சரஸ்வதி. குடும்பபாங்கான அமைதியான பெண்மணி.பதறாமல்,சிதறாமல் நிதானமாக வேலை பார்ப்பவள்.மகன் அவினாஷ் வணிகத்தில் இளைங்கலை படிப்பு முதல் வருடம். அந்த வயதுக்கே உரிய “எல்லாம் தெரிந்த” மன நிலை. எல்லாவற்றிலும் ஒரு அவசரம்,பதட்டம். பெண் ஆர்த்தி 10ம் வகுப்பு. நடராஜின் தம்பி நாகராஜ். ‘சார்டர்ட் அக்கவுண்டென்சி’ முதல் முயற்ச்சியில் முடித்து விட்டு, சொந்தமாக,தொழில் நடத்துபவன். குடும்பத்தின் மற்றொரு முக்கியமான அங்கத்தினர் ஜானகி - நடராஜ்-நாகராஜின் அத்தை. . சிறு வயதிலேயே விதவையாகி வாழ்க்கையில் ஒரு சுகத்தையும் அனுபவிக்காதவள். எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்து வைத்திருப்பாள்.அதை தெரிவிப்பதற்க்கும் தயங்கமட்டாள்.

ஒரு மாதம் முன்பே திட்டம் தீட்டியது.புது வருடம் பிறந்தவுடன் பேச ஆர்ம்பித்து,பொங்கலின் போது தீவிர ஆலோசனைக்கு பிறகு,ஜனவரி கடைசியில்,அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) 23-29 தேதிகள் தீர்மானிக்கபட்டன. குழந்தைகளின் விடுமுறை, நடராஜுக்கு அலுவலகத்தில் விடுப்பு என்று எல்லாம் ஒத்து போகுமாறு இருந்தது .சரஸ்வதிதான் சொன்னாள் “நாகராஜ்- நீ உடனே கணினி மூலமாக பயண சீட்டு பதிவு செய்து விடு” என்று. அவினாஷ் குறுக்கே புகுந்தான் “அம்மா இதுக்கெல்லாம் போய் சித்தப்பாவை தொந்தரவு செய்யலாமா”? “நான் பண்ணி விடுகிறேன்” என்றான்.”பார்த்து பண்ணனும்”- ரயில் தட எண்,ரயில் பெயர், எல்லாம் சரியாக கொடுக்க வேண்டும்”-“எதாவது ஒரு சிறிய தவறு செய்தாலும் பயணமே நின்று போய் விட கூடிய ஆபத்து இருக்கு” என்றார் நடராஜ். ஜானகி தன் இயல்புக்கு ஏற்ப இடை புகுந்து “சுற்று பயணம் வெற்று பயணம் ஆகி விடும்” என்றாள்.

மறு நாளே நாகரஜின் மேற்பார்வையில் அவினாஷ் பதிவு செய்வான் என்று முடிவாகியது.மறு நாள் காலை மணி 8 ஆனவுடன் கணினி முன் நாகராஜும்,அவினாஷும் அமர்ந்தனர். “இது என்ன பெரிய வேலை”-“நான் பதிவு செய்து விடுகிறேன்”-“நீங்கள் உங்கள் சிலவு அட்டை(டெபிட் கார்ட்) தகவல்களை மற்றும் சொல்லுங்கள் சித்தப்பா” என்றான் அவினாஷ். “சரி பார்த்து பண்ணு” என்று அந்த சமயம் பார்த்து ஒரு தொலைபேசி அழைப்பு வர அங்கிருந்து நகர்ந்தான் நாகராஜ். சற்று நேரத்தில் நாகராஜின் கைபேசிக்கு “பதிவு செய்தி” குறு மின்தகவலாக வந்தது. அதை சரியாக பார்காமல் அழித்து விட்டான். அதே மாதிரி ‘மின் அஞ்சலுக்கு வந்திருந்த செய்தியையும் உதாசீன படுத்தி விட்டான். “என்ன உறுதி-செய்யபட்ட முன்பதிவுதானே”(கன்ஃப்ர்ம்ட் ரிசர்வேஷன்) என்று கேட்டார் நடராஜ். “ஆமாம் அப்பா-“பெட்டி எண் ,இருக்கை எண் எல்லாம் இருக்கிறதே”-அப்புறம் என்ன் கவலை” என்றான் அவினாஷ்.
ஒரு மாதம் பிராயண ஏற்பாடுகளிலேயே கழிந்து விட்ட்து. ராமேஸ்வரத்தில் “தீர்த்த சிரார்தம் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றாள் ஜானகி. தனுஷ்கோடி நிச்சயம் பார்க வேண்டும் என்றனர் அவினாஷும் ஆர்தியும். சரஸ்வதியின் தோழி ஒருத்தி, திருபுல்லாணி-தர்ப-சயனம் பார்காமல் வராதே என்றாள். “காசிக்கு போனால் எதையாவது விட வேண்டுமாமே”- “ஏன் மன்னி, நாம் வேணுமானால் ராமேஸ்வரத்த்தில் அத்தையை விட்டு விட்டு வ்ரலாமா”? என்று கிண்டல் அடித்தான் நாகராஜ்.

“பயண சீட்டு யாரிடம் இருக்கிறது”?-“அச்சு-நகல்(பிரின்ட்-அவுட்) எடுத்தாகிவிட்டது அல்லவா”? என்று நூறாவது முறையாக கேட்டார் நடராஜ்.”நீங்கள் பதட்டப்படாதீர்கள் அண்ணா”- “அவினாஷ் அச்சு-நகல்களை எடுத்து மன்னியிடம் கொடுத்து இருக்கிறான்”-“மன்னி கைப்பையில் பத்திரமாக் எடுத்து வைத்து இருக்கிறாள்” என்றான். அதற்குள் ஜானகி தன் பங்குக்கு “இப்போ என்னவோ புகைப்பட-அத்தாட்சி ரொம்ப அவசியமாம்”- எல்லோரும் அவர் அவர்களுடைய வாக்காளர் அட்டையை சரஸ்வதியிடம் கொடுத்து வையுங்கள்” என்றாள்.”அவினாஷ், ஆர்த்தி உங்கள் மாணவ அடயாள அட்டைகளை அம்மாவிடம் கொடுங்கள்” என்றும் உத்தரவிட்டாள்.”அத்தை உங்க பெரிய அளவு புகை படத்தை எடுத்து கொள்ளலாமா”? என்று கிண்டல் அடித்தான் நாகராஜ். ஜானகியும் தன் பங்குக்கு “இனிமே என் புகைப்படம் எதுக்கு உனக்கு?”-“தீபிகா, காஜல் அகர்வால்,நயன்தாரா இவா படம் எல்லாம் தான் வேணடியிருக்கும்” என்றாள்.

