குபேர யோகம்
============
எழுதியது :சுந்தரேசன் சுரேஷ்
------------------------------ -----------
"ஏய் ராஜம்,சீக்கிரம் இங்கே வா" என்று உரத்த குரலில் அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் நாராயணன். "என்ன இப்ப குடி முழுகி போய் விட்டது"? "எதற்கு இந்த கூப்பாடு"? என்று அலுத்துக்கொண்டே சமயலறையில் கை-காரியமாக இருந்த அவரின் சகதர்மிணி வெளி பட்டாள். "சொல்கிறேன்,சொல்கிறேன்"-"சொல்வ தற்கு தானே கூப்பிட்டேன்" என்று பீடிகை போட...்டார் மனுஷர்.
"சுந்தர் வந்துட்டானா"-"அவனையும் கூப்பிடு"-"அப்படியே சந்திரா இருந்தா அவளையும் வர சொல்லு" என்றார். "பெரிய துன்பமா போயிடுத்து இந்த மனுஷரோடு"- "என்னமோ வட்ட-மேஜை மாநாடு கூட்டுகிற மாதிரி எண்ணம்" என்று முணுமுணுத்துகொண்டே பெண்ணையும் பிள்ளையையும் கூப்பிட நகர்ந்தாள் ராஜம்.
எல்லோரும் வரவேற்பு அறையில் கூடினர். "கதவை சாத்தி தாழ்பாள் போடு"-"சாளரத்தை எல்லாம் சாத்தி விடு"-"பக்கத்து வீட்டு மாமாவிற்கு மூக்கில் வேர்த்து விடும்”-மோப்பம் பிடித்து விடுவார்"-“என்ன விஷயம்? என்று வந்து விடுவார்” என்று பெண்ணை பார்த்து உத்தரவுகளாக பிறப்பித்தார்.
பெண்-பிள்ளையை பார்த்து "உங்க அம்மா இத்தனை நாளா லக்ஷ்மி குபேர பூஜை பண்ணினாளே அதற்கு பலன் கிடைச்ச மாதிரி நினைச்சுக்குங்க" என்றார். "என்ன விஷயம் என்று சொல்லுங்களேன் என்று பரபரத்தான் சுந்தர். "இந்த பணம் கிடைச்ச உடனே முதல் காரியமா உங்கம்மா கேட்டுகொண்டிருந்த ஒண்ணரை 'கேரட்' வைர தோடை வாங்கணும்"-"உங்களுக்கு என்னென்ன வாங்கணுமோ முன்னாடியே சொல்லி விடுங்க" என்றார். “என்ன பணம்,எங்கேயிருந்து வர போகிறது” அதை சொல்லுங்க் முதலிலே என்று கேட்ட்தை பொருட்படுத்தாமல் “சுந்தர் நீ சொல்லு”என்றார்.
ரொம்ப துருவி கேட்டால் எங்கேயாவது முறுக்கி கொண்டு விட போகிறாரோ என்ற பயத்தில் சுந்தர் முந்திக்கொண்டு "அப்பா ரொம்ப நாளா நான் கேட்டுண்டு இருந்த 'ஹார்லே டேவிட்சன்' 'பைக்கை' வாங்கி கொடுங்க அப்பா"என்றான்.சந்திரா தன் பங்குக்கு "நான் எங்கள் கல்லூரியின் தென்-ஆப்பிரிக்க சுற்றுலா பயணத்திற்கு போகணும் அப்பா" என்றாள்.இதில் எல்லாம் பட்டு கொள்ளாமல் இருந்த ராஜத்திற்கும் பெண் பிள்ளைகளின் உற்சாகம் தொற்றி கொண்டது. “ஏங்க-உண்மையாக்த்தான் சொல்கிறீர்களா”? “பணம் வர போகிறதா” என்று கேட்டாள்.’சர்வ நிச்ச்யமாக் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் நாராயணன். "அப்ப காட்டாங்குளத்தூரில் நம்ம 2 கிரவுண்ட் வாங்கி போட்டு இருக்கிறோமே" அதை கட்டுவதற்கு ஏற்பாடு பண்ணலாம்" என்றாள். 3-கதவு குளிர்பதன பெட்டி,48 அங்குல தொலைக்காட்சி பெட்டி, 'எக்ஸ்பிரியா' கைபேசி என்று பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.
என்ன இருந்தாலும் பெண்டாட்டி மனம் அல்லவா சும்மா இருக்குமா. ராஜம் "என்னங்க- எங்களுக்கு வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டோம்”-உங்களுக்கு ஒண்ணும் வாங்க வேண்டாமா"-"பேசாம இந்த அரத-பழசான 'பஜாஜ்' ஸ்கூட்டரை தலை முழுகிவிட்டு ஒரு 'மாருதி' 'ஸ்விப்ட்' வாங்கி கொள்ளுங்கள் என்றாள்.பெண்ணும் பிள்ளையும் ஏகோபித்தமாக ஆமோதித்தனர்.
