அவல் சங்கிலி
---------------------
எழுதியது” சுந்தரேசன் சுரேஷ்
------------------------------ ------------
அது ஒரு பிரபலமான தங்க நகைகள் விற்கும் கடை.அபிராமி அதற்குள் நுழைந்தாள். இனி இவளை இரண்டு மணி நேரம் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்பது புரிந்தது ராமநாதனுக்கு.”அதை எடுங்க-இதை காமிங்க”என்று கடை சிப்பந்தியை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்பதும் அவருக்கு தெரியும். செய்திதாளை பிரித்து காத்திருப்...பவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். “என்னங்க- இது நன்னா இருக்கா”? என்று அபிராமியின் குரல் கேட்க செய்திதாளிலிருந்து கண்ணை எடுக்காமலேயே ‘”பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதம்” என்றார்.”உங்களை போய் கேட்டேன் பாருங்க” என்று பொய் கோபத்துடன் விலகினாள் அபிராமி. ஒருவாறாக அந்த 4-பவுன் அவல் சங்கிலி தேர்வு ஆகியது. ‘அவல்’’அவலாக’ ‘டிசைன்’.ஒரு ‘அவலுக்கும்’ இன்னொரு ‘அவலுக்கும்’ இடையே ‘மிளகு’ அளவிலே ஒரு ‘பந்து’ என்று பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தது.விலை ‘செய்கூலி’/’சேதாரம்’/தள்ளுபடி எல்லாம் போக ஒரு லட்சத்துக்கு மேல். பணத்தை குடுத்து விட்டு பொருளை பெற்றுகொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வாங்கின நாள் முதல் அதன் மேல் அப்படி ஒரு பிரியம் அபிராமிக்கு ஒரு நிமிடம் கூட கழுத்தை விட்டு கயற்றவில்லை. ‘பாங்க்’’லாக்கரில்’ வைக்க வேண்டும் என்று அவளிடமிருந்து வாங்குவதற்குள் ‘உன்பாடு-என்பாடு’ என்று ஆகி விட்டது.இத்தனைக்கும் நகை நட்டுக்கு குறைச்சலே கிடையாது. சங்கிலியில் ஒரு 7-8, ‘நெக்லெஸ்’ கல் வைத்தது,கல் வைக்காதது என்று இரண்டு மூன்று,காசு மாலை,கருக-மணி மாலை,பவள மாலை,வளையல்கள் 5-6 ஜோடி,என்று ஒரு நகை கடையே திறக்கலாம்.கடை,கண்ணி,கோவில்,நண ்பர்-உறவினர் வீடு என்று எங்கே சென்றாலும் கழுத்தில் அந்த அவல் சங்கிலி இருக்கும்.ராமநாதன் கூட கிண்டலாக சொல்லுவார்” பரமசிவன் கழுத்தில் பாம்பு கிடப்பது போல உன் கழுத்தில் இந்த சங்கிலி ‘பர்மனென்ட்’ ஆகி விட்டது” என்று. “நகை வாங்கி உள்ளே வெச்சா என்ன அர்த்தம்”? “இப்போதுதான் திருட்டு பயம் ஜாஸ்தி ஆனத்திலே ‘பாங்கில்’ கொண்டு வைக்க வேண்டி இருக்கிறது” என்று அலுத்து கொள்வாள். “‘பளிச்சினு’ போட்டுண்டா தானே நகைக்கும் மதிப்பு”-“போட்டுகறவாளுக்கும் மதிப்பு” என்பாள்.
நகைகள் எல்லாம் ‘பாங்க்’ ‘லாகரில்’ இருந்தன. 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அவற்றை ‘லாக்கரில்’ இருந்து எடுத்து ‘பாலீஷ்’ போட்டு கொண்டு வந்து, ஓரிரு நாள் அபிராமி போட்டு அழகு பார்த்த பின் மீண்டும் லாக்கரில் கொண்டு வைக்க வேண்டிய கடமை ராமநாதனுடயது.அவரையே அறியாமல் அவர் செய்த ஒரு விளையாட்டு தனமான செயல் அவரை ஒரு பெறும் ஆபத்தில் இருந்து காப்பற்றியது.