“சரசு-படுக்கை எல்லாம் கட்டி விட்டயா”? கேட்டது ஜானகி. “வேண்டாம் அத்தை”-“குளிர்-வசதி செய்யபட்ட பெட்டியானதால் ரயில் நிர்வாமே கம்பளி-போர்வை-தலைகாணி எல்லாம் வழங்கும் என்று விளக்கமாக பதில் அளித்தாள் சரசு. இந்த முறை ஜானகியை சீண்டியது அவினாஷ்”ஆமாம் பாட்டி”-“பயணம் முடிஞ்ச உடனே நாம் ஆத்துக்கு கொண்டு வந்து விடலாம்” என்றான்.

“ஆமாம் சரசு, சாப்பாடு என்ன வெளியிலே வாங்கி கொள்ளபோகிறோமா”-”ஆத்திலே செய்து எடுத்து போகிறோமோ”?என்று வினவினார் நடராஜ். அவினாஷும்,ஆர்த்தியும் சித்தப்பாவை நிமிண்டினார்கள்.அதற்கு அர்த்தம் “நீங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள்” என்பது. நாகராஜ் “அண்ணா எத்தனை என்று கட்டி எடுத்து கொள்ள் முடியும்”? “மன்னி ஒண்டியா பண்ணணும்”-“குழந்தைகளும் வெளியிலே வாங்கி சாபிடலாம் என்று ஆசை படுகிறார்கள்.” என்று கோடி காட்டினான்.அதற்குள் ஜானகி “நா வெளியிலே ஒரு துரும்பு சாப்பிடமாட்டேன்”என்றாள். நாகராஜ் “அத்தை நாங்களும் வெளியிலே “துரும்பை” சாபிட போறதில்லை- “ஏதாவது தின்பண்டமோ-சிற்றுண்டியோ தான் வாங்கி சாபிட போகிறோம்” என்று இடைகுத்து குத்தினான். சரசு குறுக்கிட்டு “நாகராஜ்- போறும் அத்தையை ‘கோட்டா’ பண்ணாதீர்கள்”-“நா உங்களுக்காக் அவல்,சத்துமா எல்லாம் எடுத்துகொண்டு இருக்கிறேன்” என்றாள்.

ஜானகி நாகராஜை நோக்கி “அரட்டை அடித்தது போதும்”-“போய் சரசுவுக்கு உதவி பண்ணு- “பால்காரன்,செய்திதாள் போடுபவன் எல்லாருக்கும் ஒரு வாரத்துக்கு வாண்டாம் என்று சொல்லிவிடு”என்றாள். நடராஜ் தம்பியை பார்த்து “பணம் “ என்று ஆரம்பிப்பதற்க்கு முனபாகவே “அண்ணா- நேத்திக்கே பணம்-வழங்கும்-தானியிங்கியில்(ஏ.டி.எம்) இருந்து ரொக்கம் எடுத்து மன்னியிடம் கொடுத்துவிட்டேன்”-கூடவே நம்ம் ரெண்டு பேரோட ‘கடன் அட்டை’ {கிரெடிட் கார்ட்} மற்றும் ‘சிலவு அட்டை’{டெபிட் கார்ட்} எல்லாவற்றையும் கொடுத்து வைத்திருக்கிறேன்”-“ஒன்றும் கவலை இல்லை” என்றான்.

ஆர்த்தி தன்னுடைய ‘கை-பேசியில்” ஒரு புதிய ஞாயபக அட்டை (மெமரி கார்ட்) போட்டு அதில் எக்கச்செக்கமான பாடல்களை பதிவு எடுத்துகொண்டிருந்தாள். சமயல் அறையில் இருந்து சரசு “ஆர்த்தி-பழைய சிவாஜி-பட பாடல்களையும் பதிவு எடுடி” என்று சொன்னாள். அவினாஷ் ஜானகியின் வாயை கிளறுவதற்காக “ஆர்த்தி பாட்டியை கேட்டுக்க கொல்லங்குடி கருப்பாயி வேணுமா- கொலவெறி வேணுமா” என்று” என்றான்.

என்ன தோணியதோ நடராஜிற்க்கு “அவினாஷ் பயணசீட்டை எடுத்து கொண்டு வா”-“கடைசி தடவையாக ஒரு முறை சரி-பார்த்து விடலாம்”என்றார்.அவினாஷும் பயண-சீட்டு,புகைப்பட அத்தாட்சி எல்லாம் இருந்த அம்மாவின் கைப்பையை எடுத்து வந்து அப்பாவிடம் கொடுத்தான். ‘அச்சு-நகலை’(பிரிண்ட் அவுட்) எடுத்து நடராஜ் ஒவ்வொன்றாக சரி பார்க்க தொடங்கினார்.இடது மேல் கோடியில் ஆரம்பித்தார்-’பி.என்.ஆர்’எண்,’ஃப்ரம், போர்டிங்க் அட், ரிஸர்வேஷன் அப்டூ,பாசஞ்சர் மொபய்ல் நம்பர்,.ஃபேர் டீடைல்ஸ்,பாசஞ்சர் டீடைல்ஸ்,டிரைன் நம்பர் எண்ட் நேம்,டேட் ஆஃப் புக்கிங்க் என்று ஒவ்வொன்றாக சரி பார்த்தார். அப்போது பார்த்து அவரது கைபேசி சிணுங்கியது. பழைய நண்பர் ஒருவரின் அழைப்பு.சிறிது நேரம் பேசிகொண்டு இருந்தார். பின்பு பயண சீட்டில் ‘கோட்டா’,’கிளாஸ்’’ எல்லாம் சரி பார்த்து விட்டு அவினாஷிடம் கொடுத்து “அம்மா கிட்ட குடுத்துடு” என்றார்.