ஒருவாறாக ஆரவாரம் அடங்கிய பின்னர் எல்லோரும் ஒருமித்த குரலில் "அது சரி ஏது பணம்?-எவ்வளவு தொகை?-எப்போது வரப்போகிறது? என்ற விவரங்கள் ஒன்றையும் சொல்லவில்லையே" என்று கேட்டனர்.
பொறுமை பொறுமை என்று சைகை செய்த நாராயணன் "ஒவ்வொரு கேள்விக்காக பதில் சொல்கிறேன்"-“அதிர்ஷ்ட தேவதையின் வரபிரசாதம்”-"25 லட்சம்"- “ஒரு மாதத்திற்குள்” என்றார். அவரே தொடர்ந்தார்.
"இன்றுதான் ராயல் பூடான் பம்பர் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறேன்"- "அடுத்த மாதம் முதல் தேதி குலுக்கல்"- "முதல் பரிசு 25 லட்சம் எனக்குத்தான் விழ போகிறது"- "ஜோசியரும் எனக்கு குபேர யோகம் வரப்போவதாக உறுதியாக சொல்லியுள்ளார்"-" நியுமராலஜி தெரிந்த என் நண்பரின் ஆலோசனையை கேட்டு தான் பரிசு சீட்டின் எண்ணையும் தேர்ந்து எடுத்துள்ளேன்"-“சந்தேகமே வேண்டாம் என்றார்". அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற் பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது ராஜத்திற்கும்,பெண்-பிள்ளைக்கும ். அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை
இதுவரை நீங்கள் படித்த நிகழ்சிகள் முன்பே எங்கேயானாலும் நடந்திருக்ககூடும் அல்லது நடந்ததாக படித்திருக்க்கூடும் அல்லது கேள்விபட்டிருக்க்கூடும்.ஆனால் நாரயணனின் கூற்றுப்படி பரிசு விழுந்ததும் ராஜம் மற்றும் சுந்தர்,சாரதாவின் ஆசைகள் நிறைவேறிய் செய்தியும் உங்களுக்கு ஆச்ச்ரியத்தை அளிக்கலாம் !
============
எழுதியது :சுந்தரேசன் சுரேஷ்
------------------------------
"ஏய் ராஜம்,சீக்கிரம் இங்கே வா" என்று உரத்த குரலில் அழைத்தவாறே உள்ளே நுழைந்தார் நாராயணன். "என்ன இப்ப குடி முழுகி போய் விட்டது"? "எதற்கு இந்த கூப்பாடு"? என்று அலுத்துக்கொண்டே சமயலறையில் கை-காரியமாக இருந்த அவரின் சகதர்மிணி வெளி பட்டாள். "சொல்கிறேன்,சொல்கிறேன்"-"சொல்வ
"சுந்தர் வந்துட்டானா"-"அவனையும் கூப்பிடு"-"அப்படியே சந்திரா இருந்தா அவளையும் வர சொல்லு" என்றார். "பெரிய துன்பமா போயிடுத்து இந்த மனுஷரோடு"- "என்னமோ வட்ட-மேஜை மாநாடு கூட்டுகிற மாதிரி எண்ணம்" என்று முணுமுணுத்துகொண்டே பெண்ணையும் பிள்ளையையும் கூப்பிட நகர்ந்தாள் ராஜம்.
எல்லோரும் வரவேற்பு அறையில் கூடினர். "கதவை சாத்தி தாழ்பாள் போடு"-"சாளரத்தை எல்லாம் சாத்தி விடு"-"பக்கத்து வீட்டு மாமாவிற்கு மூக்கில் வேர்த்து விடும்”-மோப்பம் பிடித்து விடுவார்"-“என்ன விஷயம்? என்று வந்து விடுவார்” என்று பெண்ணை பார்த்து உத்தரவுகளாக பிறப்பித்தார்.
பெண்-பிள்ளையை பார்த்து "உங்க அம்மா இத்தனை நாளா லக்ஷ்மி குபேர பூஜை பண்ணினாளே அதற்கு பலன் கிடைச்ச மாதிரி நினைச்சுக்குங்க" என்றார். "என்ன விஷயம் என்று சொல்லுங்களேன் என்று பரபரத்தான் சுந்தர். "இந்த பணம் கிடைச்ச உடனே முதல் காரியமா உங்கம்மா கேட்டுகொண்டிருந்த ஒண்ணரை 'கேரட்' வைர தோடை வாங்கணும்"-"உங்களுக்கு என்னென்ன வாங்கணுமோ முன்னாடியே சொல்லி விடுங்க" என்றார். “என்ன பணம்,எங்கேயிருந்து வர போகிறது” அதை சொல்லுங்க் முதலிலே என்று கேட்ட்தை பொருட்படுத்தாமல் “சுந்தர் நீ சொல்லு”என்றார்.
