ஒரு எழுத்தாளனின் கதை
====================
எழுத்து:சுந்தரேஸன் சுரேஷ்
------------------------------ ---------
கோபால் ஒரு எழுத்து பிரியன். கட்டை குட்டையான உருவம்-கருப்பு நிறம்-தலையில் முக்கால் வாசி பாகம் காலி (உள்ளேயும் சரி,வெளியேயும் சரி !). ஒரு எழுத்தாளன் என்று சத்தியம் பண்ணினாலும் நம்ப முடியாது.சின்ன வயதில் இருந்தே கதை,கவிதைகளில் நாட்டம் கொண்டவன். தேவன்,கல்கி,என்று தொடங்கி,அகிலன்,சாண்டில்யன்,புத ு...மைபித்தன்,ஜெயகாந்தன்,ரா.கி, பி.வி.ஆர்.,லஷ்மி,சுஜாதா,பாலகும ாரன் என்று ஒருவரையும் விட்டு வைத்ததில்லை. ஏதோ ஓர் அளவுக்கு எழுதுவான்.எழுத்துலகில் பெரிய அளவில்,புகழ் பெற போகிறோம் என்பது அவன் பகல் கனவு .
அவனது இந்த எழுத்துஆசை,குடும்பத்தின் மற்றவர்களுக்கு தொந்தரவாக போய் விட்டது. பெயருக்கு காரியாலத்திற்கு போய் வருவான். காலையிலும் சரி மாலையிலும் சரி,எப்போதும் கணினி முன்னால் அமர்ந்து கற்பனை உலகில் சஞ்சரித்துகொண்டு கதைகளும்,கவிதைகளும் படைத்தது கொண்டு இருப்பான்.வீட்டு விஷயங்களில் அக்கறை குறைந்து கொண்டே வந்தது. மனைவி இந்திராவிடம் "இத பாரு"-உங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது"-ஒரு நாள் தொலைக்காட்சியினரும்,பத்திரிகைய ாளர்களும் நம் வீட்டு வாசலில் கூடாரம் அடிக்க போகிறார்கள்"-அப்போது புரியும் என் அருமை"என்பான்.மெல்லிய உருவ அமைப்பும்,வார்த்து கொட்டிய பொன்னை போல நிறமும் கொண்ட அவனது மனைவி இந்திரா முகவாயை தோளில் இடித்து கொள்வாள்.
மகன் அரவிந்தோ(சின்ன வயது சேஷகோபலனை நினைவு படுத்தும் தோற்றம்) "இதெல்லாம் சுத்த 'வேஸ்ட் அப்பா '"-"நீங்களாகவே என்னமோ பெரிய எழுத்துலக பிரம்மா என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்"-"உங்களை விட நன்றாக எழுதக்கூடியவர்கள் மூலைக்கு ஒருவர் இருக்கிறார்" -"நீங்கள் எழுதுவதை படித்து விட்டு நாலு பேர் ஆஹா !ஓஹா! என்று புகழ்வது உங்களுக்கு வேண்டி இருக்கிறது"-"மன-சாட்சியை தொட்டு சொல்லுங்கள்-"உங்கள் எழுத்தை குறை கூறுபவர்களை நீங்கள் ஏற்று கொள்வீர்களா"என்று சவால் விடுவான்.
பெண் ஆஷா (சரிதாவின் சாயலும் குஷ்புவின் உடல் அமைப்பும் கொண்டவள்) அப்பாவிடம் கொஞ்சம் அதிகம் பிரியம் உடையவள். "என்ன அண்ணா விட்டால் பேசிக்கொண்டே போகிறாயே"? என்று அப்பாவின் தற்காப்புக்கு வருவாள்."திறமை இருப்பவர்கள் எல்லாம் பிரகாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது"-"அதே மாதிரி பிரகாசிப்பவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது"- "அப்பாவுக்கு எழுத பிடிக்கிறது-எழுத வருகிறது"-எழுதி விட்டு போகட்டுமே"-"உனக்கோ,எனக்கோ இல்லை அம்மாவுக்கோ இதில் என்ன நஷ்டம்"என்பாள்.