ஒருவாராக எல்லோரும் அவர் அவர் பொருட்களை சரிபார்த்து,மூட்டை-முடிச்சை எடுத்துகொண்டு, வீட்டை பூட்டி,புகை வண்டி நிலையத்திற்க்கு வந்து சேர்ந்தனர். முனபதிவு பட்டியலில் (ரிசர்வேஷன் சார்ட்) இவர்கள் பெயர் இல்லை. “இதில் எதாவது கணினி கோளாறினால் விடுபட்டு போயிருக்கலாம்”-வண்டி வரட்டும்” என்றான் நாகராஜ். “வங்கி கணக்கில் ‘சிலவு” என்று பதிவு ஆகியிருந்ததா”? என்று தம்பியை கேட்டார் நடராஜ்”அவினாஷ் தான் கணினி மூல்மாக பதிவு செய்தான்”-“என் கைபேசி எண்ணுக்கு தகவலும் வந்தது”-“என்னுடய மின்-அஞ்சல் விலாசத்துக்கு உறுதிப்பாடும்(கன்ஃபர்மேஷன்)வந்தது”-என் வங்கி கணக்கில் சிலவும் பதிவாகி இருந்தது”-“எலாவற்றையும் சரி பார்த்து விட்டேன் அண்ணா”\- என்றான் நாகராஜ். வண்டி வந்தவுடன் பயண சீட்டு சரிபார்க்கும் அதிகாரியின் பட்டியலிலும் இவர்கள் பெயர் இல்லை.”ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்தது.”எப்படி இல்லாமல் இருக்கும்”?”உங்க ரயில்வே துறையே வெறும் தண்டம்” என்று ஜானகி வேறு ஆரம்பித்து விட்டாள். “சீட்டை காமியுங்கள்” என்றார் அதிகாரி.வண்டி எண்ணை சரி பார்த்த அதிகாரி ஒரு நொடியில் இவர்கள் பெயர் இல்லாததின் காரணத்தை கண்டு பிடுத்துவிட்டார். “ஏன் ஐயா நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானே- பயண சீட்டை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா சரி பார்க்க வேண்டாமா”? என்று கேட்டார்.

பயண தேதி 25-02-2014 என்பதற்கு பதிலாக 25-03-2014 என்று பதிவாகி இருந்த்து நிச்சயமாக ரயில்வே நிர்வாகத்தின் தப்பில்லை.!
குபேர யோகம்
============
எழுதியது :சுந்தரேசன் சுரேஷ்
-----------------------------------------
"ஏய் ராஜம்,சீக்கிரம் இங்கே வா" என்று உரத்த குரலில் அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் நாராயணன். "என்ன இப்ப குடி முழுகி போய் விட்டது"? "எதற்கு இந்த கூப்பாடு"? என்று அலுத்துக்கொண்டே சமயலறையில் கை-காரியமாக இருந்த அவரின் சகதர்மிணி வெளி பட்டாள். "சொல்கிறேன்,சொல்கிறேன்"-"சொல்வதற்கு தானே கூப்பிட்டேன்" என்று பீடிகை போட...்டார் மனுஷர்.

"சுந்தர் வந்துட்டானா"-"அவனையும் கூப்பிடு"-"அப்படியே சந்திரா இருந்தா அவளையும் வர சொல்லு" என்றார். "பெரிய துன்பமா போயிடுத்து இந்த மனுஷரோடு"- "என்னமோ வட்ட-மேஜை மாநாடு கூட்டுகிற மாதிரி எண்ணம்" என்று முணுமுணுத்துகொண்டே பெண்ணையும் பிள்ளையையும் கூப்பிட நகர்ந்தாள் ராஜம்.

எல்லோரும் வரவேற்பு அறையில் கூடினர். "கதவை சாத்தி தாழ்பாள் போடு"-"சாளரத்தை எல்லாம் சாத்தி விடு"-"பக்கத்து வீட்டு மாமாவிற்கு மூக்கில் வேர்த்து விடும்”-மோப்பம் பிடித்து விடுவார்"-“என்ன விஷயம்? என்று வந்து விடுவார்” என்று பெண்ணை பார்த்து உத்தரவுகளாக பிறப்பித்தார்.

பெண்-பிள்ளையை பார்த்து "உங்க அம்மா இத்தனை நாளா லக்ஷ்மி குபேர பூஜை பண்ணினாளே அதற்கு பலன் கிடைச்ச மாதிரி நினைச்சுக்குங்க" என்றார். "என்ன விஷயம் என்று சொல்லுங்களேன் என்று பரபரத்தான் சுந்தர். "இந்த பணம் கிடைச்ச உடனே முதல் காரியமா உங்கம்மா கேட்டுகொண்டிருந்த ஒண்ணரை 'கேரட்' வைர தோடை வாங்கணும்"-"உங்களுக்கு என்னென்ன வாங்கணுமோ முன்னாடியே சொல்லி விடுங்க" என்றார். “என்ன பணம்,எங்கேயிருந்து வர போகிறது” அதை சொல்லுங்க் முதலிலே என்று கேட்ட்தை பொருட்படுத்தாமல் “சுந்தர் நீ சொல்லு”என்றார்.

ரொம்ப துருவி கேட்டால் எங்கேயாவது முறுக்கி கொண்டு விட போகிறாரோ என்ற பயத்தில் சுந்தர் முந்திக்கொண்டு "அப்பா ரொம்ப நாளா நான் கேட்டுண்டு இருந்த 'ஹார்லே டேவிட்சன்' 'பைக்கை' வாங்கி கொடுங்க அப்பா"என்றான்.சந்திரா தன் பங்குக்கு "நான் எங்கள் கல்லூரியின் தென்-ஆப்பிரிக்க சுற்றுலா பயணத்திற்கு போகணும் அப்பா" என்றாள்.இதில் எல்லாம் பட்டு கொள்ளாமல் இருந்த ராஜத்திற்கும் பெண் பிள்ளைகளின் உற்சாகம் தொற்றி கொண்டது. “ஏங்க-உண்மையாக்த்தான் சொல்கிறீர்களா”? “பணம் வர போகிறதா” என்று கேட்டாள்.’சர்வ நிச்ச்யமாக் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் நாராயணன். "அப்ப காட்டாங்குளத்தூரில் நம்ம 2 கிரவுண்ட் வாங்கி போட்டு இருக்கிறோமே" அதை கட்டுவதற்கு ஏற்பாடு பண்ணலாம்" என்றாள். 3-கதவு குளிர்பதன பெட்டி,48 அங்குல தொலைக்காட்சி பெட்டி, 'எக்ஸ்பிரியா' கைபேசி என்று பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

என்ன இருந்தாலும் பெண்டாட்டி மனம் அல்லவா சும்மா இருக்குமா. ராஜம் "என்னங்க- எங்களுக்கு வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டோம்”-உங்களுக்கு ஒண்ணும் வாங்க வேண்டாமா"-"பேசாம இந்த அரத-பழசான 'பஜாஜ்' ஸ்கூட்டரை தலை முழுகிவிட்டு ஒரு 'மாருதி' 'ஸ்விப்ட்' வாங்கி கொள்ளுங்கள் என்றாள்.பெண்ணும் பிள்ளையும் ஏகோபித்தமாக ஆமோதித்தனர்.