ரொம்ப துருவி கேட்டால் எங்கேயாவது முறுக்கி கொண்டு விட போகிறாரோ என்ற பயத்தில் சுந்தர் முந்திக்கொண்டு "அப்பா ரொம்ப நாளா நான் கேட்டுண்டு இருந்த 'ஹார்லே டேவிட்சன்' 'பைக்கை' வாங்கி கொடுங்க அப்பா"என்றான்.சந்திரா தன் பங்குக்கு "நான் எங்கள் கல்லூரியின் தென்-ஆப்பிரிக்க சுற்றுலா பயணத்திற்கு போகணும் அப்பா" என்றாள்.இதில் எல்லாம் பட்டு கொள்ளாமல் இருந்த ராஜத்திற்கும் பெண் பிள்ளைகளின் உற்சாகம் தொற்றி கொண்டது. “ஏங்க-உண்மையாக்த்தான் சொல்கிறீர்களா”? “பணம் வர போகிறதா” என்று கேட்டாள்.’சர்வ நிச்ச்யமாக் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார் நாராயணன். "அப்ப காட்டாங்குளத்தூரில் நம்ம 2 கிரவுண்ட் வாங்கி போட்டு இருக்கிறோமே" அதை கட்டுவதற்கு ஏற்பாடு பண்ணலாம்" என்றாள். 3-கதவு குளிர்பதன பெட்டி,48 அங்குல தொலைக்காட்சி பெட்டி, 'எக்ஸ்பிரியா' கைபேசி என்று பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.
என்ன இருந்தாலும் பெண்டாட்டி மனம் அல்லவா சும்மா இருக்குமா. ராஜம் "என்னங்க- எங்களுக்கு வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டோம்”-உங்களுக்கு ஒண்ணும் வாங்க வேண்டாமா"-"பேசாம இந்த அரத-பழசான 'பஜாஜ்' ஸ்கூட்டரை தலை முழுகிவிட்டு ஒரு 'மாருதி' 'ஸ்விப்ட்' வாங்கி கொள்ளுங்கள் என்றாள்.பெண்ணும் பிள்ளையும் ஏகோபித்தமாக ஆமோதித்தனர்.
ஒருவாறாக ஆரவாரம் அடங்கிய பின்னர் எல்லோரும் ஒருமித்த குரலில் "அது சரி ஏது பணம்?-எவ்வளவு தொகை?-எப்போது வரப்போகிறது? என்ற விவரங்கள் ஒன்றையும் சொல்லவில்லையே" என்று கேட்டனர்.
பொறுமை பொறுமை என்று சைகை செய்த நாராயணன் "ஒவ்வொரு கேள்விக்காக பதில் சொல்கிறேன்"-“அதிர்ஷ்ட தேவதையின் வரபிரசாதம்”-"25 லட்சம்"- “ஒரு மாதத்திற்குள்” என்றார். அவரே தொடர்ந்தார்.
"இன்றுதான் ராயல் பூடான் பம்பர் லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறேன்"- "அடுத்த மாதம் முதல் தேதி குலுக்கல்"- "முதல் பரிசு 25 லட்சம் எனக்குத்தான் விழ போகிறது"- "ஜோசியரும் எனக்கு குபேர யோகம் வரப்போவதாக உறுதியாக சொல்லியுள்ளார்"-" நியுமராலஜி தெரிந்த என் நண்பரின் ஆலோசனையை கேட்டு தான் பரிசு சீட்டின் எண்ணையும் தேர்ந்து எடுத்துள்ளேன்"-“சந்தேகமே வேண்டாம் என்றார்". அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற் பழமொழிதான் ஞாபகத்துக்கு வந்தது ராஜத்திற்கும்,பெண்-பிள்ளைக்கும
இதுவரை நீங்கள் படித்த நிகழ்சிகள் முன்பே எங்கேயானாலும் நடந்திருக்ககூடும் அல்லது நடந்ததாக படித்திருக்க்கூடும் அல்லது கேள்விபட்டிருக்க்கூடும்.ஆனால் நாரயணனின் கூற்றுப்படி பரிசு விழுந்ததும் ராஜம் மற்றும் சுந்தர்,சாரதாவின் ஆசைகள் நிறைவேறிய் செய்தியும் உங்களுக்கு ஆச்ச்ரியத்தை அளிக்கலாம் !
No comments:
Post a Comment