ராமநாதனின் அண்ணா பையன் கல்யாணம் நிச்சயம் ஆனது.கல்யாணத்திற்கு அணிய வேண்டுமே என்று ‘லாக்கரில்’ இருந்து எல்லா நகைகளையும் எடுத்து வந்தார்.அந்த ‘அவல்’ சங்கிலியை எடுக்கும்போது மட்டும் அதில் ’34.56 கிராம்’ என்று எழுதப்பட்ட ‘ஒரிஜினல்’’வெயிட்’ ‘ஸ்லிப்’’ இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறையாக பார்த்து உறுதி செய்து கொண்டார்.அபிராமிக்கு என்ன தோன்றியதோ”நடமாடும் நகை-ஸ்டான்ட்’மாதிரி எல்லாதையும் மாட்டிக போறதில்லீங்க”-ஒரு நெக்லெஸ்-அந்த அவல் செயின், ஒரு ஜோடி வளயல் போறும்”என்றாள்.’என்ன அபிராமி நீயா இப்படி சொல்கிறாய்”? என்று ஆச்சரியமாக கேட்டார் ராமநாதன்.”ஆமாங்க- அது போதும்” என்றாள் முடிவாக. “முன்னாடியே சொல்லி இருந்தால் ‘லாக்கரில்’ இருநது மற்றதை எல்லாம் எடுத்திருக்கவே மாட்டேனே” என்றார் அவர்.
கல்யாணத்திற்கு ’சென்று விட்டு வீடு திரும்பும் போதுதான் அந்த விபரீதம் நடந்தது.’மெயின்’ ரோட்டில் இருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே நடந்து பின் இடது பக்கம் திரும்பி 2 நிமிடம் நடந்தால் அவர்கள் வீடு. மத்தியானம் மணி 3 இருக்கும். தெருவில் ஜன்-நடமாட்டம் இல்லை.வெறிச்ச்சோடி கிடந்தது மெயின் ரோட்டில் உள்ள் ‘பஸ்’ ‘ஸ்டாப்பில்’ இறங்கி இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.இடது பக்கம் திரும்ப போகும் போது ‘புயல்’வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இருவர் அமர்திருந்தனர்.பின் ஸீட்டில் இருந்தவன் இவர்களை கடக்கும் போது சரேலென்று கைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிராமியின் கழுத்தில் இருந்த’அவல்’ சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு விட்டான். ‘மின்னல்’வேகத்தில் மோட்டார் ஸைக்கிள் மறைந்து விட்டது.
“என்ன்ங்க- இப்படி ஆகி விட்ட்து”?”ஆசைஆசையாக வைத்து கொண்டு இருந்து சங்கிலி நொடி பொழுதில் போய் விட்ட்தே”- “”லட்ச ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்கினது” என்று கண் கலங்கினாள் அபிராமி. “என்ன சொன்னாய்-லட்ச ரூபாயா-வெறும் 1200 ரூபாய்-ஏமாந்தது நாம் அல்ல-பிடிங்கி கொண்டு போனாங்களே அவங்கதான்” என்றார் ராமனாதன்.”என்ன சொல்றீங்க”- “எனக்கு ஒண்ணும் புரியலீங்க”என்றாள் அபிராமி. நகை போன துக்கத்தில் கணவருக்கு மூளை கலங்கி விட்டதோ என்று சந்தேகம் அவளுக்கு. “சரியாத்தான் சொல்றேன்”-“இந்த ரக்சியத்தை இத்தனை நாளா உனக்கு கூட சொல்லலே”- “இப்ப சொல்றேன் கேட்டுக்க” என்றார். “உனக்கு ரொம்ப பிடித்த ‘அவல் சங்கிலி’இருக்கே-அதை வாங்கின் கொஞ்ச நாளிலே அச்சு அசல் அதே மாதிரி கடையிலே ஒரு ‘இமிடேஷன்’ சங்கிலியை பார்த்தேன்”-“அதை வாங்கி ‘ஒரிஜினல்’சங்கிலியின் ‘வெயிட் ஸ்லிப்பை”பிய்த்து ‘இமிடேஷனில்’ ஒட்டி விட்டேன்”-. “இரண்டு செயினிக்கும் இடயே துளி வித்தியாசம் இருக்காது”-. “அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கும்”- “ரெண்டையும் பாங்க் லாகரில் தான் வைத்து இருந்தேன்”-“வெயிட் ஸ்லிப்போடு இருப்பது ‘இமிடேஷன்”- “வெயிட் ஸ்லிப் இல்லாமல் இருப்பது ஒரிஜினல்”-.”இதை உங்கிட்டே கூட சொல்லலை”- “அன்னிக்கு எதேச்சையா ‘ஒரிஜினலை” லாகரிலேயே வைத்து விட்டு, இமிடேஷனை எடுத்து வந்தேன்”-.”இப்படி நடக்கபோகிறது என்றுதான் கடவுள் என்னை அன்னிக்கு அப்படி செய்ய வெச்சாறோ என்னமோ”- “இன்று திருடன் கையில் சிக்கியது இமிடேஷன் சங்கிலி”-”ஒரிஜினல் நம்ம பாங்க் லாக்கரில் பத்திரமாக் இருக்குது” எனறு சொல்லி முடித்தார்.