ஒருவாறாக ஆரவாரம் அடங்கிய பின்னர் எல்லோரும் ஒருமித்த குரலில் "அது சரி ஏது பணம்?-எவ்வளவு தொகை?-எப்போது வரப்போகிறது? என்ற விவரங்கள் ஒன்றையும் சொல்லவில்லையே" என்று கேட்டனர்.

பொறுமை பொறுமை என்று சைகை செய்த நாராயணன் "ஒவ்வொரு கேள்விக்காக பதில் சொல்கிறேன்"-“அதிர்ஷ்ட தேவதையின் வரபிரசாதம்”-"25 லட்சம்"- “ஒரு மாதத்திற்குள்” என்றார். அவரே தொடர்ந்தார்.

"இன்றுதான் ராயல் பூடான் பம்பர் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறேன்"- "அடுத்த மாதம் முதல் தேதி குலுக்கல்"- "முதல் பரிசு 25 லட்சம் எனக்குத்தான் விழ போகிறது"- "ஜோசியரும் எனக்கு குபேர யோகம் வரப்போவதாக உறுதியாக சொல்லியுள்ளார்"-" நியுமராலஜி தெரிந்த என் நண்பரின் ஆலோசனையை கேட்டு தான் பரிசு சீட்டின் எண்ணையும் தேர்ந்து எடுத்துள்ளேன்"-“சந்தேகமே வேண்டாம் என்றார்". அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற் பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது ராஜத்திற்கும்,பெண்-பிள்ளைக்கும். அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை

இதுவரை நீங்கள் படித்த நிகழ்சிகள் முன்பே எங்கேயானாலும் நடந்திருக்ககூடும் அல்லது நடந்ததாக படித்திருக்க்கூடும் அல்லது கேள்விபட்டிருக்க்கூடும்.ஆனால் நாரயணனின் கூற்றுப்படி பரிசு விழுந்ததும் ராஜம் மற்றும் சுந்தர்,சாரதாவின் ஆசைகள் நிறைவேறிய் செய்தியும் உங்களுக்கு ஆச்ச்ரியத்தை அளிக்கலாம் !
அவல் சங்கிலி
---------------------
எழுதியது” சுந்தரேசன் சுரேஷ்
------------------------------------------
அது ஒரு பிரபலமான தங்க நகைகள் விற்கும் கடை.அபிராமி அதற்குள் நுழைந்தாள். இனி இவளை இரண்டு மணி நேரம் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்பது புரிந்தது ராமநாதனுக்கு.”அதை எடுங்க-இதை காமிங்க”என்று கடை சிப்பந்தியை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்பதும் அவருக்கு தெரியும். செய்திதாளை பிரித்து காத்திருப்...பவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். “என்னங்க- இது நன்னா இருக்கா”? என்று அபிராமியின் குரல் கேட்க செய்திதாளிலிருந்து கண்ணை எடுக்காமலேயே ‘”பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதம்” என்றார்.”உங்களை போய் கேட்டேன் பாருங்க” என்று பொய் கோபத்துடன் விலகினாள் அபிராமி. ஒருவாறாக அந்த 4-பவுன் அவல் சங்கிலி தேர்வு ஆகியது. ‘அவல்’’அவலாக’ ‘டிசைன்’.ஒரு ‘அவலுக்கும்’ இன்னொரு ‘அவலுக்கும்’ இடையே ‘மிளகு’ அளவிலே ஒரு ‘பந்து’ என்று பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தது.விலை ‘செய்கூலி’/’சேதாரம்’/தள்ளுபடி எல்லாம் போக ஒரு லட்சத்துக்கு மேல். பணத்தை குடுத்து விட்டு பொருளை பெற்றுகொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

வாங்கின நாள் முதல் அதன் மேல் அப்படி ஒரு பிரியம் அபிராமிக்கு ஒரு நிமிடம் கூட கழுத்தை விட்டு கயற்றவில்லை. ‘பாங்க்’’லாக்கரில்’ வைக்க வேண்டும் என்று அவளிடமிருந்து வாங்குவதற்குள் ‘உன்பாடு-என்பாடு’ என்று ஆகி விட்டது.இத்தனைக்கும் நகை நட்டுக்கு குறைச்சலே கிடையாது. சங்கிலியில் ஒரு 7-8, ‘நெக்லெஸ்’ கல் வைத்தது,கல் வைக்காதது என்று இரண்டு மூன்று,காசு மாலை,கருக-மணி மாலை,பவள மாலை,வளையல்கள் 5-6 ஜோடி,என்று ஒரு நகை கடையே திறக்கலாம்.கடை,கண்ணி,கோவில்,நண்பர்-உறவினர் வீடு என்று எங்கே சென்றாலும் கழுத்தில் அந்த அவல் சங்கிலி இருக்கும்.ராமநாதன் கூட கிண்டலாக சொல்லுவார்” பரமசிவன் கழுத்தில் பாம்பு கிடப்பது போல உன் கழுத்தில் இந்த சங்கிலி ‘பர்மனென்ட்’ ஆகி விட்டது” என்று. “நகை வாங்கி உள்ளே வெச்சா என்ன அர்த்தம்”? “இப்போதுதான் திருட்டு பயம் ஜாஸ்தி ஆனத்திலே ‘பாங்கில்’ கொண்டு வைக்க வேண்டி இருக்கிறது” என்று அலுத்து கொள்வாள். “‘பளிச்சினு’ போட்டுண்டா தானே நகைக்கும் மதிப்பு”-“போட்டுகறவாளுக்கும் மதிப்பு” என்பாள்.

நகைகள் எல்லாம் ‘பாங்க்’ ‘லாகரில்’ இருந்தன. 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அவற்றை ‘லாக்கரில்’ இருந்து எடுத்து ‘பாலீஷ்’ போட்டு கொண்டு வந்து, ஓரிரு நாள் அபிராமி போட்டு அழகு பார்த்த பின் மீண்டும் லாக்கரில் கொண்டு வைக்க வேண்டிய கடமை ராமநாதனுடயது.அவரையே அறியாமல் அவர் செய்த ஒரு விளையாட்டு தனமான செயல் அவரை ஒரு பெறும் ஆபத்தில் இருந்து காப்பற்றியது.