இந்த இடத்தில் இந்திராவும் சேர்ந்து கொள்வாள். "இன்னொரு முக்கியமான விஷயம்"-"பல பேர் செய்வது மாதிரி இங்கிருந்து அங்கிருந்து என்று 'திரட்டி','சுருட்டி' தான் படைத்ததாக உங்க அப்பா சொல்லிகொள்வதில்லை"-"இவ்வளுவு வருடங்களாக தான் பார்த்ததை,கேட்டதை,படித்ததை வைத்து,தன் கற்பனையில் உதித்ததை சொந்தமாக எழுதுகிறார்""-இது பெரிய விஷயம் தான்" என்பாள். "என்ன சாத்தான் வேதம் ஓதுகிறது என்பாள் பெண்.
கடைசியாக இந்திராவே சலித்து கொண்டு "போதும் போதும்"-"அப்பாவை பிள்ளை குறை கூறுவதும் -பெண் அப்பாவுக்கு வக்காலத்து வாங்குவதும் "-"இது என்ன வீடா"நீதி மன்றமா- என்பாள்.
இப்படியாக போய் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கோபால் எதிர்பார்த்த மாற்றம் வரத்தான் செய்தது. ஒரு நாள் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி (கற்பனையை ஓட விடாதீர்கள்-மணமானவள்) தொலைபேசியில் கூப்பிட்டு"நான் உங்கள் எழுத்துக்கு பரம ரசிகை" என்றால். கோபாலுக்கு வாயெல்லாம் பல். ஒன்று இரண்டு என தொடங்கிய அழைப்புகள் மெல்ல அதிகரித்தன. சிலர் மின்-அஞ்சல் மூலமாகவும் தங்கள் புகழ்ச்சியை தெரிவித்தார்கள்."எப்படி இவ்வளுவு அருமையாக எழுதுகிறீர்கள்" என்று சிலர்- "உங்கள் எழுத்து கண்ணில் நீரை வரவழைத்து விட்டது" என்று வேறு சிலர்"-"நீங்கள் ஏன் முழு-நேர எழுத்தாளராக ஆக கூடாது"? என்று மற்றும் சிலர்-கோபாலின் காட்டில் நல்ல மழை. இள வயது பெண்கள்,குடும்ப தலைவிகள்,முதியோர்கள்,மெத்த படித்த பொறியாளர்கள்,கணக்கர்கள் என்று கோபாலின் விசிறிகளின் பட்டியலில் பலரும் அடக்கம். "அர்விந்த் பார்த்தாயா"?- "என்னமோ எழுதுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று எகத்தாள படுத்தினாயே"-"இன்று எவ்வளுவு பேர் என் எழுத்தை மெச்சுகிறார்கள் பார்த்தாயா"? என்பான்.
"அப்பா-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"இவர்களில் எவ்வளுவு பேர் உங்கள் எழுத்துகளை சீர்தூக்கி பார்த்து,சரியாக எடை போட்டு பார்த்த பின் விமர்சிக்கிறார்கள்"?-"நீங்கள் எழுதின சுருக்கில் வாசித்து விட்டு உங்களை பாராட்டி விடுகிறார்கள்"-"உங்களுக்கும் புகழ்ச்சி தேவையாக இருக்கிறது-அவ்வளுவுதான்"என்பான ். ஆஷா "இருந்தாலும் கணினியை பொழுது-போக்குக்காக நோண்டும் மனிதர்களை கூட படிக்க வைத்திருக்கிறாரே"-"தனக்குன்னு ஒரு வாசகர் வட்டத்தை (எவ்வளுதான் குறுகியதாக இருந்தாலும் !)உருவாக்கி இருக்கிறாரே"-"அதை மறுக்க முடியாது" என்பாள்.