லட்ச ரூபாய்க்கு மேலே பெறுமானம் உள்ள் சங்கிலியை திருடனிடம் இருந்து காப்பாற்றியது கணவரின் எதேச்சையான விளயாட்டு செயலா அல்லது தான் அந்த சங்கிலியின் மேல் வைத்திருந்த அதீத பிரியமா என்று அபிராமிக்கு புரியவில்லை.
---------------------
எழுதியது” சுந்தரேசன் சுரேஷ்
------------------------------
அது ஒரு பிரபலமான தங்க நகைகள் விற்கும் கடை.அபிராமி அதற்குள் நுழைந்தாள். இனி இவளை இரண்டு மணி நேரம் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என்பது புரிந்தது ராமநாதனுக்கு.”அதை எடுங்க-இதை காமிங்க”என்று கடை சிப்பந்தியை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள் என்பதும் அவருக்கு தெரியும். செய்திதாளை பிரித்து காத்திருப்...பவர்களுக்கான இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார். “என்னங்க- இது நன்னா இருக்கா”? என்று அபிராமியின் குரல் கேட்க செய்திதாளிலிருந்து கண்ணை எடுக்காமலேயே ‘”பேஷ் பேஷ் ரொம்ப பிரமாதம்” என்றார்.”உங்களை போய் கேட்டேன் பாருங்க” என்று பொய் கோபத்துடன் விலகினாள் அபிராமி. ஒருவாறாக அந்த 4-பவுன் அவல் சங்கிலி தேர்வு ஆகியது. ‘அவல்’’அவலாக’ ‘டிசைன்’.ஒரு ‘அவலுக்கும்’ இன்னொரு ‘அவலுக்கும்’ இடையே ‘மிளகு’ அளவிலே ஒரு ‘பந்து’ என்று பார்க்க மிக கவர்ச்சியாக இருந்தது.விலை ‘செய்கூலி’/’சேதாரம்’/தள்ளுபடி எல்லாம் போக ஒரு லட்சத்துக்கு மேல். பணத்தை குடுத்து விட்டு பொருளை பெற்றுகொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வாங்கின நாள் முதல் அதன் மேல் அப்படி ஒரு பிரியம் அபிராமிக்கு ஒரு நிமிடம் கூட கழுத்தை விட்டு கயற்றவில்லை. ‘பாங்க்’’லாக்கரில்’ வைக்க வேண்டும் என்று அவளிடமிருந்து வாங்குவதற்குள் ‘உன்பாடு-என்பாடு’ என்று ஆகி விட்டது.இத்தனைக்கும் நகை நட்டுக்கு குறைச்சலே கிடையாது. சங்கிலியில் ஒரு 7-8, ‘நெக்லெஸ்’ கல் வைத்தது,கல் வைக்காதது என்று இரண்டு மூன்று,காசு மாலை,கருக-மணி மாலை,பவள மாலை,வளையல்கள் 5-6 ஜோடி,என்று ஒரு நகை கடையே திறக்கலாம்.கடை,கண்ணி,கோவில்,நண
நகைகள் எல்லாம் ‘பாங்க்’ ‘லாகரில்’ இருந்தன. 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அவற்றை ‘லாக்கரில்’ இருந்து எடுத்து ‘பாலீஷ்’ போட்டு கொண்டு வந்து, ஓரிரு நாள் அபிராமி போட்டு அழகு பார்த்த பின் மீண்டும் லாக்கரில் கொண்டு வைக்க வேண்டிய கடமை ராமநாதனுடயது.அவரையே அறியாமல் அவர் செய்த ஒரு விளையாட்டு தனமான செயல் அவரை ஒரு பெறும் ஆபத்தில் இருந்து காப்பற்றியது.
ராமநாதனின் அண்ணா பையன் கல்யாணம் நிச்சயம் ஆனது.கல்யாணத்திற்கு அணிய வேண்டுமே என்று ‘லாக்கரில்’ இருந்து எல்லா நகைகளையும் எடுத்து வந்தார்.அந்த ‘அவல்’ சங்கிலியை எடுக்கும்போது மட்டும் அதில் ’34.56 கிராம்’ என்று எழுதப்பட்ட ‘ஒரிஜினல்’’வெயிட்’ ‘ஸ்லிப்’’ இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறையாக பார்த்து உறுதி செய்து கொண்டார்.அபிராமிக்கு என்ன தோன்றியதோ”நடமாடும் நகை-ஸ்டான்ட்’மாதிரி எல்லாதையும் மாட்டிக போறதில்லீங்க”-ஒரு நெக்லெஸ்-அந்த அவல் செயின், ஒரு ஜோடி வளயல் போறும்”என்றாள்.’என்ன அபிராமி நீயா இப்படி சொல்கிறாய்”? என்று ஆச்சரியமாக கேட்டார் ராமநாதன்.”ஆமாங்க- அது போதும்” என்றாள் முடிவாக. “முன்னாடியே சொல்லி இருந்தால் ‘லாக்கரில்’ இருநது மற்றதை எல்லாம் எடுத்திருக்கவே மாட்டேனே” என்றார் அவர்.