ராமநாதனின் அண்ணா பையன் கல்யாணம் நிச்சயம் ஆனது.கல்யாணத்திற்கு அணிய வேண்டுமே என்று ‘லாக்கரில்’ இருந்து எல்லா நகைகளையும் எடுத்து வந்தார்.அந்த ‘அவல்’ சங்கிலியை எடுக்கும்போது மட்டும் அதில் ’34.56 கிராம்’ என்று எழுதப்பட்ட ‘ஒரிஜினல்’’வெயிட்’ ‘ஸ்லிப்’’ இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறையாக பார்த்து உறுதி செய்து கொண்டார்.அபிராமிக்கு என்ன தோன்றியதோ”நடமாடும் நகை-ஸ்டான்ட்’மாதிரி எல்லாதையும் மாட்டிக போறதில்லீங்க”-ஒரு நெக்லெஸ்-அந்த அவல் செயின், ஒரு ஜோடி வளயல் போறும்”என்றாள்.’என்ன அபிராமி நீயா இப்படி சொல்கிறாய்”? என்று ஆச்சரியமாக கேட்டார் ராமநாதன்.”ஆமாங்க- அது போதும்” என்றாள் முடிவாக. “முன்னாடியே சொல்லி இருந்தால் ‘லாக்கரில்’ இருநது மற்றதை எல்லாம் எடுத்திருக்கவே மாட்டேனே” என்றார் அவர்.

கல்யாணத்திற்கு ’சென்று விட்டு வீடு திரும்பும் போதுதான் அந்த விபரீதம் நடந்தது.’மெயின்’ ரோட்டில் இருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே நடந்து பின் இடது பக்கம் திரும்பி 2 நிமிடம் நடந்தால் அவர்கள் வீடு. மத்தியானம் மணி 3 இருக்கும். தெருவில் ஜன்-நடமாட்டம் இல்லை.வெறிச்ச்சோடி கிடந்தது மெயின் ரோட்டில் உள்ள் ‘பஸ்’ ‘ஸ்டாப்பில்’ இறங்கி இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.இடது பக்கம் திரும்ப போகும் போது ‘புயல்’வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இருவர் அமர்திருந்தனர்.பின் ஸீட்டில் இருந்தவன் இவர்களை கடக்கும் போது சரேலென்று கைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிராமியின் கழுத்தில் இருந்த’அவல்’ சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு விட்டான். ‘மின்னல்’வேகத்தில் மோட்டார் ஸைக்கிள் மறைந்து விட்டது.

“என்ன்ங்க- இப்படி ஆகி விட்ட்து”?”ஆசைஆசையாக வைத்து கொண்டு இருந்து சங்கிலி நொடி பொழுதில் போய் விட்ட்தே”- “”லட்ச ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்கினது” என்று கண் கலங்கினாள் அபிராமி. “என்ன சொன்னாய்-லட்ச ரூபாயா-வெறும் 1200 ரூபாய்-ஏமாந்தது நாம் அல்ல-பிடிங்கி கொண்டு போனாங்களே அவங்கதான்” என்றார் ராமனாதன்.”என்ன சொல்றீங்க”- “எனக்கு ஒண்ணும் புரியலீங்க”என்றாள் அபிராமி. நகை போன துக்கத்தில் கணவருக்கு மூளை கலங்கி விட்டதோ என்று சந்தேகம் அவளுக்கு. “சரியாத்தான் சொல்றேன்”-“இந்த ரக்சியத்தை இத்தனை நாளா உனக்கு கூட சொல்லலே”- “இப்ப சொல்றேன் கேட்டுக்க” என்றார். “உனக்கு ரொம்ப பிடித்த ‘அவல் சங்கிலி’இருக்கே-அதை வாங்கின் கொஞ்ச நாளிலே அச்சு அசல் அதே மாதிரி கடையிலே ஒரு ‘இமிடேஷன்’ சங்கிலியை பார்த்தேன்”-“அதை வாங்கி ‘ஒரிஜினல்’சங்கிலியின் ‘வெயிட் ஸ்லிப்பை”பிய்த்து ‘இமிடேஷனில்’ ஒட்டி விட்டேன்”-. “இரண்டு செயினிக்கும் இடயே துளி வித்தியாசம் இருக்காது”-. “அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கும்”- “ரெண்டையும் பாங்க் லாகரில் தான் வைத்து இருந்தேன்”-“வெயிட் ஸ்லிப்போடு இருப்பது ‘இமிடேஷன்”- “வெயிட் ஸ்லிப் இல்லாமல் இருப்பது ஒரிஜினல்”-.”இதை உங்கிட்டே கூட சொல்லலை”- “அன்னிக்கு எதேச்சையா ‘ஒரிஜினலை” லாகரிலேயே வைத்து விட்டு, இமிடேஷனை எடுத்து வந்தேன்”-.”இப்படி நடக்கபோகிறது என்றுதான் கடவுள் என்னை அன்னிக்கு அப்படி செய்ய வெச்சாறோ என்னமோ”- “இன்று திருடன் கையில் சிக்கியது இமிடேஷன் சங்கிலி”-”ஒரிஜினல் நம்ம பாங்க் லாக்கரில் பத்திரமாக் இருக்குது” எனறு சொல்லி முடித்தார்.

லட்ச ரூபாய்க்கு மேலே பெறுமானம் உள்ள் சங்கிலியை திருடனிடம் இருந்து காப்பாற்றியது கணவரின் எதேச்சையான விளயாட்டு செயலா அல்லது தான் அந்த சங்கிலியின் மேல் வைத்திருந்த அதீத பிரியமா என்று அபிராமிக்கு புரியவில்லை.
வடக்கிருப்பது
-----------------------
எழுதியவர்: சுந்தரேஸன் சுரேஷ்
=========================
“என்னம்மா சுமதி”-“பாராயணம் எல்லாம் ஆயிடுத்தா?”- “பால் பாயசத்தை நைவேத்தியம் செய்து விட்டாயா?”கையோடு பிரசாதத்தை நீ சாப்பிடு” என்று நாட்டு பெண்ணிடம் கரிசனமாக் கூறி கொண்டு இருந்தாள் சுசீலா.”இதுக்காவது பகவான் கண்ணை திறக்கட்டும்” என்றாள்.சுசிலா மாதிரி ஒரு மாமியார் கிடைக்க சுமதி குடுத்து வைத்திருக்க வேண்டும்.
...
குழந்தை பேறு ஏற்பட சுந்தர காண்டம் ‘நவாஹ பாராயணம்’ செய்தால் நல்லது என்று தெரிந்தவர் சொல்ல உடனே சுமதியை பாராணம் செய்ய தூண்டினாள் சுசிலா.
சுமதிக்கும் ராஜனுக்கும் கல்யாணம் ஆகி வருடங்கள் பத்து உருணடோடிவிட்டன. இன்னும் வம்சம் தழைக்க ஒரு வாரிசு உருவாகவில்லை. எப்படியவது தன் மருமகள் தாயாக வேண்டும் என்பதே சுசிலாவின் ஆசை.