"எப்ப பாரு சோகமும்,துக்கமும்,சாவை பற்றியும்தான் எழுதுகிறீர்கள்""படிக்கிறவர்களை சோகத்தில் ஆழ்த்துவதில் உங்களுக்கு அப்படிதான் என்ன சந்தோஷமோ" என்று குற்றம் சாட்டுவாள் இந்திரா. "அப்படி எல்லாம் பொதுவாக பேசாதே"- "அப்பா நிறைய விஷயங்களை பற்றி எழுதுகிறார்"-"சோக கதைகள் மனதில் தைப்பதால் அப்படி ஒரு உணர்வு தோன்றுகிறது" ஆஷாதான் தந்தையின் உதவிக்கு வருவாள். "நமக்கு வேண்டாததை எல்லாம் நாம் என்ன செய்கிறோம்?"-"வெளியே தூக்கி எறிந்து விடுகிறோம்"-"அது போலவே கற்பனை சோகத்தைகூட, பகிர்ந்து கொண்டால் நடைமுறை வாழ்கையின் சுமை குறையும் என்பதுதான் உண்மை" என்று விளக்குவான் கோபால்.
திடீரென்று ஒரு நாள் இணையதள அமைப்பிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. "திரு கோபால் என்பது நீங்கள்தானே"?" உங்கள் எழுத்து சேவையை பாராட்டி ஒரு விருது வழங்கப்பட இருக்கிறது"-"விழா ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் வரும் ஞாயிற்று கிழமை நடக்க இருக்கிறது"-"தாங்கள் அதில் கலந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும்""-"மற்ற விவரங்கள் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்றது. வீட்டில் எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டு கொண்டான். "அழைப்பு உண்மையாகவே அந்த அமைப்பில் இருந்துதான் வந்தது என்பதற்கு என்ன அத்தாட்சி"? என்று அப்பாவை குடைந்தான் அரவிந்த். ஆஷா பரிபூர்ணமாக அப்பாவை நம்பினாள். இந்திராவின் நிலை மதில் மேல் பூனை- முழுவதுமாக நம்பவும் முடியவில்லை- ; ஒரேதிரியாக 'கப்சா'வாகவும் இருக்ககூடும் என்று ஒதுக்கவும் முடியவில்லை..
நாலைந்து நாட்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த குடும்பத்து அங்கத்தினருக்கு ஒரு குரூரமான அதிர்ச்சியை கொடுத்தவள் தேவகி.
விழாவிற்கு இரண்டு நாள் இருக்கும் போது வீட்டு கதவை தட்டினவள்."என் பெயர் தேவகி"-"நான் ஒரு சமூக சேவகி"-பொதுநல மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்மந்தமான வழக்குகளில் வாதாடும் வக்கீல்"-"திரு கோபால் என்பவர் பல எழுத்தாளர்களின் படைப்பில் இருந்து திருடி தன் சொந்த படைப்புகளாக பறை சாற்றி கொள்கிறதாக என்னிடம் புகார் வந்துள்ளது"-"அறிவுஜீவி உரிமைபொருள்" சட்டத்தை சகட்டு மேனிக்கு மீறுவதை பற்றி விசாரிக்க வந்துள்ளேன்" என்று முடித்தாள்.
வந்தவள் உண்மையாக்வே ஒரு வக்கீலா அல்லது கோபாலின் எழுத்து வியாதிக்குஅரவிந்தின் அதிர்ச்சி வைத்தியமா என்ற ஆஷாவின் சந்தேகம் உங்களையும் தொற்றி கொண்டுவிட்டதா
====================
எழுத்து:சுந்தரேஸன் சுரேஷ்
------------------------------