கல்யாணத்திற்கு ’சென்று விட்டு வீடு திரும்பும் போதுதான் அந்த விபரீதம் நடந்தது.’மெயின்’ ரோட்டில் இருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே நடந்து பின் இடது பக்கம் திரும்பி 2 நிமிடம் நடந்தால் அவர்கள் வீடு. மத்தியானம் மணி 3 இருக்கும். தெருவில் ஜன்-நடமாட்டம் இல்லை.வெறிச்ச்சோடி கிடந்தது மெயின் ரோட்டில் உள்ள் ‘பஸ்’ ‘ஸ்டாப்பில்’ இறங்கி இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.இடது பக்கம் திரும்ப போகும் போது ‘புயல்’வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. இருவர் அமர்திருந்தனர்.பின் ஸீட்டில் இருந்தவன் இவர்களை கடக்கும் போது சரேலென்று கைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிராமியின் கழுத்தில் இருந்த’அவல்’ சங்கிலியை அறுத்து எடுத்து கொண்டு விட்டான். ‘மின்னல்’வேகத்தில் மோட்டார் ஸைக்கிள் மறைந்து விட்டது.
“என்ன்ங்க- இப்படி ஆகி விட்ட்து”?”ஆசைஆசையாக வைத்து கொண்டு இருந்து சங்கிலி நொடி பொழுதில் போய் விட்ட்தே”- “”லட்ச ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்கினது” என்று கண் கலங்கினாள் அபிராமி. “என்ன சொன்னாய்-லட்ச ரூபாயா-வெறும் 1200 ரூபாய்-ஏமாந்தது நாம் அல்ல-பிடிங்கி கொண்டு போனாங்களே அவங்கதான்” என்றார் ராமனாதன்.”என்ன சொல்றீங்க”- “எனக்கு ஒண்ணும் புரியலீங்க”என்றாள் அபிராமி. நகை போன துக்கத்தில் கணவருக்கு மூளை கலங்கி விட்டதோ என்று சந்தேகம் அவளுக்கு. “சரியாத்தான் சொல்றேன்”-“இந்த ரக்சியத்தை இத்தனை நாளா உனக்கு கூட சொல்லலே”- “இப்ப சொல்றேன் கேட்டுக்க” என்றார். “உனக்கு ரொம்ப பிடித்த ‘அவல் சங்கிலி’இருக்கே-அதை வாங்கின் கொஞ்ச நாளிலே அச்சு அசல் அதே மாதிரி கடையிலே ஒரு ‘இமிடேஷன்’ சங்கிலியை பார்த்தேன்”-“அதை வாங்கி ‘ஒரிஜினல்’சங்கிலியின் ‘வெயிட் ஸ்லிப்பை”பிய்த்து ‘இமிடேஷனில்’ ஒட்டி விட்டேன்”-. “இரண்டு செயினிக்கும் இடயே துளி வித்தியாசம் இருக்காது”-. “அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கும்”- “ரெண்டையும் பாங்க் லாகரில் தான் வைத்து இருந்தேன்”-“வெயிட் ஸ்லிப்போடு இருப்பது ‘இமிடேஷன்”- “வெயிட் ஸ்லிப் இல்லாமல் இருப்பது ஒரிஜினல்”-.”இதை உங்கிட்டே கூட சொல்லலை”- “அன்னிக்கு எதேச்சையா ‘ஒரிஜினலை” லாகரிலேயே வைத்து விட்டு, இமிடேஷனை எடுத்து வந்தேன்”-.”இப்படி நடக்கபோகிறது என்றுதான் கடவுள் என்னை அன்னிக்கு அப்படி செய்ய வெச்சாறோ என்னமோ”- “இன்று திருடன் கையில் சிக்கியது இமிடேஷன் சங்கிலி”-”ஒரிஜினல் நம்ம பாங்க் லாக்கரில் பத்திரமாக் இருக்குது” எனறு சொல்லி முடித்தார்.
லட்ச ரூபாய்க்கு மேலே பெறுமானம் உள்ள் சங்கிலியை திருடனிடம் இருந்து காப்பாற்றியது கணவரின் எதேச்சையான விளயாட்டு செயலா அல்லது தான் அந்த சங்கிலியின் மேல் வைத்திருந்த அதீத பிரியமா என்று அபிராமிக்கு புரியவில்லை.
No comments:
Post a Comment