சுசிலாவிற்கு ராஜன் பிறக்கும் போது வயது 21.ராஜனுக்கு 24 வயதில் கல்யாணம். வேண்டாத தெய்வம் இல்லை;போகாத கோவில் இல்லை துரதிருஷ்டவசமாக ஒன்றும் பலன் அளிக்கவில்லை.
இருவருமே மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட்தில் ஒருவருக்கும் குறைபாடு இருப்பதாக் தெரியவில்லை. சாதாரணமான் உடல் ஆரோக்கியத்திற்கும்,புஷ்டிக்கும் சில மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு”சில பேருக்கு இந்த மாதிரி காலம் கழித்து கர்ப்பம் தரிக்கலாம்”-“இது மரபியல் சம்மந்தபட்டது”-“ஒன்றும் கவலைபடாதீர்கள்” என்று கூறி விட்டனர் மருத்துவர்கள்.

குருவாயூருக்கு போய் வெண்ணை துலாபாரம் கொடுத்தால் கை மேல் பலன் என்று ஒருவர் சொல்ல அதையும் செய்து பார்தாகிவிட்டது.திருக்கருகாவூர் என்ற ஸ்தலத்தில் கர்ப ரக்ஷாம்பிகைக்கு வேண்டி கொண்டு அதன் பிரசாதமான நெய்யை சாப்பிட்டால் வயிறு திறக்கும் என்று கேள்விபட்டு அதையும் முடித்தாகிவிட்டது. ஒன்றுக்கும் பலன் இல்லை.

சுசிலா 4வது வகுப்பு வரை தான் படித்திருந்தாள். ஆனால் அவளது அறிவாற்றல் அபாரமானது.’ஏக சந்த கிராஹி என்று வட மொழியில் சொல்லுவது போல் ஒரு தரம் ஒன்றை கேட்டால் போதும் அப்படியே மனதில் பதிந்து விடும். அன்பும்,கருணையும் மிக்கவள்.பிள்ளையும் கை நிறைய சம்பாதிப்பதால் தானம் தருமம் என்று வாரி வழங்குவாள்.ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவு, முதியோர்களுக்கு மருத்துவ செலவு, சமூக சேவை என்று தாராளமாக செலவழிப்பாள். சுருக்கமாக சொன்னால் அது ஒரு அன்னியோன்னியமான குடும்பம். சுசிலாவுக்கு மகன்-மருமகள் மீது அப்படி ஒரு பாசம். அதே மாதிரி, தாய்க்கு எதாவது ஒன்று என்றால் துடித்து போய் விடுவான் ராஜன். “ அம்மா ‘ரத்த கொதிப்பு ‘செக்’ செய்ய வேண்டும் என்றாயே”- “மருத்துவரிடம் போகலாமா”- “அம்மா நீ அதிகம் அலட்டி கொள்ளாதே” என்று ‘அம்மா நினைவு தான் எப்போதும். மருமகளோ ஒரு குழந்தையை பார்த்து கொள்வது போல் வேளா வேள்ளைக்கு உணவு,படுக்கை விரித்து போடுவது,என்று சுசிலாவை உள்ளங்கைய்யில் வைத்து தாங்குவாள்.

சுமதி தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவள். வீணாக பொழுதை கழிக்க வேண்டாமே என்று அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள். அப்படித்தான் ஒரு நாள் பத்தாவது வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்காக, தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தாள். ‘வடக்கிருப்பது’ என்பதை பற்றி சொல்லி கொண்டு இருந்தாள். போரில் தோற்று போன ஒரு ராஜா அல்லது வாழ்ந்தது போதும் என்று தோணிய ஒருவர், அன்ன-ஆகாரம் இல்லாமல் வடக்கு திசை நோக்கி விரதம் இருந்து சுய-இச்சையில் உயிரை துறப்பது என்பதே வடக்கிருப்பது ஆகும் என்று விளக்கி கொண்டு இருந்தாள். எப்போதும் போல சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டு இதை செவிமெடுத்து கொண்டு இருந்தாள் சுசிலா.

மறு நாளிலிருந்து தான் ஒரு வேளை மட்டுமே ஆகரம் உட்கொள்ள போவதாக கூறி விட்டாள். “என்னம்மா ஆச்சு உனக்கு திடீரென்று”? என்று ராஜன் பல முறை கேட்டு பார்த்து விட்டான். “ஆகிறது என்ன- ஓண்ணும் ஆக வில்லை- வயது ஆகிறது-ஆஹாரத்தை குறைத்து கொள்லாம் என்று பார்கிறேன்” என்று அவன் வாயை அடக்கி விட்டாள். சுமதி அழுதே விட்டாள் “அம்மா நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் மன்னித்து விடுங்கள்-இந்த மாதிரி தண்டனையை உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளாதீர்கள் என்று கெஞ்சினாள்.”அசடு- நீ என் பொண்ணு- நீ எனக்கு ஒரு குறையும் வைக்கலே” இது சாதாரண விஷயம்” என்று அவளையும் சரிகட்டி விட்டாள்.ஆகாரத்தை குறைத்ததை தவிரவும் சிற்சில மாற்றங்கள் சுசிலாவிடம் தென்பட்டன. பெரும்பாலான நேரத்தை தன் அறையிலேயே கழிக்க ஆரம்பித்து விட்டாள். பிள்ளை, மருமகள் இருவருக்குமே அம்மாவின் நடத்ததையில் மாற்றம் இருப்பதை உணர் முடிந்தது ஆனால் அதற்கான காரணம் தான் புரியவில்லை..