கோபால் ஒரு எழுத்து பிரியன். கட்டை குட்டையான உருவம்-கருப்பு நிறம்-தலையில் முக்கால் வாசி பாகம் காலி (உள்ளேயும் சரி,வெளியேயும் சரி !). ஒரு எழுத்தாளன் என்று சத்தியம் பண்ணினாலும் நம்ப முடியாது.சின்ன வயதில் இருந்தே கதை,கவிதைகளில் நாட்டம் கொண்டவன். தேவன்,கல்கி,என்று தொடங்கி,அகிலன்,சாண்டில்யன்,புத
அவனது இந்த எழுத்துஆசை,குடும்பத்தின் மற்றவர்களுக்கு தொந்தரவாக போய் விட்டது. பெயருக்கு காரியாலத்திற்கு போய் வருவான். காலையிலும் சரி மாலையிலும் சரி,எப்போதும் கணினி முன்னால் அமர்ந்து கற்பனை உலகில் சஞ்சரித்துகொண்டு கதைகளும்,கவிதைகளும் படைத்தது கொண்டு இருப்பான்.வீட்டு விஷயங்களில் அக்கறை குறைந்து கொண்டே வந்தது. மனைவி இந்திராவிடம் "இத பாரு"-உங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது"-ஒரு நாள் தொலைக்காட்சியினரும்,பத்திரிகைய
மகன் அரவிந்தோ(சின்ன வயது சேஷகோபலனை நினைவு படுத்தும் தோற்றம்) "இதெல்லாம் சுத்த 'வேஸ்ட் அப்பா '"-"நீங்களாகவே என்னமோ பெரிய எழுத்துலக பிரம்மா என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்"-"உங்களை விட நன்றாக எழுதக்கூடியவர்கள் மூலைக்கு ஒருவர் இருக்கிறார்" -"நீங்கள் எழுதுவதை படித்து விட்டு நாலு பேர் ஆஹா !ஓஹா! என்று புகழ்வது உங்களுக்கு வேண்டி இருக்கிறது"-"மன-சாட்சியை தொட்டு சொல்லுங்கள்-"உங்கள் எழுத்தை குறை கூறுபவர்களை நீங்கள் ஏற்று கொள்வீர்களா"என்று சவால் விடுவான்.
பெண் ஆஷா (சரிதாவின் சாயலும் குஷ்புவின் உடல் அமைப்பும் கொண்டவள்) அப்பாவிடம் கொஞ்சம் அதிகம் பிரியம் உடையவள். "என்ன அண்ணா விட்டால் பேசிக்கொண்டே போகிறாயே"? என்று அப்பாவின் தற்காப்புக்கு வருவாள்."திறமை இருப்பவர்கள் எல்லாம் பிரகாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது"-"அதே மாதிரி பிரகாசிப்பவர்கள் எல்லாம் திறமையானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது"- "அப்பாவுக்கு எழுத பிடிக்கிறது-எழுத வருகிறது"-எழுதி விட்டு போகட்டுமே"-"உனக்கோ,எனக்கோ இல்லை அம்மாவுக்கோ இதில் என்ன நஷ்டம்"என்பாள்.
இந்த இடத்தில் இந்திராவும் சேர்ந்து கொள்வாள். "இன்னொரு முக்கியமான விஷயம்"-"பல பேர் செய்வது மாதிரி இங்கிருந்து அங்கிருந்து என்று 'திரட்டி','சுருட்டி' தான் படைத்ததாக உங்க அப்பா சொல்லிகொள்வதில்லை"-"இவ்வளுவு வருடங்களாக தான் பார்த்ததை,கேட்டதை,படித்ததை வைத்து,தன் கற்பனையில் உதித்ததை சொந்தமாக எழுதுகிறார்""-இது பெரிய விஷயம் தான்" என்பாள். "என்ன சாத்தான் வேதம் ஓதுகிறது என்பாள் பெண்.
கடைசியாக இந்திராவே சலித்து கொண்டு "போதும் போதும்"-"அப்பாவை பிள்ளை குறை கூறுவதும் -பெண் அப்பாவுக்கு வக்காலத்து வாங்குவதும் "-"இது என்ன வீடா"நீதி மன்றமா- என்பாள்.