இது ஆரம்பித்து ஒரு 40-45 நாட்கள் கழித்து நன்றாக நடமாடி கொண்டு இருந்த சுசிலா ஒரு நாள் இரவு படுக்கு போனவள் மறு நாள் காலை கண் விழிக்கவில்லை. ராஜனுக்கும்,சுமதிக்கும் ஒரே அதிர்ச்சி. இருவருமே உடைந்து போயினர். “உனக்கு என்னம்மா அவசரம்?- “இவ்வளுவு சீக்கிரம் புறப்பட்டு போய் விட்டாயே”? “எப்படி எங்களை தனியாக விட்டு போக மனசு வந்தது”? என்ற் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு கதறினர்.

அதிகம் உணர்ச்சி வசப்பட்டதாலோ என்னமோ சுமதி மயங்கி விழுந்து விட்டாள். உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் ‘பெண் மருத்துவரை அழைத்து வந்தார். மருத்துவர் சுமதியை பரிசோதித்த பின்னர் “ கடைசியாக எப்போ ‘பீரியட்ஸ்” ஆச்சு? என்று வினவினார். “கர்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்”- ‘டெஸ்ட்’ எல்லாம் எடுத்த பின்னர் தான் உறுதியாக தெரிவிக்க முடியும்” என்றார்.

தன் உயிரை பணயமாக வைத்து வடக்கிருந்து உயிர் துறந்து தன் மகன் வாரிசை தன் மருமகள் வயிற்றில் வளர செய்த அந்த தாயின் தியாகத்திற்கு என்ன கைமாறு செய்வார்கள் ராஜனோ சுமதியோ?
ஒரு எழுத்தாளனின் கதை
====================
எழுத்து:சுந்தரேஸன் சுரேஷ்
---------------------------------------

கோபால் ஒரு எழுத்து பிரியன். கட்டை குட்டையான உருவம்-கருப்பு நிறம்-தலையில் முக்கால் வாசி பாகம் காலி (உள்ளேயும் சரி,வெளியேயும் சரி !). ஒரு எழுத்தாளன் என்று சத்தியம் பண்ணினாலும் நம்ப முடியாது.சின்ன வயதில் இருந்தே கதை,கவிதைகளில் நாட்டம் கொண்டவன். தேவன்,கல்கி,என்று தொடங்கி,அகிலன்,சாண்டில்யன்,புத...மைபித்தன்,ஜெயகாந்தன்,ரா.கி, பி.வி.ஆர்.,லஷ்மி,சுஜாதா,பாலகுமாரன் என்று ஒருவரையும் விட்டு வைத்ததில்லை. ஏதோ ஓர் அளவுக்கு எழுதுவான்.எழுத்துலகில் பெரிய அளவில்,புகழ் பெற போகிறோம் என்பது அவன் பகல் கனவு .

அவனது இந்த எழுத்துஆசை,குடும்பத்தின் மற்றவர்களுக்கு தொந்தரவாக போய் விட்டது. பெயருக்கு காரியாலத்திற்கு போய் வருவான். காலையிலும் சரி மாலையிலும் சரி,எப்போதும் கணினி முன்னால் அமர்ந்து கற்பனை உலகில் சஞ்சரித்துகொண்டு கதைகளும்,கவிதைகளும் படைத்தது கொண்டு இருப்பான்.வீட்டு விஷயங்களில் அக்கறை குறைந்து கொண்டே வந்தது. மனைவி இந்திராவிடம் "இத பாரு"-உங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது"-ஒரு நாள் தொலைக்காட்சியினரும்,பத்திரிகையாளர்களும் நம் வீட்டு வாசலில் கூடாரம் அடிக்க போகிறார்கள்"-அப்போது புரியும் என் அருமை"என்பான்.மெல்லிய உருவ அமைப்பும்,வார்த்து கொட்டிய பொன்னை போல நிறமும் கொண்ட அவனது மனைவி இந்திரா முகவாயை தோளில் இடித்து கொள்வாள்.

மகன் அரவிந்தோ(சின்ன வயது சேஷகோபலனை நினைவு படுத்தும் தோற்றம்) "இதெல்லாம் சுத்த 'வேஸ்ட் அப்பா '"-"நீங்களாகவே என்னமோ பெரிய எழுத்துலக பிரம்மா என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்"-"உங்களை விட நன்றாக எழுதக்கூடியவர்கள் மூலைக்கு ஒருவர் இருக்கிறார்" -"நீங்கள் எழுதுவதை படித்து விட்டு நாலு பேர் ஆஹா !ஓஹா! என்று புகழ்வது உங்களுக்கு வேண்டி இருக்கிறது"-"மன-சாட்சியை தொட்டு சொல்லுங்கள்-"உங்கள் எழுத்தை குறை கூறுபவர்களை நீங்கள் ஏற்று கொள்வீர்களா"என்று சவால் விடுவான்.

பெண் ஆஷா (சரிதாவின் சாயலும் குஷ்புவின் உடல் அமைப்பும் கொண்டவள்) அப்பாவிடம் கொஞ்சம் அதிகம் பிரியம் உடையவள். "என்ன அண்ணா விட்டால் பேசிக்கொண்டே போகிறாயே"? என்று அப்பாவின் தற்காப்புக்கு வருவாள்."திறமை இருப்பவர்கள் எல்லாம் பிரகாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது"-"அதே மாதிரி பிரகாசிப்பவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது"- "அப்பாவுக்கு எழுத பிடிக்கிறது-எழுத வருகிறது"-எழுதி விட்டு போகட்டுமே"-"உனக்கோ,எனக்கோ இல்லை அம்மாவுக்கோ இதில் என்ன நஷ்டம்"என்பாள்.

இந்த இடத்தில் இந்திராவும் சேர்ந்து கொள்வாள். "இன்னொரு முக்கியமான விஷயம்"-"பல பேர் செய்வது மாதிரி இங்கிருந்து அங்கிருந்து என்று 'திரட்டி','சுருட்டி' தான் படைத்ததாக உங்க அப்பா சொல்லிகொள்வதில்லை"-"இவ்வளுவு வருடங்களாக தான் பார்த்ததை,கேட்டதை,படித்ததை வைத்து,தன் கற்பனையில் உதித்ததை சொந்தமாக எழுதுகிறார்""-இது பெரிய விஷயம் தான்" என்பாள். "என்ன சாத்தான் வேதம் ஓதுகிறது என்பாள் பெண்.

கடைசியாக இந்திராவே சலித்து கொண்டு "போதும் போதும்"-"அப்பாவை பிள்ளை குறை கூறுவதும் -பெண் அப்பாவுக்கு வக்காலத்து வாங்குவதும் "-"இது என்ன வீடா"நீதி மன்றமா- என்பாள்.

இப்படியாக போய் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கோபால் எதிர்பார்த்த மாற்றம் வரத்தான் செய்தது. ஒரு நாள் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி (கற்பனையை ஓட விடாதீர்கள்-மணமானவள்) தொலைபேசியில் கூப்பிட்டு"நான் உங்கள் எழுத்துக்கு பரம ரசிகை" என்றால். கோபாலுக்கு வாயெல்லாம் பல். ஒன்று இரண்டு என தொடங்கிய அழைப்புகள் மெல்ல அதிகரித்தன. சிலர் மின்-அஞ்சல் மூலமாகவும் தங்கள் புகழ்ச்சியை தெரிவித்தார்கள்."எப்படி இவ்வளுவு அருமையாக எழுதுகிறீர்கள்" என்று சிலர்- "உங்கள் எழுத்து கண்ணில் நீரை வரவழைத்து விட்டது" என்று வேறு சிலர்"-"நீங்கள் ஏன் முழு-நேர எழுத்தாளராக ஆக கூடாது"? என்று மற்றும் சிலர்-கோபாலின் காட்டில் நல்ல மழை. இள வயது பெண்கள்,குடும்ப தலைவிகள்,முதியோர்கள்,மெத்த படித்த பொறியாளர்கள்,கணக்கர்கள் என்று கோபாலின் விசிறிகளின் பட்டியலில் பலரும் அடக்கம். "அர்விந்த் பார்த்தாயா"?- "என்னமோ எழுதுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று எகத்தாள படுத்தினாயே"-"இன்று எவ்வளுவு பேர் என் எழுத்தை மெச்சுகிறார்கள் பார்த்தாயா"? என்பான்.

"அப்பா-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"இவர்களில் எவ்வளுவு பேர் உங்கள் எழுத்துகளை சீர்தூக்கி பார்த்து,சரியாக எடை போட்டு பார்த்த பின் விமர்சிக்கிறார்கள்"?-"நீங்கள் எழுதின சுருக்கில் வாசித்து விட்டு உங்களை பாராட்டி விடுகிறார்கள்"-"உங்களுக்கும் புகழ்ச்சி தேவையாக இருக்கிறது-அவ்வளுவுதான்"என்பான். ஆஷா "இருந்தாலும் கணினியை பொழுது-போக்குக்காக நோண்டும் மனிதர்களை கூட படிக்க வைத்திருக்கிறாரே"-"தனக்குன்னு ஒரு வாசகர் வட்டத்தை (எவ்வளுதான் குறுகியதாக இருந்தாலும் !)உருவாக்கி இருக்கிறாரே"-"அதை மறுக்க முடியாது" என்பாள்.

"எப்ப பாரு சோகமும்,துக்கமும்,சாவை பற்றியும்தான் எழுதுகிறீர்கள்""படிக்கிறவர்களை சோகத்தில் ஆழ்த்துவதில் உங்களுக்கு அப்படிதான் என்ன சந்தோஷமோ" என்று குற்றம் சாட்டுவாள் இந்திரா. "அப்படி எல்லாம் பொதுவாக பேசாதே"- "அப்பா நிறைய விஷயங்களை பற்றி எழுதுகிறார்"-"சோக கதைகள் மனதில் தைப்பதால் அப்படி ஒரு உணர்வு தோன்றுகிறது" ஆஷாதான் தந்தையின் உதவிக்கு வருவாள். "நமக்கு வேண்டாததை எல்லாம் நாம் என்ன செய்கிறோம்?"-"வெளியே தூக்கி எறிந்து விடுகிறோம்"-"அது போலவே கற்பனை சோகத்தைகூட, பகிர்ந்து கொண்டால் நடைமுறை வாழ்கையின் சுமை குறையும் என்பதுதான் உண்மை" என்று விளக்குவான் கோபால்.

திடீரென்று ஒரு நாள் இணையதள அமைப்பிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. "திரு கோபால் என்பது நீங்கள்தானே"?" உங்கள் எழுத்து சேவையை பாராட்டி ஒரு விருது வழங்கப்பட இருக்கிறது"-"விழா ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் வரும் ஞாயிற்று கிழமை நடக்க இருக்கிறது"-"தாங்கள் அதில் கலந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும்""-"மற்ற விவரங்கள் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்றது. வீட்டில் எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டு கொண்டான். "அழைப்பு உண்மையாகவே அந்த அமைப்பில் இருந்துதான் வந்தது என்பதற்கு என்ன அத்தாட்சி"? என்று அப்பாவை குடைந்தான் அரவிந்த். ஆஷா பரிபூர்ணமாக அப்பாவை நம்பினாள். இந்திராவின் நிலை மதில் மேல் பூனை- முழுவதுமாக நம்பவும் முடியவில்லை- ; ஒரேதிரியாக 'கப்சா'வாகவும் இருக்ககூடும் என்று ஒதுக்கவும் முடியவில்லை..

நாலைந்து நாட்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த குடும்பத்து அங்கத்தினருக்கு ஒரு குரூரமான அதிர்ச்சியை கொடுத்தவள் தேவகி.
விழாவிற்கு இரண்டு நாள் இருக்கும் போது வீட்டு கதவை தட்டினவள்."என் பெயர் தேவகி"-"நான் ஒரு சமூக சேவகி"-பொதுநல மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்மந்தமான வழக்குகளில் வாதாடும் வக்கீல்"-"திரு கோபால் என்பவர் பல எழுத்தாளர்களின் படைப்பில் இருந்து திருடி தன் சொந்த படைப்புகளாக பறை சாற்றி கொள்கிறதாக என்னிடம் புகார் வந்துள்ளது"-"அறிவுஜீவி உரிமைபொருள்" சட்டத்தை சகட்டு மேனிக்கு மீறுவதை பற்றி விசாரிக்க வந்துள்ளேன்" என்று முடித்தாள்.

வந்தவள் உண்மையாக்வே ஒரு வக்கீலா அல்லது கோபாலின் எழுத்து வியாதிக்குஅரவிந்தின் அதிர்ச்சி வைத்தியமா என்ற ஆஷாவின் சந்தேகம் உங்களையும் தொற்றி கொண்டுவிட்டதா