இப்படியாக போய் கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் கோபால் எதிர்பார்த்த மாற்றம் வரத்தான் செய்தது. ஒரு நாள் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி (கற்பனையை ஓட விடாதீர்கள்-மணமானவள்) தொலைபேசியில் கூப்பிட்டு"நான் உங்கள் எழுத்துக்கு பரம ரசிகை" என்றால். கோபாலுக்கு வாயெல்லாம் பல். ஒன்று இரண்டு என தொடங்கிய அழைப்புகள் மெல்ல அதிகரித்தன. சிலர் மின்-அஞ்சல் மூலமாகவும் தங்கள் புகழ்ச்சியை தெரிவித்தார்கள்."எப்படி இவ்வளுவு அருமையாக எழுதுகிறீர்கள்" என்று சிலர்- "உங்கள் எழுத்து கண்ணில் நீரை வரவழைத்து விட்டது" என்று வேறு சிலர்"-"நீங்கள் ஏன் முழு-நேர எழுத்தாளராக ஆக கூடாது"? என்று மற்றும் சிலர்-கோபாலின் காட்டில் நல்ல மழை. இள வயது பெண்கள்,குடும்ப தலைவிகள்,முதியோர்கள்,மெத்த படித்த பொறியாளர்கள்,கணக்கர்கள் என்று கோபாலின் விசிறிகளின் பட்டியலில் பலரும் அடக்கம். "அர்விந்த் பார்த்தாயா"?- "என்னமோ எழுதுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று எகத்தாள படுத்தினாயே"-"இன்று எவ்வளுவு பேர் என் எழுத்தை மெச்சுகிறார்கள் பார்த்தாயா"? என்பான்.
"அப்பா-சொல்கிறேன் என்று தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்"-"இவர்களில் எவ்வளுவு பேர் உங்கள் எழுத்துகளை சீர்தூக்கி பார்த்து,சரியாக எடை போட்டு பார்த்த பின் விமர்சிக்கிறார்கள்"?-"நீங்கள் எழுதின சுருக்கில் வாசித்து விட்டு உங்களை பாராட்டி விடுகிறார்கள்"-"உங்களுக்கும் புகழ்ச்சி தேவையாக இருக்கிறது-அவ்வளுவுதான்"என்பான
"எப்ப பாரு சோகமும்,துக்கமும்,சாவை பற்றியும்தான் எழுதுகிறீர்கள்""படிக்கிறவர்களை
திடீரென்று ஒரு நாள் இணையதள அமைப்பிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. "திரு கோபால் என்பது நீங்கள்தானே"?" உங்கள் எழுத்து சேவையை பாராட்டி ஒரு விருது வழங்கப்பட இருக்கிறது"-"விழா ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் வரும் ஞாயிற்று கிழமை நடக்க இருக்கிறது"-"தாங்கள் அதில் கலந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டும்""-"மற்ற விவரங்கள் ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்றது. வீட்டில் எல்லோரிடமும் சொல்லி பெருமை பட்டு கொண்டான். "அழைப்பு உண்மையாகவே அந்த அமைப்பில் இருந்துதான் வந்தது என்பதற்கு என்ன அத்தாட்சி"? என்று அப்பாவை குடைந்தான் அரவிந்த். ஆஷா பரிபூர்ணமாக அப்பாவை நம்பினாள். இந்திராவின் நிலை மதில் மேல் பூனை- முழுவதுமாக நம்பவும் முடியவில்லை- ; ஒரேதிரியாக 'கப்சா'வாகவும் இருக்ககூடும் என்று ஒதுக்கவும் முடியவில்லை..
நாலைந்து நாட்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்த குடும்பத்து அங்கத்தினருக்கு ஒரு குரூரமான அதிர்ச்சியை கொடுத்தவள் தேவகி.
விழாவிற்கு இரண்டு நாள் இருக்கும் போது வீட்டு கதவை தட்டினவள்."என் பெயர் தேவகி"-"நான் ஒரு சமூக சேவகி"-பொதுநல மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சம்மந்தமான வழக்குகளில் வாதாடும் வக்கீல்"-"திரு கோபால் என்பவர் பல எழுத்தாளர்களின் படைப்பில் இருந்து திருடி தன் சொந்த படைப்புகளாக பறை சாற்றி கொள்கிறதாக என்னிடம் புகார் வந்துள்ளது"-"அறிவுஜீவி உரிமைபொருள்" சட்டத்தை சகட்டு மேனிக்கு மீறுவதை பற்றி விசாரிக்க வந்துள்ளேன்" என்று முடித்தாள்.
வந்தவள் உண்மையாக்வே ஒரு வக்கீலா அல்லது கோபாலின் எழுத்து வியாதிக்குஅரவிந்தின் அதிர்ச்சி வைத்தியமா என்ற ஆஷாவின் சந்தேகம் உங்களையும் தொற்றி கொண்டுவிட்டதா
No comments:
Post a Comment